தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகம் சுனாமி மற்றும் பித்ரா நிதியில் மோசடி செய்ததாக தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் குற்றம் சாட்டியது. குற்றச்சாட்டுக்குப் பின் பொது விசாரணைக்கு ஒப்புக் கொண்ட தமுமுக பின்னர் பின்வாங்கி ஒரு மணடபத்தில் தனது இயக்கத்தினருக்கு மட்டும் கணக்கு காட்டும் நாடகம், நடத்திய்தாக ததஜ குற்றம் சாட்டியது.
அந்தக் ஆக்கத்தைத் தான் கீழே காண்கிறீர்கள்.
தமுமுகவாவது எதோ ஆடிட்டர் மூலம் கணக்கு காட்டி தங்கள் இயக்கத்தினரை நம்ப வைத்தார்கள். ஆனால் ததஜ அதைக் கூட செய்ய வக்கில்லாமல் கணக்கு கேட்டால் ஓட்டம் பிடிக்கிறது.
2005 ஆம் ஆண்டு உணர்வு இதழில் எழுதியதைக் கீழே தந்துள்ளோம். இதைப் படித்தால் தமுமுகவை விட ததஜவினர் உழல் பெருச்சாளிகளாக உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
நடுவர்கள் அழைப்பை ஏற்காது தமுமுக ஓட்டம்
ஃபித்ரா நிதியை 2004, 2005 ஆகிய இரண்டு ஆண்டுகள் திரட்டிய தமுமுகவினர் தாங்கள் எவ்வளவு திரட்டினோம் என்ற விபரங்களை இன்றுவரை வெளியிடவில்லை.
சுனாமி நிவாரண நிதியையும் தமுமுகவினர் திரட்டினார்கள். எவ்வளவு திரட்டினோம் என்பதை விலாவாரியாக வெளியிட்ட தமுமுகவினர் அந்த நிதியை என்ன செய்தோம் என்பதை இன்றுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் அனைத்துக் கணக்குகளையும் முறையாகப் பராமரித்து வரும் டி.என்.டிஜே மீது சுனாமி நிதி பற்றி பினாமி பிரசுரம் வெளியிட்டு அவதூறு பரப்பினார்கள்.
அதன்பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் நடுவர்களின் பொது விசாரணைக்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம்.
தமுமுகவினர் சுனாமி நிதியை திரட்டும் போது தங்கள் பத்திரிகையில் பின்வருமாறு மக்களுக்கு அறிவிப்புச் செய்தனர்.
இந்த அறிவிப்பில் இரண்டு விஷயங்களை தமுமுகவினர் குறிப்பிட்டனர்.
50 குடும்பங்களுக்கு 75 இலட்சம் செலவில் வீடு கட்டித் தருவோம் என்பது முதலாவது செய்தி.
சமுதாயத்துக்கு அளித்த வாக்குறுதியின்படி 50 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருந்தால் அந்தக் கணக்கை மிக எளிதாகக் காட்டி விடலாம்.
ஐம்பது ரூபாய்க்கு நோட்புக் கொடுத்ததையெல்லாம் கால்பக்கச் செய்தியாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் தமுமுகவினர் 75 லட்சம் ரூபாய்க்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருந்தால் அந்த வீடுகள் பெற்றவர்களின் விபரங்களையும், வீடுகளின் பயன்களையும் வெளியிட்டு தங்கள் நேர்மையை நிரூபித்திருக்க முடியும்.
“”நீங்கள் அனுப்பும் நிதி பற்றிய விபரங்களும் அது செலவு செய்யப்பட்டது குறித்த விபரமும்” தொடர்ந்து மக்கள் உரிமையில் பிரசுரமாகும் என்பது அவர்கள் தெரிவித்த இரண்டாவது செய்தி.
அற்பமான ஊதியத்துக்காக பாலை மணலில் வெந்து சாம்பலாகும் நம் சகோதரர்கள் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பபைக் கண்டு கலங்கிப் வாரி வாரி வழங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியை முறையாக சேர்ப்பார்கள், அவர்களின் தேவையக்ள பூர்த்தியாகும், அந்த மக்களின் துயரில் பங்கு கொண்டதற்காக மறுமையில் இறைவனிடம் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த மக்கள் வாரி வழங்கினார்கள்.
வரவுகளை மட்டும் விலாவாரியாக வெளியிட்டவர்கள், பல இதழ்களில் பக்கம் பக்கமாக பட்டியல் போட்டவர்கள் ஐம்பது வரிகளில் 50 வீடுகள் கட்டிக் கொடுத்த விபரங்களை வெளியிடுவதற்கு என்ன தடை?
நிதியளித்தவர்கள் பல முறை வலியுறுத்திய பிறகும் இன்று வரை சுனாமி நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை வெளியிட மறுக்கும் மர்மம் என்ன? இதற்காகத் தான் பொது விசாரணை கோரினோம்.
ஆனால், நடுவர்களை இவர்கள் மதிக்கவில்லை. தங்கள் நேர்மையை நிரூபிக்க தங்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
மடியில் கனம் இல்லாவிட்டால் வழியில் பயம் ஏன்?
விசாரணைக்கு முன்பே இவர்களின் நேர்மையின்மையை அம்பலப்படுத்தும் நடுவர்களின் கடிதத்தைப் பாருங்கள். (கட்டத்தில் உள்ளது)
நடுவர் குழுவின் விசாரணையை ஏற்றுக் கொண்டு அதிகாரபூர்வமாக கடிதம் கொடுத்ததையும், தமுமுக முன்னவரவில்ல என்பதையும் நடுவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.
இதற்கு பிறகு பேசாமல் மௌனம் சாதிருத்திருந்ôல் கூட , இனிமேல் முளறையாகக் கணக்கை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பாவது மிஞ்சியிருக்கும்.
ஆனால், இவர்கள் நடத்திய கோமாளிக் கூத்துக்களால் இவர்கள் மேலும் அசிங்கப்பட்டுவிட்டார்கள்.
இவர்களே பிடித்த மண்டபத்தில் தங்கள் இயக்கத்தினரைக் கூட்டி வீதியெங்கும் கொடிகளைத் தோரணம் கட்டி கணக்கு காட்டும் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
கணக்கை பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கிய பிரச்சனை.
இதைச் செய்யாமல் தங்கள் கட்சியினரை அழைத்து வைத்து மொட்டைத் தாத்தன் குட்டையில் விழுந்தான் என்பது போல் வாசித்து விட்டு விபரங்களை நமது அலுவலகத்தில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று அற்புதமான (?) முறையில் கணக்கு காட்டிவிட்டார்கள்.
முக்கியமான மார்க்கக் கடமையின் பெயரால், நிதி திரட்டி (ஃபித்ரா) அந்தத் தொகை எவ்வளவு? எந்த வகையில் வந்தது? என்ற விபரங்களை வெளியிடாதவர்கள் மற்ற நிதியாதாரங்கள் விஷயத்தில் எப்படி நடப்பார்கள் என்பதை சமுதாயமே புரிந்து கொள்ளட்டும்.
சுனாமியின் பாதிப்பைக் கண்டு கல்நெஞ்சம் படைத்தவர்களும் வாரி வழங்கியிருக்க… அந்த நிதியைப் பற்றியே வாய் திறக்க மறுக்கிறார்கள் என்றால் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாது ஓட்டம் எடுக்கிறார்கள் எனு;றால் இவர்களை எப்படி நம்பலாம் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ளட்டும்.
(உணர்வு, உரிûம் 10 : குரல் 15, டிசம்பர் 16 – 22, 2005, பக்கம் : 13)