மாநபி வழியில் மழைத் தொழுகை

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

பின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

– حدثنا هارونُ بنُ سعيد الأيلي، حدثنا خالدُ بنُ نزارٍ، قال: حدثني القاسمُ بنُ مبرورٍ، عن يونسَ، عن هشامِ بنِ عُروة، عن أبيه عن عائشة قالت: شَكَا الناسُ إلى رسولِ الله – صلَّى الله عليه وسلم – قُحُوطَ المطر، فأمر بمنبر فوضع له في المُصلى، وَوَعَدَ الناسَ يوماً يخرجونَ فيه، قالت عائشةُ: فخرجَ رسولُ الله – صلَّى الله عليه وسلم – حين بدا حَاجِبُ الشمسِ، فَقَعَدَ على المنبر فكبر – صلَّى الله عليه وسلم – وحَمِدَ اللهَ عزَ وجل، ثم قال: “إنكم شَكَوْتُم جَدْبَ دِيارِكم، واستئخارَ المطرِ، عن إبَّانِ زَمَانِهِ عنكم، وقد أمركم الله عزَّ وجلَّ أن تدعوه، ووعدكم أن يَسْتَجِيبَ لكم” ثم قال: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (2) الرَّحْمَنِ الرَّحِيمِ (3) مَالِكِ يَوْمِ الدِّينِ} لا إله إلا الله يَفْعَلُ ما يُرِيدُ، اللهُم أنتَ الله لا إله إلا أنتَ الغني ونحنُ الفقراء، أنزل علينا الغَيثَ، واجْعَل ما أنزلتَ لنا قُوَّةً وبلاغاَ إلى خير” (1) ثم رَفَعَ يديه، فلم يزل في الرفعِ حتى بدا بياضُ إبطيه، ثم حوّل إلى الناسِ ظهَره، وقَلَبَ – أو حَوَّلَ – رداءَه وهو رافعٌ يديه، ثم أقبل على الناسِ، ونزلَ فَصَلَّى ركعتينِ، فأنشأ الله سحابةً فرعَدت وبَرَقَت، ثم أَمطرت بإذن الله، فلم يأتِ مسجدَه حتن سالت السيُولُ، فلما رأى سرعَتَهُمْ إلى الكِنِّ ضَحِكَ – صلَّى الله عليه وسلم – حتى بَدَتْ نواجذُه فقال: “أشهدُ أنَّ الله على كل شيء قدير، وأني عبدُ الله ورسوله” . قال أبو داود: وهذا حديث غريب إسناده جيد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மழையின்மையைப் பற்றி மக்கள் முறையிட்டார்கள். அப்போது நபிகளார் ஒரு மிம்பரை (மேடையை) அமைக்கக் கட்டளையிட்டார்கள். அது அவர்களுக்காக திடலில் வைக்கப்பட்டது. ஒரு நாள மக்களுக்கு வாக்களித்தார்கள். மக்கள் அந்நாளில் (திடலை நோக்கி) புறப்பட்டார்கள். சூரியனுடைய கீற்று வெளிப்பட்ட நேரத்திலே நபியவர்கள் (வீட்டிலிருந்து திடலை நோக்கி) புறப்பட்டார்கள். மிம்பரில் உட்கார்ந்தார்கள். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று கூறி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தினார்கள். கண்ணியமிக்கவனும், கீர்த்தி மிக்கவனுமாகிய அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு, மக்களே! உங்கள் வீடுகளின் பஞ்சத்தைப் பற்றியும், உங்களுக்கு மழைபொழியும் காலம் தாமதமாகி விட்டதைப் பற்றியும் நீங்கள் முறையிட்டீர்கள். நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றான். உங்கள் பிரார்த்தனைக்கு அவன் பதிலளிப்பதாகவும் வாக்களித்திருக்கின்றான் என்று கூறினார்கள்.

பின்னர் பின்வருமாறு கூறினார்கள்.

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَلِكِ يَوْمِ الدِّينِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَفْعَلُ مَا يُرِيدُ اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلَاغًا إِلَى حِينٍ

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.

(பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்; நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)

பிறகு தமது இரு (புறங்) கைகளையும் உயர்த்தினார்கள். தம்முடைய இரு அக்குள் பகுதியின் வெண்மை தெரியுமளவிற்கு உயர்த்தி (பிரார்த்தித்துக்) கொண்டேயிருந்தார்கள். பின்னர் மக்களை நோக்கி தமது முதுகுப் பகுதியைத் திருப்பினார்கள். தமது இரு கைகளையும் உயர்த்தியவாறே மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.

பிறகு மக்களை நோக்கித் திரும்பினார்கள். (மிம்பரிலிருந்து) இறங்கி (பெருநாள் தொழுகையைப் போன்று) இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.

நூல் அபூதாவூத்

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் மழைத் தொழுகை முறைகள்:

பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வரவேண்டும்.

திடலில் தொழ வேண்டும். இமாமிற்கு மிம்பர் மேடை ஏற்பாடு செய்ய வேண்டும். சூரியன் உதித்தவுடன் தொழ வேண்டும்.

இமாம் மிம்பரில் ஏறி சொற்பொழிவு நிகழ்த்தாமல் அல்லாஹு அக்பர் என்று இறைவனைப் பெருமைப்படுத்தி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

பிறகு இமாம் மக்களை நோக்கி மக்களே நமதூரில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் இந்த மழைத் தொழுகையை ஏற்பாடு செய்திருக்கிறோம். நமக்கு மழைபொழிய வேண்டிய காலத்தில் மழை பொழியாமல் தாமதமாகிவிட்டது. நாம் அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் நம்முடைய பிரார்த்தனையை நிச்சயம் அவன் நிறைவேற்றுவான் என்றும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான் என்று கூறி பின்னர்

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.

என்று மக்களை நோக்கி இமாம் கூறி பிறகு புறங்கைகளை வானத்தை நோக்கி உயர்த்திப் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும்.

இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகளையும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இமாம் மக்களை நோக்கி இருந்தவாறு சிறிது நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிறகு கிப்லாவை நோக்கித் திரும்பி கைகள் உயர்ந்து இருக்கும் நிலையிலேயே இமாம் மட்டும் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு மிம்பரிலிருந்து இறங்கி பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.

இவற்றுக்கான ஏனைய ஆதாரங்கள் வருமாறு:

புறங்கைகளை மேல்நோக்கி வைத்து பிரார்த்தனை செய்தல்

صحيح مسلم

2112 – وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- اسْتَسْقَى فَأَشَارَ بِظَهْرِ كَفَّيْهِ إِلَى السَّمَاءِ.

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

مسند أحمد بن حنبل

12576 – حدثنا عبد الله حدثني أبي ثنا حسن بن موسى ثنا حماد بن سلمة عن ثابت عن أنس : ان رسول الله صلى الله عليه و سلم استسقى فأشار بظهر كفيه إلى السماء تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم , رجاله ثقات رجال الشيخين غير حماد بن سلمة فمن رجال مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப்) பிரார்த்திக்கும் போது தம்முடைய முன்கைகளின் வெளிப்பகுதியை தம்முடைய முகத்தை நோக்கியும் உள்ளங்கைகளை பூமியை நோக்கியும் ஆக்குவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : அஹ்மத்

இமாமுடன் சேர்ந்து மக்களும் மேலாடையைப் மாற்றிப் போட வேண்டுமா

கீழ்க்காணும் ஹதீஸுக்கு தவறாக மொழி பெயர்த்து மக்களும் மேலாடையை மாற்றிப் போட வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அது தவ்றாகும்.

مسند أحمد بن حنبل

16512 – حدثنا عبد الله حدثني أبي ثنا يعقوب قال ثنا أبي عن بن إسحاق قال حدثني عبد الله بن أبي بكر عن عباد بن تميم الأنصاري ثم المازني عن عبد الله بن زيد بن عاصم وكان أحد رهطه وكان عبد الله بن زيد من أصحاب رسول الله صلى الله عليه و سلم قد شهد معه أحدا قال : قد رأيت رسول الله صلى الله عليه و سلم حين استسقى لنا أطال الدعاء وأكثر المسألة قال ثم تحول إلى القبلة وحول رداءه فقلبه ظهر البطن وتحول الناس معه

تعليق شعيب الأرنؤوط : حديث صحيح دون قوله : وتحول الناس معه فهو حسن وهذا إسناد حسن من أجل محمد بن إسحاق وقد صرح بالتحديث فانتفت شبهة تدليسه وبقية رجاله ثقات رجال الشيخين

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காக மழை வேண்டிய போது அவர்களை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் துஆவை நீட்டினார்கள். வேண்டுதலை அதிகப்படுத்தினார்கள். பிறகு கிப்லாவை நோக்கி திரும்பி. தம்முடைய மேலாடையின் வெளிப்பகுதியை உள் பகுதியாக புரட்டினார்கள். நபியவர்களுடன் சேர்ந்து மக்களும் (கிப்லாவை நோக்கி) திரும்பினார்கள்.

நூல்: அஹ்மத்

وتحول الناس معه இச்சொல்லுக்கு மக்கள் ஆடையை மாற்றிப் போட்டார்கள் என்று பொருள் செய்து மக்களும் மாற்றிப் போட்டனர் என்று கருதுவது தவறாகும். ஹவ்வல என்றால் மாற்றைப் போட்டார்கள் என்று பொருள் வ்ரும். தஹவ்வல என்று வந்தால் திரும்பினார்கள் என்று தான் பொருள் வரும். இங்கே தஹவ்வல என்று தான் உள்ளது. மக்களை நோக்கி இருந்த நபிகள் கிப்லாவின் பக்கம் திரும்பினார்கள். அவர்களுடன் மக்களும் திரும்பினார்கள் என்பது தான் சரியான மொழி பெயர்ப்பாகும்.

பெருநாள் தொழுகையைப் போன்று தொழவைத்தல்

1165 – حدثنا النُّفيليُّ وعثمانُ بنُ أبي شيبة، نحوه، قالا: حدثنا حاتِمُ بنُ إسماعيل، حدثنا هشامُ بن إسحاق بن عبد الله بن كِنانة، قال: أخبرني أبي، قال: أرسلني الوليدُ بنُ عتبة – قال عثمان: ابن عقبة – وكان أميرَ المدينةِ، إلى ابنِ عبَّاس أسأله عن صلاةِ رسولِ الله – صلَّى الله عليه وسلم – في الاستسقاء, فقال: خَرَجَ رسولُ الله – صلَّى الله عليه وسلم – مُتبذِّلاَ مُتَواضعاَ مُتضرعاً حتى أتى المُصلَّى – زاد عثمان: فَرَقي على المنبر، ثم اتفقا -: فلم يَخطُبْ خُطَبَكُم هذه، ولكن لم يَزَلْ في الدُّعاء والتضرُّع والتكبيرِ، ثم صَلَّى ركعتينِ كما يُصلَّى في العيدِ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 512, அபூதாவூத் 984, நஸயீ 1491, இப்னுமாஜா 1256, அஹ்மத் 3160

மழைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை!

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ

அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.

(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : அபூதாவூத்

اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا

அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா

(இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!)

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 1013