மியாருடன் விபச்சாரம் செய்தால் சட்டம் என்ன?

கேள்வி

மனைவியின் தாயுடன் ஒருவன் விபச்சாரம் செய்தால் அதன் பின் மனைவியுடன் வாழ முடியாதா?

பதில்

இதில் மாறுபட்ட இரு கருத்துக்கள் அறிஞர்கள் மத்தியில் உள்ளது.

மனைவியின் தாயைத் திருமணம் செய்வதை அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான். 4:23 வசனத்தில் இதை தெளிவாக அல்லாஹ் கூறுகிறான்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப் பட்டுள்ளனர்). இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர.114 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:23

மனைவியின் தாயை திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறுவதால் மனைவியின் தாயுடன் விபச்சாரம் செய்தால் அதன் பின் மனைவியுடன் வாழ முடியாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இக்கருத்துக்கு இதைத் தவிர வேறு ஆதாரம் எதையும் அவர்கள் காட்டவில்லை.

சில மத்ஹபுகளில் இந்தக் கருத்து சொல்லப்பட்டாலும் இது சரியான கருத்து அல்ல.

ஏனெனில் இவ்வசனம் மனைவியின் தாயைத் திருமணம் செய்யக் கூடாது என்று தான் கூறுகிறது. விபச்சாரத்தை திருமணமாக ஆக்க முடியாது.

விபச்சாரத்தின் மூலம் பிறக்கும் குழந்தை விபச்சாரம் செய்தவனின் குழந்தையாகக் கருதப்படாது. மாறாக சட்டப்படி யார் கணவனோ அவனது குழந்தையாகவே கருதப்படும்.

صحيح البخاري

2053 – حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ، عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي فَاقْبِضْهُ، قَالَتْ: فَلَمَّا كَانَ عَامَ الفَتْحِ أَخَذَهُ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَقَالَ: ابْنُ أَخِي قَدْ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ، فَقَالَ: أَخِي، وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَتَسَاوَقَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي كَانَ قَدْ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي، وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ»، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الحَجَرُ» ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ – زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «احْتَجِبِي مِنْهُ» لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ

2053 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸம்ஆ என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன்; எனவே, அவனை நீ கைப்பற்றிக்கொள்! என்று உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (தம் மரணத் தறுவாயில்) தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட வருடம் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, இவன் என் சகோதரரின் மகன்! என்னிடத்தில் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்! எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் புதல்வர் அப்து (ரலி), இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைப்பெண்ணுக்குப் பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனது தாயார் இருக்கும் போது பிறந்தவன்! எனக் கூறினார். இருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது சஅத் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார் எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் புதல்வர் அப்து (ரலி), இவன் என் சகோதரன்! என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும் போது என் தந்தைக்குப் பிறந்தவன்! எனக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஸம்ஆவின் புதல்வர் அப்தே! இவன் உமக்குரியவனே! எனக் கூறினார்கள். பின்னர், (தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும் போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக் குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! எனக் கூறினார்கள். பின்னர், தமது மனைவியும் ஸம்ஆவின் மகளுமான சவ்தா (ரலி) அவர்களிடம், சவ்தாவே! நீ இவரிடமிருந்து திரையிட்டு உன்னை மறைத்துக்கொள்! என்றனர். (அவர் ஸம்ஆவின் மகன்தான்! என்று நபி ஸல் அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பாவின் தோற்றத்தில் அவர் இருந்ததால்தான் இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்பிறகு, அவர் அன்னை சவ்தா (ரலி) அவர்களை இறக்கும்வரை சந்திக்கவில்லை!

நூல் : புகாரி 2053

விபச்சாரம் மூலம் குழந்தை பிறந்தால் கூட அந்தக் குழந்தை விபச்சாரம் செய்தவனின் குழந்தையாக ஆகாது என்பது இதன் மூலம் தெரிகிறது.

மனைவியின் தாயுடன் விபச்சாரம் செய்தவருக்கு திருமணம் செய்தவரின் சட்டம் பொருந்தாது.

எனவே இதனால் மனைவியுடன் வாழ்வதற்குத் தடை இல்லை.

விபச்சாரம் பெரிய குற்றமாகும்; திருமணம் செய்யத் தடுக்கப்பட்டவர்களுடன் விபசாரம் செய்வது அதை விட கடுங்குற்றமாகும்.

செய்த தவறை உணர்ந்து இது போல் நடக்க மாட்டேன் என்று அல்லாஹ்விடம் உறுதி கூறி அழுதழுது மன்னிப்பு கேட்பது தான் இதற்கான பரிகாரம்.

82. திருந்தி, நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்து, பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன்.

திருக்குர்ஆன் 20:82,

53. தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்!471 பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

திருக்குர்ஆன் 39;53