786 என்றால் என்ன?

இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதைப் பயன்படுத்தலாமா?

பதில்:

நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவ‌ர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில‌ர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயி‌னர்.

أبجد

 هوز

 حطي

 كلمن

 سعفص

 قرشت

 ثخذ

 ضظغ

ا – 1

ب – 2

ج – 3

د – 4

ه – 5

و – 6

ز – 7

ح – 8

ط – 9

ي – 10

ك – 20

ل – 30

م – 40

ن – 50

س – 60

ع – 70

ف – 80

ص – 90

ق – 100

ر – 200

ش – 300

ت – 400

ث – 500

خ – 600

ذ – 700

ض – 800

ظ – 900

غ – 1000

இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் கொடுத்தனர்

அப்ஜத் எனும் இக்கணக்கின் அடிப்படையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குரிய எண்களைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 786 ஆகும். 786 என்பதைப் பயன்படுத்தினால் அது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் பயன்படுத்தியதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் தான் இவ்வழக்கம் சில முஸ்லிம்களிடம் புகுந்தது.

இதற்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதை விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் குறியீடாகப் பயன்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தரவில்லை. அவர்கள் இவ்வாறு பயன்படுத்தியதுமில்லை. அவர்கள் முன்னிலையில் மற்றவர்கள் பயன்படுத்தவும் இல்லை. எனவே இதற்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.

உண்மையில் அப்ஜத் எனப்படும் இக்கணக்கு யூதர்களின் ஹிப்ரு மொழியை அடிப்படையாகக் கொண்டு யூதர்கள் உருவாக்கி வைத்திருந்ததாகும். அதை அப்படியே காப்பியடித்துத் தான் அறிவீனர்கள் இதை அரபு மொழியிலும் நுழைத்து விட்டனர்,

அரபு மொழியின் அகர வரிசையை நாம் அறிவோம்.

அரபு வரிசைப்படி أ          அப்ஜத் வரிசைப்படி أ

அரபு வரிசைப்படி ب        அப்ஜத் வரிசைப்படி ب

அரபு வரிசைப்படி ت        அப்ஜத் வரிசைப்படி ج

அரபு வரிசைப்படி ث        அப்ஜத் வரிசைப்படி د

அரபு வரிசைப்படி ج         அப்ஜத் வரிசைப்படி ه

அரபு வரிசைப்படி ح         அப்ஜத் வரிசைப்படி و

அரபு வரிசைப்படி خ         அப்ஜத் வரிசைப்படி ز

அரபு வரிசைப்படி د           அப்ஜத் வரிசைப்படி ح

அரபு வரிசைப்படி ذ           அப்ஜத் வரிசைப்படி ط

அரபு வரிசைப்படி ر          அப்ஜத் வரிசைப்படி ي

அரபு வரிசைப்படி ز          அப்ஜத் வரிசைப்படி ك

அரபு வரிசைப்படி س        அப்ஜத் வரிசைப்படி ل

அரபு வரிசைப்படி ش        அப்ஜத் வரிசைப்படி م

அரபு வரிசைப்படி ص      அப்ஜத் வரிசைப்படி ن

அரபு வரிசைப்படி ض      அப்ஜத் வரிசைப்படி س

அரபு வரிசைப்படி ط         அப்ஜத் வரிசைப்படி ع

அரபு வரிசைப்படி ظ         அப்ஜத் வரிசைப்படி ف

அரபு வரிசைப்படி ع         அப்ஜத் வரிசைப்படி ص

அரபு வரிசைப்படி غ         அப்ஜத் வரிசைப்படி ق

அரபு வரிசைப்படி ف       அப்ஜத் வரிசைப்படி ر

அரபு வரிசைப்படி ق        அப்ஜத் வரிசைப்படி ش

அரபு வரிசைப்படி ك        அப்ஜத் வரிசைப்படி ت

அரபு வரிசைப்படி ل         அப்ஜத் வரிசைப்படி ث

அரபு வரிசைப்படி م          அப்ஜத் வரிசைப்படி خ

அரபு வரிசைப்படி ن         அப்ஜத் வரிசைப்படி ذ

அரபு வரிசைப்படி و          அப்ஜத் வரிசைப்படி ض

அரபு வரிசைப்படி ه           அப்ஜத் வரிசைப்படி ظ

அப்ஜத் கணக்கு அரபு மொழி எழுத்தின் வரிசைப்படி அமைக்கப்படவில்லை. மாறாக ஹிப்ரு மொழி வரிசைப்படியே அமைக்கப்பட்டுள்ளது என்பதை இதில் இருந்து அறியலாம்.

அரபு மொழியிலும், ஹிப்ரு மொழியிலும் அலிப் முதல் எழுத்தாகவும் பா இரண்டாம் எழுத்தாகவும் உள்ளது.

ஆனால் அரபு மொழியில் முன்றாவது எழுத்து தா ஆகும். ஹிப்ரு மொழியில் மூன்றாவது எழுத்து ஜீம் ஆகும்.

மேற்கண்ட அப்ஜத் கணக்கைக் கவனித்தால் மூன்றாவது எழுத்தாக ஜீம், நான்காவது எழுத்தாக தால், ஐந்தாவது எழுத்தாக ஹா இப்படி முழுக்க முழுக்க ஹிப்ரு மொழி வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

யூதர்களின் ஹிப்ரு மொழி வரிசைப்படி இது அமைந்திருப்பதும், மேற்கண்ட ஹிப்ரு மொழியில் வழங்கப்பட்டுள்ள அதே எண்களே அரபு எழுத்துக்களுக்கும் வழங்கி இருப்பதும் இது யூதர்களின் வழிமுறை என்பதற்குப் போதிய சான்றாகும்.

ذ ض ش خ غ ث  ஆகிய எழுத்துக்கள் ஹிப்ரு மொழியில் இல்லாததால் அதற்கு மட்டும் முஸ்லிம் சமுதாய அறிவீனர்கள் எண்கள் அமைத்தனர்.

பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஒருவ‌ர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவ‌ர் குர்ஆனை ஓதியவ‌ர் என்று கருதப்பட மாட்டார். அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவ‌ர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்ற பெயருடையவரை அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவ‌ர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப்பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி அது முஸ்லிமல்லாதவ‌ர்களின் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.

ஏனெனில் காஃபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு ஸுலைமான் (அலை) அவ‌ர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியுள்ளார்கள்.

(பார்க்க திருக்குர்ஆன் 27.30)

حدثنا محمد بن مقاتل أبو الحسن أخبرنا عبد الله أخبرنا يونس عن الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة أن ابن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرقل أرسل إليه في نفر من قريش وكانوا تجارا بالشأم فأتوه فذكر الحديث قال ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم فقرئ فإذا فيه بسم الله الرحمن الرحيم من محمد عبد الله ورسوله إلى هرقل عظيم الروم السلام على من اتبع الهدى أما بعد

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுதியுள்ளனர்.

பார்க்க : புகாரி  6261

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

கொள்கை விளக்கம் என்ற நூலில் அளிக்கப்பட்ட மற்றொரு பதில்

786 என்பதைப் பயன்படுத்தலாமா?

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்கைளைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1, பே 2, ஜீம் 3, தால் 4)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். (குர்ஆன் வசனங்களின் எண்ணிக்கை பற்றி பல கருத்துக்கள் உள்ளன)

அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்ணா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.

ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.

பார்க்க : அல்குர்ஆன் 27:30

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்றே எழுதியுள்ளனர்.

பார்க்க : புகாரி 7, 2941, 4553

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

☰ ????முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

test 1b

dfdsf dsfd Read in OnlinePJ.in ...

test 6 னகனம் df

test 6 test 6 test 6 Read in OnlinePJ.in ...

test 7

test 7 test 7 test 7 Read in OnlinePJ.in ...

test 8b

test 8b test 8b test 8b Read in OnlinePJ.in ...

test 8c

test 8c test 8c test 8cRead in OnlinePJ.in ...

test 4

test 4 44 4 Read in OnlinePJ.in ...

test 5

test 5 5 5 Read in OnlinePJ.in ...

மழைத் தொழுகை – 3 delete

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

Yes

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

இஸ்திகாரா தொழுகை – 2 delete

நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ...

மழைத் தொழுகை – 2

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...