அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன?

ஆதம் (அலை) அவர்களை இறைவன் தனது ஒரு கைப்பிடி மண்ணில் படைத்தான் என்று ஹதீஸ் உள்ளது. அறுபது முழம் அவருடைய உயரம் எனவும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் வானங்கள் அவனது கைப்பிடிக்குள் அடங்கும் என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் அல்லாஹ்வின் கைப்பிடி என்பது அறுபது முழத்தை உள்ளடக்கும் அளவா? வானங்களை உள்ளடக்கும் அளவா?

ராஜ் முஹம்மத், குவைத்.

அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனது பிரம்மாண்டம் பற்றி நாம் வரையறுக்க முடியாது. ஆனால் அவனைக் குறிப்பிட்ட உயரத்துக்குள் அடக்க முடியாது. சில நேரங்களில் அவன் தனது தோற்றத்தை வானம் பூமியை விடவும் பெரிதாகக் காட்டுவான். சில நேரங்களில் மனிதர்கள் அண்ணாந்து பார்க்கும் சிறிய தோற்றத்திலும் இருப்பான். நிர்ணயித்த அளவு அவனுக்கு இல்லை என்பதால் நீங்கள் கேட்ட விஷயத்தில் முரன்பாடு ஏதும் இல்லை. இது குறித்து ஷேக் அப்துல்லா ஜமாலி விவாதத்தில் ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளோம்.

04.08.2011. 16:14 PM