சிரிக்கக் கூடாத இடங்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பொய் சொல்வது மற்ற பொய்களை விட பெரிய குற்றமாகும். இது பற்றிய அச்சம் இல்லாமல் பொய்யான செய்திகளை ஹதீஸ் என்று சிலர் பரப்பி வருகின்றனர்.

அந்தப் பொய்களில் ஒன்றுதான் கீழே உள்ள பொய்ச்செய்தி.

1. தொழுகை

2. மஸ்ஜித்

3. கப்ருக்கு அருகில்

4. மய்யித்தின் அருகில்

5. பாங்கு சொல்லும் போது…

6. குர்ஆன் ஓதும் போது…

7. பயான் செய்யும் போது..

இந்த ஏழு இடங்களில் சிரிப்பவர்களை அல்லாஹ் அவர்களது உருவத்தை மாற்றி மறுமையில் தண்டிப்பான்.

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இப்படி ஒரு செய்தியைப் பரப்புகின்றனர்.

இந்தச் செய்தி புகாரியிலோ, முஸ்லிமிலோ இல்லை.

صحيح البخاري

106 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ الجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي مَنْصُورٌ، قَالَ: سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يَقُولُ: سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَكْذِبُوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجِ النَّارَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல்: புகாரி 106, 107, 1291