இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா?
இப்னுஸ் ஸய்யாத் என்ற பெயரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்துள்ளார் என்பது ஹதீஸ்களில் இருந்து தெரிகிறது.
ஆனால் இப்னு ஸய்யாத் குறித்த செய்திகளில் ஏற்கத்தக்கவையும் மறுக்கத்தக்கவையும் கலந்து காணப்படுகின்றன.
எனவே இப்னுஸ் ஸய்யாத் பற்றிய ஹதீஸ்களில் எவை ஏற்கத்தக்கவை? எவை மறுக்கத்தக்கவை என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறோம்.
صحيح البخاري
7355 – حَدَّثَنَا حَمَّادُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، قَالَ: رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَحْلِفُ بِاللَّهِ: أَنَّ ابْنَ الصَّائِدِ الدَّجَّالُ، قُلْتُ: تَحْلِفُ بِاللَّهِ؟ قَالَ: «إِنِّي سَمِعْتُ عُمَرَ يَحْلِفُ عَلَى ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُنْكِرْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
7355 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் இப்னுஸ் ஸய்யாத், தான் தஜ்ஜால் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறியபோது நான் பார்த்தேன். இதை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கிறீர்களே? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை நான் கேட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் அல்முன்கதிர்
நூல் : புகாரி 7355
صحيح البخاري
6173 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ: أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ: انْطَلَقَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِهِ قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى وَجَدَهُ يَلْعَبُ مَعَ الغِلْمَانِ فِي أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ ابْنُ صَيَّادٍ يَوْمَئِذٍ الحُلُمَ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ظَهْرَهُ بِيَدِهِ، ثُمَّ قَالَ: «أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ» فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ، ثُمَّ قَالَ ابْنُ صَيَّادٍ: أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ، فَرَضَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ» ثُمَّ قَالَ لِابْنِ صَيَّادٍ: «مَاذَا تَرَى» قَالَ: يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي خَبَأْتُ لَكَ خَبِيئًا» قَالَ: هُوَ الدُّخُّ، قَالَ: «اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ» قَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَأْذَنُ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ يَكُنْ هُوَ لاَ تُسَلَّطُ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْ هُوَ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ»،
6173, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இப்னுஸ் ஸய்யாதை நோக்கி நபித் தோழர்கள் சிலருடன் நடந்தார்கள். பனூ மஃகாலா’ குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் இப்னு ஸய்யாத் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். -அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தார்.- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அவனது முதுகில் தட்டும் வரை அவன் உணரவில்லை. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் என்று நீ உறுதி கூறுகிறாயா? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டு இப்னு ஸய்யாத், நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன் என்றான்.
பிறகு இப்னு ஸய்யாத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், நான் அல்லாஹ்வின் தூதன் என்று உறுதி கூறுகின்றீர்களா? என்று கேட்டான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனைத் தள்ளிவிட்டு விட்டு, நான் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டேன் என்று கூறினார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதிடம், நீ என்ன காண்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத் என்னிடம், மெய்யான செய்திகளும், பொய்யான செய்திகளும் வருகின்றன என்று சென்னான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உனக்கு இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு, நான் ஒன்றை மனத்தில் மறைத்து வைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்!) என்று கேட்டார்கள். அது துக் என்று பதிலளித்தான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூர விலகிப்போ; நீ உன் எல்லையைத் தாண்டி விட முடியாது என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், இவனைக் கொல்ல எனக்கு அனுமதியளிப்பீர்களா? இவனது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி 6173, 1354
صحيح البخاري
6172 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، سَمِعْتُ أَبَا رَجَاءٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِابْنِ صَائِدٍ: «قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا، فَمَا هُوَ؟» قَالَ: الدُّخُّ، قَالَ: «اخْسَأْ»
6172, இப்னு ஸய்யாத் இடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உனக்காக ஒன்றை நான் (மனத்தில்) மறைத்து வைத்துள்ளேன். அது என்ன என்றனர். அவன், அத்துக் (அத்துகான்’ எனும் 44ஆவது அத்தியாயம்) என்றான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தூர விலகிப்போ என்றனர்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 6172
صحيح البخاري
6174 – قَالَ سَالِمٌ: فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ: انْطَلَقَ بَعْدَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ، يَؤُمَّانِ النَّخْلَ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ، حَتَّى إِذَا دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، طَفِقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهُوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنْ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ، أَوْ زَمْزَمَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لِابْنِ صَيَّادٍ: أَيْ صَافِ – وَهُوَ اسْمُهُ – هَذَا مُحَمَّدٌ، فَتَنَاهَى ابْنُ صَيَّادٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَرَكَتْهُ بَيَّنَ»
6174, அதற்குப் பின் (இன்னொரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நோக்கி நடந்தனர். (தோட்டத்திற்குள்) நுழைந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடுவதற்கு முன்னால் அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப் பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு நடக்கலானார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் குஞ்சம் வைத்த போர்வைக்குள் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்ட இப்னு ஸய்யாதின் தாய் இப்னு ஸய்யாதிடம், ஸாஃபியே!’ -இது இப்னு ஸய்யாதின் பெயராகும்-என்றழைத்து, இதோ! முஹம்மது (வருகிறார்) என்று கூறினாள். உடனே இப்னு ஸய்யாத் (சுதாரித்துக் கொண்டு தானிருந்த நிலையிலிருந்து) விலகிக் கொண்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவள் அவனை அப்படியே விட்டிருந்தால் அவன் (தனது உண்மை நிலையை) வெளியிட்டிருப்பான் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 6174, 135, 2638
மேற்கண்ட செய்திகளில் உள்ள விஷயங்களின் சுருக்கம்:
இப்னுஸ் ஸய்யாதை நபிக: நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் என்று கருதியுள்ளார்கள்.
அவன் தஜ்ஜாலா இல்லையா என்ற விபரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனதில் மறைத்த துகான் என்ற சொல்லில் பாதியை அதாவது துக் என்பதை இப்னுஸ் ஸய்யாத கண்டு பிடித்து விட்டதாக இதில் சொல்லப்படுகிறது.
நீங்கள் உம்மிகளுக்கு தூதர் என்று இப்னுஸ் ஸய்யாத் சொன்னபோது அதற்கு மறுப்பு சொல்லாமல் நபிகள் அதை அங்கீகரித்துள்ளதாக இதில் கூறப்படுகிறது.
நான் அல்லாஹ்வின் தூதர் என்று இப்னுஸ் ஸய்யாத் சொன்ன போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேற்கண்ட அத்தனை விஷயங்களும் ஏராளமான அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் உள்ளன.
இப்னுஸ் ஸய்யாத் தான் தஜ்ஜால் என்று நபிகள் சொல்லி இருபார்களா? அப்படி சந்தேகம் கொண்டு இருப்பார்களா? நிச்சயம் சொல்லி இருக்க மாட்டார்கள்.
இப்னுஸ் ஸய்யாத் தான் தஜ்ஜால் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்போதே ஈஸா நபி இறங்கி அவரைக் கொன்று இருப்பார்கள்.
صحيح مسلم
فَيَطْلُبُهُ حَتَّى يُدْرِكَهُ بِبَابِ لُدٍّ، فَيَقْتُلُهُ،
ஈஸா நபி அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் என்று லுத் நகர் வாசலில் அவனைக் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
ஈஸா நபியால் கொல்லப்படாமல் இயற்கையாக இப்னுஸ் ஸய்யாத் மரணித்துள்ளதால் அவர் தஜ்ஜால் அல்ல என்பது உறுதியாகிறது.
صحيح البخاري
1879 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ يَدْخُلُ المَدِينَةَ رُعْبُ المَسِيحِ الدَّجَّالِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ»
1879, தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரு வானவர்கள் இருப்பார்கள்!
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)
நூல் : புகாரி 1879
தஜ்ஜால் மதீனாவுக்கு வர மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த உண்மைக்கு மாற்றமாக இப்னுஸ் ஸய்யாதை தஜ்ஜால் என்ற கூற்று அமைந்துள்ளது.
இப்னுஸ் ஸய்யாத் மதீனாவில் பிறந்து மதீனாவில் வாழ்ந்துள்ளார். இந்த உண்மைக்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளது.
صحيح البخاري
1881 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا الوَلِيدُ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو، حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ، إِلَّا مَكَّةَ، وَالمَدِينَةَ، لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ، إِلَّا عَلَيْهِ المَلاَئِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا، ثُمَّ تَرْجُفُ المَدِينَةُ بِأَهْلِهَا ثَلاَثَ رَجَفَاتٍ، فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ»
1881, மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றிவிடுவான்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பபர் அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி 1881
தஜ்ஜால் மக்காவுக்குள் நுழைய மாட்டான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் இப்னுஸ் ஸய்யாத் மக்காவுக்குள் நுழைந்துள்ளதற்கு ஆதார்ம் உள்ளது. அதைப் பின்னர் குறிப்பிடுவோம்.
صحيح البخاري
3057 – وَقَالَ سَالِمٌ، قَالَ ابْنُ عُمَرَ: ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ: «إِنِّي أُنْذِرُكُمُوهُ وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا قَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنْ سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ»
3057, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்தார்கள்: நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 3057
தஜ்ஜால் குறித்து இவ்வளவு தெளிவாக விளக்கியுள்ளனர். தஜ்ஜால் அல்லாத ஒருவரை தஜ்ஜால் என்று அவர்கள் கூறியதாக வரும் செய்திகள் இட்டுக்கட்டப்பட்ட பொய்யாகும்.
மேலும் தஜ்ஜால் செய்யும் பல காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவன் மூலம் வெளிப்படும் அற்புதங்களை சொன்னார்கள். அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான் என்று சொன்னார்கள். இப்னுஸ் ஸய்யாதிடம் இதில் எந்த ஒன்றுமே இல்லை. அப்படி இருக்கும் போது இப்னுஸ் ஸய்யாதை தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அறிவிக்கப்படும் எல்லா செய்திகளும் கட்டுக்கதைகள் தான் என்பதில் ஐயமில்லை.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகில உலகுக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள்.
قُلْ يَاأَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (158)7
மனிதர்களே நான் உங்கள் அனைவருக்கும் அனுப்பட்ட தூதராவேன் என்று நபியே சொல்வீராக (7:158) என்று அல்லாஹ் கூறுகிறான்.
அப்படி இருக்கும் போது நீர் உம்மிகளுக்குத் தான் தூதர் என்று இப்னுஸ் ஸய்யாத சொன்ன போது அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுப்புக் கொடுக்க கடமைப்பட்டுள்ளார்கள். மேற்கண்ட வசனத்தை எடுத்துக் காட்டி நான் முழு மனித குலத்துக்கும் தூதர் என்று சொல்லி இருப்பார்கள். இப்னுஸ் ஸய்யாத சொன்னதை மவுனமாக கேஏட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். எனவே இப்னுஸ் ஸய்யாத் அப்படி கூறி இருக்க முடியாது. அது கட்டுக்கதையாகவே இருக்க முடியும்.
என்னை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்னுஸ் ஸய்யாத் கூறியபோது அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புஇறேன் என்று நபிகள் சொன்னதாக வருகிறது.
இதுவும் கட்டுக் கதையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறுதி நபி என்று தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
இதற்கான ஆதாரங்களை இறுதி நபி என்ற இந்த லின்கில் காணவும்.
நீ நபி கிடையாது; பொய்யன்; எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்வார்களே தவிர அவனை தூதர் என்று நம்புவது போன்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள்.
எனவே இப்னுஸ் ஸய்யாத் குறித்த இந்தச் செய்திகள் கட்டுக்கதைகள் என்பது உறுதியாகிறது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனதின் நினைத்ததை அதில் ஒரு பகுதியை இப்னுஸ் ஸய்யாத் கண்டு பிடித்து விட்டதாக இதில் சொல்லப்பட்டுள்ளது.
உள்ளங்களில் உள்ளதை யாரும் அறிய முடியாது. அது அல்லாஹ்வின் தனிப்பட்ட ஆற்றல் என்று திருக்குர்ஆனின்
3:29, 3:119, 3:154, 5:7, 8:43, 11:5, 27:74, 28:69, 29:10, 31:23, 35:38, 39:7, 40:19, 42:24, 64:4, 67:13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இதற்கு மாற்றமாக நபிகள் நினைத்ததை இப்னுஸ் ஸய்யாத் கண்டு பிடித்த்தாக சொல்லும் செய்திகள் கட்டுக் கதைகளாகத் தான் இருக்க முடியும்.
மேலும் இப்னுஸ் ஸய்யாத் குறித்த பின்வரும் ஆதாரங்களும் இவை கட்டுக் கதைகள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
صحيح مسلم
5608 حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: صَحِبْتُ ابْنَ صَائِدٍ إِلَى مَكَّةَ، فَقَالَ لِي: أَمَا قَدْ لَقِيتُ مِنَ النَّاسِ، يَزْعُمُونَ أَنِّي الدَّجَّالُ، أَلَسْتَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّهُ لَا يُولَدُ لَهُ» قَالَ: قُلْتُ: بَلَى، قَالَ: فَقَدْ وُلِدَ لِي، أَوَلَيْسَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ» قُلْتُ: بَلَى، قَالَ: فَقَدْ وُلِدْتُ بِالْمَدِينَةِ، وَهَذَا أَنَا أُرِيدُ مَكَّةَ، قَالَ: ثُمَّ قَالَ لِي فِي آخِرِ قَوْلِهِ: أَمَا، وَاللهِ إِنِّي لَأَعْلَمُ مَوْلِدَهُ وَمَكَانَهُ وَأَيْنَ هُوَ، قَالَ: فَلَبَسَنِي
5608 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு ஸாயிதுடன் மக்கா வரை பயணம் மேற்கொண்டேன். அப்போது அவன் என்னிடம், “நான் மக்களில் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் என்னை “தஜ்ஜால்’ எனக் கருதுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தஜ்ஜாலுக்குக் குழந்தை இருக்காது’ என்று கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டான். நான், “ஆம் (கேட்டுள்ளேன்)” என்றேன். “எனக்குக் குழந்தை உள்ளது” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தஜ்ஜால் மதீனாவுக்குள்ளும், மக்காவுக்குள்ளும் நுழைய மாட்டான்’ என்று கூறியதை நீங்கள் கேட்டதில்லையா?” என்றான். நான் “ஆம் (கேட்டுள்ளேன்)” என்றேன். அவன், “நான் மதீனாவில் பிறந்தேன். இதோ நான் மக்காவுக்குச் செல்லப் போகிறேன்” என்று கூறினான்.
பிறகு இறுதியாக அவன், “அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தஜ்ஜாலின் பிறப்பையும் அவனது வசிப்பிடத்தையும் இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நன்கறிவேன்” என்று கூறி, என்னைக் குழப்பி விட்டான்.
நூல் : முஸ்லிம் 5608
صحيح مسلم
5609 حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ لِي ابْنُ صَائِدٍ: وَأَخَذَتْنِي مِنْهُ ذَمَامَةٌ: هَذَا عَذَرْتُ النَّاسَ، مَا لِي وَلَكُمْ؟ يَا أَصْحَابَ مُحَمَّدٍ أَلَمْ يَقُلْ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ يَهُودِيٌّ» وَقَدْ أَسْلَمْتُ، قَالَ: «وَلَا يُولَدُ لَهُ» وَقَدْ وُلِدَ لِي، وَقَالَ: «إِنَّ اللهَ قَدْ حَرَّمَ عَلَيْهِ مَكَّةَ» وَقَدْ حَجَجْتُ، قَالَ: فَمَا زَالَ حَتَّى كَادَ أَنْ يَأْخُذَ فِيَّ قَوْلُهُ، قَالَ: فَقَالَ لَهُ: أَمَا، وَاللهِ إِنِّي لَأَعْلَمُ الْآنَ حَيْثُ هُوَ، وَأَعْرِفُ أَبَاهُ وَأُمَّهُ، قَالَ: وَقِيلَ لَهُ: أَيَسُرُّكَ أَنَّكَ ذَاكَ الرَّجُلُ؟ قَالَ فَقَالَ: لَوْ عُرِضَ عَلَيَّ مَا كَرِهْتُ
5609 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸாயித் என்னிடம் பேசியபோது, அவனைப் பழிப்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அவன், பொது மக்களை நான் பொருட்படுத்தவில்லை. (ஆனால்,) முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! உங்களுக்கும் எனக்குமிடையே என்ன பிரச்சினை? நபி (ஸல்) அவர்கள், “அவன் (தஜ்ஜால்) யூதன்’ என்று சொல்லவில்லையா? ஆனால், நானோ இஸ்லாத்தை ஏற்று விட்டேன்; “அவனுக்குக் குழந்தையேதும் பிறக்காது’ என்று நபியவர்கள் சொன்னார்கள். எனக்குக் குழந்தை இருக்கிறது. “அவன் மக்காவுக்குள் நுழைவதை அல்லாஹ் தடை செய்துவிட்டான்’ என்று நபியவர்கள் கூறினார்கள். நான் ஹஜ் செய்துவிட்டேன்” என்று கூறினான்.
இவ்வாறு அவனது சொல் என்னில் ஒரு மதிப்பை உண்டாக்கும் அளவுக்கு அவன் பேசிக் கொண்டேயிருந்தான். பிறகு அவன், “அறிந்து கொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! இப்போது அவன் (தஜ்ஜால்) எங்கே இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவனுடைய தந்தையையும், தாயையும் நான் அறிவேன்” என்றான். அவனிடம் “அந்த (தஜ்ஜால் எனும்) மனிதனாக நீ இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாயா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், “அவ்வாறு என்னிடம் கோரப்பட்டால் அதை நான் வெறுக்கமாட்டேன்” என்றான்.
صحيح مسلم
5610 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ، أَخْبَرَنِي الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَرَجْنَا حُجَّاجًا، أَوْ عُمَّارًا، وَمَعَنَا ابْنُ صَائِدٍ، قَالَ: فَنَزَلْنَا مَنْزِلًا، فَتَفَرَّقَ النَّاسُ وَبَقِيتُ أَنَا وَهُوَ، فَاسْتَوْحَشْتُ مِنْهُ وَحْشَةً شَدِيدَةً مِمَّا يُقَالُ عَلَيْهِ، قَالَ: وَجَاءَ بِمَتَاعِهِ فَوَضَعَهُ مَعَ مَتَاعِي، فَقُلْتُ: إِنَّ الْحَرَّ شَدِيدٌ، فَلَوْ وَضَعْتَهُ تَحْتَ تِلْكَ الشَّجَرَةِ، قَالَ: فَفَعَلَ، قَالَ: فَرُفِعَتْ لَنَا غَنَمٌ، فَانْطَلَقَ فَجَاءَ بِعُسٍّ، فَقَالَ: اشْرَبْ، أَبَا سَعِيدٍ فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ وَاللَّبَنُ حَارٌّ، مَا بِي إِلَّا أَنِّي أَكْرَهُ أَنْ أَشْرَبَ عَنْ يَدِهِ – أَوْ قَالَ آخُذَ عَنْ يَدِهِ – فَقَالَ: أَبَا سَعِيدٍ لَقَدْ هَمَمْتُ أَنْ آخُذَ حَبْلًا فَأُعَلِّقَهُ بِشَجَرَةٍ، ثُمَّ أَخْتَنِقَ مِمَّا يَقُولُ لِي النَّاسُ، يَا أَبَا سَعِيدٍ مَنْ خَفِيَ عَلَيْهِ حَدِيثُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا خَفِيَ عَلَيْكُمْ مَعْشَرَ الْأَنْصَارِ أَلَسْتَ مِنْ أَعْلَمِ النَّاسِ بِحَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ كَافِرٌ» وَأَنَا مُسْلِمٌ، أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ عَقِيمٌ لَا يُولَدُ لَهُ»، وَقَدْ تَرَكْتُ وَلَدِي بِالْمَدِينَةِ؟ أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ» وَقَدْ أَقْبَلْتُ مِنَ الْمَدِينَةِ وَأَنَا أُرِيدُ مَكَّةَ؟ قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: حَتَّى كِدْتُ أَنْ أَعْذِرَهُ، ثُمَّ قَالَ: أَمَا، وَاللهِ إِنِّي لَأَعْرِفُهُ وَأَعْرِفُ مَوْلِدَهُ وَأَيْنَ هُوَ الْآنَ، قَالَ: قُلْتُ لَهُ: تَبًّا لَكَ، سَائِرَ الْيَوْمِ
5610 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் ஹஜ்ஜுக்கு, அல்லது உம்ராவுக்குச் சென்றோம். எங்களுடன் இப்னு ஸாயிதும் இருந்தான். (வழியில்) நாங்கள் ஓரிடத்தில் தங்கினோம். (ஓய்வெடுப்பதற்காக) மக்கள் கலைந்து சென்றபின் நானும் இப்னு ஸாயிதும் மட்டுமே எஞ்சியிருந்தோம். அவனைப் பற்றிச் சொல்லப்படுகிற விஷயங்களால் அவனருகில் இருப்பதை நான் மிகவும் வெறுத்தேன். அவன் தனது பயணச் சாமான்களைக் கொண்டுவந்து எனது பயணச் சாமான்களுடன் வைத்தான்.
அப்போது நான், “வெயில் கடுமையாக உள்ளது. அந்த மரத்திற்குக் கீழே நீ உன் பொருட்களை வைத்தால் நன்றாயிருக்குமே” என்றேன். அவ்வாறே அவன் செய்தான். அப்போது ஆட்டு மந்தை ஒன்று வந்தது. உடனே அவன் சென்று, ஒரு பெரிய கோப்பை (நிறைய பால்) உடன் என்னிடம் வந்து, “அபூ சயீதே! பருகுவீராக” என்றான். நான், “வெயிலும் கடுமையாக உள்ளது. பாலும் சூடாக உள்ளது என்று -அவன் கையிலிருந்து வாங்கி அருந்தப் பிடிக்காமல், அல்லது அவன் கையிலிருந்து வாங்கப் பிடிக்காமல்- சொன்னேன். அவன், “அபூசயீதே! நான் ஒரு கயிற்றை எடுத்து வந்து அதை ஒரு மரத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன். என்னைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிற செய்திகளே காரணம். அபூசயீதே! யாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் தெரியாவிட்டாலும், அன்சாரிகளே! உங்களுக்குத் தெரியாமல் போகாது.
(அபூசயீதே!) நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்தவர்களில் ஒருவரல்லவா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் (தஜ்ஜால்) இறைமறுப்பாளன்’ என்று சொல்லவில்லையா? நானோ ஒரு முஸ்லிமாக இருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் (தஜ்ஜால்) குழந்தை பாக்கியமற்ற மலடன்’ என்று கூறவில்லையா? நானோ என் குழந்தையை மதீனாவில் விட்டு வந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழைய முடியாது’ என்று கூறவில்லையா? நானோ, மதீனாவிலிருந்து மக்காவை நாடி வந்துகொண்டிருக்கிறேன்” என்று சொன்னான். இதையெல்லாம் கேட்டு அவனை மன்னிக்கும் அளவுக்கு நான் போய்விட்டேன். பிறகு அவன், “அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! தஜ்ஜாலை நான் அறிவேன். அவனது பிறப்பையும், இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நான் அறிவேன்” என்றான். அப்போது நான் “காலமெல்லாம் உனக்கு நாசமுண்டாகட்டும்” என்று கூறி (சபித்து)விட்டேன்.
இப்னுஸ் ஸய்யாத் குறித்த செய்திகளை தொகுத்துப் பார்க்கும் போது அவர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக வாழ்ந்த ஒருவராகவே தெரிகின்றது. தஜ்ஜாலாகவோ நபியாகவோ வாதிட்டவராகவோ சொல்வது புணையப்பட்டவை என்பதை அறிந்து கொள்ளலாம்.