குளிப்பு கடமையானவர் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாமா?
குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர்.
அவர்கள் தொழக்கூடாது; பள்ளிவாசலில் நுழையக்கூடாது; தவாப் செய்யக் கூடாது என்று நபியவர்கள் விளக்கியுள்ளனர். ஜனாஸாவைக் குளிப்பாட்டக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லவில்லை.
குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், உளூ இல்லாதவர்களும் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாம். தொடலாம்.