396. ஸஜ்தா வசனங்கள் எத்தனை?

திருக்குர்ஆனில் 15 வசனங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று எழுதப்பட்டுள்ளன. இவ்வசனங்களை நாம் ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக இவ்வாறு அச்சிடும் வழக்கம் ஏற்பட்டது.

அந்த வசனங்கள் வருமாறு:

7:206, 13:15, 16:49, 17:107, 19:58, 22:18, 22:77, 25:60, 27:25, 32:15, 38:24, 41:37, 53:59, 84:21, 96:19.

இப்படி 15 இடங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று அச்சிட்டாலும் நமது நாட்டில் உள்ள ஷாஃபி, ஹனஃபி மத்ஹபினர் 14 இடங்களில் மட்டும் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

22ஆம் அத்தியாயத்தில் இரண்டு இடங்களில் ஸஜ்தா என அச்சிடப்பட்டிருக்கும். இதில் இரண்டாவது இடமாகிய 77வது வசனத்தில், “இது ஷாஃபி அவர்களின் கருத்துப்படி ஸஜ்தாச் செய்யும் இடம்” என்று அச்சிட்டுள்ளனர். அந்த வசனத்தை ஓதும் போது ஹனஃபிகள் ஸஜ்தாச் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கான ஸஜ்தா வசனங்கள் 14 தான்.

அது போல் 38:24 வசனத்தில் ஸஜ்தா என்று அச்சிடப்பட்டாலும் அந்த வசனத்தை ஓதும் போது ஷாஃபி மத்ஹபினர் ஸஜ்தாச் செய்வதில்லை. எனவே இவர்களுக்கும் 14 ஸஜ்தா வசனங்கள் தாம்.

திருக்குர்ஆனின் ஓரத்தில் இவ்வாறு குறிப்பிடுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் திரட்டிய திருக்குர்ஆனின் மூலப் பிரதியின் ஓரத்தில் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை.

ஷாஃபிகளும், ஹனஃபிகளும் 14 வசனங்களில் ஸஜ்தாச் செய்யுமாறு கூறுகின்றனர். குர்ஆன் ஓரங்களில் அச்சிடவும் செய்கின்றனர் என்றால் இதற்குத் தக்க சான்று இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனில் 14 இடங்களில் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் கூட இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை திருக்குர்ஆனின் ஓரங்களில் எவ்வாறு அச்சிடத் துணிந்தனர் என்று நமக்குப் புரியவில்லை.

15 வசனங்களில் (14 அல்ல) ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று அபூதாவூத் 1193, இப்னு மாஜா 1047 ஆகிய நூற்களில் ஒரு ஹதீஸ் உள்ளது. இது பலவீனமான ஹதீஸாகும்.

இந்த ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முனைன் என்பார் யாரென அறியப்படாதவர். அவர் வழியாக அறிவிக்கும் ஹாரிஸ் பின் ஸஅத் என்பாரும் யாரென அறியப்படாதவர். எனவே இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.

மேலும் இந்த ஹதீஸில் 15 ஸஜ்தாக்கள் எவை என்ற பட்டியல் ஏதும் இல்லை. ஹஜ் என்ற அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் என்பது மட்டும் தான் கூறப்பட்டுள்ளது. மீதி 13 வசனங்கள் யாவை என்பது கூறப்படவில்லை. எனவே இவர்கள் அச்சிட்டு வெளியிடும் பட்டியல் இவர்களாகக் கற்பனை செய்ததாகும்.

மேலும் இதில் ஸஜ்தா வசனங்கள் 15 என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு மத்ஹபுக்காரர்களும் 14 என்று கூறுகின்றனர். இந்தப் பலவீனமான ஹதீஸை இவர்களே மீறுகின்றனர்.

மற்றொரு ஹதீஸில், “11 வசனங்களை ஓதிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் ஸஜ்தாச் செய்துள்ளேன்” என்று கூறப்படுகின்றது. (திர்மிதீ 519, இப்னு மாஜா 1054)

இதுவும் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளராக இடம் பெறும் உமர் திமிஷ்கீ என்பவர் யாரென்று அறியப்படாதவர்.

இப்னு மாஜாவின் மற்றொரு அறிவிப்பில், 7வது அத்தியாயமான அஃராஃப், 13வது அத்தியாயமான ரஅத், 16வது அத்தியாயமான அன்னஹ்ல், 17வது அத்தியாயமான பனீ இஸ்ராயீல், 19வது அத்தியாயமான மர்யம், 22வது அத்தியாயமான ஹஜ் அத்தியாயத்தில் இரு இடங்கள், 25 வது அத்தியாயமான அல்ஃபுர்கான், 27வது அத்தியாயமான நம்ல், 32வது அத்தியாயமான ஸஜ்தா, 38 வது அத்தியாயமான ஸாத், 41 வது அத்தியாயமான ஹாமீம் ஸஜ்தா ஆகிய அத்தியாயங்கள் என்று விபரமாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் உஸ்மான் பின் ஃபாயித் என்பார் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

எனவே 11 ஸஜ்தா வசனங்கள் என்பதற்கும் ஏற்கத்தக்க சான்று ஏதும் இல்லை.

ஹதீஸ்களில் நாம் தேடிப் பார்த்தால், நான்கு வசனங்களை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்பதற்கு மட்டும் தான் சான்று கிடைக்கிறது. எனவே அந்த நான்கு வசனங்கள் மட்டுமே ஸஜ்தா வசனங்களாகும்.

96:19 வசனத்தை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக முஸ்லிம் 1010, 1011 ஹதீஸ்களிலும்,

84:21 வசனத்தை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக புகாரீ 766, 768, 1074, 1078 ஹதீஸ்களிலும்,

53:62 வசனத்தை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக புகாரீ 1067, 1070, 3853, 3972, 4863 ஹதீஸ்களிலும்,

38:24 வசனத்தை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக புகாரீ 1069, 3422 ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.

எனவே 38:24, 53:62, 84:21, 96:19 ஆகிய நான்கு வசனங்கள் தவிர வேறு வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற ...

ஒட்டு முடி வைக்கலாமா

ஒட்டு முடி வைக்கலாமா பதில் : ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ ...

குர்ஆன் ஓதத் தெரியாதவர் எப்படி தொழுவது?

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லாதவர்கள் எப்படி தொழுவது? தொழுகையை துவக்கும் போது ஆரம்பமாக ஓதும் துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதன் பின்னர் அல்ஹம்து அத்தியாயமும் தெரிந்த அத்தியாயங்களும் ஓதவேண்டும் ...

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

ஜனாஸா தொழுகைச் சட்டங்கள்

ஜனாஸா தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் ...

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...