இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா?

இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா?

நிஸா, திருவாரூர்.

பதில்:

صحيح البخاري

378 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَقَطَ عَنْ فَرَسِهِ فَجُحِشَتْ سَاقُهُ – أَوْ كَتِفُهُ – وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا، فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ، فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ، فَصَلَّى بِهِمْ جَالِسًا وَهُمْ قِيَامٌ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا» وَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ آلَيْتَ شَهْرًا، فَقَالَ: «إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரையில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து அவர்களுக்கு முட்டுக்காலில் அல்லது புஜத்தில் முறிவு ஏற்பட்டது. ஒரு மாத காலம் தமது மனைவியரிடத்தில் செல்வதில்லை என சத்தியம் செய்து கொண்டார்கள். பேரீச்சை மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பரணில் அமர்ந்தார்கள். அவர்களுடைய தோழர்கள் அவர்களை நோய் விசாரிப்பதற்காக வந்த போது (அந்தப் பரணில்) அமர்ந்தவர்களாகவே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். வந்தவர்கள் நின்று தொழுதனர். ஸலாம் கொடுத்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்” என்று கூறினார்கள். 29 நாட்கள் சென்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பரணிலிருந்து இறங்கினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத காலம் என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே!’ என்று தோழர்கள் கேட்ட போது, “இந்த மாதம் இருபத்தி ஒன்பது நாட்கள் தாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 378

இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்கார்ந்து தான் தொழ வேண்டும் என்ற சட்டம் ஆரம்பத்தில் இருந்தது. இது பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

صحيح البخاري

713 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ بِلاَلٌ يُوذِنُهُ بِالصَّلاَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى مَا يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ» فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي لَهُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ، قَالَ: «إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ» فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفْسِهِ خِفَّةً، فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلاَهُ يَخُطَّانِ فِي الأَرْضِ، حَتَّى دَخَلَ المَسْجِدَ، فَلَمَّا سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ، ذَهَبَ أَبُو بَكْرٍ يَتَأَخَّرُ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَاعِدًا، يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ مُقْتَدُونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது பிலால் (ரலி) வந்து தொழுகை பற்றி அறிவித்தார். “மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள்” என்று கூறினார்கள்………

……… அபூபக்ர் (ரலி) தொழுகையைத் துவக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் நோய் இலோசாவதை உணர்ந்து தரையில் கால்கள் இழுபட இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்து அபூபக்ர் (ரலி) பின்வாங்க முயன்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி சைகை செய்து விட்டு அபூபக்ரின் இடப்புறம் அமர்ந்தார்கள். அபூபக்ர் (ரலி) நின்று தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். மக்கள் அபூபக்ர் (ரலி)யைப் பின்பற்றித் தொழுதார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 713

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாமாக உட்கார்ந்து தொழும் போது அபூபக்ர் (ரலி) அவர்களும், மக்களும் நின்று தொழுதுள்ளார்கள். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். எனவே, இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றுபவர்களும் உட்கார்ந்து தான் தொழ வேண்டும் என்ற முந்தைய ஹதீஸில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்பதை விளங்கலாம்.

☰ ????முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

test 1b

dfdsf dsfd Read in OnlinePJ.in ...

test 6 னகனம் df

test 6 test 6 test 6 Read in OnlinePJ.in ...

test 7

test 7 test 7 test 7 Read in OnlinePJ.in ...

test 8b

test 8b test 8b test 8b Read in OnlinePJ.in ...

test 8c

test 8c test 8c test 8cRead in OnlinePJ.in ...

test 4

test 4 44 4 Read in OnlinePJ.in ...

test 5

test 5 5 5 Read in OnlinePJ.in ...

மழைத் தொழுகை – 3 delete

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

Yes

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

இஸ்திகாரா தொழுகை – 2 delete

நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ...

மழைத் தொழுகை – 2

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...