முஸ்லிம்கள் நூலகங்களை அழித்தார்களா?
கேள்வி: அண்ணா நூலகம் மாற்றம் குறித்த முதல்வரின் அறிக்கைக்கு விமர்சனம் எழுதிய ஒரு வாரஇதழ் பண்டைய இந்தியாவின் அறிவுச் சுரங்கமான நாலந்தா நூலகத்தை அழித்து இன்றும் நினைவு கூறப்படும் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி யை போல ஜெயலலிதாவும் நினைவுகூறப்படுவார் என்று விமர்சித்து உள்ளார்கள், இது உண்மையா?
– அஹ்மத் ஷமீம், கூத்தாநல்லூர்
அந்த வார இதழைப் படிப்பதற்கு முன்னர் முஹம்மத் பின் பக்தியார் கில்ஜி என்ற பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. நூலகத்தை அழித்ததற்காக நினைவு கூறத்தக்க பெயராகவும் இது இருக்கவில்லை.
ஒரு நாட்டை வெற்றி கொள்ளும் போதும், ஒரு கட்சியை வெற்றி கொள்ளும் போதும், ஒரு கலாச்சாரத்தை வெற்றி கொள்ளும் போதும் வென்றவர்கள் இது போல் நூலகங்களை அழித்து தங்களின் முழு வெற்றியை உறுதி செய்வது காலாகாலம் நடக்கக் கூடிய ஒன்று தான்.
மனிதகுல வரலாற்றில் இது போல் ஆயிமாயிரம் நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்தச் செயலுக்காக முஹம்மத் பின் பக்தியார் என்ற பெயர் நினைவு கூரப்படும் அளவுக்கு இருக்கவில்லை.
எந்தக் கெட்ட செயலுக்கு உதாரணம் காட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு முஸ்லிமைத் தேடிப்பிடித்து உதாரணம் காட்டும் பார்ப்பன நரித்தனம் தான் இது போன்ற சொற்பிரயோகம்.
ஒருவன் தேசத் துரோகம் செய்தால் அதற்கு உதாரணம் காட்ட 99 சதவிகித உயர்சாதியினர் இருந்தாலும் யாராவது ஒரு முஸ்லிம் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ளானா என்று தேடிப்பிடித்து ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தும் போக்குக்கு இன்னொரு உதாரணமே இது.
உணர்வு 16:16