மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா?

ஆண்டுதோறும் மகாவீர்ஜெயந்தி அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று அரசாங்கம் தடைபோடுவது நியாயம்தானா? தவ்ஹீத் ஜமாஅத் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

மசூது, கடையநல்லூர்

மதுபானக்கடைகள் போன்ற தீமைக்குத் துணை போகும் கடைகள் எப்போதும் மூடவேண்டியவை என்பதால், குறிப்பிட்ட நாட்களிலாவது மூடுகிறார்களே என்று வரவேற்கலாம்.

நல்லவற்றுக்குத் துணை செய்யும் கடைகளை மூடச்சொல்வது கண்டிக்கத்தக்கது. யாரோ ஒருவர் அறிவில்லாமல் புலால் உண்ணக் கூடாது என்று சொன்னால், அதில் நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடித்து விட்டுப் போக வேண்டியது தான். அதை நம்பாத மக்களிடமும் அதைத் திணிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை.

மகாவீரராக இருந்தாலும், வள்ளுவராக இருந்தாலும் அவர்கள் புலால் உண்ணக்கூடாது என்ற கொள்கையில் இருந்தால் அதுவே தவறு என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். கிறித்தவர்கள் நம்புகின்றனர். இந்து மதத்தில் உள்ள சிறுபிரிவைத் தவிர மற்ற அனைவரும் நம்புகின்றனர்.

அறிவுக்குப் பொருந்தாததும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததுமான இந்தக் கொள்கையைக் கண்டிக்க வேண்டுமே தவிர அதற்கு மதிப்பளிக்கக்கூடாது.

ஆட்சியில் இருப்பவர்கள் அப்படி மதிப்பளிப்பதாக இருந்தால் காலமெல்லாம் கசாப்புக்கடையை மூடிக்காட்டட்டும். யாரையோ திருப்திப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடிக்கின்றன. ஒருநாள் மட்டும் கசாப்புக்கடையை மூடிவிட்டு மற்ற நாட்களில் சாப்பிடுங்கள் என்பது தான் மகாவீரரின் கொள்கையா? ஆட்சியில் உள்ளவர்களுக்குச் சிந்திக்கும் திறன் இருந்தால் இதுபோல் மக்கள் விரோதச் சட்டங்களைப் போடமாட்டார்கள்.

எவருடைய பிறந்த நாளுக்காகவும் ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்ற மதத்தினர் மீது திணிப்பது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

பெருநாள் தினத்தில் மகாவீர் ஜெயந்தி வந்து, அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று உத்தரவு போட்ட கொடுமையை மூன்று ஆண்டுகளுக்கு முன் நாம் சந்தித்தோம். இதை எதிர்த்து கசாப்புக் கடைக்காரர்கள் தான் போராடினார்கள். அதில் முஸ்லிம் சமுதாயம் பெரிய அளவில் பங்கு கொள்ளவில்லை. கிறித்தவர்களும் பங்கு கொள்ளவில்லை. அசைவ உணவு உட்கொள்ளும் இந்துக்களும் பங்கு கொள்ளவில்லை.

இது அனைத்து மதத்தினருக்குமான பிரச்சனை. அடிப்படை உரிமை சம்பந்தமான பிரச்சனை என்று மக்கள் விளங்காமல் உள்ளனர். இதனால் தான் இந்தச் சட்டம் இன்னும் குப்பைக் கூடைக்குப் போகாமல் உள்ளது.

மற்றவர்கள் ஒதுங்கி இருந்தாலும் முஸ்லிம்களாவது நம்முடைய உரிமைகளுக்கு எதிரானதாகவும், நம்முடைய மதநம்பிக்கைக்கு எதிரானதாகவும் உள்ளது என்று கருத வேண்டும். அவ்வாறு கருதாமல் கசாப்புக் கடைக்காரர்களின் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள். எங்கள் மதநம்பிக்கையில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஊரே திரண்டு போராடினால் இது போன்ற சட்டங்கள் குப்பைக் கூடைக்குப் போய் இருக்கும்.

பெருநாள் தினத்தில் மகாவீர் ஜெயந்தி வந்தால் தயிர் சாதம் தான் சாப்பிட வேண்டிவரும் என்பதையும், ஹஜ்ஜுப் பெருநாளின் போது குர்பானி கொடுப்பதற்கும் தடை செய்யப்படும் என்பதையும் புரிந்துகொண்டு அனைவரும் இதற்கு எதிராகத் திரள வேண்டும். பெருநாள் மட்டுமின்றி தனி மனிதனின் திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், விருந்தினரை உபசரித்தல் போன்ற நேரங்களில் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவோம்.

ரமலான் மாதத்தில் நாங்கள் நோன்பு வைப்பதால், எல்லா ஹோட்டல்களையும் பகலில் அடைக்க வேண்டும் என்று நாம் கோரினால் இவர்கள் ஏற்பார்களா?

பெரியாரின் பிறந்த நாள் அன்று எல்லா கோவில்களும் மூடப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவார்களா?

ஏசுவின் பிறந்த நாளையொட்டி அனைவரும் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பார்களா?

என்றெல்லாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அந்த நிலை சமுதாயத்தில் ஏற்பட நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்து, இதன் மோசமான விளைவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தயார் படுத்திய பிறகே போராட்டத்தில் இறங்க வேண்டும்.

அடுத்த மகாவீர் ஜெயந்திக்குள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்தச் சட்டம் குப்பைக் கூடைக்குப் போகாவிட்டால் சமுதாயமே திரண்டு எதிர்கொள்ள வேண்டும். இதை இப்படியே விடக்கூடாது

நீதிமன்றத்தை அணுகினால் மதச்சார்பின்மை அடிப்படையிலும், சட்டத்தின்படியும் தீர்ப்பு வழங்குவார்களா என்ற சந்தேகம் நமக்கு இருக்கிறது. பாபர் மசூதி தீர்ப்பைப் போலவும், ஒட்டகத்தை குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தீர்ப்பைப் போலவும் தீர்ப்பு வழங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. நீதிமன்றத்தை அணுகவே அஞ்சும் நிலைதான் நமக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் இதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திப் பார்க்கலாம்.

இன்ஷா அல்லாஹ் – இது கசாப்புக் கடைக்காரர்களின் பிரச்சினை இல்லை என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிற சமுதாய மக்களுக்கும் புரிய வைத்து பின்னர் நாம் கடுமையான போராட்டத்தை இதற்காக நடத்துவோம்.

30.04.2013. 6:02 AM

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...