கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாதம் சரியா?
மசூது, கடையநல்லூர்
மனுஷ்ய புத்திரனுக்கு நாம் விவாத அழைப்பு கொடுத்த போது அதை ஏற்காமல் தவிர்ப்பதற்காக கடவுளின் சட்டம் குறித்து கடவுளிடம் தான் விவாதிப்பேன் என்கிறார்.
மரண தண்டனை கடவுள் கொடுத்த தண்டனையா என்பது விவாதத் தலைப்பாக இருந்தால் கூட இவர் இப்படி கூறி தப்பிக்க முடியாது.
கடவுளின் சொல் என்று மனிதனாகிய நான் தான் அவரிடம் சொல்கிறேன். அது குறித்து என்னிடம் தான் அவர் விவாதிக்க வேண்டும். கடவுளே இவரிடம் நேரடியாகக் கூறும் போது கடவுளிடம் விவாதித்துக் கொள்ளட்டும்.
ஆனால் தலைப்பு இப்படி இருந்தால் கூட இது மனிதன் செய்யக் கூடிய வாதமல்ல.
ஆனால் நான் இரண்டு விஷயங்களுக்குத் தான் விவாத அழைப்பு கொடுக்கிறேன்.
குற்றங்களைக் குறைக்க மரண தண்டனை தான் ஒரே வழி. இது ஒரு தலைப்பு. இதில் கடவுள் இழுக்கப்பட மாட்டார். மரண தண்டனை சரியா இல்லையா என்பது தான் விவாதிக்கப்படும், இதற்கு ஏன் கடவுள் வர வேண்டும்?
மரண தண்டனை கூடாது என்று இவர் மனிதர்களிடம் தான் கூறினார். அதைப் பார்த்த மனிதன் தான் விவாதத்துக்கு அழைக்கிறேன்.
ஒரு அப்பாவிக்கும், சிறுமிக்கும் சவூதியில் மரண தண்டனை கொடுத்து விட்டனர் என்று மனிதர்களிடம் தான் இவர் பேசினார். அது பொய் என்று கூறி விவாதிக்க அழைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் இது அறிவார்ந்த கேள்வியா?