வெள்ளிக்கிழமை கஹ்ஃபு அத்தியாயம் ஓதுவதற்கு சிறப்பு உள்ளதா?

எல்லா அத்தியாயங்களுக்கும் உள்ள சிறப்பு கஹ்ஃபு அத்தியாயத்துக்கும் உள்ளது. அத்துடன் கூடுதல் சிறப்பும் இந்த அத்தியாயத்துக்கு உள்ளது.

صحيح البخاري

5011 – حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: كَانَ رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الكَهْفِ، وَإِلَى جَانِبِهِ حِصَانٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ، فَتَغَشَّتْهُ سَحَابَةٌ، فَجَعَلَتْ تَدْنُو وَتَدْنُو وَجَعَلَ فَرَسُهُ يَنْفِرُ، فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: «تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ بِالقُرْآنِ»

ஒரு மனிதர் கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தைத் ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் ஒரு குதிரை கட்டப்பட்டிருந்தது. அதை மேகம் சூழ்ந்து வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதி தான் அது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப்

நூல்: புகாரி 5011, 3614

صحيح مسلم

257 – (809) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் பெரும் குழப்ப வாதியான தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா

நூல்: முஸ்லிம் 1475

இவையே கஹ்ஃப் எனும் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்து இடம் பெறும் ஹதீஸ்களில் சரியான ஹதீஸ்களாகும். இவை தவிர மற்ற அனைத்து செய்திகளும் குறையுடைய, பலவீனமான செய்திகளாகவே அமைந்துள்ளன.

வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது தொடர்பாக சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமான ஹதீஸாக இல்லை.