முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்?
உலக அளவில் முஸ்லிம்களைத் துன்பங்களும் துயரங்களும் பின் தொடர்வது எதனால்?
– ஏ. அப்துல் நாசர், திருச்சி-1.
முஸ்லிம்கள் மட்டும் துன்பப்படுவதாகக் கூறி முஸ்லிம்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஸ்லிமாக இருந்தாலே நம் நிலை இப்படித்தான் இருக்குமோ என்ற கருத்தை விதைக்கின்றனர்.
ஆனால் உலகில் எல்லா மக்களையும் தான் துன்பங்கள் தொடர்கின்றன. முஸ்லிம்களை விட அதிகத் துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவோரும் துன்பங்களை அனுபவிப்போரும் அதிகமாக உள்ளனர்.
எத்தனையோ நபிமார்கள் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அது போல் நல்ல மக்கள் இன்றும் பல சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அது போல் கெட்டவர்களும் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்; உள்ளாக்கப் படுகின்றனர்.
இந்த உலகில் ஏற்படும் இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் பொதுவான ஒரு காரணத்தைக் கூற முடியாது. ஒவ்வொரு மனிதனின் துன்பத்துக்கும் வெவ்வேறு காரணம் இருக்கலாம். அல்லது மறுமையில் பெரிய வாய்ப்புகளை வழங்குவதற்காக இறைவன் சோதிக்கலாம். எனவே முஸ்லிம்கள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற கற்பனை வாதத்தில் இருந்து விடுபடுங்கள். இது போன்ற தவறான எண்ணத்தை விதைப்பதால் சமுதாய மக்களுக்கு அதிக மன அழுத்தம் தான் ஏற்படும்.
உணர்வு 16:8