பத்து வயது கைக்குழந்தை! இஸ்மயீல் சலஃபியின் உளறல்
ஸாலிம் என்ற இளைஞருக்குப் பாலூட்டுமாறு ஸஹ்லா என்ற பெண்மணிக்கு நபிகள் கட்டளையிட்டதாக வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது. அது குர்ஆனுக்கு முரணானது என்று கூறி வருகிறீர்கள். பாலூட்டுவது என்றால் ஸஹ்லாவுக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இருக்க வேண்டும். கைக்குழந்தை இருந்ததற்கு ஆதாரம் உண்டா என்று நீங்கள் கேட்கின்றீர்கள். ஆனால் ஸாலிமுக்கு பாலூட்டச் சொன்ன நேரத்தில் ஸஹ்லாவுக்கு கைக்குழந்தை இருந்ததற்கு ஆதாரம் உண்டு என்று இஸ்மாயீல் சலபி என்பவர் கட்டுரை எழுதியுள்ளாரே? இதன் உண்மை நிலை என்ன?இஹ்ஸாஸ், இலங்கை
அவருக்கு கைக்குழந்தை இருந்ததா என்பது அடிப்படையான கேள்வி அல்ல. அந்த நேரத்தில் அவருக்கு கைக்குழந்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இளைஞருக்குப் பாலூட்டுமாறு நபியவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். இது தான் அடிப்படையான கேள்வியாகும்.
உங்கள் கேள்விக்கான பதிலை அறிவதற்கு முன் இந்த ஹதீஸ் குறித்து நாம் எழுப்பிய கேள்விகளையும், வாதங்களையும் பார்க்கவும். அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் இதுவரை பதில் சொல்லி இருக்கிறார்களா என்று நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
அந்த ஹதீஸை நம்பி செயல்படுத்தலாம் என்று சொல்ல அவர்களே வெட்கப்பட்டு வேறு வகையில் மறுப்பதையும் நீங்கள் அறியலாம்.
கீழ்க்காணும் நூலில்
ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?
பாலூட்டுமாறு ஸஹ்லாவுக்கு நபியவர்கள் கட்டளையிட்டதைச் செயல்படுத்துவதாக இருந்தால் அவருக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இருக்க வேண்டும். அதை நிரூபிக்க முடியுமா என்று துணைக் கேள்வியாகக் கேட்டுள்ளோம். கேட்டு பல வருடங்கள் ஓடி விட்டன. அவருக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இல்லை என்பதற்கான ஆதாரம் இருந்ததால் அப்படி கேள்வி கேட்டோம்.
அவருக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இல்லை என்பதற்கு எது ஆதாரமாக உள்ளதோ அதையே அறைகுறையாக விளங்கிக் கொண்டும் இருட்டடிப்பு செய்தும் ஸஹ்லாவுக்கு கைக்குழந்தை இருந்தது என்று இஸ்மாயீல் சலபி என்பவர் எழுதியுள்ளார்.
ஸஹ்லா அவர்களுக்கு முஹம்மத் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தது நமக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர் கைக்குழந்தை இல்லை என்பதும் நமக்குத் தெரியும்.
முஹம்மத் என்ற பெயரில் அவருக்கு ஒரு குழந்தை இருந்தது குறித்த விபரத்தை விரிவாக அறியத் தருகிறோம்.
ஸஹ்லாவும் அபூ ஹுதைபாவும் அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது அபீசீனியாவில் தான் முஹம்மத் பிறக்கிறார்.
الإستيعاب في معرفة الأصحاب ابن عبد البر
أبو حذيفة بن عتبة بن ربيعة بن عبد شمس بن عبد مناف القرشي العبشمي كان من فضلاء الصحابة من المهاجرين الأولين، جمع الله له الشرف والفضل صلى القبلتين وهاجر الهجرتين جميعاً وكان إسلامه قبل دخول رسول الله صلى الله عليه وسلم دار الأرقم للدعاء فيها إلى الإسلام هاجر مع امرأته سهلة بنت سهيل بن عمرو إلى أرض الحبشة وولدت له هناك محمد بن أبي حذيفة
அபூஹுதைபா தன் மனைவியுடன் அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது அபீசீனியவில் தான் முஹம்மதைப் பெற்றார்கள்.
நூல் : இப்னு அப்துல் பர் அவர்களின் இஸ்தீஆப்
அபூஹுதைபாவும், ஸஹ்லாவும் எந்த ஆண்டு அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தனர்?
الكامل في التاريخ
فخرج المسلمون إلى أرض الحبشة مخافة الفتنة وفراراً إلى الله بدينهم، فكانت أول هجرة في الإسلام، فخرج عثمان بن عفان وزوجته رقية ابنة النبي، صلى الله عليه وسلم، معه، وأبو حذيفة بن عتبة بن ربيعة ومعه امرأته سهلة بنت سهيل بن عمرو، والزبير العوام، وغيرهم تمام عشرة رجال، وقيل: أحد عشر رجلاً وأربع نسوة، وكان مسيرهم في رجب سنة خمس من النبوة، وهي السنة الثانية من إظهار الدعوة، فأقاموا شعبان وشهر رمضان.
நபிப்பட்டம் கிடைக்கப்பெற்ற ஐந்தாவது ஆண்டில் ரஜப் மாதத்தில் இருவரும் உஸ்மான் (ரலி) தலைமையில் அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றனர்.
நூல் : இப்னுல் அஸீர் அவர்களின் அல்காமில்
அவர்கள் இருவரும் அபீசீனியாவில் அதிக காலம் தங்கவில்லை. நபியவர்கள் மக்காவில் இருந்த போதே மக்காவுக்கு திரும்பி விட்டார்கள்.
الإستيعاب في معرفة الأصحاب ابن عبد البر
أبو حذيفة بن عتبة بن ربيعة بن عبد شمس بن عبد مناف القرشي العبشمي كان من فضلاء الصحابة من المهاجرين الأولين، جمع الله له الشرف والفضل صلى القبلتين وهاجر الهجرتين جميعاً وكان إسلامه قبل دخول رسول الله صلى الله عليه وسلم دار الأرقم للدعاء فيها إلى الإسلام هاجر مع امرأته سهلة بنت سهيل بن عمرو إلى أرض الحبشة وولدت له هناك محمد بن أبي حذيفة، ثم قدم على رسول الله صلى الله عليه وسلم وهو بمكة فأقام بها حتى هاجر إلى المدينة وشهد بدراً وأحداً والخندق والحديبية والمشاهد كلها وقتل يوم اليمامة شهيداً وهو ابن ثلاث أو أربع وخمسين سنة
நபியவர்கள் மக்காவில் இருந்த போதே மக்காவுக்கு திரும்பி அங்கேயே தங்கி விட்டு பின்னர் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தனர்.
நூல் ; இப்னு அப்துல் பர் அவர்களின் இஸ்தீ ஆப்
அபீசீனியாவில் குழந்தை முஹம்மதைப் பெற்று மக்காவுக்கு திரும்பி விட்டார்கள்.
குரைஷிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். மக்காவில் எந்த எதிர்ப்பும் இல்லை என்ற தவறான தகவலை நம்பி இருவரும் மக்காவுக்குத் திரும்பி விட்டார்கள்.
الكامل في التاريخ
وقدموا في شوال سنة خمس من النبوة، وكان سبب قدومهم إلى النبي، صلى الله عليه وسلم، أنه لما رأى مباعدة قومه له شق عليه وتمنى أن يأتيه الله بشيء يقاربهم به، وحدث نفسه بذلك، فأنزل الله: (وَالنَّجْمِ إذَا هَوَى) النجم: 20؛ فلما وصل إلى قوله: (أفَرَأيْتُمُ اللاّتَ والعُزّى وَمَنَاةَ الثّالِثَةَ الأخْرَى)؛
அபீசீனியாவுக்குப் போனவர்கள் பொய்யான வதந்தியைக் கேள்விப்பட்டு நபிப்பட்டம் கிடைத்த அதே ஐந்தாம் ஆண்டில் ஷவ்வால் மாதம் திரும்பி விட்டார்கள்.
நூல் : இப்னுல் அஸீரின் அல்காமில்
அதாவது நபிப்பட்டம் கிடைத்த ஐந்தாம் ஆண்டு ரஜப் மாதம் ஹிஜ்ரத் சென்று மூன்று மாதம் கழித்து ஷவ்வாலில் மக்காவுக்குத் திரும்பினார்கள்.
மக்காவில் மாற்றம் ஏற்பட்டது என்று கேள்விப்பட்டு சிலர் மக்காவுக்கு திரும்பினார்கள். சிலர் அபீசீனியாவில் தங்கி விட்டனர். மக்காவுக்கு திரும்பியவர்களில் அபூஹுதைபாவும் அடங்குவார்.
الكامل في التاريخ
واشتدت قريش على المسلمين، فلما قرب المسلمون الذين كانوا بالحبشة من مكة بلغهم أن إسلام أهل مكة باطل، فلم يدخل أحد منهم إلا بجوار أو مستخفياً، فدخل عثمان في جوار أبي أحيحة سعيد بن العاص بن أمية، فأمن بذلك، ودخل أبو حذيفة بن عتبة بجوار أبيه، ودخل عثمان بن مظعون بجوار الوليد بن المغيرة،
உள்ளூரில் உள்ளவர்களிடம் அடைக்கலம் பெற்றவர்கள் மட்டும் தான் மக்காவுக்குள் குரைஷிகளால் அனுமதிக்கப்பட்டனர். அபூஹுதைபாவுக்கு அவரது தந்தை உத்பா அடைக்கலம் கொடுத்தார். அதன் அடிப்படையில் அபூ ஹுதைபா மக்காவில் அனுமதிக்கப்பட்டார்.
நூல் : இப்னுல் அஸீர் அவர்களில் அல்காமில்
மேற்கண்ட குறிப்புகளில் இருந்து தெரிவது என்ன? ஸஹ்லாவுக்கு முஹம்மத் பிறந்தது அபீசீனியாவில். அபீசீனியாவில் இருந்தது ரஜப் ஷஃபான், ரமலான் ஆகிய மூன்று மாதங்கள் தான். ஹிஜ்ரத்துக்கு ஐந்து ஆண்டுக்கு முன்னர் இந்த மூன்று மாதங்களில் தான் முஹம்மத் பிறந்தார்.
அப்படியானால் நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த போது முஹம்மதின் வயது ஐந்தாகும்.
அதாவது ஸஹ்லா அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது முஹம்மதின் வயது ஐந்தாகும்.
வளர்ப்பு மகன் கிடையாது என்ற சட்டம் அருளப்பட்டது ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டில் தான்.
فتح الباري – ابن حجر
ثم تزوج زينب بنت جحش في الخامسة
வளர்ப்பு மகன் என்பது கிடையாது என்ற சட்டம் அருளப்படும் போது தான் ஸைனப் அவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்து தந்தான். இது நடந்தது ஐந்தாம் ஆண்டில் தான்.
நூல் ; பத்ஹுல் பாரி
இந்தச் சட்டம் அருளப்பட்ட பிறகு தான் ஸாலிம் சம்மந்தமான பிரச்சனை வருகிறது. அதாவது ஸஹ்லா அவர்கள் மதீனா வந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் முஹம்மதுக்கு பத்து வயது ஆகும் போது தான் இந்தச் சம்பவம் நடந்திருக்க வேண்டும்.
பத்து வயது சிறுவனைத் தான் இஸ்மாயீல் சலபி என்பவர் கைக்குழந்தை என்கிறார்.
ஸஹ்லா அவர்களுக்கு முஹம்மத் என்ற பெயரில் ஒரு கைக்குழந்தை இருந்தது என்ற செய்தி மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
என்று அப்பட்டமாகப் புளுகியுள்ளார். இவர் மார்க்கத்தில் எந்த அளவுக்கு துணிந்து பொய் சொல்பவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
எல்லோரும் ஒரு காலத்தில் கைக்குழந்தையாக இருந்தவர்கள் தான். ஆனால் மேற்படி சம்பவம் நடக்கும் போது ஸஹ்லாவுக்கு கைக்குழந்தை இருந்தது என்று ஒரு ஆதாரமும் இல்லை. தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவர் எடுத்துக் காட்ட வேண்டும்.
ஸாலிம் சம்மந்தமாக அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டும் அதற்கு இன்று வரை பதில் இல்லை.
பத்து வயதுப் பையனைக் கைக்குழந்தை என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்கு மூளைக்குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது ஒருவரும் சொல்லாதது மட்டுமின்றி கேட்பவர்கள் எள்ளி நகையாடும் கருத்தாகும்.
பத்து வயது கைக்குழந்தை என்று சொன்னால் அவரை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
கூடுதல் தகவலுக்காக ஒரு செய்தியை எடுத்துக் காட்டுகிறோம்.
மக்தபதுஷ் ஷாமிலா எனும் ஹதீஸ் கலைக்களஞ்சியத்தில் ஷுப்கதுல் இஸ்லாமியா என்ற தளத்தில் பத்வாக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் ஒருவர் பின்வருமாறு கேட்கிறார்.
فتاوى الشبكة الإسلامية عنوان الفتوى : شبهتان وجوابهما حول رضاع الكبير تاريخ الفتوى : 26 رجب 1426
السؤال
يثير النصاري مسألة حساسة نوعا ما ويتشدقون بها وهي (رضاعة الكبير) الحديث الذي ورد وهو حديث سهلة بنت سهيل زوجة أبي حذيفة بن عتبة، قد تثار بعض الأسئلة من النصارى منها أنه لا يوجد حليب أبدا في صدر أم حذيفة لأن ابنها (الوحيد من أبي حذيفة) – محمد بن أبي حذيفة – كانت قد ولدته أيام الهجرة الأولى للحبشة وحادثة إرضاع سالم كانت في المدينة؟! لا يوجد حليب في صدر سهلة بنت سهيل؟ فكيف أمر الرسول سهلة بأن ترضعه؟
அபூஹுதைபா, ஸஹலாவுக்கு ஒரே மகன் தான் இருந்தார். அந்த மகன் ஆபீசீனிய ஹிஜ்ரத்தின் போது பிறந்தார். இந்த அடிப்படையில் பார்க்கும் போது பால் கொடுக்குமாறு ஸஹ்லாவுக்கு நபியவர்கள் கட்டளையிட்ட போது நிச்சயம் அவரது மார்பில் பால் சுரந்திருக்க முடியாது என்று கிறித்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்குப் பதில் என்ன?
இது தான் கேள்வி
فتاوى الشبكة الإسلامية
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه، أما بعد فإن قصة رضاعة سهلة لسالم قصة صحيحة رواها مسلم وغيره. وقد قال بعدم ثبوت الحرمة لمن رضع بعد الكبر جمهور أهل العلم ومنهم الأئمة الأربعة، وجمهور أئمة المحدثين، ولم يطعن أحد منهم في سند الحديث ولم يضعفه فيما نعلم، وإنما احتجوا باحتجاجات أخرى منها أنه منسوخ أو مخصوص بسهلة أو مخصوص بمن تحتاج لمخالطة الرضيع مثل حاجة سهلة إلى غير ذلك كما ذكره ابن القيم في إعلام الموقعين وابن قدامة في المغني. وقد روى ابن سعد في الطبقات بسنده أنها كانت تحلب في مسعط أوإناء قدر رضعته، فيشربه سالم في كل يوم حتى مضت خمسة أيام، فعلى المسلم أن يثق بما ورد في الصحيحين أو أحدهما، فقد ذكر أهل المصطلح أن ما أسنداه يقطع أو يظن بصحته. وأما استشكال أهل الضلال من النصارى أو غيرهم وزعمهم أنه لا يوجد حليب أبداً في صدر سهلة فهو زعم لا يؤيده وحي ولا تجربة، ولا يسوغ أن يشكك فيما ثبت في الصحيحين، فلم يرد في الوحي أنها لا يوجد بها بعد فطام ولدها محمد بن أبي حذيفة لبن، وقد شهت التجربة قديماً وحديثاً أن بعض النساء يبقى فيها اللبن بعد فطام ولدها. وقد ذكر المزي في تهذيب الكمال أن أم سلمة رضي الله عنها أرضعت الحسن البصري ودر عليه ثديها فشرب منه، ومن المعلوم أن الحسن ولد بعد وفاة النبي صلى الله عليه وسلم وأن أم سلمة لم تلد بعد زواجها من النبي صلى الله عليه وسلم. والله أعلم
இஸ்மாயீல் சலபி சொல்வது போல் பத்து வயது கைக்குழந்தை என்று அவர்கள் சொல்லாமல் குழந்தை பெற்று பத்து ஆண்டுக்குப் பிறகும் பால் சுரக்கலாம். அதற்குத் தடை இல்லை என்று தான் சொன்னார்களே தவிர கைக்குழந்தை இருந்தது என்று சொல்லவில்லை.
இதுவும் உளறல் தான் என்றாலும் முஹம்மத் அப்போது கைக்குழந்தையாக இருந்தார் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.
இவ்வளவு தெளிவான விஷயம் என்பதற்காக இதை கூடுதல் தகவலுக்காக தெரிவிக்கிறோம்.