கேள்வி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது அடக்கம் செய்யப்பட்டார்கள்?
A.T.M. கலீல்
பதில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை மரணித்தார்கள் என்பதில் அறிஞர்கள் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.
பின் வரும் ஹதீஸில் இது தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.
صحيح البخاري مشكول (2/ 102)
1387 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلْتُ عَلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: فِي كَمْ كَفَّنْتُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ» وَقَالَ لَهَا: فِي أَيِّ يَوْمٍ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «يَوْمَ الِاثْنَيْنِ» قَالَ: فَأَيُّ يَوْمٍ هَذَا؟ قَالَتْ: «يَوْمُ الِاثْنَيْنِ» قَالَ: أَرْجُو فِيمَا بَيْنِي وَبَيْنَ اللَّيْلِ، فَنَظَرَ إِلَى ثَوْبٍ عَلَيْهِ، كَانَ يُمَرَّضُ فِيهِ بِهِ رَدْعٌ مِنْ زَعْفَرَانٍ، فَقَالَ: اغْسِلُوا ثَوْبِي هَذَا وَزِيدُوا عَلَيْهِ ثَوْبَيْنِ، فَكَفِّنُونِي فِيهَا، قُلْتُ: إِنَّ هَذَا خَلَقٌ، قَالَ: إِنَّ الحَيَّ أَحَقُّ بِالْجَدِيدِ مِنَ المَيِّتِ، إِنَّمَا هُوَ لِلْمُهْلَةِ فَلَمْ يُتَوَفَّ حَتَّى أَمْسَى مِنْ لَيْلَةِ الثُّلاَثَاءِ، وَدُفِنَ قَبْلَ أَنْ يُصْبِحَ
1387ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் அடக்கம் செய்தீர்கள்? என்று கேட்டார்கள். வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் அடக்கம் செய்தோம். அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை என்று நான் கூறினேன்.. அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள். நான் திங்கட்கிழமை என்றேன். இன்று என்ன கிழமை? என்று கேட்டதும், நான் திங்கட்கிழமை என்றேன். அதற்கவர்கள் இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன் என்று கூறிவிட்டுத் தாம் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள். நான் இது பழையதாயிற்றே! என்றேன். அதற்கவர்கள் இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர்; மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத்தான் போகும் என்றனர். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. செவ்வாய் இரவில் தான் மரணித்தார்கள். (அன்று) காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
நூல் : புகாரி 1387
நபிகள் நாயகம் (ஸல்) செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று சில செய்திகள் பதிவாகி உள்ளன. அவை நபித்தோழர்களின் அறிவிப்பாக இல்லாமல் அடுத்த தலைமுறையினரின் அறிவிப்பாக உள்ளன. அவை ஆதாரங்களாக ஆகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புதன்கிழமை நடு இரவில் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது தான் சரியான அறிவிப்பாகும்.
مسند أحمد ط
26349 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنِ امْرَأَتِهِ، فَاطِمَةَ بِنْتِ مُحَمَّدِ بْنِ عِمَارَةَ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، قَالَتْ: ” مَا عَلِمْنَا بِدَفْنِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى سَمِعْنَا صَوْتَ الْمَسَاحِي مِنْ جَوْفِ اللَّيْلِ لَيْلَةَ الْأَرْبِعَاءِ ” قَالَ مَحَمَّدٌ: وَقَدْ حَدَّثَتْنِي فَاطِمَةُ بِهَذَا الْحَدِيثِ
புதன்கிழமை நடு இரவில் மக்கள் நடந்து செல்லும் இரைச்சலைக் கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டதை நாங்கள் அறியவில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மத்