பீஜே குறித்த திறனாய்வு
பீஜே குறித்து செய்யப்பட்ட ஆய்வு
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டைச் சேர்ந்த ஹபீபுர்ரஹ்மான் அவர்களின் மகன் வழக்கறிஞர் அர்ஷத் அவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக பீஜே யை சப்ஜெக்டாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாக்டர் பட்டம் பெற்றார்.
டாக்டர் பட்டம் பெறுவதற்காக யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கருவாக எடுத்துக் கொள்ளலாம். எனவே இதில் பெருமை அடிக்க ஒன்றும் இல்லை.
அந்தத் திறனாய்வை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று பல சகோதரர்கள் என்னிடம் கேட்டு வந்தனர். அது தேவையற்றது என்பதால் நான் மூன்று ஆண்டுகளாகத் தவிர்த்து வந்தேன்.
அவர் எப்படி திறனாய்வு செய்துள்ளார் என்ற செய்திக்காகவும் அதை வெளியிட்டால் தமிழக தவ்ஹீத் இயக்கத்தின் வரலாறை மற்றவர்கள் அறிய முடியும் என்பதற்காகவும் தற்போது அது வெளியிடப்படுகிறது.
இதில் ஆய்வு செய்தவர் தனது பார்வையில் பட்ட அடிப்படையில் செய்திகளைச் சொல்லி இருக்கிறார். ஒருவரது ஆய்வை அப்படியே தான் வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் இது வெளியிடப்படுகிறது.
2010 பிப்ரவரி வெளியிடப்பட்டது