தலை முடி வெட்டிய பின் குளிப்பது அவசியமா?

மஸ்வூது

பதில் :

குளிப்பைக் கடமையாக்கும் காரியங்கள் எவை என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. முடியை வெட்டினால் குளிப்பது கடமை என்று மார்க்கம் கூறவில்லை.

முடிவெட்டினால் தலையிலும், உடலிலும் வெட்டப்பட்ட முடிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றை முழுவதுமாக உடலிலிருந்து அப்புறப்படுத்த குளிப்பது சிறந்த வழிமுறை. இந்த உலக நன்மைக்காக குளிப்பது அவரவரது விருப்பத்தைப் பொறுத்தது. மார்க்கம் இதைச் சட்டமாக்கவில்லை.

எனவே ஒருவர் முடி வெட்டி விட்டு குளிக்காவிட்டால் அவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையுமில்லை. தாராளமாக ஈடுபடலாம்.