420. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?

திருக்குர்ஆனை நாமே அருளினோம்; அதை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுவதாக 15:9 வசனம் கூறுகிறது. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து 143வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகமும், கிறித்தவ மிஷனரிகளும் திருக்குர்ஆனுடைய எழுத்துக்களில் உள்ள சில மாற்றங்களை எடுத்துக் காட்டி, திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருக்குர்ஆனை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்லி இருப்பதால் அதில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது. எழுத்துப் பிழைகள் இருந்தால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகும். திருக்குர்ஆனை ஆய்வு செய்யும் போது பல சொற்கள் பிழையாக எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம். திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதற்கு இதுவே ஆதாரம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

திருக்குர்ஆனின் எழுத்துக்களில் நெடில் தேவையில்லாத இடங்களில் நெடில்குறி எழுதப்பட்டுள்ளது. ஒரு எழுத்துக்குப் பதிலாக அதற்கு நெருக்கமான உச்சரிப்புடைய வேறொரு எழுத்து இடம் பெற்றுள்ளது. இது போன்றவற்றை எடுத்துக் காட்டி, திருக்குர்ஆனில் பிழை உள்ளது, திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

இத்தகைய தவறான பிரச்சாரத்திற்கு இவ்வசனம் (29:49) தெளிவாகப் பதிலளிக்கின்றது.

திருக்குர்ஆனை அல்லாஹ் எழுதி, புத்தகமாகவோ, ஏடுகளாகவோ கொடுத்திருந்தால் அதில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என்பது சரி தான்.

அல்லது ஒலி வடிவில் அருளப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைப்பட எழுதி, அதில் பிழை ஏற்பட்டு இருந்தால் அப்போது அதை விமர்சனம் செய்யலாம்.

ஆனால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில் அதாவது ஓசை வடிவில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது.

ஒவ்வொரு வசனத்தையும் ஜிப்ரீல் எனும் வானவர் வந்து கூறுவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மனனம் செய்து கொள்வார்கள். தமது தோழர்களையும் மனனம் செய்ய வைப்பார்கள்.

பின்னர், கூடுதல் பாதுகாப்புக் காரணத்திற்காக தமது தோழர்களில் எழுதத் தெரிந்தவர்களை அழைத்து, தமக்கு அருளப்பட்ட வசனங்களை எழுதச் செய்வார்கள்.

எழுத்து வடிவில் ஆக்கியது மனிதர்களின் செயல் என்பதால் அதில் பிழை ஏற்படுவது இறைவேதத்தில் ஏற்படும் பிழையாக ஆகாது.

எனவே தான் ‘கல்வியாளர்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது’ என்று இவ்வசனம் கூறுகின்றது.

உதாரணமாக, 37:68 வசனத்தில் ‘லா இலல் ஜஹீம்’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ‘ல இலல் ஜஹீம்’ என்று குறிலாகத் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இந்த இடத்தில் நெடிலுக்கான குறி எழுதப்பட்டிருந்தாலும், உலக முஸ்லிம்கள் அனைவரும் இதை, ‘ல இலல் ஜஹீம்’ என்று குறிலாகத் தான் வாசிக்கிறார்கள். இப்படி மனிதர்கள் பிழையாக எழுதிய எல்லா இடங்களையும் எல்லா முஸ்லிம்களும் சரியாகவே வாசிக்கிறார்கள். வாழையடி வாழையாக முஸ்லிம்கள் தமது உள்ளங்களில் திருக்குர்ஆனை மனனம் செய்து பாதுகாத்து வருவதால் எழுத்துப் பிழைகளையும் வென்று திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

திருக்குர்ஆனுடைய ஓசையும் உச்சரிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று.

இது குறித்து, முன்னுரையில் இடம் பெற்றுள்ள ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ பகுதியில் ‘எழுத்துப் பிழைகள்’ என்ற தலைப்பில் விரிவாக விளக்கியுள்ளோம்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற ...

ஒட்டு முடி வைக்கலாமா

ஒட்டு முடி வைக்கலாமா பதில் : ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ ...

குர்ஆன் ஓதத் தெரியாதவர் எப்படி தொழுவது?

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லாதவர்கள் எப்படி தொழுவது? தொழுகையை துவக்கும் போது ஆரம்பமாக ஓதும் துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதன் பின்னர் அல்ஹம்து அத்தியாயமும் தெரிந்த அத்தியாயங்களும் ஓதவேண்டும் ...

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

ஜனாஸா தொழுகைச் சட்டங்கள்

ஜனாஸா தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் ...

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...