366. மலட்டுக் காற்று

இவ்வசனத்தில் (51:41,42) மலட்டுக் காற்றின் மூலம் ஒரு சமுதாயத்தை அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது. காற்றில் எப்படி மலட்டுத் தன்மை இருக்கும் என்று நாம் நினைக்கலாம்.

காற்று மனிதனுக்குப் பயன்பட வேண்டுமானால் அதில் ஆக்ஸிஜன் போன்றவை இருந்தாக வேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பிரித்து எடுத்து விட்டால் காற்று இருந்தாலும் மனிதனால் உயிர் வாழ முடியாது. இதையே மலட்டுக் காற்று என்று இவ்வசனம் கூறுகிறது.

நவீன உலகில் சில வகையான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு பகுதியில் வீசினால் அப்பகுதியில் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இல்லாமல் ஆக்கி விடும். இதனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள உயிரினங்கள் செத்து விடும். இது போன்ற காற்றையே இறைவன் அனுப்பியிருக்க வேண்டும் என்பதை மலட்டுக் காற்று என்ற சொல் மூலம் அறிந்து கொள்ளலாம்.