நபியின் தந்தை நரகிலிருப்பார் என்பது சரியான ஹதீஸா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தை காஃபிராக இருந்தார் என்ற கருத்தில் முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் பலவீனமானது என்றும், ஹம்மாத் பின் சலமா என்பவர் வழியாகவே முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது; இவர் பலவீனமானவர் என்றும் கூறுகிறார்கள். இது சரியா
ஷரஃபுத்தீன், அதிரை
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عفان حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس أن رجلا قال يا رسول الله أين أبي قال في النار فلما قفى دعاه فقال إن أبي وأباك في النار
இது தான் நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் ஆகும்.
அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை எங்கே இருப்பார் என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நரகத்தில் இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை அழைத்து என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
இதில் ஹம்மாத் பின் சலமா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுவது உண்மை தான். ஆனால் ஹம்மாத் பின் சலமா என்பவர் மிகவும் நம்பகமானவர் என்பதிலோ, அவர் உறுதியான நினைவாற்றல் உள்ளவர் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை.
அவர் மீது உள்ள விமர்சனம் என்னவென்றால் அவர் முதுமை அடைந்த போது மனக் குழப்பத்துக்கு உள்ளானார் என்பது தான்.
இது போன்ற நிலை அதிகமானவர்களுக்கு ஏற்படக் கூடியது தான். இது போன்றவர்கள் குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது?
மனக்குழப்பம் ஏற்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் பற்றி மூன்று நிலைகள் உள்ளன.
அவர் மனக்குழப்பம் ஏற்பட்ட பிறகு ஒரு ஹதீஸை அறிவித்தால் அதை நிராகரிக்க வேண்டும்.
அவர் நம்பகமானவராக இருந்து மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன் அறிவித்தது உறுதி செய்யப்பட்டால் அப்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவர் அறிவிக்கும் ஹதீஸ் அவரது மனக்குழப்பத்துக்கு முன்பா பின்பா என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தால் அவரது அறிவிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
பொத்தாம் பொதுவாக இவரது அறிவிப்பைத் தள்ளிவிடக் கூடாது.
تهذيب التهذيب – ابن حجر (3/ 11)
14 – قال أحمد حماد بن سلمة أثبت في ثابت من معمر وقال أيضا في الحمادين ما منهما إلا ثقة وقال حنبل عن أحمد أسند حماد بن سلمة عن أيوب أحاديث لا يسندها الناس عنه وقال أبو طالب حماد بن سلمة أعلم الناس بحديث حميد وأصح حديثا وقال في موضع آخر هو أثبت الناس في حميد الطويل سمع منه قديما يخالف الناس في حديثه وقال إسحاق بن منصور عن بن معين ثقة وقال الدوري عن بن معين من خالف حماد بن سلمة في ثابت فالقول قول حماد وقال جعفر الطيالسي عنه من سمع من حماد بن سلمة الأصناف ففيها اختلاف ومن سمع منه نسخا فهو صحيح وقال بن المديني لم يكن في أصحاب ثابت أثبت من حماد بن سلمة وقال الأصمعي عن عبد الرحمن بن مهدي حماد بن سلمة صحيح السماع حسن اللقي أدرك الناس لم يهتم بلون من الألوان ولم يلتبس بشيء أحسن ملكه نفسه ولسانه ولم يطلقه على أحد فسلم حتى مات وقال بن المبارك دخلت البصرة فما رأيت أحدا أشبه بمسالك الأول من حماد بن سلمة وقال أبو عمر الجرمي ما رأيت فقيها أفصح من عبد الوارث وكان حماد بن سلمة أفصح منه وقال شهاب بن المعمر البلخي كان حماد بن سلمة يعد من الأبدال وعلامة الأبدال أن لا يولد لهم تزوج سبعين امرأة فلم يولد له وقال عفان قد رأيت من هو أعبد من حماد بن سلمة ولكن ما رأيت أشد مواظبة على الخير وقراءة القرآن والعمل لله من حماد بن سلمة وقال بن مهدي لو قيل لحماد بن سلمة إنك تموت غدا ما قدر أن يزيد في العمل شيئا وقال بن حبان كان من العباد المجابين الدعوة في الأوقات ولم بنصف من جانب حديثه واحتج في كتابه بأبي بكر بن عياش فإن كان تركه إياه لما كان يخطىء فغيره من أقرانه مثل الثوري وشعبة كانوا يخطئون فإن زعم أن خطاءه قد كثر حتى تغير فقد كان ذلك في أبي بكر بن عياش موجودا ولم يكن من أقران حماد بن سلمة بالبصرة مثله في الفضل والدين والنسك والعلم والكتب والجمع والصلابة في السنة والقمع لأهل البدع قال سليمان بن حرب وغيره مات سنة 167 زاد بن حبان في ذي الحجة استشهد به البخاري وقيل أنه روى له حديثا واحدا عن أبي الوليد عنه عن ثابت قلت الحديث المذكور في مسند أبي بن كعب من رواية ثابت عن أنس عنه وقد ذكره المزي في الأطراف ولفظه قال لنا أبو الوليد فذكره وقد عرض بن حبان بالبخاري لمجانبته حديث حماد بن سلمة حيث يقول لم ينصف من عدل عن الاحتجاج به إلى الاحتجاج بفليح وعبد الرحمن بن عبد الله بن دينار واعتذر أبو الفضل بن طاهر عن ذلك لما ذكر أن مسلما أخرج أحاديث أقوام ترك البخاري حديثهم قال وكذلك حماد بن سلمة إمام كبير لمدحه الأئمة وأطنبوا لما تكلم بعض منتحلي المعرفة أن بعض الكذبة أدخل في حديثه ما ليس منه لم يخرج عنه البخاري معتمدا عليه بل استشهد به في مواضع ليبين أنه ثقة وأخرج أحاديثه التي يرويها من حديث أقرانه كشعبة وحماد بن زيد وأبي عوانة وغيرهم ومسلم اعتمد عليه لأنه رأى جماعة من أصحابه القدماء والمتأخرين لم يختلفوا وشاهد مسلم منهم جماعة وأخذ عنهم ثم عدالة الرجل في نفسه وإجماع أئمة أهل النقل على ثقته وأمانته انتهى وقال الحاكم لم يخرج مسلم لحماد بن سلمة في الأصول إلا من حديثه عن ثابت وقد خرج له في الشواهد عن طائفة وقال البيهقي هو أحد أئمة المسلمين إلا أنه لما كبر ساء حفظه فلذا تركه البخاري وأما مسلم فاجتهد وأخرج من حديثه عن ثابت ما سمع منه قبل تغيره وما سوى حديثه عن ثابت لا يبلغ اثني عشر حديثا أخرجها في الشواهد وقال عفان اختلف أصحابنا في سعيد بن أبي عروبة وحماد بن سلمة فصرنا إلى خالد بن الحارث فسألناه فقال حماد احسنهما حديثا واثبتهما لزوما للسنة فرجعنا إلى يحيى القطان فقال أقال لكم وأحفظها قلنا لا وقال القطان حماد عن زياد الأعلم وقيس بن سعد ليس بذاك وقال عبد الله عن أبيه أو يحيى عن القطان إن كان ما يروي حماد عن قيس بن سعد فهو كذا قال عبد الله قلت لأبي لأي شيء قال لأنه روى عنه أحاديث رفعها وقال أحمد بن حنبل أثبتهم في ثابت حماد بن سلمة وقال الدولابي ثنا محمد بن شجاع البلخي حدثني إبراهيم بن عبد الرحمن بن مهدي قال كان حماد بن سلمة لا يعترف بهذه الأحاديث التي في الصفات حتى خرج مرة إلى عبادان فجاء وهو يرويها فسمعت عباد بن صهيب يقول إن حمادا كان لا يحفظ وكانوا يقولون أنها دست في كتبه وقد قيل إن بن أبي العوجاء كان ربيبه فكان يدس في كتبه قرأت بخط الذهبي بن البلخي ليس بمصدق على حماد وأمثاله وقد اتهم قلت وعباد أيضا ليس بشيء وقد قال أبو داود لم يكن لحماد بن سلمة كتاب غير كتاب قيس بن سعد يعني كان يحفظ علمه وقال عبد الله بن أحمد عن أبيه ضاع كتاب حماد عن قيس بن سعد وكان يحدثهم من حفظه وأورده له بن عدي في الكامل عدة أحاديث مما ينفرد به متنا أو إسنادا قال وحماد من أجلة المسلمين وهو مفتي البصرة وقد حدث عنه من هو أكبر منه سنا وله أحاديث كثيرة وأصناف كثيرة ومشائخ وهو كما قال بن المديني من تكلم في حماد بن سلمة فاتهموه في الدين وقال الساجي كان حافظا ثقة مأمونا وقال بن سعد كان ثقة كثير الحديث وربما حدث بالحديث المنكر وقال العجلي ثقة رجل صالح حسن الحديث وقال إن عنده ألف حديث حسن ليس عند غيره وحكى أبو الوليد الباجي في رجال البخاري إن النسائي سئل عنه فقال ثقة قال الحاكم بن مسعدة فكلمته فيه فقال ومن يجترئ يتكلم فيه لم يكن عند القطان هناك ثم جعل النسائي يذكر الأحاديث التي انفرد بها في الصفات كأنه خاف أن يقول الناس تكلم في حماد من طريقها وقال بن المديني أثبت أصحاب ثابت حماد ثم سليمان ثم حماد بن زيد وهي صحاح
ஹம்மாத் பின் சலமாவின் நினைவாற்றல், அவரது அபாரத் திறமை, ஆராய்ச்சியின் ஆழம் மற்றும் வணக்க வழிபாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு என பல அறிஞர்கள் பாராட்டியதை தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் இப்னு ஹஜர் அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றை மேலே அரபு மூலத்தில் காணலாம்.
நமக்குத் தேவையான பகுதியை மட்டும் சிவப்பு எழுத்தில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
இமாம் முஸ்லிம் அவர்கள் இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யும் போது நன்கு ஆய்வு செய்து இவர் மனக் குழப்பத்துக்கு ஆளாவதற்கு முன் அறிவித்தவை என்று உறுதி செய்து கொண்டு பதிவு செய்துள்ளார்கள் என்று பைஹகீ இமாம் கூறுகிறார்கள். அதாவது மனக்குழப்பம் ஏற்பட்ட பின்னர் இவர் அறிவித்தவைகளை இமாம் முஸ்லிம் அவர்கள் பதிவு செய்யவில்லை. மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன் அறிவித்த ஹதீஸ்களையே இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் என்று பைஹகீ கூறுகிறார்.
அடுத்து ஸாபித் என்பவர் வழியாக ஹம்மாத் அறிவித்தால் அதற்கு மாற்றமாக யார் அறிவித்தாலும் ஹம்மாதின் அறிவிப்பைத் தான் ஏற்க வேண்டும் என்று இப்னு மயீன் கூறுகிறார்.
மேற்கண்ட ஹதீஸ் இவருக்கு மூளைக் குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் அறிவித்ததாகும். மேலும் இது ஸாபித் என்பார் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதில் சந்தேகம் இல்லை. ஹதீஸ் கலையை அறைகுறையாக விளங்கிக் கொண்டு சிலர் இதை பலவீனமாக்க முயல்கின்றனர்.
இவர்கள் (ஜமாலி வகையறாக்கள்) நபிகள் நாயகத்தின் பெற்றோர் முஸ்லிம்கள் என்பதற்கு இப்னு அசாகிரில் ஆதாரம் உள்ளது என்று பேசினார். நம்முடன் நடந்த விவாதத்தின் போது அதை எடுத்துக் காட்டச் சொன்ன போது எடுத்துக் காட்ட முடியாமல் ஊமையாக நின்றவர்கள் என்பதை அந்த விவாத வீடியோவில் இருந்து அறியலாம்.
மேலும் இதே ஹம்மாத் அவர்கள் அறிவிக்கும் மகரந்தச் சேர்க்கை பற்றிய ஹதீஸை ஆதாரமாகக் காட்டி பித்அத்தை நியாயப்படுத்தியவர் தான் ஜமாலி என்பதையும் அந்த விவாத சீடியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒரே ஆள் அறிவிக்கும் இரு ஹதீஸ்களில் இரு வேறு நிலை எடுத்தவர்கள் என்பதில் இருந்து இது தவறான விமர்சனம் என்பது மேலும் உறுதிப்படுகின்றது.