5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ابْنُ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ عَنْ عَائِشَةَ أَنَّ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ زَوَّجَتْ ابْنَتَهَا فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَتْ إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا فَقَالَ لَا إِنَّهُ قَدْ لُعِنَ الْمُوصِلَاتُ رواه البخاريஅன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்து கொண்டார். பிறகு அவர் நோயுற்றார். அதனால் அவருடைய தலை முடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்)” என்று கூறினார்கள்.அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி)நூல் : புகாரி 5934
3468حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ فَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ وَكَانَتْ فِي يَدَيْ حَرَسِيٍّ فَقَالَ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ رواه البخاري
முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரிமுடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), “மதீனா வாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டு விட்டு, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போன்றதிலிருந்து (மக்களைத்) தடுத்ததையும், “பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன்படுத்திய போது தான்’ என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொல்லக் கேட்டேன் எனக் கூறினார்கள்.அறிவிப்பவர் : ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான்நூல் : புகாரி 3468
4887 حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ قَالَ ذَكَرْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ حَدِيثَ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ فَقَالَ سَمِعْتُهُ مِنْ امْرَأَةٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَ حَدِيثِ مَنْصُورٍ رواه البخاريஒட்டுமுடி வைத்துக் கொள்ளும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.அறிவிப்பாவ்ர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)நூல் : புகாரி 4887
பெண்கள் தங்களின் முடியுடன் ஒட்டக் கூடாது என்பது மற்ற பெண்களின் முடியைச் சேர்க்கக் கூடாது என்ற கருத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்
مسند أحمد – مسند أبي يعلى – صحيح ابن حبان
16927 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُبَشِّرٍ، مَوْلَى أُمِّ حَبِيبَةَ، عَنْ زَيْدِ بْنِ أَبِي عَتَّابٍ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” أَيُّمَا امْرَأَةٍ أَدْخَلَتْ فِي شَعَرِهَا مِنْ شَعَرِ غَيْرِهَا، فَإِنَّمَا تُدْخِلُهُ زُورًا “எந்தப் பெண்ணாவது தனது முடியுடன் இன்னொருத்தியின் முடியை சேர்த்துக் கொண்டால் அவள் பொய்யைத் தான் சேர்க்கிறாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : முஆவியா (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூ யஃலா, இப்னு ஹிப்பான்
முடியுடன் மற்றவரின் முடியைச் சேர்ப்பதைத் தான் நபிகள் தடுத்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
செயற்கையான பலியஸ்டர் நூல்கள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட சவுரி முடியை இது குறிக்காது
சில ஹதீஸ்களில் முடியுடன் எதையும் சேர்க்கக் கூடாது என்று சில ஹதீஸ்கள் உள்ளன.
و حدثني الحسن بن علي الحلواني ومحمد بن رافع قالا أخبرنا عبد الرزاق أخبرنا ابن جريج أخبرني أبو الزبير أنه سمع جابر بن عبد الله يقول زجر النبي صلى الله عليه وسلم أن تصل المرأة برأسها شيئا
பெண்கள் தமது தலை முடியில் எந்தப் பொருளையும் சேர்க்கக் கூடாது என்று தடை செய்தார்கள்.
நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு எந்த விதமான சவுரி முடியையும் வைக்கக் கூடாது என்று வாதிட முடியாது.
மனித முடி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளதால் அதற்கு இணங்கவே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்
மூலத்தில் உள்ள ஷைஅன் என்ற சொல்லுக்கு இரு விதமாக பொருள் கொள்ள முடியும்.
எந்தப் பொருளையும் சேர்க்கக் கூடாது என்றும் பொருள் கொள்ளலாம்.
சிறிதளவும் சேர்க்க்க் கூடாது என்றும் பொருள் செய்யலாம். இரண்டு விதமான பொருளூம் இச்சொல்லுக்கு உள்ளது
எந்தப் பொருளையும் சேர்க்க்க் கூடாது என்று பொருள் கொண்டால் அது முடியை மட்டும் குறிக்காது. ஹேர்பின் கொண்டை ஊசி, கிளிப் உள்ளிட்ட எதனையும் சேர்க்கக் கூடாது என்ற கருத்து வரும். ஆனால் இதை ஆதாரமாகக் காட்டுவோர் இவற்றைச் சேர்க்கக் கூடாது என்று கூறுவதில்லை.
சிறிதளவு என்று பொருள் கொண்டால் நபிகள் நாயகம் ஸல் தடை செய்த மனித முடியில் சிறிதளவும் வைக்கக் கூடாது என்ற கருத்து வரும். இது முந்தைய ஹதீஸின் கருத்துடன் பொருந்திப் போகிறது














