சொர்க்கத்தில் 72 கன்னிகள் என்பது சரியா

  • இறைவனுக்காக உயிர் தியாகம் செய்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் 72 ஹூருல் ஈன்கள் கிடைக்கும் என்ற ஹதீஸை எடுத்துக்காட்டி இஸ்லாமை விமர்சனம் செய்கிறார்கள்.
  • அப்படி ஹதீஸ் உள்ளதா? இருந்தால் இந்த விமர்சனத்துக்கு இஸ்லாத்தின் பதில் என்ன?
  • இந்தச்  செய்தி தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக அறியப்படாவிட்டாலும் ஆங்கில உலகத்தில் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமாக இஸ்லாத்தைக்  அசிங்கமாகக் காண்பிப்பதற்காக இந்த ஹதீஸைப் பரப்புகிறார்கள்.
  • இம்ரான் கோவை

பதில்

இந்தக் கருத்துடைய ஹதீஸ்கள் அஹ்மத், தப்ரானி திர்மிதி உள்ளிட்ட நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

.

இது ஆதாரப்பூர்வமான செய்தி தான்.

ஆனால் இதில் விமர்சனம் செய்ய எதுவும் இல்லை.

இது குறித்து விமர்சிக்கும் கிறித்தவர்கள் பைபிளை சரியாக அறியாமல் விமர்சிக்கிறார்கள்.

கீழ்க்கண்ட வசனங்களை மட்டும் பார்த்து விட்டு பரலோக ராஜ்ஜியம் குறித்து முடிவு செய்கிறார்கள்

24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்க வேண்டும் என்று மோசே சொன்னாரே.

25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப் போனான்.

26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.

27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

28. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.

29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப் போல் இருப்பார்கள்;

மத்தேயு 22:24-30

பரலோக ராஜ்ஜியத்தில் உண்ணுதல், பருகுதல், உடல் இன்பம் போன்றவை இல்லை. வானவர்களைப் போல் அவர்கள் எந்த இன்பங்களையும் அனுபவிக்காமல் நித்திய ஜீவனை அடைவார்கள் என்று இவ்வசங்களின் அடிப்படையில் நம்புகிறார்கள்.

அதனால் சொர்க்கத்தில் கன்னியர் கிடைப்பார்கள் என்ற செய்தி அவர்களுக்கு வியப்பாகத் தெரிகிறது.

பரலோக ராஜ்ஜியத்தில் இன்பங்கள் உண்டு எனக் கூறும் வசனங்களும் உள்ளன.

29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்;

மத்தேயு 19:29

பரலோக ராஜ்ஜியத்தில் தேவ தூதர்களைப் போல் இருக்க மாட்டார்கள். மாறாக இந்த உலகத்தில் தியாகம் செய்தவைகளை பன்மடங்காகப் பெற்று இன்பம் அனுபவிப்பார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

கர்த்தருக்காக மனைவியை தியாகம் செய்தவன் அது போல் நூறு மனைவிகளைப் பெறுவான். நிலங்களை தியாகம் செய்தவன் அது போல் நூறு மடங்கை அடைவான் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

கர்த்தருக்காக மனைவியை தியாகம் செய்தால் நூறு மனைவியைப் பெறுவார்கள் என்று சொல்லும் பைபிளை வேதமாக ஏற்றுள்ளவர்கள் 72 கன்னிகள் பற்றி கேள்வி கேட்பது அறியாமையாகும்.

6. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

7. சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

8. சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

ரோமர் 2:6,7,8

அவனவனது கிரியைகளுக்கு தக்க பலனை அனுபவிப்பார்கள் என்ற இந்த வசனம் பரலோக ராஜ்ஜியத்தில் வானவர்கள் போல் இருப்பார்கள் என்ற கிறித்தவர்களின் நம்பிக்கை தவறு என்று நிரூபிக்கிறது.

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

2 கொரிந்திர 5:1

பரலோக ராஜ்ஜியத்தில் தேவனால் உருவாக்கப்பட்ட வீடுகள் மாளிகைகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.

தேவன் கட்டிய வீடுகள் கிடைக்கும் என்றால் என்ன பொருள்? வீடுகளில் இருக்கும் அனைத்து சாதனங்களும் இருக்கும். அதை பரலோக ராஜ்ஜியத்தில் அனுபவிப்பார்கள் என்பது தான் பொருள்.

34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.

மத்தேயு 25:34

நன்மக்களுக்காக தேவனால் ஒரு ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உரிமையாக்கிக் கொள்வார்கள் என்றால் அங்கே அனைத்து இன்பங்களும் உண்டு என்பதைத் தான் பைபிள் கூறுகிறது.

21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மார்க் 10:21

தனது செல்வத்தை நல் வழியில் செலவு செய்தவனுக்கு பரலோக ராஜ்ஜியத்தில் பொக்கிசம் உண்டு என்று இயேசு கூறியதாக இவ்வசனம் கூறுகிறது. தேவதூதர்கள் போல் இருப்பவர்களுக்கு பொக்கிஷம் எதற்கு?

அப்படியானால் தேவதூதர்கள் போல் இருப்பீர்கள் என்று இயேசு சொன்னதற்கு என்ன பொருள்?

தேவதூதர்கள் உண்ணாமல் பருகாமல் இருப்பவர்கள் அல்லர்:. மனிதர்களைப் போலவே சாப்பிடுபவர்கள் என்று பைபிள் கூறுகிறது.

ஆப்ரஹாமைச் சந்தித்த மூன்று தேவதூதர்கள் மனிதர்களின் உணவை மனிதர்களைப் போல் சாப்பிட்டுள்ளார்கள் என்று பைபிள் கூறுகிறது.

6. அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்று படி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.

7. ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.

8. ஆபிரகாம் வெண்ணெயையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

ஆதியாகமம் 18:6,7,8

அது போல் லோத்துவைச் சந்தித்த தேவ தூதர்கள் உணவு உட்கொண்டதாக பைபிள் சொல்கிறது

1. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

2. ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

3. அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்து பண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.

ஆதியாகமம் 19:1,2,3

பரலோக ராஜ்ஜியத்தில் தேவதூதர்கள் போல் இருப்பார்கள் என்பதை பைபிள் அடிப்படையில் புரிந்து கொண்டால் தேவதூதர்கள் உண்பார்கள்; பருகுவார்கள் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

பல கணவன்மார்களை மணந்த பெண் யாருக்கு மனைவியாக இருப்பாள் என்ற கேள்விக்குத் தான் தேவதூதர்கள் போல் இருப்பார்கள் என்று இயேசு பதில் கூறியுள்ளார். அவள் எனக்கு உனக்கு என்று சண்டையிட்டுக் கொள்ள மாட்ட்டார்கள். கடவுள் தீர்ப்பை தேவதூதர்கள் போல் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தில் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் நாம் எடுத்துக்காட்டிய மற்ற வசனங்களுடன் இணக்கமாக அமையும்.

பரலோக ராஜ்ஜியத்தில் ஒன்றுக்கு நூறாக மனைவியர் கிடைப்பார்கள் என்று பைபிள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் 72 கன்னிகள் குறித்து கேலி செய்து தங்களையே கேலி செய்கிறார்கள்.

அடுத்து மறுமை வாழ்க்கை என்பது இவ்வுலக வாழ்வில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

அங்கே சாப்பிடுவார்கள் ஆனால் மலம் கழிக்க மாட்டார்கள்.

பருகுவார்கள். சிறு நீர் கழிக்க மாட்டார்கள்.

நோய், முதுமை இருக்காது.

அங்கே சோர்வு அசதி இருக்காது. முதுமை இருக்காது. மாறாத இளமையுடன் இருப்பார்கள். அங்கே கள்ளம் கபடம் இருக்காது.

இந்த உலகத்தில் எடுக்கும் முடிவைப் போல் அங்கே முடிவு எடுக்க மாட்டார்கள்.

இவை எல்லாம் சாத்தியமற்றதாக இவ்வுலகப் பார்வையில் தெரியும். ஆனால் இறைவன் தனது பேராற்றலால் மனிதர்களுக்கு இவற்றைச் செய்து கொடுக்கிறான்.

ஒருவனுக்கு கிடைக்கும் சொர்க்கம் பல மாதங்கள் பயணிக்கும் அளவு விசாலமானதாக இருக்கும். எல்லாமே பிரம்மாண்டமாக வழன்கப்படும் சொர்க்கத்தில் எத்தனை கன்னிகள் கொடுக்கப்பட்டாலும் அந்த உலகில் அது பிரச்சனையாக இருக்காது.

இதில் கிறித்தவர்கள் விமர்சிக்க ஒன்றும் இல்லை. அவர்களின் வேதத்திலும் இது போல் சொல்லப்பட்டுள்ளது என்பதே அவர்களுக்கான பதிலாகும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...