மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல்

அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று ‎பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர். இதற்கு ஆதாரம் ‎உள்ளது.‎

سنن ابن ماجه

‎1565 – ‎حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِي، حَدّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدّثَنَا سَلَمَةُ بْنُ كُلْثُومٍ، حَدّثَنَا الْأَوْزَاعِي، عَنْ يَحْيَى ‏بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – صَلَّى عَلَى جِنَازَةٍ، ثُمَّ أَتَى قَبْرَ ‏الْمَيِّتِ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை ‎நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது ‎தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.‎

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)‎

நூல்: இப்னு மாஜா

இவ்வாறு மண் அள்ளிப் போடும் போது  மின்ஹா கலக்னாகும் ‎வபீஹா நுயீதுக்கும் வமின்ஹா நுக்ரிஜகும் தாரதன் உக்ரா  என்று ‎கூறுவதற்கு ஆதாரம் இல்லை.‎

உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை

مسند أحمد بن حنبل

‎5233 – ‎حدثنا عبد الله ثنا أبي ثنا وكيع ثنا همام عن قتادة عن أبي الصديق الناجي عن بن عمر قال قال رسول الله ‏صلى الله عليه و سلم : إذا وضعتم موتاكم في قبورهم فقولوا بسم الله وعلى سنة رسول الله صلى الله عليه و سلم

تعليق شعيب الأرنؤوط : رجاله ثقات رجال الشيخين

குழிக்குள் உடலை வைக்கும் போது  பிஸ்மில்லாஹி வஅலா ‎ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்  எனக் கூறுங்கள் என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)‎

நூல்: அஹ்மத்

سنن أبي داود ت الأرنؤوط

‎3213 – ‎حدَّثنا محمد بن كثير (ح)وحدَّثنا مسلمُ بن إبراهيم، حدَّثنا همّامٌ، عن قتادةَ، عن أبي الصِّدِّيق الناجي عن ابن ‏عمر: أن النبي -صلَّى الله عليه وسلم- كان إذا وضَع الميتَ في القبرِ قال: “باسمِ الله، وعلى سنةِ رسولِ اللهِ‎”‎

குழிக்குள் உடலை வைக்கும் போது  பிஸ்மில்லாஹி வஅலா ‎ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்  என நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் கூறுவார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)‎

நூல்: அபூதாவூத்