மணக்கக் கூடாத உறவுகள்
கீழ்க்காணும் வசனத்தில் முஸ்லிம்கள் எந்த உறவுமுறையை திருமணம் செய்யக் கூடாது என்று கூறுகிறான்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப் பட்டுள்ளனர்). இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:23
இவ்வசனத்தில் இருந்து ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை என்பதை அறியலாம.
ஆண்கள் மணக்கக் கூடாத உறவுகள்
தாய்
மகள்
சகோதரி
தாயின் சகோதரி
தந்தையின் சகோதரி
சகோதரனின் புதல்விகள்
சகோதரியின் புதல்விகள்
பாலூட்டிய அன்னையர்
பாலூட்டிய அன்னையின் புதல்விகள்
மனைவியின் தாய்
மனைவியின் புதல்வி
மகனின் மனைவி
இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்
பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
தந்தை
மகன்
சகோதரன்
தாயின் சகோதரன்
தந்தையின் சகோதரன்
சகோதரனின் மகன்
சகோதரியின் மகன்
பாலூட்டிய அன்னையின் கணவன்
பாலூட்டிய அன்னையின் மகன்
கணவனின் தந்தை
கணவனின் புதல்வன்
புதல்வியின் கணவன்
சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது