அய்யூப் நபி பெயரால் கட்டுக்கதை

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

41, 42. நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! “ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்” என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தபோது, “உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!” (எனக் கூறினோம்).26

43. அவருக்கு அவரது குடும்பத்தினரையும், அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.

44. உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்!339 (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் நல்லடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.

திருக்குர்ஆன் 38;41-44

இவ்வசனங்கள் அய்யூப் நபியவர்கள்     சோதனைக்குப் பின் அதிலிருந்து     மீண்டதைக் கூறும் வசனங்களாகும்.

இவ்வசனங்கள் என்ன கூறுகின்றன என்பதை விளக்கப் புகுந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் அனைவரும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளைக் கூறி அந்தக் கதைக்கேற்ப விளக்கம் தந்திருப்பதைக் காண்கிறோம்.

அய்யூப் நபியவர்கள் தமக்கு நோய் குணமானதும் தமது மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்தார்களாம். குணமடைந்தவுடன் நூறு இழைகள் கொண்ட ஒரு பிடி புல் கட்டால் மனைவியை அடிக்குமாறும் இதன் மூலம் செய்த சத்தியத்தை நிறைவேற்றுமாறும், இறைவன் இவ்வசனத்தில் கட்டளையிடுகிறான் என்பதே அவர்களின் விளக்கமாகும்.

மனைவியை நூறு தடவை அடிப்பதாக ஏன் சத்தியம் செய்தார் என்பதை விளக்கும் போது அதற்கும் பல கதைகளைக் கூறுகின்றனர். எந்தக் கதையை ஏற்பது என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளதே தவிர மனைவியை நூறு தடவை அடிப்பதாகச் சத்தியம் செய்தார் என்பதிலும், நூறு இழைகள் கொண்ட புல் கட்டால் அடிக்குமாறு இறைவன் கட்டளையிட்டான் என்பதிலும் விரிவுரையாளர்கள் ஒருமித்த முடிவில் தான் உள்ளனர்.

திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் தருவதில் தவறு செய்து விட்டார்கள் என்பதை,, சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்ள முடியும்.

“ஒரு கைப்பிடி புல் கட்டால் அடிப்பீராக” என்று தான் திருக்குர்ஆன் கூறுகிறது. “மனைவியை அடிப்பீராக” என்று திருக்குர்ஆனில் இல்லை. “உமது மனைவியை” என்பது மொழி பெயர்ப்பாளர்கள் சுயமாக எழுதிக் கொண்டதாகும்.

உமது மனைவியை அடிப்பீராக என்று இவ்வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கம் தரவில்லை.

மூலத்தில் இல்லாத “உமது மனைவியை” என்ற சொல்லை இடையில் நுழைப்பதனால் தான் கட்டுக்கதைகளைத் தேடியலையும் நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது.

ஒரு கைப்பிடி புல் கட்டால் அடிப்பீராக என்று தான் இவ்வசனத்தில் உள்ளது. அதில் நூறு இழைகள் இருக்க வேண்டும் என்று குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இல்லை.

இது கட்டுக்கதை என்பதைப் புரிந்து கொள்ள சிறிய அளவிலான இஸ்லாம் பற்றிய அறிவே போதுமானதாகும்.

அய்யூப் நபியவர்கள் தமது மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்தார்கள் என்பது உண்மையாக இருந்தால் இது போன்ற சத்தியங்களை நிறைவேற்றத் தேவையில்லை. அநியாயமான காரியங்களைச் செய்வதாக சத்தியம் செய்தால் அந்தச் சத்தியத்தை நிறைவேற்றக் கூடாது, மாறாக முறித்து விட வேண்டும்.

மனைவியை என்ன காரணத்துக்காக இருந்தாலும் நூறு தடவை அடிப்பதாக அய்யூப் நபியவர்கள் சத்தியம் செய்திருக்க முடியாது. அப்படியே கோபத்தில் சத்தியம் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கோபத்தில் நிதானமிழந்து செய்யும் சத்தியங்களுக்காக அல்லாஹ் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டான்.

இது கட்டுக் கதை என்பதற்கு முதல் காரணம் இது.

அய்யூப் நபியவர்கள் செய்த சத்தியம் சரியானது என்று வைத்துக் கொண்டால் அதை அப்படியே நிறைவேற்றுவது தான் அவர் மீதுள்ள கடமை. நூறு தடவை அடிப்பதாகச் சத்தியம் செய்துவிட்டு புல் கட்டால் ஒரு தடவை அடிப்பது சத்தியத்தை நிறைவேற்றுவதாக ஆகாது. புல் கட்டில் நூறு இழைகள் இருந்தாலும் ஆயிரம் இழைகள் இருந்தாலும் அதனால் அடிப்பது ஒரு தடவை அடித்ததாகத் தான் ஆகும். இது கட்டுக் கதை என்பது இதிலிருந்தும் உறுதியாகிறது.

இறைவன் வெறும் சொற்களைக் கவனிப்பவன் அல்ல. உள்ளத்தைத் தான் கவனிப்பான். நூறு தடவை மனைவியை அடிப்பதாக அய்யூப் நபி கூறியிருந்தால் அவ்வாறு கூறும் போது அவர் என்ன நினைத்துக் கூறினாரோ அதைத் தான் இறைவன் கவனிப்பான். இவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் அய்யூப் நபி சத்தியம் செய்யும் போது நூறு இழைகள் கொண்ட புல் கட்டால் மனைவியை அடிப்பதாக நினைத்திருக்க மாட்டார். எனவே இந்தக் கட்டுக்கதை இறைவனின் பண்புகளுக்கு எதிராகவும், அமைந்துள்ளது.

மேலும் இவ்வசனத்தில் அய்யூப் நபியைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது அவரைப் பொறுமையாளராகக் கண்டோம் என்று நற்சான்று வழங்குகிறான். பொறுமையாளர் என்று இறைவனே நற்சான்று வழங்கும் ஒருவர் மனைவியை நூறு தடவை அடிப்பதாக எப்படிச் சத்தியம் செய்வார்? பொறுமை குறைவாக இருக்கும் நம்மைப் போன்றவர்களே மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்ய மாட்டோம். பொறுமைக்கு முன்னுதாரணமாகக் கூறப்படும் அய்யூப் நபியவர்கள் எப்படி இவ்வாறு சத்தியம் செய்திருப்பார்கள்.

இந்தக் கட்டுக்கதை உண்மையாக இருந்தால் “அய்யூபை கோபக்காரராகக் கண்டோம்” என்று தான் அல்லாஹ் கூறியிருப்பான். பொறுமையாளர் எனக் கூறியிருக்க மாட்டான். இதன் காரணமாகவும் இது கட்டுக்கதை என்பது உறுதியாகின்றது.

அப்படியானால் இந்த வசனத்தின் விளக்கம் தான் என்ன? என்று கேட்பவர்கள் விளக்கத்துக்காக எங்கேயும் அலையத் தேவையில்லை. இவ்வசனத்திலும் இதற்கு முந்தைய இரு வசனங்களிலும் சிந்தனையைச் செலுத்தினால் எந்தக் கட்டுக் கதையின் துணையுமின்றி சரியான விளக்கத்தைக் கண்டு கொள்ளலாம்.

அய்யூப் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டு சோதிக்கப்பட்டார்கள் இறைவன் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க நாடிய போது சில காரணங்களை ஏற்படுத்தி அதன் மூலமே நிவாரணம் தந்தான். “ஆகு’ என்ற கட்டளை மூலம் ஆக்கவல்ல இறைவன், அவரது நோயைத் தீர்க்க குளிக்கும் தண்ணீரையும், குடிக்கும் தண்ணீரையும் தனது ஆற்றலால் உருவாக்கினான். அந்தத் தண்ணீரில் குளித்ததும், குடித்ததும் நோய் தீர்க்கும் காரணிகளாக இறைவனால் பயன்படுத்தப்பட்டன.

இதைக் கூறிவிட்டுத் தான் ஒரு பிடி புல்லை எடுத்து அதனால் அடிப்பீராக என்று இறைவன் கூறுகிறான். இதையும் முன்சொன்ன இரண்டு காரணங்களுடன் தான் தொடர்புபடுத்த வேண்டும். குளிக்கும் நீரும், குடிக்கும் நீரும் அவரது நோய் தீர்க்கும் மருந்தாக எவ்வாறு பயன்பட்டதோ அதைப் போல் புல்கட்டால் அவர் மேனியில் அடிப்பதும் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்பட்டது என்பதே இதன் கருத்தாக இருக்க வேண்டும்.

“உமது மனைவியை” என்ற சொற்றொடரும், “நூறு இழைகள் கொண்ட” என்ற சொற்றொடரும் மொழிபெயர்ப்பினர்களும், விரிவுரையாளர்களும் இடையில் நுழைத்தவை. எனவே அதை நீக்கிவிட்டு இவ்வசனத்தைக் கவனித்தால் இப்படி விளங்குவதற்குத்தான் இவ்வசனம் இடம் தருகிறது.

ஒரு பிடி புல்கட்டால் (உம்மீது) அடிப்பீராக என்ற பொருள் தான் இறைவனின் பண்புக்கு ஏற்றதாகவும், பொறுமைக்கு முன்னுதாரணமான அய்யூப் நபியின் தகுதிக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது.

இவ்வசனத்தில் “சத்தியத்தை முறிக்காதீர்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லின் காரணமாகவே அய்யூப் நபி மனைவியை அடிப்பதாக சத்தியம் செய்தார் என்று கதை காட்டினார்கள்.

எவ்விதக் கதையும் கட்டாமலேயே இந்தச் சொல்லின் பொருளையும் புரிந்து கொள்ளலாம்.

தமக்கு நோய் நிவாரணம் கிடைத்தால் இறைவனுக்காக ஏதோ ஒரு வணக்கத்தையோ, தர்மத்தையோ, செய்வதாக சத்தியமோ, நேர்ச்சையோ செய்திருக்கலாம். மனிதர்கள் நோய்வாய்ப்படும் போது, இவ்வாறு நினைப்பது வழக்கமான ஒன்றுதான். நோய் நீங்கினால் மனைவியை அடித்து சித்திரவதை செய்வேன என்று நினைப்பது வழக்கத்தில் இல்லாதது. எனவே, தனக்காக அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுமாறு கட்டளையிடுகிறான். நோய் குணமாகி விட்டதால் அதை நிறைவேற்றுமாறு இறைவன் நினைவுபடுத்துகிறான் என்று புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.

இது கட்டுக்கதை என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பான ஒரு நிகழ்ச்சியும் சான்றாக வுள்ளது.

அஷ்அரீ கோத்திரத்தைச் சேர்ந்த நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று பயணம் செய்ய வாகனம் (ஒட்டகம்) கேட்டோம். அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம். அவர்கள் மறுத்தார்கள். மேலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களுக்கு வாகனம் தர மாட்டேன் என்றும் கூறினார்கள். சற்று நேரத்தில் (ஜகாத் நிதிக்காக) சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. எங்களுக்கு ஐந்து ஒட்டகங்களைத் தருமாறு கட்டளை பிறப்பித்தார்கள். அதைப் பெற்றுக் கொண்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரமாட்டேன் என்று சத்தியம் செய்து, அதை மறந்துவிட்டு நமக்கு ஒட்டகத்தைத் தந்து விட்டார்கள். நபிகள் நாயகத்தை ஏமாற்றினால் நாம் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்று முடிவு செய்தோம். நபிகள் நாயகத்திடம் சென்று “எங்களுக்குத் தரமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு அதை மீறி விட்டீர்களே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்” ஆம்! ஆயினும் நான் ஏதேனும் சத்தியம் செய்து அதை விடச் சிறந்ததைக் கண்டால் அந்தச் சிறந்ததைச் செய்து விடுவேன் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 3133, 4385, 5518, 6721 7555, 6623, 6649, 6718

அய்யூப் நபியவர்கள் மனைவியை நூறு  தடவை அடிப்பதாகச் சத்தியம் செய்திருந்தாலும் அவர்கள் அதை முறிப்பது தான் சிறந்ததே தவிர அதை எந்தத் தந்திரம் செய்தாவது நிறைவேற்றுவது நபியின் பண்பாக இருக்க முடியாது என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...