யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து
முஸ்லிம்களின் கோபத்தைக் கொப்பளித்து எரிமலையாய் வெடித்த திநகர் பொதுக்கூட்டம்!
அந்த உரையைக் காண இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை காண்க
கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தாமாக முன்வந்து சரணடைந்த யாகூப் மேமன் அவர்களை தூக்கிலிட்டு படுகொலை செய்தது மத்திய அரசு. முஸ்லிம்கள் மட்டுமே இந்த நாட்டில் தூக்குக்கு உரியவர்களாக பழிவாங்கப் படுபவர்களாக வஞ்சிக்கப்படும் சமுதாயமாக ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதைக் கண்டித்து இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தென் சென்னை மாவட்டம் நடத்தியது.
7 மணிக்கு துவங்குவதாக அறிவிப்புச் செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் 6 மணி முதலே குழுமத் துவங்கி விட்டனர்.
பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள், இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
யாகூப் மேமனை அநியாயமான முறையில் தூக்கிலிட்டுக் கொன்றதை கண்டிக்கும் முகமாக இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகின்றார்கள் என்பதையும், மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் மதச்சார்பின்மை என்பது மருந்துக்குக் கூட இல்லை என்பதையும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் கூறி சகோதரர் பீஜே அவர்கள் விளக்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உரையின் துவக்கமாக மதச்சார்பற்ற நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி கூறிய செய்திகளை மேற்கோள்காட்டி பீஜே பேசினார்.
அதாவது கிறித்தவ மதத்திலுள்ள ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த கென்னடி அவர்கள் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் ஒரு பிரகடனத்தைச் செய்தார். ரோமன் கத்தோலிக்கப் பிரிவினரின் தலைமையிடமாக உள்ள வாடிகனுக்குச் சென்று தான் ஒவ்வொரு முறையும் அங்குள்ள மதத் தலைவரான போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், ஆனால் தற்போது நான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளதால் இங்குள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் நான் அதிபராக ஆகியுள்ளதால் இனிமேல் போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்கச் செல்ல மாட்டேன் என்று அறிவிப்புச் செய்தார். மதச் சார்பற்ற நாட்டில் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் இப்படி ஒரு சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மதச்சார்பற்ற இந்தியா என்று சொல்லப்படும் நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களைப் பட்டியலிட்டார்.
மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் கடவுள் சிலைகளையும், கோவில்களையும் வைத்து வழிபாடு நடத்துவது மதச்சார்பின்ன்மையா?
தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சின்னத்தை வைத்திருப்பது மதச்சார்பின்ன்மையா?
பொங்கல் இனாம் கொடுக்கும் அரசாங்கம், ரமலான் பரிசு வழங்காமல் பாரபட்சம் காட்டுவது சரியா?
பெருநாள் அன்று மின்சாரத்தைத் தடை செய்து முஸ்லிம்களுக்கு வேதனையை பரிசாக கொடுப்பது தான் மதச்சார்பற்ற அரசா?
பள்ளிவாசல் கட்ட இந்து முன்னணியினர் ஆட்சேபனை செய்தால் தடை போடுவது தான் மதச்சார்பற்ற அரசின் லட்சணமா?
இராமாயணத்தை உண்மை சம்பவம் போல் ஒளிபரப்பிவிட்டு, திப்பு சுல்தானின் வீர வரலாற்றை ஒளிபரப்பும் போது இது கற்பனைக் கதை என்று மத்திய அரசின் தூர்தர்சன் தொலைக்காட்சி அறிவித்ததே
இதுதான் மதச்சார்பற்ற தன்மையா?
இந்தியாவிலுள்ள அனைத்து அரசு அதிகாரிகள் வாங்கும் சம்பளத்திலும், உண்ணும் உணவிலும் 20 சதவீதம் முஸ்லிம்களின் வரிப்பணம் இருக்கிறது.
அந்த நன்றி உணர்வு எந்த அதிகாரிக்காவது இருக்கிறதா ?
நீதி தேவதை கண்ணைக் கட்டியிருப்பது போல காட்டிவிட்டு முஸ்லிம் என்றால் மட்டும் மத துவேஷத்தோடு தீர்ப்பளிப்பது தான் மதச்சார்பற்ற தன்மையா?
தாடி வைப்பது தாலிபானிசம்;
தாடி வைக்க அனுமதி கேட்பது பாகிஸ்தானிசம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களே! அப்படியானால் தாடி வைத்திருக்கும் மோடிக்கு அதைச் சிரைத்து விடுவீர்களா? என்று பல கேள்விகளை எழுப்பினார்.
குர்பானி கொடுக்கத் தடை போட்டு மத துவேஷத்தைத் தங்களது தீர்ப்பில் காட்டியது, பகவத் கீதையை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்தது என்று சராமாரியாக தீர்ப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட கட்டப் பஞ்சாயத்துக்களை பீஜே விலாசினார்.
சட்டத்தை மதிக்காமல் வழங்கப்படும் இத்தகைய தீர்ப்புக்கள் எங்களது கால் செருப்புக்குச் சமானம் என்று தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சங்பரிவாரக் கும்பல்களில் ஒருவருக்காவது தூக்குத் தண்டனை கொடுத்தீர்களா?
97 பேரைக் கொன்று குவித்த பாபு பஜ்ரங்கிக்கு தூக்கு வழங்காதது ஏன்?
சரணடைந்த யாகூப் மேமனை தூக்கிவலிட்டு மதவெறியை நிலை நாட்டியது
சப்ரஜித் சிங் என்ற அயோக்கியன் பாகிஸ்தானில் குண்டு வைத்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அவனை அங்குள்ளவர்கள் அடித்தே கொன்று சாகடித்தனர்.
அவனுக்கு 1கோடி உதவித்தொகை, அந்த தீவிரவாதிக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம், என்று கவனித்தது ஏன்?
தீவிரவாதி சப்ரஜித் சிங்க்
தேசியக்கொடி போர்த்தி கொண்டு செல்லப்படும் தேசத்துரோகியின் உடல்
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்ட தேசத்துரோகி
இதுதான் தேசப்பற்றா? தேசப்பற்றை வெளிக்காட்டும் லட்சணமா?
அப்சல் குருவை அநியாயமாக தூக்கிலிட்டுக் கொலை செய்தது ஏன்?
உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார்.
இந்த அநியாயத்திற்கெல்லாம் படைத்த இறைவனிடம் முறையிடுங்கள்
அவன் நமக்கு தீர்ப்பு வழங்குவான்
இந்த அநியாயக்காரர்களுக்கு இங்கும் மறுமையில் அல்லாஹ் இழிவை வழங்குவான் என்று ஆக்ரோசமான முறையில் பேசி முடித்தார்.
முஸ்லிம்களின் கோபத்தை கொபளிப்பதாகவும், ரணமாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் உள்ளத்திற்கு ஆறுதலாகவும், இஸ்லாமியர்களிடத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பறைசாற்றும் விதமாகவும் இந்தப் பொதுக்கூட்டம் ஒரு மாநாட்டைப் போல மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
அந்த உரையைக் காண இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை காண்க