بسم الله الرحمن الرحيم
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
ஆசிரியர் :
பீ.ஜைனுல் ஆபிதீன்
வெளியீடு :
நபீலா பதிப்பகம்,
சென்னை 600001.
புத்தக விபரக் குறிப்பு
நூலின் பெயர்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்
மொழி: தமிழ்
பதிப்பு: முதல் பதிப்பு (1/1/2023)
பதிப்புரிமை: ஆரியருக்கே.
பக்கங்கள்: 208
படிகள்: 2000
அச்சிட்டோர்: சன் பிரின்டிங் ஏஜன்ஸி. செல் 9443879861.
வெளியீடு: நபீலா பதிப்பகம், சென்னை.
மொத்த விற்பனையாளர்:
மூன் பப்ளிகேசன்ஸ்,
83/3 மூர் தெரு, முதல் மாடி, மண்ணடி,
சென்னை -600001. போன் 9444276341.
விலை : 80.00
உள்ளடக்கம்
பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை அவசியம் இல்லை.
ஜுமுஆ தொழுகை பெண்களுக்கு கடமையில்லை.
தொழுகையில் இமாமுக்கு தவறு ஏற்படும் போது.
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?
பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா?
பெண்கள் வீட்டில் தொழும் போது பாங்கு இகாமத்….
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாமா?
ஆண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?
ஆண்களுக்கு சலாம் கூறலாமா
ஆண்களுடன் பெண்கள் பேசலாமா?
பெண்களுக்கு தனி பயான் செய்யலாமா?
வீட்டில் பெருநாள் தொழுகை தொழும் போது உரை
பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?
ஒப்பாரி வைக்கக் கூடாது
பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?
மாதவிடாய்ச் சட்டங்கள்
மாதவிடாயின் போது தொழக் கூடாது! நோன்பு நோற்க….
மாதவிடாயின் போது கஅபா ஆலயத்தை தவாஃப்…
மாதவிடாயின் போது பள்ளிவாசலுக்கு வரக்கூடாது
மாதவிடாய் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட வணக்கங்கள்
மாதவிடாய் நேரத்தில் பெருநாள் திடலுக்கு வரலாம்
மாதவிடாயின் போது குர்ஆன் ஓதலாம்
மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளக் கூடாது
உடலுறவைத் தவிர்த்து கணவனுடன் நெருக்கமாக… :
மாதவிடாய் இரத்தம்
மாதவிடாய் நின்றதும் குளிக்க வேண்டும்
உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகும்
தொடர் உதிரப்போக்கு
ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை
குளிக்கும் முறை
உளூச் செய்தல்
தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்
இரண்டு, மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவது போதும்
பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா?
நிர்வாணமாக குளிக்கக்கூடாது
கடமையான குளிப்புக்கு முன் உளூ செய்வது நல்லது
பெண்களின் ஆடை அணிகலன்கள்
வண்ண ஆடைகள்
பெண்கள் பேண்ட் அணியலாமா?
பட்டாடை, தங்கம் அணியலாம்
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?
மாற்றப்பட்ட சட்டம்
நடுவிரலில் மோதிரம் அணியலாமா?
தாலி மெட்டி அணியலாமா?
பெண்கள் காது மூக்கு குத்தலாமா ?
முடி வெட்டுதல் மொட்டை அடித்தல்
நக பாலீஷ், மருதானி, லிப்ஸ்டிக் கூடுமா?
நறுமனம் பூசலாமா? பூ வைக்கலாமா?
கொண்டை சடை போடுதல்
ஒட்டுமுடி வைக்கலாமா?
ஆண்களும், பெண்களும் தலைக்கு டை (சாயம்)
அழகுக்காக உறுப்புக்களில் மாற்றம் செய்யக் கூடாது
பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது
பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?
பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
தலையை மறைக்க வேண்டுமா?
பெண்கள் தனியாகப் பயணம் செய்தல்
பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து உண்ணுதல், பரிமாறுதல்:
பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா
ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது
இல்லற வாழ்க்கை குறித்த சட்டங்கள்
திருமணத்திற்கு பெண்ணுடைய சம்மதம்
கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
பொறுப்பாளர் மறுத்தால் சமுதாயத் தலைவர்கள் நடத்தி..
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதல்
மஹரும் ஜீவனாம்சமும்
வரதட்சணை கொடுக்கக் கூடாது
பெண் வீட்டு திருமண விருந்து
மனைவியின் இல்லறக் கடமைகள்?
கணவனுக்காக அலங்கரித்தல்
கணவன் அழைக்கும் போது மறுக்கக்கூடாது
அந்தரங்கத்தை வெளிப்படுத்தக்கூடாது
கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
மார்க்கத்துக்கு மாற்றமான விஷயங்களில் கட்டுப்படுதல்…
கணவனின் உறவினர்களுக்கு பணிவிடை செய்தல்
வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும்
கணவனுக்குத் தெரியாமல் அவனது பொருளை
குடும்பக் கட்டுப்பாடு
உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு..
கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடு….
பெண்கள் பிற பெண்களின் மர்ம உறுப்பைப் பார்க்கக்கூடாது
பெண்கள் சொத்துரிமை
பெண்களுக்கு இத்தா ஏன்?
காலமெல்லாம் வெள்ளை ஆடை தேவையில்லை
மறுமணத்தைத் தடுக்கக் கூடாது
கணவன் காணாமல் போய் விட்டால்?
கருக்கலைப்பு கூடுமா?
சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?
திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்
தலாக்கின் விதிமுறைகள்
தலாக் மூன்று வாய்ப்புகள்:
முத்தலாக் – ஒரு விளக்கம்:
பெண்களின் விவாகரத்து உரிமை
விவாகரத்துக்குப் பின் பெண்ணுக்கு இழப்பீடு
மனைவியின் மீது கணவன் விபச்சாரக் குற்றம் சுமத்தி …
தம்பதிகளுக்கிடையே மணமுறிவு ஏற்பட்டால் குழந்தைகள்.:
பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
ஆண்களும் பெண்களும் சேர்ந்து படித்தல்
சிறுமிகளுக்கு திருமணம் கூடுமா
சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்?
வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு
முன்னுரை
இஸ்லாம் மார்க்கத்தின் பெரும்பாலான சட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை என்றாலும் பெண்களுக்கு மட்டும் தனியான சட்டங்களும் உள்ளன.
அந்தச் சட்டங்களை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் அடிப்படையில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இந்நூல் வெளியிடப்படுகிறது.
க்ஷி தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் பெண்களுக்கான சட்டங்கள்
க்ஷி இல்லற வாழ்க்கை குறித்த பெண்களுக்கான சட்டங்கள்
க்ஷி பெண்களின் ஆடைகள் அலங்காரங்கள் ஆபரணங்கள் குறித்த சட்டங்கள்
க்ஷி பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்
ஆகிய நான்கு தலைப்புகளுக்குள் பெண்களுக்கான அனைத்துச் சட்டங்களையும் இந்நூலில் தொகுத்தளித்துள்ளோம்.
ஏதேனும் விடுபட்டு இருந்தால் அதை உரிமையோடு எங்களுக்கு தெரிவித்தால் அடுத்த பதிப்பில் அவற்றையும் இணைத்துக் கொள்வோம். இன்ஷா அல்லாஹ்
மூன் பப்ளிகேசன்,
சென்னை.
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
வணக்க வழிபாடுகள்
பெண்களுக்கான தொழுகைச் சட்டங்கள்
தொழுகையின் பெரும்பாலான சட்டங்கள், தொழும் முறை ஆகியவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையாகும்.
صحيح البخاري – وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 631
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படித் தொழுதார்களோ அப்படித்தான் ஆண்களும் பெண்களும் தொழ வேண்டும்.
எனது மனைவிமார்கள் தொழுவது போல் பெண்கள் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனி வழியைக் காட்டவில்லை.
ஆண்களுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி. பெண்களுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி.
தமிழக முஸ்லிம் பெண்கள் சிலர் சஜ்தா செய்யும் போது ஆமை போல் ஒடுங்கிக் கொண்டு ஸஜ்தா செய்கிறார்கள். இப்படிச் செய்வதற்கு எந்த ஆதாரமும் நபி வழியில் இல்லை. கைகளை வயிற்றில் அனைத்துக் கொண்டு ருகூவு செய்கிறார்கள். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
நிற்றல், ருகுவு செய்தல், ஸஜ்தா செய்தல், இருப்பில் அமர்தல் ஆகிய அனைத்தும் ஆண்களைப் போலவே பெண்களும் செய்ய வேண்டும்.
ஆயினும் சில சட்டங்கள் பெண்களுக்கு தனியாக உள்ளன. அவற்றைக் காண்போம்
பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை அவசியம் இல்லை.
ஐந்து வேளை தொழுகைகளைப் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது ஆண்களுக்கு மட்டுமானது.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் இல்லை.
விரும்பினால் பள்ளிவாசலுக்கு வரலாம்.
விரும்பினால் வீட்டில் தொழுது கொள்ளலாம்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டில் தொழுவதே சிறந்தது.
இதற்கான ஆதாரங்கள்
صحيح البخاري
578 – كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ
நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்துகொள்ள முடியாது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 578
صحيح البخاري
707 – إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), நூல் : புகாரி 707
سنن أبي داود – لَا تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ، وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ
உங்களது பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : அபூதாவூத்
ஜுமுஆ தொழுகை பெண்களுக்கு கடமையில்லை.
ஜுமுஆ தொழுகை மிக முக்கியமான தொழுகை என்றாலும் பெண்களுக்கு ஜுமுஆ தொழுகை கடமையில்லை. அவர்கள் விரும்பினால் ஜுமுஆ தொழுகையில் கலந்து கொள்ளலாம். விரும்பினால் இருக்கும் இடத்திலேயே ஜுமுஆவுக்குப் பதிலாக லுஹர் தொழுகை தொழலாம்.
இதற்கான ஆதாரங்கள்
سنن أبي داود – ” الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً: عَبْدٌ مَمْلُوكٌ، أَوِ امْرَأَةٌ، أَوْ صَبِيٌّ، أَوْ مَرِيضٌ
பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜுமுஆ தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),
நூல் : அபூதாவூத்
صحيح مسلم – عَنْ أُخْتٍ لِعَمْرَةَ، قَالَتْ: أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ، وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِي كُلِّ جُمُعَةٍ.
நான் வெள்ளிக்கிழமை அன்று காஃப் வல்குர்ஆனில் மஜீத் எனும் (50ஆவது) அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் நின்று அந்த அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி,
நூல் : முஸ்லிம்
இதை அம்ரா என்ற பெண் அறிவிக்கிறார். பெண்ணாகிய இவர் ஜுமுஆ தொழுகையில் கலந்து கொண்டதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய காஃப் அத்தியாயத்தையும் மனனம் செய்துள்ளார். பெண்கள் ஜுமுஆ தொழுகையில் பங்கு கொள்ளலாம் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.
தொழுகையில் இமாமுக்கு தவறு ஏற்படும் போது சுட்டிக்காட்டலாம்
இமாமுக்கு மறதி ஏற்பட்டு தொழுகையில் கூடுதல் குறைவாகச் செய்யும் போது கைகளைத் தட்டி இமாமின் தவறுகளை பெண்கள் சுட்டிக் காட்டலாம்.
صحيح البخاري – 1203 – عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1203
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?
பென்கள் ஆண்களுக்கு இமாமாக தொழுவிக்கக் கூடாது என்று தெளிவான தடை ஏதும் இல்லை. ஆயினும் மறைமுகமாக அக்கருத்தைச் சொல்லும் ஆதாரங்கள் உள்ளன.
ஜமாஅத் தொழுகையில் வரிசைகள் எப்படி அமைய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். முதலில் ஆண்களின் வரிசைகள், அது முடிந்ததும் சிறுவர்களின் வரிசைகள், அதன் பின் பெண்களின் வரிசைகள் என்று அமைய வேண்டும்.
صحيح مسلم – قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أَوَّلُهَا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) , நூல் : முஸ்லிம்
பெண்கள் இமாமாக நிற்கும் போது ஆண்களை விட முந்தி நிற்கும் நிலை ஏற்படும். இது மேற்கண்ட ஹதீஸுக்கு முரணாகும்.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
திருக்குர்ஆன் 4:34
ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது. கூட்டுத் தொழுகைக்குள் நிர்வாகம் அடங்கியுள்ளது. எனவே பெண்கள் ஆண்களுக்கு இமாமாக தொழுகை நடத்துவது இவ்வசனத்துக்கு எதிரானதாகும்.
பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா?
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழும் போது பெண்களில் ஒருவர் இமாமாக இருந்து தொழுவிக்கலாம்.
தொழுகை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறை பொதுவானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) செய்து காட்டிய எந்த ஒரு வணக்கமும் அனைவருக்கும் உரியதாகும்.
ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யும் போது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் எதிராக அமையும். இது போன்ற காரணம் பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யும் போது ஏற்படுவதில்லை.
இமாமாக நிற்கும் பெண் எங்கே நிற்க வேண்டும்?
பெண்கள் இமாமத் செய்யும் போது ஆண் இமாமைப் போல் முன்னால் தனியாக நிற்கக் கூடாது என்றும், முதல் வரிசையின் நடுவில் வரிசையோடு வரிசையாக நிற்க வேண்டும் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதற்கு குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை. சில நபித்தோழியர்கள் இப்படி தொழுதுள்ளதாக ஆதாரம் காட்டுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாமாக நின்று வழிகாட்டியுள்ளனர். முன்னால் தனியாகத் தான் அவர்கள் நின்றார்கள். வரிசையோடு வரிசையாக நிற்கவில்லை. இதற்கு மாற்றமாக பெண்கள் நடக்க வேண்டும் என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க வேண்டும்.
பெண்கள் வீட்டில் தொழும் போது பாங்கு இகாமத் சொல்ல வேண்டுமா?
பொதுவாக பாங்கு என்பது ஜமாஅத் தொழுகைக்கு மக்களை அழைத்தல் ஆகும். வீட்டில் தொழும் போது யாரையும் ஜமாஅத் தொழுகைக்காக அழைக்க வேண்டியதில்லை என்பதால் தனியாகத் தொழும் ஆண்களும் பெண்களும் பாங்கு சொல்ல வேண்டியதில்லை என்று கருத வாய்ப்பு உண்டு.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் அழைக்கும் நிலை இல்லாவிட்டாலும் பாங்கு சொல்ல வேண்டும் என வழிகாட்டியுள்ளனர்.
سنن النسائي – عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يَعْجَبُ رَبُّكَ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةِ الْجَبَلِ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّي، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ يَخَافُ مِنِّي، قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ ”
மலை உச்சியில் ஆடு மேய்த்துக் கொண்டு பாங்கு சொல்லி தொழுபவனைக் கண்டு உமது இறைவன் மகிழ்ச்சி அடைகிறான். எனது இந்த அடியானைக் காணுங்கள்! எனக்கு அஞ்சி பாங்கு சொல்லி தொழுகிறான். எனது அடியானை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழைப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : நஸாயீ
யாரையும் அழைக்க வாய்ப்பு இல்லாத இடத்தில் யாரையும் அழைக்கும் நோக்கமில்லாமல் தனியாக தொழும் அடியான் பாங்கு சொன்னதில் அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான். இதிலிருந்து தனியாகத் தொழுபவர் பாங்கு சொல்லி விட்டுத்தான் கடமையான தொழுகை தொழ வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் தொழும் பெண்களுக்கும் இது பொருந்தும்.
ஆயினும் ஒரு பகுதியில் பாங்கு சொல்லி விட்டால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பாங்கு சொல்ல வேண்டியதில்லை.
سنن أبي داود – أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” أَبْصَرَ رَجُلًا يُصَلِّي وَحْدَهُ، فَقَالَ: أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ ”
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன் ஒருவர் வந்தார். இவரோடு தொழுது இவருக்கு அதிக நன்மை கிடைக்கச் செய்பவர் யார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஒரு மனிதர் முன் வந்து அவருடன் தொழுதார்.
நூல் : அபூ தாவூத்
தாமதமாக வந்தவரை பாங்கு சொல்லி விட்டு தொழுமாறு நபிகள் வழிகாட்டவில்லை. ஒரு பகுதியில் பாங்கு சொல்லி விட்டால் அதன் பிறகு தனியாக வீட்டில் ஒருவர் தொழுதால் அவர் பாங்கு சொல்லாமல் தொழலாம்.
ஒரு பகுதியில் பாங்கு சொல்லப்படாவிட்டால் அந்தப் பகுதியில் தனியாகத் தொழும் ஆண்களும் பெண்களும் பாங்கு சொல்லி விட்டுத் தான் தொழ வேண்டும்.
எல்லா தொழுகைகளுக்கும் இகாமத் சொல்ல வேண்டும்
السنن الكبرى للنسائي – فَيَقُولُ اللهُ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ، وَيُقِيمُ لِلصَّلَاةِ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي، وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ ”
மலை உச்சியில் தனியாகத் தொழும் மனிதர் குறித்த மற்றொரு அறிவிப்பில் பாங்கு சொல்லி இகாமத் சொல்கிறார் அவரைக் கண்டு அல்லாஹ் மகிழ்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. (நஸாயீ அல்குப்ரா)
எனவே தனியாக தொழும் ஆண்களும், பென்களும் இகாமத் கூறி விட்டுத் தான் கடமையான தொழுகையைத் தொழ வேண்டும்.
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாமா?
மண்ணறைகளுக்குச் சென்று வரும் பெண்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.
இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்பு சரியானதாக உள்ளது.
இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
سنن الترمذي – 320 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ القُبُورِ، وَالمُتَّخِذِينَ عَلَيْهَا المَسَاجِدَ وَالسُّرُجَ
மண்ணறைகளைச் சந்தித்து வரும் பெண்களையும், அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும், பள்ளி எழுப்புபவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதீ
இது பலவீனமான அறிவிப்பாகும். இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அபூ சாலிஹ் என்பார் இதை அறிவிப்பதாக இதில் சொல்லப்பட்டுள்ளது.
இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர், அபூ ஹாதிம், நஸாயீ, யஹ்யா பின் மயீன் மற்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
سنن الترمذي – 1056 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ زَوَّارَاتِ القُبُورِ
மண்ணறைகளை அதிகமாகச் சந்திக்கச் செல்லும் பெண்கைள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ
அபூஹுரைரா (ரலி) வழியாக உமர் பின் அபீ சலமா என்பவர் இதை அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், ஷுஅபா, முஹம்மது பின் சஅத், இப்னு ஹுஸைமா, நஸாயீ ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
அறிவிப்பவர் : ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி)
سنن ابن ماجه ت الأرنؤوط (2/ 514)- لَعَنَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – زُوَّارَاتِ الْقُبُورِ
மண்ணறைகளை அதிகமாகச் சந்திக்கச் செல்லும் பெண்கைள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி), நூல் : இப்னு மாஜா
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் ஏற்கத்தக்கவர்களாக உள்ளதால் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். ஆனாலும் இந்தத் தடை பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நீக்கப்பட்டு விட்டது.
இதைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றது.
صحيح مسلم – قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : முஸ்லிம்
المستدرك على الصحيحين للحاكم – أَنَّ عَائِشَةَ أَقْبَلَتْ ذَاتَ يَوْمٍ مِنَ الْمَقَابِرِ فَقُلْتُ لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، مِنْ أَيْنَ أَقْبَلْتِ؟ قَالَتْ: مِنْ قَبْرِ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، فَقُلْتُ لَهَا: أَلَيْسَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ زِيَارَةِ الْقُبُورِ؟ قَالَتْ: نَعَمْ، كَانَ قَدْ نَهَى، ثُمَّ أُمِرَ بِزِيَارَتِهَا
அப்துல்லாஹ் பின் அபீ மலீகா கூறுகிறார் :
ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளைச் சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறை நம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்குச் செல்லக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடை செய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்திக்க ஏவினார்கள் எனக் கூறினார்கள். நூல் : ஹாகிம்
صحيح مسلم – فَقَالَ: إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِيَ أَهْلَ الْبَقِيعِ فَتَسْتَغْفِرَ لَهُمْ “، قَالَتْ: قُلْتُ: كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ ” قُولِي: السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَيَرْحَمُ اللهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُونَ ”
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
உம் இறைவன் பகீஉ வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான் என்று (என்னிடம்) ஜிப்ரீல் கூறினார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத்தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன் என்று சொல் என்றார்கள்.
நூல் : முஸ்லிம்
(இந்த துஆவின் பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
ஆண்களும், பெண்களும் கப்ரு ஜியாரத் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னர் தடை செய்திருந்தார்கள். குறிப்பாக இந்த விசயத்தில் பெண்களுக்கு கடுமையான தடையை விதித்திருந்தார்கள். பின்னர் இருவருக்கும் அனுமதியளித்தார்கள் என்பதை இந்த ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
மண்ணறைகளுக்கு செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்றால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து மறுமை சிந்தனையை அதிகப்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு என்று அறிந்து கொள்ளலாம்.
ஆனால் ஆண்களானாலும், பெண்களானாலும் இறைவனின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உரிய இடமான தர்ஹாக்களுக்குச் சென்றுவர அனுமதியில்லை.
ஆண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?
கணவனை மனைவி தொட்டாலும், மனைவியை கணவன் தொட்டாலும் அல்லது வேறு ஆண்களைப் பெண்கள் தொட்டாலும், வேறு பெண்களை ஆண்கள் தொட்டாலும் உளூ நீங்கி விடும் என்று ஷாபி மத்ஹபில் சொல்லப்பட்டுள்ளது.
ஹஜ்ஜுக்குச் செல்லும் போது, தவாப் செய்யும் போது ஆண்கள் மீது பெண்களின் கைகள் படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு உளூ நீங்கி விடும். எனவே ஹஜ்ஜுக்கு போகும் போது ஹனபியாக மாறிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஹஜ் நிறைவேறாமல் போகும் என்றெல்லாம் பத்வாக்கள் வழங்கப்படுகின்றன.
இதற்கு அடிப்படையாக அமைந்தது 5:6 வசனமாகும்.
“பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய வேண்டும்” என்று 5:6 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
பெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல், தாம்பத்தியம் என இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
தொடுதல் என்று பொருள் கொள்ளும் அறிஞர்கள் “பெண்களை ஆண்கள் தொட்டாலும், ஆண்களைப் பெண்கள் தொட்டாலும் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும்” என்று சட்டம் வகுத்துள்ளனர். இது தவறாகும்.
இவ்வசனத்தில் தீண்டுதல் என்பது தாம்பத்தியம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த நிலையில் தம் மனைவியைத் தொட்டுள்ளனர். அதற்காக மீண்டும் உளூச் செய்யவில்லை.
صحيح البخاري – 513 – عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا، قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ
“நபிகள் நாயகம் (ஸல்) தொழும் போது நான் குறுக்கே படுத்து உறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது என் காலைத் தமது விரலால் தொடுவார்கள். உடனே என் காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்று வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை” என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரீ 513, 519, 1209
பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்றால் தொழுது கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியின் காலைத் தொட்டிருக்க மாட்டார்கள்.
صحيح مسلم – عَنْ عَائِشَةَ، قَالَتْ: فَقَدْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ
ஒரு இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணவில்லை. நான் துழாவிப் பார்த்த போது ஸஜ்தாவில் இருந்த அவர்களின் பாதங்கள் மீது என் கைகள் பட்டன எனவும் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 839
பெண்களைத் தொடுதல் என்பது இவ்வசனத்தின் பொருளாக இருந்தால் இவ்வாறு நடந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முறித்து விட்டு, மீண்டும் உளூச் செய்து தொழுதிருப்பார்கள்.
எனவே இவ்வசனத்தில் தீண்டுதல் என்பது தாம்பத்தியம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு முடிவு செய்வதே சரியானதாகும்.
ஆண்களுக்கு சலாம் கூறலாமா
ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம்.
ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்று சிலர் கூறுவது ஆதாரமற்ற கூற்றாகும்.
صحيح البخاري
938 – عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا، فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ، فَتَجْعَلُهُ فِي قِدْرٍ، ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا، فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ، وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلاَةِ الجُمُعَةِ، فَنُسَلِّمُ عَلَيْهَا، فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا، فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ
வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பெண்மணி விருந்தளிப்பார். அவரிடம் விருந்து உண்ணச் செல்லும் நாங்கள் அவருக்கு ஸலாம் கூறுவோம் என்று ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 938, 6248
سنن أبي داود – أَخْبَرَت ْهُ أَسْمَاءُ ابْنَةُ يَزِيدَ: مَرَّ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ فَسَلَّمَ عَلَيْنَا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்ற போது எங்களுக்கு சலாம் கூறினார்கள் என்று அஸ்மா பின்த் யஸீத் (ரலி) என்ற பெண்மணி அறிவிக்கிறார்.
நூல் : அபூதாவூத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவாகக் காட்டித் தந்த வணக்கங்கள் யாவும் பெண்களையும் உள்ளடக்கியது தான்.
صحيح البخاري – 12 – وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ
தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுங்கள்!
நூல் : புகாரி 12
என்று நபிகள் ஆர்வமூட்டிய நல்லறம் பெண்களுக்கும் உரியது தான்.
ஆண்களுடன் பெண்கள் பேசலாமா?
மஹ்ரமாக இல்லாத ஆண்களுடன் பெண்கள் பேசக் கூடாது. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்ற நம்பிக்கை சில முஸ்லிம்களிடம் உள்ளது.
இந்த நம்பிக்கை முற்றிலும் தவறாகும்.
ஆணாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏராளமான பெண்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
(முகத்தை மறைக்கக் கூடாது என்ற ஆக்கத்தில் ஆதாரங்களைப் பார்க்கவும்.)
பெண்கள் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருக்கும் காலம் இத்தா காலமாகும். இந்தக் கால கட்டத்தில் பெண்களுடன் பேசலாம் என்று ஆண்களுக்கு அல்லாஹ் அனுமதிக்கிறான்.
(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:235
இத்தா காலத்தில் அப்பெண்களைத் திருமணம் செய்வது குறித்து பேசக் கூடாது. மார்க்கம் அனுமதித்த மற்ற விஷயங்களைப் பேசலாம். திருமணப் பேச்சைக் கூட சாடைமாடையாக பேசலாம் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அனுமதிக்கிறான்.
ஆயினும் குழைந்து, கொஞ்சிப் பேசாமல் சாதாரணமாகப் பேச வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியருக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதனால் ஆண்களுக்கு சபலம் ஏற்படும் என்று காரணத்தையும் அல்லாஹ் கூறுகிறான்.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
திருக்குர்ஆன் 33:32
பெண்களுக்கு தனி பயான் செய்யலாமா?
பெண்களுக்கு மட்டும் தனியாக மார்க்க உரை நிகழ்ச்சி நடத்தலாம்.
صحيح البخاري – 1449 – قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ، فَأَتَاهُنَّ وَمَعَهُ بِلاَلٌ نَاشِرَ ثَوْبِهِ، فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ
பெருநாள் உரை பெண்களுக்கு கேட்கவில்லை என்பதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார்கள்.
நூல் : புகாரி 1449
صحيح البخاري – 101 – عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ
சில பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஆண்கள் எங்களை மிகைத்து விருகின்றனர். எனவே பெண்களுக்காக ஒரு நாளை ஒதுக்குங்கள் என்று கோரினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாளை வாக்களித்து அந்த நாளில் உரை நிகழ்த்தினார்கள்.
நூல் : புகாரி 101
வீட்டில் பெருநாள் தொழுகை தொழும் போது பெண்கள் உரை நிகழ்த்தலாமா?
அனைவரும் சேர்ந்து திடலில் தொழும் போது பெண்கள் உரை நிகழ்த்தும் தேவை ஏற்படாது. ஆனால் கொரோனா போன்ற காலத்தில் அனைவரும் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டால் வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பெருநாள் தொழுகை நடத்தும் நிலை ஏற்படும். அப்போது கணவருக்கு உரை நிகழ்த்தும் திறன் இல்லாமல் இருந்து மனைவிக்கு உரை நிகழ்த்த முடியும் என்றால் அப்போது மனைவி பெருநாள் உரை நிகழ்த்தலாம்.
உரை நிகழ்த்துதல் என்பது நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் நற்பணியாகும். இந்தப் பணியை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 9:71
ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதால் அவர்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?
المستدرك على الصحيحين للحاكم – ، أَنَّ أَبَا طَلْحَةَ دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ أَبِي طَلْحَةَ حِينَ تُوُفِّيَ، فَأَتَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِمْ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ وَأُمُّ سُلَيْمٍ وَرَاءَ أَبِي طَلْحَةَ، وَلَمْ يَكُنْ مَعَهُمْ غَيْرُهُمْ
அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத் தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர் களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர் : அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ், நூல்: ஹாகிம், தப்ரானி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி இறந்தவரின் குடும்பத்தினர் ஜனாஸா தொழுகை தொழுதுள்ளனர். அதுவும் இறந்தவரின் வீட்டில் வைத்து தொழுதுள்ளனர். அதில் ஒரு பெண்ணும் கலந்து கொண்டுள்ளார் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது.
இதில் இருந்து பெண்களும் ஜனாஸா தொழுகையில் பங்கு பெறலாம் என்பதை அறிந்து கொள்கிறோம். ஊர் மக்கள் தொழுவதற்கு முன்னர் குடும்பத்தார் மட்டும் தொழுதுள்ளனர் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்கிறோம்.
صحيح مسلم – يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، أَنَّهَا لَمَّا تُوُفِّيَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يَمُرُّوا بِجَنَازَتِهِ فِي الْمَسْجِدِ، فَيُصَلِّينَ عَلَيْهِ، فَفَعَلُوا فَوُقِفَ بِهِ عَلَى حُجَرِهِنَّ يُصَلِّينَ عَلَيْهِ أُخْرِجَ بِهِ مِنْ بَابِ الْجَنَائِزِ الَّذِي كَانَ إِلَى الْمَقَاعِدِ، فَبَلَغَهُنَّ أَنَّ النَّاسَ عَابُوا ذَلِكَ، وَقَالُوا: مَا كَانَتِ الْجَنَائِزُ يُدْخَلُ بِهَا الْمَسْجِدَ، فَبَلَغَ ذَلِكَ عَائِشَةَ، فَقَالَتْ: مَا أَسْرَعَ النَّاسَ إِلَى أَنْ يَعِيبُوا مَا لَا عِلْمَ لَهُمْ بِهِ، عَابُوا عَلَيْنَا أَنْ يُمَرَّ بِجَنَازَةٍ فِي الْمَسْجِدِ، وَمَا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى سُهَيْلِ ابْنِ بَيْضَاءَ إِلَّا فِي جَوْفِ الْمَسْجِدِ
ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். ‘ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை’ என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் ‘தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி),
நூல்: முஸ்லிம்
பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டு வரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.
இன்றைய தமிழக முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை. தந்தைக்காக மகளோ, கணவனுக்காக மனைவியோ கூட ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்ற நிலை உள்ளது. பெற்ற மகளை விட வேறு யார் தந்தைக்கு சிறப்பாக துஆ செய்ய முடியும்?
தனது தந்தைக்காக நடக்கும் ஜனாஸா தொழுகையில் அவரது மகள் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டால் வீட்டிலேயே ஜனாஸாவுக்காக தொழுகை நடத்தும் உரிமையை யாரும் பறிக்க முடியாது.
ஒப்பாரி வைக்கக் கூடாது
கண்ணீர் விட்டு அழுவதற்கு மட்டும் தான் இஸ்லாத்தில் அனுமதி உள்ளது. ஒப்பாரி வைப்பதற்கு அறவே அனுமதி இல்லை. ஒப்பாரி வைத்தல் இறை மறுப்புக்கு நிகரான குற்றம் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர்.
صحيح مسلم
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ: الطَّعْنُ فِي النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ ”
இரண்டு காரியங்கள் மக்களிடம் உள்ளன. அவை இரண்டும் அவர்களை இறை மறுப்பில் தள்ளி விடும். பிறரது பாரம்பரியத்தைப் பழித்தல், இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?
இறந்த பெண்ணின் முகத்தை ஆண் பார்ப்பதற்கும் இறந்துவிட்ட ஆணின் முகத்தைப் பெண் பார்ப்பதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மற்றவர்களை ஆசை உணர்வுடனும் தவறான எண்ணத்துடனும் பார்ப்பது தான் தடைசெய்யப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகத்தை திறந்திருந்தார்கள் என்பதை பல ஹதீஸ்களில் காணுகிறோம்.
உயிருடன் இருக்கும் போது எம்முறையில் பார்ப்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ அம்முறையில் இறந்தவரைப் பார்ப்பதில் குற்றமில்லை. உயிருடன் இருக்கும் போது எந்த எண்ணத்தில் மற்றவர்களைப் பார்க்கக் கூடாதோ அவ்வெண்ணத்தில் இறந்தவர்களையும் பார்க்கக் கூடாது.
மாதவிடாய்ச் சட்டங்கள்
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அவர்கள் செய்யத்தக்க காரியங்களும், செய்யக் கூடாத காரியங்களும் இஸ்லாமில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாதவிடாயின் போது தொழக் கூடாது! நோன்பு நோற்கக் கூடாது
صحيح البخاري – 228 – فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي
மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டு விடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுது கொள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 228
மாதவிடாயின் போது விட்ட தொழுகைகளை திரும்பத் தொழ வேண்டியதில்லை. விட்ட நோன்பை நோற்க வேண்டும்.
صحيح مسلم
قَالَتْ: كَانَ يُصِيبُنَا ذَلِكَ، فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ، وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ
மாதவிடாயின் போது விட்ட நோன்பை நோற்குமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். விட்ட தொழுகைகளைத் தொழுமாறு எங்களுக்குக் கட்டளையிடப்படவில்லை என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம்
மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதை புகாரீ 304, 306, 320, 325, 331 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.
மாதவிடாய் நேரத்தில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை புகாரீ 1951 ஹதீஸில் காணலாம்.
மாதவிடாயின் போது கஅபா ஆலயத்தை தவாஃப் செய்யக் கூடாது
صحيح البخاري – 294 – سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: خَرَجْنَا لاَ نَرَى إِلَّا الحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، قَالَ: مَا لَكِ أَنُفِسْتِ؟. قُلْتُ: نَعَمْ، قَالَ: إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ
நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவை அடுத்துள்ள) ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து உனக்கு என்ன மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று வினவினார்கள். நான் ஆம் என்று சொன்னேன். இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாவைத் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்கின்ற மற்ற எல்லாக் காரியங்களையும் நீ செய்து கொள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 294
மாதவிடாய் நேரத்தில் தவாஃப் செய்யக் கூடாது என்பதை புகாரீ 294, 305, 1650, 5548, 5559 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.
மாதவிடாயின் போது பள்ளிவாசலுக்கு வரக்கூடாது
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:43
குளிப்பு கடமையாக இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. ஆயினும் இந்த வசனத்தில் பள்ளிவாசலுக்குள் செல்வதைத் தான் குறிக்கும். பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர என்ற சொல்லப்பட்டுள்ளதில் இருந்து இதை அறியலாம்.
பள்ளிவாசல் வழியாக நுழைந்து பாதையைக் கடந்து செல்லலாம். ஆனால் அவ்வாறில்லாமல் பள்ளிக்குள் செல்லக் கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.
குளிப்பு கடமையானவர்கள் பள்ளிவாசலில் ஒரு பொருளை எடுத்து விட்டு உடனே வெளியேறுவதாக இருந்தால் அவ்வாறு செய்யலாம். அல்லது பள்ளிவாசலுக்கு வெளியே நின்று உள்ளே கை நீட்டி பொருளை எடுக்கலாம்.
صحيح مسلم – عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ، قَالَتْ فَقُلْتُ: إِنِّي حَائِضٌ، فَقَالَ: إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “பள்ளிவாசலில் உள்ள தொழுகை விரிப்பை எடுத்து என்னிடம் கொடு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கு நான் “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!” என்றேன். அப்போது அவர்கள் “மாதவிடாய் என்பது உனது கையில் இல்லை” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
صحيح مسلم – عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: بَيْنَمَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، فَقَالَ ” يَا عَائِشَةُ: نَاوِلِينِي الثَّوْبَ ” فَقَالَتْ: إِنِّي حَائِضٌ، فَقَالَ: إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ فَنَاوَلَتْهُ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்த போது “ஆயிஷா! அந்தத் துணியை எடுத்து என்னிடம் தா!” என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மாதவிடாய் உனது கையிலில்லை” என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
நூல் : முஸ்லிம் 504
பிரசவத்தீட்டும் மாதவிடாய் போன்றது தான்
பெண்கள் குழந்தை பெற்ற பின் சில நாட்கள் இரத்தம் வெளிப்படும். இது அரபு மொழியில் நிஃபாஸ் எனப்படும்.
இந்த இரத்தப்போக்கும் மாதவிடாய் போன்றது தான்.
எவ்வளவு நாட்கள் இரத்தப் போக்கு வருகிறதோ அவ்வளவு நாட்கள் அவர்கள் மீது தொழுகை கடமை இல்லை. நோன்பும் கடமை இல்லை.
இரத்தப்போக்கு நின்றவுடன் குளித்து விட்டு வழக்கம் போல் வணக்க வழிபாடுகள் செய்ய வேண்டும்.
மாதவிடாய் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட வணக்கங்கள்
மாதவிடாய் நேரத்தில் தொழுவது, நோன்பு நோற்பது, தவாஃப் செய்வது, பள்ளிவாசலுக்குள் வருவது ஆகியவை தவிர மற்ற வணக்கங்களைச் செய்யலாம்.
மாதவிடாய் நேரத்தில் பெருநாள் திடலுக்கு வரலாம்
பெருநாள் தினத்தில் துஆ செய்வதற்காகவும், மார்க்க உரைகளைக் கேட்பதற்காகவும் பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு வரலாம். ஆனால் தொழுகையின் போது மட்டும் விலகி இருக்க வேண்டும்.
صحيح البخاري – 351 – عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الحُيَّضَ يَوْمَ العِيدَيْنِ، وَذَوَاتِ الخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ المُسْلِمِينَ، وَدَعْوَتَهُمْ وَيَعْتَزِلُ الحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ، قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا، وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ: حَدَّثَنَا عِمْرَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا
இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கண்ணிப் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) போகச் சொல்லுமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வேண்டும். தொழும் இடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இக்கட்டளையை கேட்டுக்கொண்டிருந்த பெண்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே எங்களில் எவருக்கேனும் தலையில் அணியும் முக்காடு இல்லையானால் என்ன செய்வது? என்றார். அதற்கு அவளுடைய தோழி தனது (உபரியான) முக்காட்டை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி),
நூல் : புகாரி 351
மாதவிடாயின் போது குர்ஆன் ஓதலாம்
மாதவிடாயின் போதும், குளிப்பு கடமையான நிலையிலும், உளூ இல்லாத நிலையிலும் திருக்குர்ஆனை ஓதலாம்; தொடலாம்.
மேற்கண்டவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற கருத்தில் உள்ளவர்கள் பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 56:79
இந்த வாதம் முற்றிலும் தவறானதாகும்.
இவர்களின் வாதம் எவ்வாறு தவறானது என்பதைப் பார்த்துவிட்டு இதன் சரியான கருத்து என்னவென்று பார்ப்போம்.
(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும் “இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 6:7
திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்று இவ்வசனமும் 2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.
எழுத்து வடிவில் இல்லாமல் ஓதுதல் வடிவமாகவே குர்ஆன் அருளப்பட்டிருக்கும் போது அதைக் கைகளால் தொட முடியாது. கைகளால் தொட முடியாத ஒன்றை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுவானா?
திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து வடிவில் அருளப்படாததைத் தொட முடியாது என்பதால் தொடுகின்ற பேச்சுக்கே இடமில்லை.
தொடும் விதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் மட்டுமே “இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள்” என்று கூற முடியும்.
திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை.
இறைவனிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தியைப் பெற்ற பிறகு எழுத்தர்களிடம் சொல்லி எழுதி வைத்துக் கொண்டதால் திருக்குர்ஆன் எழுத்து வடிவம் பெற்றது.
புத்தகமாக திருக்குர்ஆன் அருளப்பட்டு இருந்தால் அந்தப் புத்தகத்தைக் காட்டி இதைத் தொடமாட்டார்கள் என்று சொல்ல முடியும்.
ஒலி வடிவில் ஒன்றைச் சொல்லி விட்டு இதைத் தொடக் கூடாது என்று யாரும் பேசமாட்டார்கள். ஏனெனில் ஒலியைக் கையால் தொடமுடியாது.
அப்படியானால் அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைக் குறிக்கிறது?
இஸ்லாமிய நம்பிக்கைப்படி இறைவனிடம் ஒரு பதிவேடு உள்ளது. நடந்தவை, நடக்க இருப்பவை அனைத்தும் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவேட்டில் திருக்குர்ஆனும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவேட்டை வானவர்களாகிய தூய்மையானவர்கள் தான் தொட முடியுமே தவிர ஷைத்தான்களால் தொட முடியாது.
அத்தகைய பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்து தான் இந்தத் திருக்குர்ஆன் எடுத்து வரப்படுகிறது.
இதைத் தொடமாட்டார்கள் என்பது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டைத் தான் குறிக்கிறது.
இதை நாம் சொந்த ஊகத்தில் சொல்லவில்லை. திருக்குர்ஆன் அப்படித்தான் சொல்கிறது. இதைத் தொடமாட்டார்கள் என்ற வசனத்தை மட்டும் பார்க்காமல் அதற்கு முன்னுள்ள இரண்டு வசனங்களுடன் சேர்த்துப் பார்த்தால் இதை அறிந்து கொள்ளலாம்.
இவ்வசனத்துக்கு முன்னர் உள்ள வசனங்களில் இருந்து பாருங்கள்!
77, 78. இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க திருக்குர்ஆனாகும்.
- தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.
அதைத் தீண்ட மாட்டார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அதை என்று சொல்லப்படுவது எதைக் குறிக்கிறது என்பது தான் இப்பிரச்சினையின் அடிப்படையாக அமைந்துள்ளது.
இவ்வசனத்திற்கு முன் 56:77,78 ஆகிய வசனங்களில் “இது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கின்ற மதிப்புமிக்க திருக்குர்ஆன்” எனக் கூறப்படுகிறது.
அடுத்த வசனத்தில் “அதைத் தொட மாட்டார்கள்” என்று கூறப்படுகிறது.
எனவே “பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள திருக்குர்ஆன், எங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதோ அங்குள்ள மூலப் பிரதி” என்பது தான் “அதை” என்பதன் பொருள்.
எனவே “அதைத் தொடமாட்டார்கள்” என்பது ஒலி வடிவமாக அருளப்பட்ட திருக்குர்ஆனைக் குறிக்காது. எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப் பிரதியைத்தான் குறிக்கும்.
லவ்ஹூல் மஹ்பூலில் பதிவு செய்யப்பட்ட அந்தக் குர்ஆனை தூய்மையானவர்களாகிய வானவர்கள் தான் தொட முடியும். ஷைத்தான்களால் தொட முடியாது என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது.
எனவே இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுவது தவறாகும்.
திருக்குர்ஆன் எல்லா மக்களுக்கும் வழிகாட்டுவதற்காக அருளப்பட்டது. எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது. எல்லா மாந்தர்களும் படிப்பதற்காக அருளப்பட்டது.
முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தத் திருக்குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும். “நீங்கள் தூய்மையாக இல்லை; நீங்கள் திருக்குர்ஆனைத் தொடக்கூடாது” என்று கூறினால், எந்த நோக்கத்திற்காக திருக்குர்ஆனை அல்லாஹ் அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைப்பதாக ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு, திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தின்பால் அழைப்புக் கொடுத்துள்ளனர். (பார்க்க : புகாரீ 7, 2941, 4553)
அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பியிருக்கும் போது, திருக்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொட வேண்டும் என்று கூறுவது தவறாகும். இவ்வாறு கூறுவது திருக்குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தி விடும்.
திருக்குர்ஆனைத் தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும் என்று கூறுவதற்கு எந்த வகையிலும் சான்றாக இவ்வசனம் அமைந்திருக்கவில்லை.
எல்லா நிலையிலும், எல்லா மனிதர்களும் திருக்குர்ஆனைத் தொடலாம்; படிக்கலாம்; வாசிக்கலாம் என்பது தான் திருக்குர்ஆனிலிருந்து பெறப்படுகின்ற, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகின்ற முடிவாகும்.
உளூ இல்லாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்ற கருத்தில் சில நபிமொழிகளும் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.
எனவே தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்குச் சான்றாக ஒரு செய்தியும் இல்லை. முஸ்லிமல்லாதவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், குளிப்பு கடமையானவர்கள், உளூ இல்லாதவர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் திருக்குர்ஆனைத் தொடலாம். ஓதலாம் என்பதே சரியான கருத்தாகும்.
மதவிடாய் நேரத்தில் திருக்குர்ஆனை ஓதலாம் என்பதிலிருந்து மற்ற திக்ருகள், தஸ்பீஹ்கள் ஓதலாம் என்பதை அறியலாம்.
மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளக் கூடாது
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!
திருக்குர்ஆன் 2:222
صحيح مسلم – عَنْ أَنَسٍ أَنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتِ الْمَرْأَةُ فِيهِمْ لَمْ يُؤَاكِلُوهَا، وَلَمْ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ فَسَأَلَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللهُ تَعَالَى {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ} البقرة: 222 إِلَى آخِرِ الْآيَةِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபித்தோழர்கள், (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்கு நேரத்தில் பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்… என்று தொடங்கும் (2:222 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 507
மாதவிடாய் நேரத்தில் உடலுறவைத் தவிர்த்து கணவனுடன் நெருக்கமாக இருக்கலாம்.
صحيح البخاري
322 – أَنَّ أُمَّ سَلَمَةَ، قَالَتْ: حِضْتُ وَأَنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمِيلَةِ، فَانْسَلَلْتُ فَخَرَجْتُ مِنْهَا، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَلَبِسْتُهَا، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنُفِسْتِ قُلْتُ: نَعَمْ، فَدَعَانِي، فَأَدْخَلَنِي مَعَهُ فِي الخَمِيلَةِ قَالَتْ: وَحَدَّثَتْنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الجَنَابَةِ
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கமீலா எனும் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக போர்வைக்குள்ளிருந்து மெல்ல நழுவிச் சென்று அதை அணிந்து கொண்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்’ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்து அந்தப் போர்வைக்குள் என்னைக் கிடத்திக் கொண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து பெருந்துடக்கின் (கடமையான) குளியலை நிறைவேற்றுவோம்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) ,
நூல் : புகாரி 322
صحيح البخاري – 300 – وَكَانَ يَأْمُرُنِي، فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக் கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்து கொள்வேன்.) அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 300
صحيح البخاري – 297 – أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَقْرَأُ القُرْآنَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.
அறிவிப்பர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 297
صحيح مسلم – عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ، فَيَشْرَبُ، وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ
மாதவிடாயின் போது நான் பருகிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் வாய் வைத்து அவர்களும் அருந்துவார்கள். மாதவிடாய் நேரத்தில் எலும்பைக கடித்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்களும் எலும்பைக் கடிப்பார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 300
صحيح مسلم – عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّكِئُ فِي حِجْرِي وَأَنَا حَائِضٌ، فَيَقْرَأُ الْقُرْآنَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்த போது அங்கிருந்தவாறே (அருகிலிருக்கும் அறையிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவுவேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 301
صحيح البخاري – 295 – عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போதும் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 295
மாதவிடாய் இரத்தம்
ஆடையில் மாதவிடாய் பட்டு அது காய்ந்து இருந்தால் சுரண்டி விட்டு தண்ணீர் தெளித்து விட்டு அந்த ஆடையில் தொழலாம். ஈரமாக இருந்தால் அந்த இடத்தை மட்டும் கழுவிவிட்டு அதே ஆடையில் தொழலாம்.
صحيح البخاري – 307 – عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهَا قَالَتْ: سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الحَيْضَةِ كَيْفَ تَصْنَعُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَصَابَ ثَوْبَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الحَيْضَةِ فَلْتَقْرُصْهُ، ثُمَّ لِتَنْضَحْهُ بِمَاءٍ، ثُمَّ لِتُصَلِّي فِيهِ
ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி),
நூல் : புகாரீ 307
மனைவியின் மாதவிடாய் இரத்தம் கணவனின் ஆடையில் பட்டாலும் அந்த இடத்தை மட்டும் கழுவிவிட்டு தொழலாம்.
سنن الدارمي
سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو الْقَاسِمِ ” يَكُونُ مَعِي فِي الشِّعَارِ الْوَاحِدِ وَأَنَا حَائِضٌ طَامِثٌ: إِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ، غَسَلَ مَا أَصَابَهُ، لَمْ يَعْدُهُ إِلَى غَيْرِهِ، وَصَلَّى فِيهِ ثُمَّ يَعُودُ، وَإِنْ أَصَابَهُ مِنِّي شَيْءٌ، فَعَلَ مِثْلَ ذَلِكَ: غَسَلَ مَكَانَهُ لَمْ يَعْدُهُ إِلَى غَيْرِهِ، وَصَلَّى فِيهِ ”
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நானும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களும் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வோம். என்னிடமிருந்து (இரத்தம்) ஏதேனும் அவர்களின் மீது பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கழுவிக் கொள்வார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்ய மாட்டார்கள். அதே ஆடையுடனே தொழவும் செய்வார்கள். மீண்டும் வந்து படுத்துக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : தாரமீ
மாதவிடாய் நின்றதும் குளிக்க வேண்டும்
صحيح البخاري
228 – ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي –
மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டு தொழுதுகொள்!” என்றார்கள்.’ என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 228
உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகும்
உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையாகி விடும். விந்து வெளிப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்குறியும், பெண்குறியும் சந்தித்துவிட்டாலே இருவரும் குளிப்பது கடமை.
صحيح البخاري- 291 – عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الغَسْلُ
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகிவிடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே!)
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 291
தொடர் உதிரப்போக்கு
மாதவிடாய் மாதாமாதம் குறிப்பிட்ட நாட்கள் இரத்தம் வெளிப்பட்டு நின்று விடும். பின்னர் அடுத்தடுத்த மாதங்களிலும் இப்படி ஏற்படும்.
அதாவது மாதத்தில் சில நாட்கள் இரத்தப் போக்கும் பல நாட்கள் இரத்தப் போக்கு இல்லாமலும் இருக்கும். இது தான் மாதவிடாயில் சேரும்.
சில பெண்களுக்கு மாதம் முழுவதும் இரத்தப் போக்கு நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். தூய்மையாகுதல் என்பதே இவர்களுக்கு ஏற்படாது. இது மாதவிடாயில் சேராது. உதிரப் போக்கு எனும் நோயாகும். இது லட்சங்களில் ஒன்று அளவில் குறைவான பெண்களுக்கு ஏற்படும் நோயாகும்.
இவர்களுக்கு காலமெல்லாம் இரத்தம் போய்க் கொண்டு இருப்பதால் இவர்கள் காலமெல்லாம் தொழாமலும் நோன்பு நோற்காமலும் இருக்கக் கூடாது.
இவர்கள் எப்படி நடந்து கொள்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி உள்ளார்கள்.
سنن النسائي – عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدَّمَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لِتَنْظُرْ عَدَدَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِالثَّوْبِ ثُمَّ لِتُصَلِّ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப்போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது இந்த நோய் வருவதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்து கொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்து விட்டுத் துணியால் இறுகக் கட்டிக் கொண்டு அவள் தொழ வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி),
நூல் : நஸாயீ
صحيح البخاري – 228 – جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي – قَالَ: وَقَالَ أَبِي: – ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ
பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள், “இல்லை! இது இரத்தக் குழா(யிலிலிருந்து வருவதே)யாகும். மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி(குளித்து)விட்டுத் தொழுதுகொள்!” என்று கூறினார்கள்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அப்பெண்மனியிடம்) “பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூ செய்துகொள்!” என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 228
இந்த நோய் வருவதற்கு முன் மாதம் தோறும் த்தனை நாட்கள் மாதவிடாய் வந்தத்தோ அத்தனை நாட்கள் தொழுகையை விட்டு விட்டு மற்ற நாட்களில் அவர்கள் தொழ வேண்டும்.
இந்த நோய் வருவதற்கு முன் மாதம் ஐந்து நாட்கள் மாதவிடாய் வந்து கொண்டு இருந்தால் இந்த நோய் வந்தவர்கள் அந்த ஐந்து நாட்களை மாதவிடாய் நாட்களாக அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் தொழ வேண்டும். ஆயினும் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்ய வேண்டும் என்பது இவர்களுக்கான சிறப்புச் சட்டமாகும்.
நோன்பைப் பொருத்தவரை இந்த நோயின் காரணமாக இவர்கள் நோன்பு நோற்க முடியாது. நோன்பு நோற்றால் பாதிப்பு ஏற்படும் என்று இருந்தால் நிரந்தர நோயாளிகளைப் போல் நோன்பு நோற்காமல் இருக்கலாம்.
நோன்பு நோற்பதால் பாதிப்பு ஏற்படாது என்றால் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.
சிலருக்கு சிறு நீர் கசிந்து கொண்டே இருக்கும். காற்று போய்க் கொண்டே இருக்கும். தொழுகையில் இருக்கும் போதே இப்படி நடக்கும். இந்த நிலையில் உள்ளவர்கள் சிறு நீர் கசியும் நிலையில் காற்று போய்க் கொண்டு இருக்கும் நிலையில் தொழலாம். ஆனால் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்ய வேண்டும்.
உதிரப்போக்கு ஒரு நோய் என்பது போல் இந்த நிலையும் ஒரு நோய் என்பதால் அதே சட்டம் இவர்களுக்கும் பொருந்தும்.
ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை
கனவு காண்பதன் மூலம் உறக்கத்தில் விந்து வெளிப்படுவதற்கு ஸ்கலிதம் என்று சொல்வார்கள். இது ஆண்களுக்கு அதிகம் ஏற்படும். அரிதாக பெண்களுக்கும் ஏற்படும். இது வெளிப்பட்டால் குளிப்பது கடமையாகி விடும்.
صحيح مسلم
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: جَاءَتْ أَمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ اللهِ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَعَمْ، إِذَا رَأَتِ الْمَاءَ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللهِ، وَتَحْتَلِمُ الْمَرْأَةُ؟ فَقَالَ: تَرِبَتْ يَدَاكِ، فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا
ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு சுலைம் (ரலி),
நூல் : முஸ்லிம்
குளிக்கும் முறை
மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் முதலில் கழுவ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
صحيح البخاري
260 – عَنْ مَيْمُونَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا الحَائِطَ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி),
நூல்: புகாரீ 260
வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று புகாரீ 259 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
உளூச் செய்தல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.
صحيح البخاري – 248 – عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي المَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ المَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ ”
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ 248
صحيح البخاري – 249 – عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وُضُوءهُ لِلصَّلاَةِ، غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ المَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ، فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الجَنَابَةِ
குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி),
நூல்: புகாரீ 249
தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்
صحيح البخاري – 248 – عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي المَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ المَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ ”
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ 248
صحيح البخاري- 272 – ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، غَسَلَ يَدَيْهِ، وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، ثُمَّ اغْتَسَلَ، ثُمَّ يُخَلِّلُ بِيَدِهِ شَعَرَهُ، حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ، أَفَاضَ عَلَيْهِ المَاءَ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ
பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ 272
இரண்டு, மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவது போதும்
கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
صحيح البخاري – 257 – عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَتْ مَيْمُونَةُ: وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً لِلْغُسْلِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி),
நூல்: புகாரீ 257
நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
صحيح مسلم – عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: تَمَارَوْا فِي الْغُسْلِ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: أَمَّا أَنَا فَإِنِّي أَغْسِلُ رَأْسِي كَذَا وَكَذَا. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَّا أَنَا فَإِنِّي أُفِيضُ عَلَى رَأْسِي ثَلَاثَ أَكُفٍّ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன் என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி),
நூல்: முஸ்லிம் 493
நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரீ 254 அறிவிப்பில் உள்ளது.
கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (494வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே கடமையான குளிப்புக்கும் இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.
பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா?
பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத் தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும் போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான் கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று நினைக்கும் போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந்து இதை அறியலாம்.
இதை இன்னும் தெளிவாகவே விளக்கும் ஹதீஸ்களும் உள்ளன.
صحيح مسلم –
عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي فَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ؟ قَالَ: لَا. إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ.
அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),
நூல்: முஸ்லிம்
எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.
சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளிக்கும் போது சொல்ல வேண்டிய துஆக்கள், திக்ருகள் ஏதுமில்லை. நிய்யத் என்ற பெயரில் சில வார்த்தைகளைச் சொல்ல வேண்டியதில்லை
நிர்வாணமாக குளிக்கக்கூடாது
ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் குளிக்கக்கூடாது. அவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
سنن أبي داود – 4017 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا أَبِي ح، وحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، نَحْوَهُ عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ: عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ؟ قَالَ احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ؟ قَالَ: إِنِ اسْتَطَعْتَ أَنْ لَا يَرَيَنَّهَا أَحَدٌ فَلَا يَرَيَنَّهَا قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا؟ قَالَ: اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنَ النَّاسِ
உன் மனைவி, அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப் பகுதியை பாதுகாத்துக் கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்காதவாறு இருக்கு முடிந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி),
நூல் : அபூதாவூத்
கடமையான குளிப்புக்கு முன் உளூ செய்வது நல்லது
குளிப்பு கடமையானவர்களாக இருக்கும் போது உண்ணுவதற்கும், உறங்குவதற்கும் முன்னால் உளூச் செய்து கொள்ள வேண்டும். இது கட்டாயம் அல்ல. செய்வது சிறப்பு.
صحيح البخاري – 290 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: ذَكَرَ عُمَرُ بْنُ الخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصِيبُهُ الجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ نَمْ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்” உளூச் செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 290
உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் உடலுறவு கொண்டால் உளூ செய்வது நல்லது
صحيح مسلم – عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ، ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ، فَلْيَتَوَضَّأْ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் உடலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : முஸ்லிம் 518
صحيح مسلم – عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ جُنُبًا، فَأَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَنَامَ، تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு இருக்கும் போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று உளூ செய்து கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் ; முஸ்லிம்
பெண்களின் ஆடை அணிகலன்கள்
வண்ண ஆடைகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நிறங்களிலும் ஆடை அணிந்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ளதாக புகாரி 166 வது ஹதீஸில் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்துள்ளதாக புகாரி 376 வது ஹதீஸில் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்துள்ளதாக புகாரி 5823, 5824 வது ஹதீஸ்களில் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பச்சை நிற ஆடை அணிந்துள்ளதாக புகாரி 5825 வது ஹதீஸில் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்துள்ளதாக புகாரி 5826, 5827 வது ஹதீஸ்களில் உள்ளது.
காவி நிற ஆடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதைத் தவிர வேறு எந்த நிற ஆடைகளையும் தடுக்கவில்லை.
صحيح مسلم -أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، أَخْبَرَهُ، قَالَ: رَأَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا،
என் மீது குங்குமச்சாயம் தோய்த்த (காவி நிறம்) இரு ஆடைகள் இருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இது இறை மறுப்பாளர்களின் ஆடை; இதை அணியாதீர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ருபின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம்
இந்தத் தடை ஆண்களுக்கு மட்டுமான தடையாகும்.
பெண்களுக்கு காவி நிற ஆடைகள் உள்ளிட்ட அனைத்து நிற ஆடைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
مسند أحمد 6852 – حَدَّثَنَا أَبُو مُغِيرَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ الْغَازِ، حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: هَبَطْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ثَنِيَّةِ أَذَاخِرَ، قَالَ: فَنَظَرَ إِلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا عَلَيَّ رَيْطَةٌ مُضَرَّجَةٌ بِعُصْفُرٍ، فَقَالَ: ” مَا هَذِهِ؟ “، فَعَرَفْتُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كَرِهَهَا، فَأَتَيْتُ أَهْلِيوَهُمْ يَسْجُرُونَ تَنُّورَهُمْ، فَلَفَفْتُهَا، ثُمَّ أَلْقَيْتُهَا فِيهِ، ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” مَا فَعَلَتِ الرَّيْطَةُ؟ ” قَالَ: قُلْتُ: قَدْ عَرَفْتُ مَا كَرِهْتَ مِنْهَا، فَأَتَيْتُ أَهْلِي وَهُمْ يَسْجُرُونَ تَنُّورَهُمْ فَأَلْقَيْتُهَا فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَهَلَّا كَسَوْتَهَا بَعْضَ أَهْلِكَ ” (1)
ஸனிய்யா அதாகிர் எனும் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் தங்கினோம். என் மீது குங்குமச்சாயம் தோய்த்த (காவி) ஆடையைக் கண்டு இது என்ன என்று கேட்டார்கள். அவர்கள் இதை வெறுக்கிறார்கள் என்று நான் விளங்கிக் கொண்டேன். நான் வீட்டுக்கு வந்த போது அவர்கள் அடுப்பு எரித்துக் கொண்டு இருந்தனர். அந்த ஆடையை அதில் போட்டு (எரித்து) விட்டு நபிகள் நாயகத்திடம் வந்தேன். அந்த ஆடையை என்ன செய்தாய் என்று கேட்டார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அடுப்பில் போட்டு எரித்து விட்டேன் என்று நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) உன் குடும்பத்தினருக்கு இதை அணிவித்திருக்கக் கூடாதா எனக் கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : அஹ்மத்
காவி நிற ஆடைகள் ஆண்களுக்குத் தான் தடை; பெண் களுக்கு இல்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.
سنن أبي داود – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى النِّسَاءَ فِي إِحْرَامِهِنَّ عَنِ القُفَّازَيْنِ وَالنِّقَابِ، وَمَا مَسَّ الْوَرْسُ وَالزَّعْفَرَانُ مِنَ الثِّيَابِ، وَلْتَلْبَسْ بَعْدَ ذَلِكَ مَا أَحَبَّتْ مِنْ أَلْوَانِ الثِّيَابِ مُعَصْفَرًا أَوْ خَزًّا أَوْ حُلِيًّا أَوْ سَرَاوِيلَ أَوْ قَمِيصًا أَوْ خُفًّا
பெண்கள் இஹ்ராம் நிலையில் இருக்கும் போது முகத்திரையையும், கையுறைகளையும், குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடையையும் அணிவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். அதற்குப் பிறகு (சாதாரண நேரத்தில்) அவள் விரும்பும் வண்ண ஆடைகளையும் குங்குமப்பூ நிறத்திலுள்ள ஆடையையோ பட்டாடையையோ ஆபரணத்தையோ சிர்வாலையோ நீளங்கியையோ காலுறையையோ அணிந்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : அபூதாவூத்
பெண்கள் பேண்ட் அணியலாமா?
ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
صحيح البخاري
5885 لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ
ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 5886
இது ஆடையை மட்டும் குறிப்பதல்ல. எல்லா வகையிலும் ஒரு பாலரைப் போல் இன்னொரு பாலர் இருக்கக் கூடாது என்று பொதுவாகக் கூறும் ஹதீஸ் ஆகும். இதில் ஆடையும் அடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்கள் அணியும் எந்த ஆடையையும் பெண்கள் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா?
அல்லது மார்க்கத்தின் அடிப்படையில் ஆண்களுக்கு ஏற்ற ஆடையை பெண்களும், பெண்களுக்கு ஏற்ற ஆடையை ஆண்களும் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா?
அணியும் ஆடை என்று பொருள் கொள்வதை விட அணியத்தக்க ஆடை என்று பொருள் கொள்வது தான் பொருத்தமானது.
இறுக்கமான பேண்ட்களாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்றது அல்ல. தொய்வானதாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்ற உடை தான்.
அதே நேரத்தில் சேலை ஜாக்கெட் போன்றவை பெண்களின் ஆடை என்று அறியப்பட்டாலும் அது பெண்களின் உடலை மறைக்காததால் (உள்ளாடையாக அல்லது வீட்டில் இருந்தால் தவிர) அது பெண்களின் ஆடை அல்ல.
ஆண்கள் அணிவதெல்லாம் ஆண்களின் ஆடை அல்ல; பெண்கள் அணிவதெல்லாம் பெண்கள் ஆடை அல்ல என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையும் நமக்கு விளக்குகிறது.
பெரும்பாலும் ஆண்களும், பெண்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு போர்வையைத் தான் ஆடையாக அணிந்திருந்தனர்.
இன்னும் பல ஆடைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருந்துள்ளது.
கமீஸத் எனும் ஆடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ளனர். இதே ஆடையை பெண்களுக்கும் அணிவித்துள்ளனர்.
صحيح البخاري- 373 عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ: اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க கமீசத் எனும் கறுப்புக் கம்பளி ஆடை அணிந்து தொழுதார்கள். அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு வழங்கிய) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அவரிடம் இருக்கும் வேலைப்பாடு இல்லாத முரட்டு ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 373, 436, 572, 3454, 4444, 5816, 5817
صحيح البخاري – 3874 عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدٍ، قَالَتْ: قَدِمْتُ مِنْ أَرْضِ الحَبَشَةِ، وَأَنَا جُوَيْرِيَةٌ، فَكَسَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمِيصَةً لَهَا أَعْلاَمٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ الأَعْلاَمَ بِيَدِهِ وَيَقُولُ: سَنَاهْ سَنَاهْ قَالَ الحُمَيْدِيُّ: يَعْنِي حَسَنٌ، حَسَنٌ
அபிசீனியா நாட்டிலிருந்து நானும் ஜுவைரிய்யா அவர்களும் வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கமீசத் எனும் பட்டுத் துணி ஒன்றை எனக்கு உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அந்த அடையாளங்களைத் தடவியபடி, அழகாயிருக்கிறதே! அழகாயிருக்கிறதே! (என்பதைக் குறிக்க அபிசீனிய மொழியில் சனா, சனா’)என்று கூறலானார்கள்.
அறிவிப்பவர் : உம்மு காலித் (ரலி), ,
நூல் : புகாரி 3874, 5823
கமீசத் எனும் ஆடையை தாமும் அணிந்து உம்மு காலித் என்ற பெண்மணிக்கும் நபிகள் அணியக் கொடுத்துள்ளதால் குறிப்பிட்ட ஆடைகள் பெண்களுக்கானது என்று சொல்ல முடியாது.
இஸார் எனப்படும் வேட்டி எப்படி ஆண்கள் அணிந்தார்களோ அது போல் பெண்களும் அணிந்துள்ளனர்.
ஆண்கள் வேட்டி அணிவது போல் பெண்களும் வேட்டி அணிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்பதைப் பின்வரும் புகாரி ஹதீஸில் இருந்து அறியலாம்.
صحيح البخاري – 5121 ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ امْرَأَةً عَرَضَتْ نَفْسَهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا، فَقَالَ: مَا عِنْدَكَ؟ قَالَ: مَا عِنْدِي شَيْءٌ، قَالَ: اذْهَبْ فَالْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ، فَذَهَبَ ثُمَّ رَجَعَ، فَقَالَ: لاَ وَاللَّهِ مَا وَجَدْتُ شَيْئًا وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ، وَلَكِنْ هَذَا إِزَارِي وَلَهَا نِصْفُهُ قَالَ سَهْلٌ: وَمَا لَهُ رِدَاءٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَمَا تَصْنَعُ بِإِزَارِكَ، إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ، وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَيْءٌ، فَجَلَسَ الرَّجُلُ حَتَّى إِذَا طَالَ مَجْلِسُهُ قَامَ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَاهُ أَوْ دُعِيَ لَهُ فَقَالَ لَهُ: مَاذَا مَعَكَ مِنَ القُرْآنِ؟ فَقَالَ: مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا لِسُوَرٍ يُعَدِّدُهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمْلَكْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (இவருக்கு மஹ்ர் கொடுக்க) உம்மிடம் என்ன உள்ளது? என்று கேட்டார்கள். அவர், என்னிடம் ஒன்றுமில்லை என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் சென்று, இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடு! என்று சொன்னார்கள். அவர் போய் (தேடிப்பார்த்து) விட்டுத் திரும்பி வந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை; இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை. ஆனால், இதோ எனது இந்த வேட்டி உண்டு. இதில் பாதி அவளுக்கு (மஹ்ர்) என்றார். அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது வேட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்? அதை நீர் உடுத்திக் கொண்டால் அவள் மீது (அதில்) ஏதும் இருக்காது; அதை அவள் உடுத்திக் கொண்டால் அதில் உம் மீது ஏதும் இருக்காது. என்று சொன்னார்கள். பிறகு அவர் நெடு நேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் செல்வதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரை அழைத்தார்கள். அவரிடம், உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இன்ன அத்தியாயம் இன்ன அத்தியாயம் என்னிடம் உள்ளது என்று சில அத்தியாயங்களை எண்ணி எண்ணிச் சொன்னார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்து கொடுத்துவிட்டேன் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),
நூல் : புகாரி 5121
ஆண் அணியும் வேட்டியை பெண்ணும் அணியலாம் என்பதை இதில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.
தமது மகள் மரணித்த போது குளிப்பாட்டிய உடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வேட்டியைக் கொடுத்து அணிவிக்கச் சொன்னார்கள்.
صحيح البخاري- 1253 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ، فَقَالَ: اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ ، فَأَعْطَانَا حِقْوَهُ، فَقَالَ: أَشْعِرْنَهَا إِيَّاهُ تَعْنِي إِزَارَهُ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது புதல்வி இறந்துவிட்ட போது எங்களிடம் வந்து, அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது வேட்டியைத் தந்து, இதை அவரது உடலில் சுற்றுங்கள் எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 1253, 1257
صحيح البخاري – 372 – أَنَّ عَائِشَةَ، قَالَتْ: لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الفَجْرَ، فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنَ المُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ، ثُمَّ يَرْجِعْنَ إِلَى بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ
மிர்த் எனும் ஆடையை பெண்கள் அணிந்ததாக புகாரியில் பல ஹதீஸ்கள் உள்ளன.
பார்க்க : 372, 578, 2881, 4071, 4758
صحيح مسلم – عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ وَعَلَيْهِ مِرْطٌ مُرَحَّلٌ مِنْ شَعَرٍ أَسْوَدَ
இந்த மிர்த் எனும் ஆடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்ததாக முஸ்லிமில் ஹதீஸ் உள்ளது. (முஸ்லிம்-4227)
எனவே மார்க்க அடிப்படையில் ஆண்களுக்குத் தகுதியான ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது. பெண்களுக்கே தகுதியான ஆடைகளை ஆண்கள் அணியக் கூடாது என்று தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் அணியும் ஜாக்கெட்டை விட ஆண்கள் அணியும் தொய்வான சட்டை பெண்களுக்கு மிகப் பொருத்தமானது. மறைக்க வேண்டிய பகுதிகளை சட்டை நன்றாக மறைக்கும்.
பட்டாடை, தங்கம் அணியலாம்
ஆண்கள் பட்டாடை அணிவதற்கு தடை உள்ளது. ஆனால் பெண்களுக்கு இத்தடை இல்லை.
سنن النسائي – أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ: إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا، فَجَعَلَهُ فِي يَمِينِهِ، وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ، ثُمَّ قَالَ: إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டாடையை வலது கையிலும் தங்கத்தை இடது கையிலும் எடுத்துக் காட்டி இவ்விரண்டும் என் சமுதாயத்தின் ஆண்களுக்கு ஹராம் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலி (ரலி),
நூல் : நஸாயீ
صحيح البخاري – 5366 – عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: آتَى إِلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً سِيَرَاءَ فَلَبِسْتُهَا، فَرَأَيْتُ الغَضَبَ فِي وَجْهِهِ، فَشَقَّقْتُهَا بَيْنَ نِسَائِي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை வழங்கினார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (இதைக் கண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை நான் பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.
அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல் : புகாரி 5366
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?
விரும்புகின்ற நகைகளை அணிவதற்கு பெண்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. தங்கம் வெள்ளி பிளாட்டினம் முத்து பவளம் போன்ற விலையுயர்ந்தப் பொருட்களை அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் காலத்தில் பெண்கள் ஆபரணங்களை அணிந்துள்ளார்கள்.
صحيح البخاري – 98 – أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُرْطَ وَالخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலிலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலா னார்கள். பிலால் (ரலிலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்,
நூல் : புகாரி (98)
என்றாலும் இவையெல்லாம் அலங்காரம் என்பதால் இந்த அலங்காரத்தை அண்ணிய ஆண்களிடம் வெளிப்படுத்தக் கூடாது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.
திருக்குர்ஆன் 24:31
பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று சிலர் வாதிட்டு சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள்.
இந்தக் கருத்துடையவர்கள் முஸ்னத் அஹ்மதிலும், நஸாயியிலும் இடம் பெற்ற கீழ்க்காணும் இரண்டு ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள்.
مسند أحمد – 22398 – حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنِي زَيْدُ بْنُ سَلَّامٍ، أَنَّ جَدَّهُ حَدَّثَهُ، أَنَّ أَبَا أَسْمَاءَ حَدَّثَهُ، أَنَّ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُ أَنَّ: ابْنَةَ هُبَيْرَةَ دَخَلَتْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا خَوَاتِيمُ مِنْ ذَهَبٍ، يُقَالُ لَهَا الْفَتَخُ، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَعُ يَدَهَا بِعُصَيَّةٍ مَعَهُ يَقُولُ لَهَا: ” أَيَسُرُّكِ أَنْ يَجْعَلَ اللهُ فِي يَدِكِ خَوَاتِيمَ مِنْ نَارٍ؟ ” فَأَتَتْ فَاطِمَةَ فَشَكَتْ إِلَيْهَا مَا صَنَعَ بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَانْطَلَقْتُ أَنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ خَلْفَ الْبَابِ، وَكَانَ إِذَا اسْتَأْذَنَ قَامَ خَلْفَ الْبَابِ قَالَ: فَقَالَتْ لَهَا فَاطِمَةُ: انْظُرِي إِلَى هَذِهِ السِّلْسِلَةِ الَّتِي أَهْدَاهَا إِلَيَّ أَبُو حَسَنٍ. قَالَ: وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ ذَهَبٍ، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” يَا فَاطِمَةُ بِالْعَدْلِ أَنْ يَقُولَ النَّاسُ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ، وَفِي يَدِكِ سِلْسِلَةٌ مِنْ نَارٍ؟ ” ثُمَّ عَذَمَهَا عَذْمًا شَدِيدًا، ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ، فَأَمَرَتْ بِالسِّلْسِلَةِ فَبِيعَتْ
سنن النسائي
5140 – أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي زَيْدٌ، عَنْ أَبِي سَلَّامٍ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، أَنَّ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُ قَالَ: جَاءَتْ بِنْتُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخٌ، فَقَالَ: كَذَا فِي كِتَابِ أَبِي، أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْرِبُ يَدَهَا، فَدَخَلَتْ عَلَى فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَشْكُو إِلَيْهَا الَّذِي صَنَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْتَزَعَتْ فَاطِمَةُ سِلْسِلَةً فِي عُنُقِهَا مِنْ ذَهَبٍ، وَقَالَتْ: هَذِهِ أَهْدَاهَا إِلَيَّ أَبُو حَسَنٍ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالسِّلْسِلَةُ فِي يَدِهَا فَقَالَ: يَا فَاطِمَةُ، أَيَغُرُّكِ أَنْ يَقُولَ النَّاسُ ابْنَةُ رَسُولِ اللَّهِ وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ نَارٍ، ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ، فَأَرْسَلَتْ فَاطِمَةُ بِالسِّلْسِلَةِ إِلَى السُّوقِ فَبَاعَتْهَا، وَاشْتَرَتْ بِثَمَنِهَا غُلَامًا وَقَالَ مَرَّةً: عَبْدًا وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا فَأَعْتَقَتْهُ، فَحُدِّثَ بِذَلِكَ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْجَى فَاطِمَةَ مِنَ النَّارِ
மேற்கண்ட ஹதீஸ்களுக்கு இவர்கள் செய்த தமிழாக்கம் இது தான்.
தவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அல்லாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ஹஸனின் தந்தை (அலி ரலி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் எனக் கூறினார். பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் எனக் கூறினார்கள்.
ஆதாரம்: ஸுனனுன் நஸாயீ,
அறிவிப்பாளர் :தவ்பான் (ரலி)
மொழிபெயர்ப்பில் இவர்கள் தவறு செய்து தங்கள் வாதத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள்.
ஹுபைரா என்பவரது கையில் தங்க மோதிரங்கள் இருந்தன என்று தான் மூலத்தில் உள்ளது. இச்சொல் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும். அணிந்திருப்பதையும் குறிக்கும். கையில் இருந்தன என்று மொழியாக்கம் செய்யாமல் அணிந்திருந்தனர் என்று தமிழாக்கம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப ஹதீஸை வளைத்துள்ளனர்.
இந்தச் சொல்லுக்கு இரண்டு விதமான அர்த்தம் செய்ய இடம் இருந்தாலும் இந்த இடத்தில் கையில் வைத்திருந்தார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டி விட்டனர் என்று கூறப்படுகிறது. கையில் வைத்திருந்தால் தான் தட்டிவிட முடியும். கையில் அணிந்திருந்தால் கழட்ட வேண்டுமே தவிர தட்டி விடுவதில் பயனில்லை. மேலும் பின்னால் நாம் அளிக்கும் விளக்கமும் இந்த அர்த்தம் தான் சரி என்பதைச் சந்தேகமற உறுதிப்படுத்தும்.
தங்க நகை அணியக் கூடாது என்று இதில் இருந்து சட்டம் எடுக்க முடியாது, தங்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று தான் இவர்கள் சட்டம் எடுக்க வேண்டும்.
அடுத்ததாக இந்தச் செய்தியை ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் ஹுபைராவின் மகள் சொல்கிறார். இதைக் கேட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் தமது கழுத்தில் இருந்த தங்க மாலையைக் கழட்டி விடுகிறார்கள். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள். கழுத்தில் தங்க மாலையை அணிந்திருக்கும் போது வரவில்லை. அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியது என்ன?
பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?
என்று தான் கூறினார்கள்.
ஃபாத்திமாவின் கரத்தில் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியை கையில் அணிய முடியாது. வைத்திருக்கத் தான் முடியும்.
இந்த ஹதீஸில் இருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கவே கூடாது என்று தான் வாதிட முடியும். அதற்குத் தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக்கூடாது என்ற கருத்தைத் தரவில்லை.
அடுத்து ஃபாத்திமா (ரலி) அம்மாலையைக் கழட்டி விற்று விடச் சொன்னார்கள் என்பது ஹதீஸில் இல்லாததாகும். நபி வருவதற்கு முன்பே கழட்டி வைத்துள்ளார்கள்.
தங்க நகையை அணிவது தவறு என்றால் ஃபாத்திமா (ரலி) அதை விற்கத் தேவை இல்லை. அணியாமல் ஒரு சொத்தாக அதை வைத்துக் கொள்ளலாம். தங்கத்தை வைத்துக் கொள்வதே கூடாது என்பதால் தான் அவர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என்று தான் கூறுகிறதே தவிர அணிவதைப் பற்றி பேசவே இல்லை.
எனவே இவர்கள் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸுக்கும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
எனவே தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்து விட்டால் நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தையே இந்தச் செய்தி அழுத்தமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.
தங்கத்தை வைத்திருக்கவே கூடாதா என்றால் இந்த ஹதீஸின் கருத்து இது தான். ஆனால் ஆரம்ப காலத்தில் இவ்வாறு சட்டம் இருந்து பின்னர் மாறப்பட்டு விட்டது.
மாற்றப்பட்ட சட்டம்
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)
திருக்குர்ஆன் 9:34
இந்த வசனம் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தருகின்றது. இதை மட்டும் வைத்து ஒருவர் முடிவெடுப்பாராயின் பொருளாதாரத்தைச் சேமிப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவார். மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகின்றது.
ஆனால் இவ்வசனம் கூறும் இந்தச் சட்டம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் இருந்தது. ஸகாத் கடமையாக்கப்பட்ட பிறகு இச்சட்டம் மாற்றப்பட்டு பொருளுக்குரிய ஸகாத்தைக் கொடுத்துவிட்டால் அதைச் சேமிப்பது தவறில்லை என்று அனுமதி தரப்பட்டது. இதைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றது.
صحيح البخاري – 1404 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ: خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ أَعْرَابِيٌّ: أَخْبِرْنِي عَنْ قَوْلِ اللَّهِ: {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ، وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} التوبة: 34 قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: யிمَنْ كَنَزَهَا، فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا، فَوَيْلٌ لَهُ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ، فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلْأَمْوَالِ
காலித் பின் அஸ்லம் கூறுகிறார் :
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ…” என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் சுத்திகரிக்கக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்” என்றார்கள்.
நூல் புகாரி 1404
எனவே மேற்கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்பதை உணரலாம்.
நடுவிரலில் மோதிரம் அணியலாமா?
பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நடுவிரலில் மோதிரம் அணியக் கூடாது என்று சில அறிஞர்கள் வாதிடுகிறார்கள்.
صحيح مسلم- قَالَ عَلِيٌّ: نَهَانِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَخَتَّمَ فِي إِصْبَعِي هَذِهِ أَوْ هَذِهِ، قَالَ: فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا
நடுவிரலையும், அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ, அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார்.
நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் நடுவிரலில் என்று உறுதியாகச் சொல்லப்படவில்லை. இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார். நடு விரலிலோ அதற்கு அடுத்த விரலிலோ மோதிரம் அணியத் தடை செய்தார்கள் என்று சந்தேகத்துடன் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில்
صحيح مسلم – عَنْ عَلِيٍّ، قَالَ: نَهَانِي – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنْ أَجْعَلَ خَاتَمِي فِي هَذِهِ، أَوِ الَّتِي تَلِيهَا – لَمْ يَدْرِ عَاصِمٌ فِي أَيِّ الثِّنْتَيْنِ “،
இரண்டு விரல்களில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
سنن ابن ماجه – عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: “هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ” يَعْنِي “الخِنْصَرَ وَالْإِبْهَامَ”
கட்டை விரலிலும், சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.
நூல் : இப்னுமாஜா
இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.
இந்த இரு அறிவிப்புகள் சொல்வது என்ன? முதல் ஹதீஸ்படி நடுவிரலிலும், அதற்கடுத்த விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்றும், இரண்டாம் ஹதீஸ் படி கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்றும் தெரிகிறது.
இந்த விரல், இந்த விரல் என்று சொல்லும் போது கட்டை விரலையும் சுண்டு விரலையும் சுட்டிக்காட்டியதாக ஆசிம் ஒரு அறிவிப்பில் கூறுகிறார்.
ஆனால் இந்த விரல், இந்த விரல் என்று சொல்லும் போது நடு விரலையும் அடுத்த விரலையும் சுடிக்காட்டியதாக அதே ஆசிம் அறிவிக்கிறார்.
நடு விரல் அடுத்த விரல் என்று சொல்வதை உறுதியாகவும் அவர் சொல்லவில்லை. இரண்டில் ஒன்றைச் சொன்னார்கள். அது எது எனத் தெரியவில்லை என்ற பொருள் பட கூறுகிறார்.
இது குறித்த சரியான தகவல் ஆசிமிடம் இல்லை என்பதும், முரண்பட்டும் சந்தேகத்துடனும் தான் அறிவிக்கிறார் என்பதும் இதில் இருந்து தெரிகிறது.
இந்த எல்லா அறிவுப்புகளையும் பார்த்தால் சுண்டுவிரலில் தவிர மற்ற நான்கு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று கூற வேண்டும். அப்படி யாரும் கூறுவதில்லை.
நடுவிரலில் மோதிரம் அணியக் கூடாது என்ற கருத்தை உறுதியாகச் சொல்லும் அறிவிப்புகள் இல்லை. குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்.
தாலி மெட்டி அணியலாமா?
இஸ்லாமில் அனுமதிக்கப்பட்ட பொருட்களில் மூட நம்பிக்கை புகுத்தப்பட்டு இருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமின் கொள்கை.
அனுமதிக்கப்பட்ட உணவுகள் பூஜை செய்யப்பட்டால் அதை நாம் சாப்பிடக் கூடாது. உணவு என்ற நிலையைக் கடந்து புனிதமானவை என்ற நம்பிக்கை அதனுள் இருப்பதே இந்தத் தடைக்கு காரணம்.
தாலி என்பதும் மெட்டி என்பதும் ஆபரணங்களாக மட்டும் கருதப்பட்டால் அதை அணிவதில் தவறு இல்லை. ஆனால் அவற்றின் பின்னால் மூட நம்பிக்கை உள்ளது.
ஒப்பந்தம் மூலம் கணவன் மனைவி என்ற உறவு ஏற்படும் என்பது இஸ்லாமியத் திருமணம். அது போதாது தாலியும் அணிய வேண்டும் என்றால் இஸ்லாமியத் திருமணத்தை இது அர்த்தமற்றதாக ஆக்குகிறது.
கணவன் இல்லாத பெண்கள் தாலி அணியக் கூடாது. கணவன் இறந்து விட்டால் தாலியை அறுக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் இதனுள் உண்டு.
எனவே தாலி கருசமணி ஆகியவை அணிவது குற்றமாகும்.
سنن أبي داود – عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
ஒரு சமுதாயத்தைப் போன்று யார் நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர் தான். (நம்மைச் சார்ந்தவர் இல்லை. ) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : அபூதாவூத்
தாலி, மெட்டி, நெற்றியில் திலகம் இடுதல் போன்ற அனைத்தும் ஒரு மதத்தின் சடங்காக உள்ளதால் அவற்றை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.
பெண்கள் காது மூக்கு குத்தலாமா ?
அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் காது, மூக்கு குத்துவதும் ஒன்றாகும். சிலர் கூடும் என்றும் சிலர் கூடாது என்றும் கூறுகின்றனர். காது குத்தலாம் என்பதற்கோ, காது குத்தக் கூடாது என்பதற்கோ நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்தக் கருத்து வேறுபாட்டிற்குக் காரணம்.
ஆனால் இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும், அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.
அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். திருக்குர்ஆன் 4:119
அல்லாஹ் வடிவமைத்ததில் மாற்றம் செய்யக் கூடாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.
காதுகளிலும், மூக்கிலும் துளையில்லாமலே அல்லாஹ் மனிதர்களை வடிவமைத்துள்ளான். காது, மூக்கு குத்தினால் இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் காது மூக்கு குத்துவது கூடாது என்ற முடிவுக்கு வரலாம்.
அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தடை செய்துள்ளார்கள்.
صحيح البخاري – 5931 قَالَ عَبْدُ اللَّهِ: لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 5931
இறைவன் வழங்கியுள்ள உருவத்தை மாற்றுவதால் பெண் கள் சபிக்கப்பட்டுள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்தல் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
காது, மூக்கு குத்துவதில் இந்த அம்சம் இருப்பதால் இது தடை செய்யப்பட்டதாகும்.
மேலும் அல்லாஹ்வின் படைப்பில் மனிதனின் வடிவம் தான் அழகிய வடிவமாகும்.
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
திருக்குர்ஆன் 95:4
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டை யாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
திருக்குர்ஆன் 23:14
அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு “பஅல்’ எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா?
திருக்குர்ஆன் 37:125
அழகிய படைப்பாளன் என்று அல்லாஹ் தனக்குப் பெயர் சூட்டியுள்ளான். அவன் எதை எப்படி படைத்துள்ளானோ அது தான் அழகு.
ஆண்களுக்கு எவை அழகோ அவற்றை ஆண்களுக்கு வழங்கியுள்ளான். பெண்களுக்கு எவை அழகோ அவற்றைப் பெண்களுக்கு வழங்கியுள்ளான்.
காது மூக்கு குத்தினால் அல்லாஹ் அழகாகப் படைக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறோம்.
காது மூக்கு குத்தலாம் என்ற கருத்துடையவர்கள் பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு காது மூக்கு குத்தலாம் என வதிடுகின்றனர்.
صحيح البخاري – 98 حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ: أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ عَطَاءٌ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُرْطَ وَالخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (98)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் காது மூக்கு குத்தும் போது அவர்கள் அதைத் தடுக்காமல் இருந்தால் காது மூக்கு குத்தலாம் என்று நாம் முடிவு செய்யலாம். ஆனால் இந்த ஹதீஸில் அப்படி எதுவும் இல்லை. முன்னரே காது குத்தியவர்கள் நபிகள் நாயகம் முன்னால் இருந்துள்ளனர் என்பது தான் இந்த ஹதீஸில் உள்ளது.
சட்டம் தெரியாமல் இருக்கும் நேரத்தில் காது, மூக்கு குத்தியிருந்தால் துளையிடப்பட்ட அந்தக் காதில் ஆபரணங் களைப் போடுவதை நபியவர்கள் தடை செய்யவில்லை என்ற கருத்தைத் தான் இதில் இருந்து எடுக்க முடியும்.
மார்க்கச் சட்டத்தை அறிவதற்கு முன்னால் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியத்தை ஒருவர் செய்தால் அதற்காக அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தவறு என்று தெரிந்த பிறகு செய்தாலே அவர் குற்றவாளியாவார். இது ஒரு பொதுவான அடிப்படை விதி.
ஆபரணங்களைக் காதில் தொங்க விடுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. இறைவன் படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்ற காரணத்துக்காகத் தான் காது, மூக்கு குத்தக் கூடாது என்று கூறப்படுகின்றது. ஒருவர் சட்டம் தெரியாமல் குத்திவிட்டால் துளையிட்ட காதில் ஆபரணங்களை அணிவது தவறல்ல.
எனவே காது மூக்கு குத்தக்கூடாது என்ற மார்க்கச் சட்டம் தெரிந்த பிறகு அதை குத்துவது கூடாது. சட்டம் தெரியாத நேரத்தில் குத்தியிருந்தால் அதில் ஆபரணங்களை தொங்க விடுவதற்குத் தடையில்லை.
முடி வெட்டுதல் மொட்டை அடித்தல்
பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர்(தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.
திருக்குர்ஆன் 2:196
அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.
திருக்குர்ஆன் 48:27
தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ செய்யலாம் என்று இவ்வசனத்தில் இருந்து விளங்க முடிந்தாலும் இரண்டில் தலையை மழிப்பது தான் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
صحيح البخاري – 1727 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقِينَ قَالُوا: وَالمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقِينَ قَالُوا: وَالمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: وَالمُقَصِّرِينَ، وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي نَافِعٌ: رَحِمَ اللَّهُ المُحَلِّقِينَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ، قَالَ، وَقَالَ عُبَيْدُ اللَّهِ: حَدَّثَنِي نَافِعٌ، وَقَالَ فِي الرَّابِعَةِ: وَالمُقَصِّرِينَ
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனக் கூறியதும் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் என்றார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்…. என்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!) என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பின்படி தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! என்று ஒரு தடவையோ, இரண்டு தடவையோ கூறியதாக உள்ளது. இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது தடவையில், முடியைக் குறைத்துக் கொள் பவர் களுக்கும்…. எனக் கூறியதாக உள்ளது.
நூல் : புகாரி 1727
ஹஜ் கடமையை முடிப்பதற்கு அடையாளமாக தலையை மழிக்கலாம்; அல்லது தலை முடியைச் சிறிது குறைக்கலாம். ஆனாலும் தலையை மழிப்பதே சிறந்தது என்று இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.
பெண்களுக்கு என குறிப்பிட்டுச் சொல்லப்படாத எல்லா வணக்க முறைகளும் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் உரியதாகும்.
ஹஜ்ஜை அல்லது உம்ராவை முடிக்கும் போது தலையை மழிப்பது சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினாலும் இதில் பெண்களுக்கு விதி விலக்கு அளித்துள்ளனர்.
سنن أبي داود – قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ عَلَى النِّسَاءِ الْحَلْقُ، إِنَّمَا عَلَى النِّسَاءِ – لتَّقْصِيرُ
‘தலையை மழித்துக் கொள்வது பெண்கள் மீது இல்லை. குறைத்துக் கொள்வதே அவர்கள் மீது உள்ளது” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: அபூதாவூத் 1694
அவர்கள் மீது மழித்தல் இல்லை என்ற சொல் அவர்கள் மீது மழித்தல் முக்கியம் அல்ல என்ற கருத்தைத் தான் தரும். அவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கருத்தைத் தராது.
ஹஜ் முடித்த பின் அவர்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கக் கட்டளையாகப் பிறப்பித்தால் அது பெண்களில் அதிகமானவர்களுக்குப் பிடிக்காது. எனவே தான் அவர்கள் மீது மழித்தல் அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் விரும்பி தலையை மழித்துக் கொள்வது குற்றமாக ஆகாது. இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் ஹஜ் முடித்து தமது தலையை மழித்துள்ளனர்.
صحيح بن حبان – عَنْ مَيْمُونَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا حَلَالًا، وَبَنَى بِهَا حَلَالًا، وَمَاتَتْ بِسَرِفَ، فَدَفَنَّاهَا فِي الظُّلَّةِ الَّتِي بَنَى بِهَا فِيهَا، فَنَزَلْتُ فِي قَبْرِهَا أَنَا وَابْنُ عَبَّاسٍ، فَلَمَّا وَضَعْنَاهَا فِي اللَّحْدِ مَالَ رَأْسُهَا، وَأَخَذْتُ رِدَائِي فَوَضَعْتُهُ تَحْتَ رَأْسِهَا، فَاجْتَذَبَهُ ابْنُ عَبَّاسٍ، فَأَلْقَاهُ، وَكَانَتْ حَلَقَتْ فِي الْحَجِّ رَأْسَهَا، فَكَانَ رَأْسُهَا مُحَمَّمًا
நூல் : இப்னு ஹிப்பான்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் மைமூனா (ரலி) ஹஜ் செய்து விட்டு அவர்கள் மொட்டை அடித்திருந்த நிலையில் மரணித்தார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இது நடந்துள்ளதால் இதை ஆதாரமாக நாம் கூறவில்லை. கூடுதல் தகவலுக்காகக் குறிப்பிடுகிறோம்.
பெண்கள் தலையை மழிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல.
எனவே பெண்கள் பொதுவாகத் தலையை மழிக்க விரும்பினால் அவர்கள் மழித்துக் கொள்ளலாம்.
ஹஜ்ஜை முடித்த பின் அவர்கள் தலையை மழிப்பது வலியுறுத்தப்படவில்லை. முடியைக் குறைத்துக் கொள்வதே போதுமானது.
ஆனால் ஒரு பெண் ஹஜ்ஜை முடித்து தலையை மழித்தால் அதைத் தடுக்கும் வகையில் இந்த ஹதீஸின் வாசகம் அமையவில்லை. அவசியம் இல்லை என்று தான் ஹதீஸின் வாசகம் உள்ளது. தலை முடியைக் குறைப்பதற்கும் ஹதீஸ்களில் எந்தத் தடையும் இல்லை. மேற்கண்ட ஹதீஸில் ஹஜ்ஜை முடித்து பெண்கள் தலை முடியைக் குறைப்பதே போதுமானது என்று கூறப்படுவதால் தலை முடியை பெண்கள் குறைக்கலாம் என்பது தெரிகிறது.
பெண்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ப முடியைக் குறைத்துக் கொள்ளவோ மொட்டை அடித்துக் கொள்ளவோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
நக பாலீஷ், மருதானி, லிப்ஸ்டிக் கூடுமா?
அலங்காரப் பொருட்கள் மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை.
ஆனால் அலங்காரத்தை மஹ்ரம் அல்லாதவர்கள் முன்னால் வெளிப்படுத்தக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டு மென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
திருக்குர்ஆன் 24:31
மருதானி, நகப்பாலிஷ் ஆகியவைகளை மேற்கண்டவர்கள் முன்னால் மட்டும் காட்டலாம். வெளியே செல்லும் அவசியம் ஏற்பட்டால் கை உரைகள் போட்டுக் கொண்டு அந்த அலங்காரத்தை மறைக்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போட்டு இருக்கும் போது வெளியெ செல்ல நேர்ந்தால் அதை அழித்து விட்டுச் செல்ல வேண்டும். அல்லது மாஸ்க் மூலம் மறைத்துக் கொள்ளலாம்.
அன்னிய ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவது அல்லாஹ்வின் கட்டளையை அப்பட்டமாக மீறுவதாகும்.
நகப் பாலிஷில் மற்றொரு விஷயமும் உள்ளது.
உளூ செய்யும் போது கழுவப்பட வேண்டிய உறுப்புக்கள் முழுவதிலும் அவசியம் தண்ணீர் பட வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.
இன்றைக்கு விற்கப்படும் நகப்பூச்சுக்கள் தண்ணீர் ஊடுருவுவதை தடுக்கக் கூடியவையாக உள்ளது. இவற்றைப் பூசிக்கொண்டு உளூச் செய்யும் போது நகங்களின் மீது தண்ணீர் படுவது தடுக்கப்படுகிறது. கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நகங்களில் தண்ணீர் படுவதை தடுக்கும்.
எனவே நகப்பாலிஷை வீட்டுக்குள்ளும் போடக் கூடாது. வெளியிலும் போடக் கூடாது.
தண்ணீர் ஊடுறுவுவதை தடுக்காத சாயத்தை நகங்களுக்கு தடவிக் கொண்டால் அதில் உளூவுக்கும், குளிப்புக்கும் எந்தத் தடையும் ஏற்படாது.
தண்ணீர் ஊடுருவதை தடுக்காத வகையில் நகப்பூச்சு கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நறுமனம் பூசலாமா? பூ வைக்கலாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கஸ்தூரி, நறுமனப் புகை, அம்பர் உள்ளிட்ட பல நறுமனப் பொருட்கள் இருந்துள்ளன. அவற்றை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தி வந்தனர். வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்தியுள்ளனர்.
பெண்கள் நறுமனம் பூசிக் கொண்டு வெளியே செல்ல சில நிபந்தனைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதித்துள்ளனர்.
நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.
தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு.
பிறரைத் தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு.
முதல் வகையான நறுமணத்தை அருகில் நெருங்கி வருவோர் மட்டுமே உணர முடியும்.
இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.
பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப் பொருட்கள் இருந்துள்ளன.
صحيح مسلم – أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَسِوَاكٌ، وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قَدَرَ عَلَيْهِ. إِلَّا أَنَّ بُكَيْرًا لَمْ يَذْكُرْ عَبْدَ الرَّحْمَنِ، وَقَالَ: فِي الطِّيبِ: وَلَوْ مِنْ طِيبِ الْمَرْأَةِ
வெள்ளிக்கிழமை குளிப்பதும், பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் முஸ்லிம்
ஆண்களின் நறுமணமும், பெண்களின் நறுமணமும் அன்று தனித்தனியாக இருந்துள்ளன என்பதையும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
سنن الترمذي – عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كُلُّ عَيْنٍ زَانِيَةٌ، وَالمَرْأَةُ إِذَا اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِالمَجْلِسِ فَهِيَ كَذَا وَكَذَا
ஆண்கள் சபைக்குச் சென்று அவர்கள் அப்பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதால் அவள் இப்படிப்பட்டவள் எனக் கூறியுள்ளனர்.
நூல் : திர்மிதி
மற்றொரு ஹதீஸில்
سنن النسائي – قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ
தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் நடத்தை கெட்டவள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.
நூல் : நஸாயீ
அன்னிய ஆண்களைக் கவரும் நோக்கத்தில் நறுமணம் பூசிச் செல்வதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதையும் அவ்வாறு இல்லாமல் நறுமணம் பூசிக் கொண்டு செல்ல தடை இல்லை என்பதையும் இதில் இருந்து ஊகம் செய்யலாம்.
இன்னும் சொல்லப் போனால் தெளிவாக அனுமதிக்கும் ஹதீஸ்களும் உள்ளன.
صحيح مسلم – أَنَّ زَيْنَبَ الثَّقَفِيَّةَ، كَانَتْ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ فَلَا تَطَيَّبْ تِلْكَ اللَّيْلَةَ
உங்களில் ஒருத்தி இஷாவுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல்: முஸ்லிம்
மேலும் இந்த அறிவிப்பை அபூஹுரைரா அவர்களின் அறிவிப்பும் உறுதி செய்கின்றது. அது வருமாறு:
صحيح مسلم – قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ
எந்தப் பெண்ணாவது நறு மணப் புகை பூசிக் கொண்டால் அவள் நம்மோடு இஷா தொழுகைக்கு வர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம்
எனவே இஷா தொழுகைக்குப் போகும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது.
இது இஷாத் தொழுகைக்குச் செல்வதைக் குறித்து சொல்லப்பட்டாலும் இரவு நேரத்தில் வெளியே செல்வதையும் குறிக்கும்.
நறுமணம் பூசிக் கொண்டு பகலில் வெளியே செல்ல அனுமதி அளித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்குத் தடை செய்கிறார்கள் என்றால் இரவு என்பதற்காகத் தான் இருக்க முடியும்.
மற்ற நேரங்களில் பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலான நறுமணமாக இல்லாமல் சாதாரண நறுமணம் பூசி வெளியே செல்ல அனுமதி உண்டு என்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
கொண்டை சடை போடுதல்
தலைமுடியை சடை பிண்ணுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு.
صحيح البخاري – 1260 – حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّهُنَّ جَعَلْنَ رَأْسَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثَلاَثَةَ قُرُونٍ نَقَضْنَهُ، ثُمَّ غَسَلْنَهُ، ثُمَّ جَعَلْنَهُ ثَلاَثَةَ قُرُونٍ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் இறந்த போது அவருக்கு மூன்று சடைகள் போட்டோம் என்று உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 1260
صحيح مسلم – عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي فَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ؟ قَالَ: لَا. إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ.
கடமையான குளிப்பின் போது எனது சடைகளை அவிழ்க்க வேண்டுமா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். வேண்டியதில்லை; உன் தலை மீது மூன்று தடவை ஊற்றிக் கொள்வது உனக்குப் போதும். பின்னர் உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள். நீ தூய்மையவாய் என்று அவர்கள் கூறினார்கள் என நபிகளின் மனைவி உம்மு சலமா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : முஸ்லிம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி நபிகள் முன்னிலையில் சடை போட்டு இருந்துள்ளதால் சடை போடுவது அனுமதிக்கப்பட்டது தான்.
கொண்டை போட்டுக் கொள்வதில் ஒரு வகையான கொண்டைக்கு மட்டுமே தடை உள்ளது.
صحيح مسلم – عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிக்கும் கூட்டத்தினர் ஆவார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) ஆடை அணிந்தும் நிர்வாணமாக (பிற ஆண்களை) ஈர்த்து (பிறரால் ஈர்க்கப்பட்டும் நடக்கும் பெண்களாவர். அவர்களின் தலைகள் ஒட்டகங்களின் திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்
திமில்கள் செங்குத்தாக வானை நோக்கி இருக்கும். அது போல் செங்குத்தாகக் கொண்டை போடுவதைத் தான் இது குறிக்கிறது. மற்ற வகையான கொண்டை போடுவதற்கு எந்த தடையும் இல்லை.
ஒட்டுமுடி வைக்கலாமா?
صحيح البخاري – 5934 – عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ جَارِيَةً مِنَ الأَنْصَارِ تَزَوَّجَتْ، وَأَنَّهَا مَرِضَتْ فَتَمَعَّطَ شَعَرُهَا، فَأَرَادُوا أَنْ يَصِلُوهَا، فَسَأَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ
அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள், “ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 5934
ஆண்களும், பெண்களும் தலைக்கு டை (சாயம்) அடிக்கலாமா?
தலைமுடி நரைத்தவர்கள் தலைக்குச் சாயம் பூசும் நடைமுறை நமது சமுதாயத்தில் இருக்கின்றது. தலைமுடி நரைக்காவிட்டாலும் அழகிற்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கமும் சிலரிடம் இருக்கின்றது.
எனவே யாருக்கேனும் வெள்ளை நிறத்தில் முடி இருந்தால் அவர் அதன் நிறத்தை மாற்றுவது அவசியம்.
صحيح البخاري – 3462 – إِنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ اليَهُودَ، وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ، فَخَالِفُوهُمْ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தாடிகளுக்கும் தலை முடிகளுக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 3462
தலைமுடி நரைக்காமல் இருப்பவர்கள் அலங்காரத்துக்காக தலைக்குச் சாயம் பூசுகின்றனர். இவ்வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே நபிமொழிகளில் இதைப் பற்றி பேசப்படவில்லை.
ஆனால் இது தற்காலத்தில் அலங்காரமாக நவீனவாதிகளிடம் கருதப்படுகிறது. இதை வணக்கம் என்ற அடிப்படையிலோ, மதச் சடங்காகவோ இவர்கள் செய்யவில்லை.
வணக்கமாகவோ, மதச் சடங்காகவோ ஒருவர் ஒரு காரியத்தைச் செய்தால் அதற்குத் தான் மார்க்கத்தில் ஆதாரம் தேவை. ஆடை, அலங்காரம், காலாச்சாரம் போன்ற விஷயங்களில் மார்க்கத்திற்கு மாற்றமான அம்சம் இருந்தால் அதை நாம் தவிர்க்க வேண்டும். மார்க்கத்திற்கு முரணான அம்சம் இவற்றில் இல்லாவிட்டால் இவற்றைச் செய்தால் குற்றமில்லை.
நரைக்காத முடிக்குச் சாயம் பூசுவது அலங்காரம் என்ற வட்டத்துக்குள் வருவதால் இதற்கு மார்க்கத்தில் தடை இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இச்செயல் மார்க்கத்திற்கு முரண்படவில்லை. எனவே நரைக்காத தலைமுடிக்கு டை அடிப்பது தவறல்ல.
கறுப்புச் சாயம் பூசக்கூடாது என்ற கருத்தில் இரு ஹதீஸ்கள் உள்ளன.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ رواه مسلم
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸ் முஸ்தக்ரஜ் அபீ அவானா, ஹாகிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இதற்கு மாற்றமான ஹதீஸும் வந்துள்ளது.
صحيح البخاري – 3920 – حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ فَكَانَ أَسَنَّ أَصْحَابِهِ أَبُو بَكْرٍ، فَغَلَفَهَا بِالحِنَّاءِ وَالكَتَمِ حَتَّى قَنَأَ لَوْنُهَا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவை வந்தடைந்தார்கள். அபூபக்ர் அவர்கள் அதிக வயதுடையவராக இருந்தார்கள். எனவே அவர்கள் மருதானி மற்றும் கத்தம் ஆகியவைகளைக் கொண்டு தலைமுடிக்கு சாயம் ஏற்றி இருந்தார்கள்.
நூல் : புகாரி 3920
கதம் என்ற இலையை எழுதுவதற்கான மை தயாரிக்க பயன்படுத்துவார்கள். இந்த இலை கறுப்பு நிறம் கொடுக்கக் கூடியதாகும். இத்துடன் மருதானியையும் சேர்த்து அபூபக்ர் (ரலி) சாயம் ஏற்றினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சில நாட்கள் ஒன்றாகப் பயணித்து வரும் போது கறுப்புச் சாயம் ஏற்றியிருந்தார்கள் என்றால் நபிகளின் அங்கீகாரம் உள்ளது என்று தெரிகிறது.
கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கருப்பு சாயம் அடிக்கலாம் என்றும் இரு முரண்பட்ட ஹதீஸ்கள் உள்ளதால் கறுப்புக்கு தடை என்பது வலுவிழந்து விடுகிறது.
முரண்பட்ட இரு செய்திகள் வந்தால் இரண்டையும் விட்டு விட வேண்டும் என்ற பொதுவான விதியின் படி இரண்டையும் நிறுத்தி வைக்கலாம்.
அப்படியானால் கறுப்புக்கு தடையும் இல்லை. அனுமதியும் இல்லை என்று ஆகும்.
ஆனாலும் தடை இல்லாததால் சாயம் அடிக்கலாம் என்ற பொது அனுமதிக்குள் கறுப்புச் சாயமும் வந்து விடும்.
கறுப்புச் சாயத்தை தடை செய்து இன்னொரு ஹதீஸும் உள்ளது.
عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ رواه النسائي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
புறாவின் கழுத்தில் உள்ள (தூய கருப்பு நிறத்)தைப் போன்ற கருப்புச் சாயத்தைப் பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றும். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : நஸாயீ
இந்த ஹதீஸும் அறிவிப்பாளர்கள் சரியாக உள்ளனர். ஆயினும் இதில் கருத்துப் பிழை உள்ளது.
கடைசி காலத்தில் இப்படி ஒரு கூட்டம் தோன்றும் என்று இதில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் நபிகள் வாழும் காலத்திலேயே அபூபக்ர் அவர்கள் கறுப்பு சாயம் பூசி இருக்கும் போது கடைசி காலத்தில் தோன்றுவார்கள் என்று நபிகள் எப்படி சொல்லி இருப்பார்கள்?
மேலும் ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி), உஸ்மான் (ரலி), அப்துல்லாஹ் பின் ஜ அபர் (ரலி), உக்பா பின் ஆமிர் (ரலி), முகீரா பின் ஷுஃபா (ரலி) ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி), அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் கறுப்புச் சாயம் பூசுபவர்களாக இருந்துள்ளனர்.
இவர்கள் கடைசி காலத்தில் தோன்றியவர்களா? நபிகள் காலம் முதல் வழக்கத்தில் உள்ள ஒன்றை கடைசிக் காலத்தில் தோன்றுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்வார்கள்?
மேலும் புறாவின் வயிற்றில் உள்ள கருப்பு என்பதும் தெளிவற்றதாக உள்ளது. புறாக்களில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. எந்தப் புறா வகையின் வயிற்றுப் பகுதி என்று அறிய முடியாது.
இதன் காரணமாக இது நபிகளின் கூற்றாக இருக்க முடியாது என்பதால் எல்லா வண்ணச் சாயமும் தலைமுடிக்கும் தாடிக்கும் பூசலாமென்பதே சரியான கருத்தாகும்.
அழகுக்காக உறுப்புக்களில் மாற்றம் செய்யக் கூடாது
பெண்கள் அழகுக்காக அலங்காரம் செய்வதும் ஆபரணங்கள் அணிவதும் அனுமதிக்கப்பட்டது என்றாலும் உடல் உறுப்புக்களில் அமைப்பில் மாற்றம் செய்யக் கூடாது.
மூக்கு பெரிதாக உள்ளது என்று கருதி அறுவை சிகிச்சை மூலம் சிறிதாக ஆக்குதல், உடல் உறுப்புக்களை பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்கும் அறுவை சிகிச்சைகள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அழகுக்காக பற்களைச் சிறிதாக்கும் வழக்கம் இருந்தது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்து தடை செய்தார்கள்.
இன்றைய நவீன காலத்தில் பெண்கள் அழகிற்காக பற்களை செதுக்கிக்கொள்கிறார்கள். அழகு நிலையங்களுக்குச் சென்று புருவத்தை மளித்து விட்டு விரும்பி வடிவில் செயற்கையாக புருவங்களை வைத்துக்கொள்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களின் பெயரை உடம்பில் பச்சை குத்திக்கொள்கிறார்கள். இதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
صحيح البخاري – 5931 – ، قَالَ عَبْدُ اللَّهِ: لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 5931
பல்லைத் தேய்த்து சிறிதாக்குவதைத் தடுப்பதுடன் பொதுவாக அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்றும் இதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆயினும் ஊனம் அல்லது குறைபாடு இருந்தால் அதைச் சரி செய்வது இதில் அடங்காது.
ஒருவருக்கு ஆறு விரல்கள் இருந்தால் அது குறைபாடு ஆகும். அதைச் சரி செய்து கொள்ளலாம்.
மூக்கில் ஒரு பகுதி வெட்டப்பட்டது போல் பங்கரையாக இருந்தால் அதை சிகிச்சை மூலம் சீர்படுத்தலாம்.
பிறக்கும் போதே ஒரு கை இல்லா விட்டால் அந்த இடத்தில் செயற்கையாக கை பொருத்தலாம். அல்லது கை வெட்டப்பட்டால் செயற்கை கை வைக்கலாம்.
இவை எல்லாம் அழகுக்காக செய்பவை அல்ல. அவசியத்துக்காக செய்பவையாகும்.
عَنْ جَدِّهِ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ أَنَّهُ أُصِيبَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فِي الْجَاهِلِيَّةِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَّخِذَ أَنْفًا مِنْ ذَهَبٍ رواه النسائي
அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி) கூறுகிறார்கள் :
அறியாமைக் காலத்தில் குலாப் என்ற நாளில் நடந்த சண்டையின் போது எனது மூக்கில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே நான் வெள்ளியால் ஒரு (செயற்கை) மூக்கைப் பயன்படுத்தி வந்தேன். அதில் துர்வாடை கிளம்பியதால் தங்கத்தால் ஆன மூக்கைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
நூல் : நஸாயீ
இது போன்ற மருத்துவ காரணங்களுக்காக மாற்றம் செய்வது அனுமதிக்கப்பட்டதாகும்.
பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது
ஆண்கள் முன்னால் முகத்தை மறைக்க வேண்டும் என்று சில பெண்களும் மார்க்க அறிஞர்கள் சிலரும் கருதுகின்றனர். ஆனால் முகத்தை மறைப்பது முற்றிலும் தவறாகும்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண் களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவ னாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 33:59
முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஜில்பாப் எனும் ஆடை இரண்டு அம்சங்களைக் கொண்டது என இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
ஜில்பாப் அணிவதால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பது முதல் விஷயம்.
அவர்கள் அறியப்பட வேண்டும் என்பது இரண்டாவது விஷயம்.
ஜில்பாப் எனும் மேலங்கி ஆண்களால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அவர்கள் யார் என்று அறியப்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது தான் மேற்கண்ட வசனத்தில் உள்ள இரு அம்சங்கள்.
பொதுவாகப் பெண்கள் தமது மார்பகங்களை எடுப்பாகக் காட்டுவது தான் ஆண்களால் அவர்கள் தொல்லைப்படுத்தப்படுவதற்கு முதல் காரணமாக உள்ளது. ஆடை அணிந்த பின்னர் மார்பகங்கள் மீது மேலங்கியைப் போட்டுக் கொண்டால் அந்த நிலை நீங்கி விடும்.
அதே நேரத்தில் முகத்தின் மீது மேலங்கியைப் போட்டுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு போட்டுக் கொண்டால் அவர்கள் அறியப்படுவது அவசியம் என்ற இரண்டாவது அம்சம் அடிபட்டு போய்விடும்.
யார் என்று அறியப்படும் வகையில் தான் பெண்களின் ஆடை இருக்க வேண்டும் என்று இவ்வசனம் தெளிவாகக் கட்டளையிடுகிறது. ஒருவர் யார் என்று அறியப்படுவதற்கு முகம் திறந்திருப்பது அவசியமாகும். முகத்தை வைத்துத் தான் இன்னார் என்று அறிய முடியும்.
24:31 வசனத்தில் தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் என்று சொல்லப்படுவதும் இதையே குறிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் முன்னிலையில் முகம் மறைக்காமல் பெண்கள் இருந்துள்ளனர். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்திய பின் கன்னம் கறுப்பாக இருந்த ஒரு பெண் கேள்வி கேட்டார் என்று முஸ்லிம் 1607 வது ஹதீஸ் கூறுகிறது. முகம் மறைக்கப்பட்டு இருந்தால் கன்னம் கறுப்பாக இருந்ததை அறிய முடியாது.
இருட்டோடு பஜ்ர் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரென்று அறிய முடியாது என்று ஆயிஷா (ரலி) கூறும் செய்தி புகாரி 578 ஹதீஸில் பதிவாகியுள்ளது. இருட்டாக இல்லாவிட்டால் அவர்கள் யாரென அறியப்பட்டு இருப்பார்கள். அதாவது முகம் மறைக்கப்படவில்லை.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் அவர்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். வாசலில் இருந்த பிலால் (ரலி) அவர்களிடம் கேள்வியைச் சொல்லி நபிகளின் பதிலைப் பெற்றுத்தருமாறு கேட்டார்கள். நான் யார் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறினார்கள். இது புகாரி 1466 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி கேட்பவர் இப்னு மஸ்வூத் மனைவி என்று பிலால் அறிந்து கொண்டுள்ளார். அதனால் தான் தன்னை யார் என்று சொல்ல வேண்டாம் என்று இப்னு மஸ்வூத் அவர்களின் மனைவி கூறுகிறார், முகம் மறைத்து இருந்தால் இதைச் சொல்லி இருப்பதில் அர்த்தம் இருக்காது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து உளூச் செய்வார்கள். (புகாரி 193)
முகத்தைத் திறக்காமல் உளூ செய்ய முடியாது.
ஒரு பெண் தன்னை நபிக்கு அன்பளிப்பாக வழங்க முன் வந்தார். நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் அவரை கூர்மையாகப் பார்த்தார்கள். புகாரி 5030. அந்தப் பெண்ணை நான் மண்ந்து கொள்கிறேன் என்று ஒருவர் முன் வருகிறார்.
அப்பெண்ணின் முகம் மறைக்கப்பட்டு இருந்தால் யார் என்று தெரியாத ஒருவரை திருமணம் செய்ய முன்வர மாட்டார்.
முகத்தை மறைத்து இருந்தால் ஏறெடுத்து கூர்மையாகப் பார்ப்பதில் அர்த்தம் இல்லை.
கப்ருக்கு அருகில் அழுது கொண்டிருந்த பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறை கூறினார்கள். பிரிதொரு காலத்தில் ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு இந்தப் பெண் தான் நபிகளால் அறிவுரை கூறப்பட்ட பெண் என்று அனஸ் (ரலி) கூறினார். புகாரி 7154
இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்தப் பெண்ணை அனஸ் ரலி பார்த்துள்ளார்கள். அதனால் தான் இந்தப் பெண் தான் அவர் என்று கூற முடிந்தது. முகம் மறைத்து இருந்தால் இந்தப் பெண் தான் அந்தப் பெண் என்று சொல்ல முடியுமா?
அடிமைப் பெண்கள் தவிர வேறு பெண்கள் இதன் பிறகு உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் (மனைவிமார்களாக உள்ளவர்களை விவாகரத்துச் செய்து விட்டு) அவர்களுக்குப் பகரமாக வேறு மனைவியரை மாற்றுவதும் கூடாது. அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்த போதும் சரியே. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 33:52
இவ்வசனத்தில் பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் இனி வேறு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகின்றான். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று சட்டம் இருந்திருந்தால் அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்த போதும் என்று கூறுவது பொருளற்றதாகி விடும்.
இதிலிருந்து நபியவர்களின் காலத்தில் பெண்களின் முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
صحيح مسلم – عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எதேச்சையாக (அந்நியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
நூல் : முஸ்லிம் 4363
பெண்கள் முகத்தை மறைப்பவர்களாக இருந்தால் அந்நியப் பெண்ணைப் பார்த்து பார்வையைத் திருப்பிக் கொள்ளுதலுக்கு தேவை இல்லை.
இந்தச் சான்றுகளில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டி இவர் தான் சொர்க்கவாசிகளில் ஒருவர் என்று இப்னு அப்பாஸ் சொன்னார்கள். இந்தப் பெண் தான் வலிப்பு நோயால் தனது ஆடை விலகுவதாக நபிகளிடம் முறையிட்டார். அவருக்கு சொர்க்கம் உண்டு என்று நபிகள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்.
புகாரி 5652
நபிகள் நாயகத்திடம் அந்தப் பெண் முறையிட்ட போதும் அவரை இப்னு அப்பாஸ் பார்த்துள்ளார். பிரிதொரு காலத்தில் அவரைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்கிறார். அப்படியானால் இரு சந்தர்ப்பங்களிலும் அந்தப் பெண் முகம் மறைக்காமல் தான் இருந்துள்ளார்.
உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர் களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 24:61
இவ்வசனம் பிறர் வீட்டில் உண்பது பற்றிய ஒழுங்குகளைப் பற்றிப் பேசுகிறது. ஒரு மனிதன் மற்றொரு குடும்பத்தாரோடு கலந்து உண்ணலாமா என்ற கேள்விக்கு இவ்வசனம் விடையளிக்கிறது.
ஒரு மனிதன் தனது பெற்றோர் வீட்டில் அவர்களுடன் உண்ணலாம். அது போல் சகோதரர்கள், சகோதரிகள், தந்தையின் உடன் பிறந்தவர்கள், தாயின் உடன் பிறந்தவர்கள் போன்ற உறவினர்கள் வீட்டில் ஆண்கள், பெண்கள் அனைவரும் சேர்ந்தும், தனியாகவும் உண்ணலாம்.
அது போல் நெருங்கிய நண்பர்களாக இருந்தால் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து உணவு உட்கொள்வது குற்றமில்லை.
அது போலவே நெருங்கிய உறவினராகவோ, உற்ற நண்பராகவோ இல்லாத குருடரையும், ஊனமுற்றோரையும், நோயுற்றவர்களையும் நம்முடன் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது தான் இவ்வசனம் கூறும் தெளிவான கருத்தாகும்.
அன்னிய ஆண்களும், பெண்களும் தனித்திருப்பதைத் தடை செய்திருக்கும் இஸ்லாம் நெருங்கிய உறவினர்கள் கூட்டாகச் சேர்ந்து உண்ணலாம்; அது குற்றமாகாது என்று இங்கே கூறுகிறது. முகம் திறந்திருந்தால் தான் வாயில் உணவைக் கொண்டு செல்ல முடியும்.
பெண்களின் முகம் கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டியதென்றால் படைத்த அல்லாஹ் இதனை அனுமதித்திருக்க மாட்டான்.
முகத்தை மறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.
தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்கக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
முஸ்லிமல்லாத பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு முகத்திரை போட்டு கண்டபடி சுற்றும் இளவட்டங்களில் சரிபாதிப் பேர் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.
முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்,
வேசித்தொழில் செய்யும் முஸ்லிமல்லாத கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வது,
சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது
இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும் போது எதில் கேடு இல்லையோ அதைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.
முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிக அதிகமாகும்.
பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?
முகம் கைகள் தவிர மற்ற பகுதிகளை அந்நிய ஆண்களை விட்டும் மறைக்க வேண்டும்.
அந்நிய ஆண்கள் என்றால் யார் என்பது வேறு ஆக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தமது கைகள், முகம், பாதங்கள் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். இது ஹிஜாப் பர்தா, புர்கா, துப்பட்டி, துப்பட்டா என்று பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது.
ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.
ஹிஜாப் என்பது உண்மையில் பெண்களைக் கவுரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
இஸ்லாம் எப்படி பெண்களின் ஆடைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோ அது போல் நமது நாட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும், மதங்களை ஏற்காதவர்களும் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தான் செய்கின்றனர். பெண் உரிமை பேசும் பெண்களும் கூட தம்மையும் அறியாமல் ஆடை விஷயத்தில் பெண்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.
ஆண்களை விட பெண்கள் அதிக அளவு மறைக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கொள்கையாக உள்ளது. அந்த அதிகம் எவ்வளவு என்பதில் தான் அவர்கள் இஸ்லாமுடன் முரண்படுகின்றனர். இதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி அரை நிக்கருடன் பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை.
மனைவி, தாய், மற்றும் சகோதரிகளைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் அரை நிக்கருடன் வீட்டிற்குள், குடும்பத்தினர் முன்னிலையில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லாவிட்டாலும் கடினமான வேலையின் போதும், கடுமையான கோடையின் போதும் இவ்வாறு இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் வீட்டுக்குள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றி, குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் இருப்பதில்லை. ஏன்? பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு இருக்க அனுமதிக்கப்படுவதில்லை.
ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்துள்ளனர் என்பதற்கு இந்தப் போக்கு சான்றாக அமைந்துள்ளது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதைத் தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் இஸ்லாமுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு ஆடை சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
இனி ஹிஜாப் என்பது எப்படி பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிப்பவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிப்பவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதிவிலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோநிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதைப் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும்.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்று சிலர் கேட்கலாம். இக்கேள்வி தவறாகும். இதனால் ஏற்படும் விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
ஆண்கள் பெண்களைப் பார்த்து ரசிப்பது போலவே, பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டுக் கிளர்ச்சியடையாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான – கிளர்ச்சியூட்டும் ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக, அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுவதை ஹிஜாபைக் குறை கூறுவோர் சிந்திப்பதில்லை.
நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து “இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்” என்று ஹிஜாபைக் குறை கூறுவோர் கூப்பாடு போடுகின்றனர்.
ஆனால் இந்த நிலைக்கு ஆண்களில் சிலரைத் தூண்டும் பெண்களின் உடையமைப்பும் முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்?
பெண்ணுரிமை இயக்கங்கள் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும், போஸ்டர் களைக் கிழித்தல், சாயம் பூசி மறைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள்மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?
பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே சுதந்திரத்துடன் அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது எனும் போது, இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும், கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி இவ்விடத்தில் எழலாம்.
நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.
ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்ற எண்ணம் தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.
ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவளை யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே அடையாளம் காண மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழிசெய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
பெண்கள் மட்டுமல்ல. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.
இதனால் தான் இஸ்லாம் முகத்தை மறைத்துக் கொள்ளுமாறு பெண்களுக்குக் கட்டளையிடவில்லை.
கொடுக்கல், வாங்கல் இன்னபிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் திறந்திருப்பது மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். பாதங்களை மறைக்க வேண்டும் எனவும் இஸ்லாம் வலியுறுத்தவில்லை.
இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் உணர்வு களைச் சீண்டி விளையாடுபவை; அவர்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடுபவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை.
முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடை எனக் கூறுவதும் ஏற்கத்தக்க வாதமன்று.
இந்த நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவி களை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.
பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.
ஆண்களை விடக் குறைவான அளவு மறைப்பது தான் பெண்களுக்குச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
யாரையும் பாதிக்காத உடல் அமைப்பைப் பெற்றுள்ள ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள்.
குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாற்றமாக நடப்பது தான் வியப்பாகவுள்ளது.
சமீபத்தில் ஆண்களின் ஆண்மையைப் பாதிப்பதில் பெண்களின் அரைகுறை ஆடை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவதால் அதைப் பார்த்து ஆண்கள் ரசிக்கும் போது அவர்கள் கிளர்ச்சி அடைகிறார்கள். இதனால் அவர்களின் உறுப்பில் அடிக்கடி ஏற்படும் கசிவால் அவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.
பெண்களுக்குப் போதுமான இல்லற சுகம் கிடைக்காத நிலை இதனால் ஏற்படுகிறது. இதுவும் ஹிஜாபைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறத்திலும், வடிவத்திலும் இருக்க வேண்டியதில்லை. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், கைகள் தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலைபெறவும் ஹிஜாப் இஸ்லாமில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மணமுடிக்கத் தடை செய்யப்பட்டவர்கள் முன்னால் ஹிஜாப் அவசியம் இல்லை.
முகம், கைகள் தவிர மற்ற பகுதிகளை அன்னிய ஆண் கள் முன்னால் காட்டக் கூடாது. அன்னிய ஆண்கள் என்பதன் பொருள் திருமணம் செய்ய தடுக்கப்படாதவர்கள் ஆவர்.
இந்தப் பட்டியலை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்கியுள்ளான்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரி யின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்). இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப் பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்ப வனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 24:23
ஆண்கள் மணக்கக் கூடாத பெண்களைப் பற்றி இவ்வசனம் கூறுகிறது. இதில் இருந்து பெண்கள் மணக்கக் கூடாத ஆண்களை நாம் அறியலாம்.
பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
தந்தை
மகன்
சகோதரன்
தாயின் சகோதரன்
தந்தையின் சகோதரன்
சகோதரனின் மகன்
சகோதரியின் மகன்
பாலூட்டிய அன்னையின் கணவன்
பாலூட்டிய அன்னையின் மகன்
கணவனின் தந்தை
கணவனின் புதல்வன்
புதல்வியின் கணவன்
சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது
இவர்கள் தான் பெண்கள் மணக்கக் கூடாத ஆண்களாவர். இவர்கள் மஹ்ரம் எனக் குறிப்பிபிடப்படுகின்றனர்.
மேற்கண்ட உறவினர்கள் முன்னால் வீட்டுக்குள் அணியும் ஆடையுடன் இருக்கலாம்.
மேலும் பெண்கள் அலங்காரம் செய்து இருந்தால் அந்த அலங்காரத்தை கீழ்க்கண்டவர்கள் முன்னால் தவிர மற்றவர்களிடம் காட்டக் கூடாது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
திருக்குர்ஆன் 24:31
سنن أبي داود – 4106 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو جُمَيْعٍ سَالِمُ بْنُ دِينَارٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى فَاطِمَةَ بِعَبْدٍ كَانَ قَدْ وَهَبَهُ لَهَا، قَالَ: وَعَلَى فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ثَوْبٌ، إِذَا قَنَّعَتْ بِهِ رَأْسَهَا لَمْ يَبْلُغْ رِجْلَيْهَا، وَإِذَا غَطَّتْ بِهِ رِجْلَيْهَا لَمْ يَبْلُغْ رَأْسَهَا، فَلَمَّا رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَلْقَى قَالَ: إِنَّهُ لَيْسَ عَلَيْكِ بَأْسٌ، إِنَّمَا هُوَ أَبُوكِ وَغُلَامُكِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையை அன்பளிப்புச் செய்திருந்தார்கள். அந்த அடிமையுடன் அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தாம் அணிந்திருந்த ஒரு ஆடையால் தமது தலையை மூடிய போது அவர்களின் கால்களுக்கு அது போதவில்லை. கால்களை அவர்கள் மறைத்த போது தலைக்குப் போதவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ட போது உன் மீது எந்தக் குற்றமும் ஏற்படாது. ஏனென்றால் (உனக்கு முன்னால்) உனது தந்தையும், உனது அடிமையும் (மட்டுமே) உள்ளனர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்,
நூல் : அபூதாவூத்
தந்தை, சகோதரன் போன்ற உறவினர் முன்னால் பெண்கள் தலையை மறைக்க வேண்டியதில்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
தலையை மறைக்க வேண்டுமா?
அன்னிய ஆடவர் முன்னால் முகம் கைகள் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்பதில் தலையை மறைப்பதும் அடங்கும்.
வீட்டில் தனித்திருக்கும் போதும், பெண்களுடன் மட்டும் இருக்கும் போதும், மஹ்ரமான உறவினருடன் இருக்கும் போதும் தலையை மறைக்க வேண்டியதில்லை.
சாப்பிடும் போதும், குர்ஆன் ஓதும் போதும், பாங்கைக் கேட்கும் போதும் தலையை மறைப்பது அவசியம் என்ற நம்பிக்கை அதிமான மக்களிடம் உள்ளது.
தொழும் போதும், அன்னிய ஆடவர் முன்னிலையிலும் தவிர மற்ற எந்தச் சந்தர்ப்பதிலும் தலையை மறைப்பது கட்டாயமில்லை. அவர்களாக விரும்பி மறைத்துக் கொண்டால் குற்றமில்லை.
سنن أبي داود – عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ، قَالَ: لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மாதவிடாய் (ஏற்படும் பருமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : அபூதாவூத்
தொழுகைக்கு தலையை மறைப்பது அவசியம் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
பெண்கள் தனியாகப் பயணம் செய்தல்
கணவனோ, மஹ்ரமான உறவுகளோ இல்லாமல் பெண்கள் தனியாகப் பயணம் செய்யலாமா என்பது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
எவ்வளவு நாள் பயணத் தொலைவுக்கு பெண்கள் தனியாகப் பயணிக்கலாம் என்பது குறித்து ஹதீஸ்களில் நான்கு முரண்பட்ட அறிவிப்புகள் உள்ளன.
صحيح البخاري – 1086 عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تُسَافِرِ المَرْأَةُ ثَلاَثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ
மஹ்ரம் துணை இல்லாமல் மூன்று நாட்கள் ஒரு பெண் பயணிக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1086
صحيح البخاري – 1864 أَنْ لاَ تُسَافِرَ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمَيْنِ لَيْسَ مَعَهَا زَوْجُهَا، أَوْ ذُو مَحْرَمٍ
இரண்டு நாள் பயணத் தொலைவுக்கு பெண்கள் பயணிக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் புகாரி 1864
صحيح البخاري – 1088 قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ لَيْسَ مَعَهَا حُرْمَةٌ
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகின்ற பெண் மஹ்ரம் இல்லாமல் ஒரு நாள் பயணத் தொலைவுக்கு பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் : புகாரி 1088
صحيح البخاري – 1862 قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تُسَافِرِ المَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ
மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1862
இந்த நான்கு ஹதீஸ்களும் முரண்பட்ட நான்கு அளவுகளைக் கூறுகின்றன.
மூன்று நாள் பயணிக்கக் கூடாது
இரண்டு நாள் பயணிக்கக் கூடாது
ஒரு நாள் பயணிக்கக் கூடாது
அறவே பயணிக்கக் கூடாது
இப்படி முரண்பட்ட நான்கு கருத்துக்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிச்சயம் சொல்லி இருக்க மாட்டார்கள்.
இது குறித்து நபிகள் கூறியது ஏதோ ஒன்றாகத் தான் இருக்க முடியும். அதைக் கண்டறிய முடியவில்லை என்றால் இந்த நான்கு கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வேறு ஆதாரங்களைத் தான் தேட வேண்டும்.
صحيح البخاري – 3595 قَالَ فَإِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ، لَتَرَيَنَّ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنَ الحِيرَةِ، حَتَّى تَطُوفَ بِالكَعْبَةِ لاَ تَخَافُ أَحَدًا إِلَّا اللَّهَ، قُلْتُ فِيمَا بَيْنِي وَبَيْنَ نَفْسِي فَأَيْنَ دُعَّارُ طَيِّئٍ الَّذِينَ قَدْ سَعَّرُوا البِلاَدَ … قَالَ عَدِيٌّ: فَرَأَيْتُ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنَ الحِيرَةِ حَتَّى تَطُوفَ بِالكَعْبَةِ لاَ تَخَافُ إِلَّا اللَّهَ
நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று சொன்னார்கள். நான் என் மனத்திற்குள், அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்? என்று கேட்டுக் கொண்டேன். மேலும், ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்:அதீ பின் ஹாத்திம் (ரலி),
நூல் : புகாரி 3595 (சுருக்கம்)
பல நூறு மைல்கள் தொலைவுக்கு ஒரு பெண் தன்னந்தனியாக பயணிப்பாள் என்றும் ஹஜ் செய்வதற்காக பயணிப்பாள் என்றும் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சமாட்டாள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்.
கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண், அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.
பாதுகாப்பு இருந்தால் பெண்கள் எவ்வளவு தொலைவுக்கும் பயணம் செய்யலாம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.
எவ்வளவு நாள் பயணம்? எவ்வளவு தொலைவுக்காக பயணம்? என்பதற்கு முக்கியத்துவம் இல்லை.
உயிருக்கும் உடமைக்கும் கற்புக்கும் பாதுகாப்பு இருந்தால் பெண்கள் தனியாக பயணிக்கலாம்.
பாதுகாப்பற்ற சூழல் இருந்தால் அடுத்த தெருவுக்குக் கூட தனியாகப் போகக் கூடாது.
பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து உண்ணுதல் ஆண்களுக்கு பரிமாறுதல்
صحيح البخاري – 5182 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ: لَمَّا عَرَّسَ أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ دَعَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ، فَمَا صَنَعَ لَهُمْ طَعَامًا وَلاَ قَرَّبَهُ إِلَيْهِمْ إِلَّا امْرَأَتُهُ أُمُّ أُسَيْدٍ، بَلَّتْ تَمَرَاتٍ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ مِنَ اللَّيْلِ فَلَمَّا فَرَغَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ لَهُ فَسَقَتْهُ، تُتْحِفُهُ بِذَلِكَ
அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் (தமது) மணவிருந்தின் போது நபிகள் நாயகம் (ஸல்)அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத் (ரலி) அவர்களுடைய துணைவியார் (மணப் பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) அவர்கள் (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங் கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக் காக உம்மு உசைத் (ரலி) அவர்கள் அந்தப் பேரீச்சங் கனி களை(த் தமது கரத்தால்) பிழிந்து அன்பüப்பாக ஊட்டினார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஃத் (ரலி) ,
நூல் : புகாரி 5182
விருந்தினருக்கு மணப்பெண் உணவு பரிமாறியுள்ளதால் பெண்கள் ஆண்களுக்கு உணவு பரிமாறலாம்.
صحيح البخاري – 3798 حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ: مَا مَعَنَا إِلَّا المَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: أَنَا، فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ، فَقَالَ: أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي، فَقَالَ: هَيِّئِي طَعَامَكِ، وَأَصْبِحِي سِرَاجَكِ، وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً، فَهَيَّأَتْ طَعَامَهَا، وَأَصْبَحَتْ سِرَاجَهَا، وَنَوَّمَتْ صِبْيَانَهَا، ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ، فَجَعَلاَ يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلاَنِ، فَبَاتَا طَاوِيَيْنِ، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ، أَوْ عَجِبَ، مِنْ فَعَالِكُمَا فَأَنْزَلَ اللَّهُ: {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ المُفْلِحُونَ} الحشر: 9
3798 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?… அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (விருந்தளிக்கிறேன்) என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு என்று சொன்னார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கை சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்
…அல்லது வியப்படைந்தான் என்று சொன்னார்கள். அப் போது அல்லாஹ், தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் என்னும் (59:9ம்) வசனத்தை அருளினான்.
நூல் : புகாரி 3798
விருந்தாளிக்கு பரிமாறியதுடன் விருந்தாளியுடன் சேர்ந்து உண்ணும் ஏற்பாடு செய்த பெண்ணையும் அவரது கணவரையும் அல்லாஹ் பாராட்டி வசனத்தை அருளியுள்ளான்.
உங்கள் வீடுகளிலோ, தந்தையர் வீடுகளிலோ, அன்னையர் வீடுகளிலோ, சகோதரர்கள் வீடுகளிலோ, சகோதரி களின் வீடுகளிலோ, தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 24:61
ஆண்களும் பெண்களும் சேர்ந்தோ தனியாகவோ உண்ணலாம் என்று இவ்வசனமும் அனுமதிக்கிறது.
பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா
பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு நிலவும் நேரத்தில் மட்டும் திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்ட இரத்தபந்த உறவினர் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.
இன்றைய காலத்தில் மக்களுடன் சேர்ந்து பயணம் செய்வதில் பாதுகாப்பு இருப்பதால் பெண்கள் மஹ்ரமான துணையில்லாமல் பயணம் செய்யலாம்.
ஒரு பெண் மட்டும் தனியாக ஆட்டோவில் செல்வது பாதுகாப்பற்ற நிலையாகும். ஆட்டோ ஓட்டுபவன் அந்தப் பெண்ணை கடத்திக் கொண்டு போக நினைத்தால் சுலபமாகச் செய்துவிட முடியும்.
மேலும் பெண் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்நிய ஆணுடன் தனித்திருப்பது கூடாது. பயணம் செய்தாலும் பயணம் செய்யாமல் ஊரில் இருந்தாலும் அந்நிய ஆணுடன் தனித்திருப்பது கூடாது.
ஒரு பெண் தனியாக ஆட்டோவில் பயணம் செய்தால் ஆணும், பெண்ணும் தனித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.
مسند أحمد ط – لَا يَخْلُوَنَّ أَحَدُكُمْ بِامْرَأَةٍ، فَإِنَّ الشَّيْطَانَ ثَالِثُهُمَا
உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத்
இந்த நிலை ஏற்படாதவாறு பல பெண்களாக சேர்ந்து ஆட்டோவில் செல்லலாம். அல்லது மஹ்ரமான ஆண் துனையுடன் செல்லலாம். தனியாக ஒரு பெண் மட்டும் ஆண் ஓட்டுனர் இயக்கும் ஆட்டோவில் செல்லக் கூடாது.
ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது
மேற்கண்ட (24:31) வசனத்தில் சொல்லப்பட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடத்தில் பெண்கள் பர்தாவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் கணவனுடைய அண்ணன் தம்பிமார்களின் முன்பு சர்வசாதாரணமாக பர்தா இல்லாமல் வந்து செல்கிறார்கள். அவர்களுடன் தனித்திருப்பதை பெரிய குற்றமாக இவர்கள் கருதுவதில்லை. இது தவறாகும்.
صحيح البخاري – 5232 – عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ الحَمْوَ؟ قَالَ: الحَمْوُ المَوْتُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பது பின் ஆமிர் (ரலி),
நூல் : புகாரி 5232
صحيح البخاري
5233 – عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ
“ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!” என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 5233
இல்லற வாழ்க்கை குறித்த சட்டங்கள்
திருமணத்திற்கு பெண்ணுடைய சம்மதம்
தனக்குப் பிடித்த கணவனை தன் விருப்பப்படி தேர்வு செய்வதற்கு பெண்ணிற்கு முழுமையாக இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
صحيح البخاري – 5136 – أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: أَنْ تَسْكُتَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “விதவையை, அவளது உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி” என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அவளது மௌனமே சம்மதம் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 5136
صحيح البخاري – 5138 – عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ، أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهْيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ، فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهُ،
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போனேன். அத்திருமணத்தை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரியா (ரலி)
நூல் : புகாரி 5138
கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப் பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.
தனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.
இஸ்லாமிய வரம்பை மீறாமல் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் அவர்களின் அந்த உரிமையைப் பெற்றோர் பறிக்கக் கூடாது. அவளது விருப்பத்திற்கு மாற்றமாக அவளைக் கட்டாயப்படுத்தவும் கூடாது என்பதை இவ்வசனங்கள் (2:234, 4:19) தெளிவாகப் பறைசாற்றுகின்றன.
பெண்ணிடம் கண்டிப்பாகச் சம்மதம் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரீ 5136, 6968, 6970, 6971)
பெண்ணின் சம்மதமின்றி செய்து வைக்கப்பட்ட திருமணத்தை ரத்துச் செய்யவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (பார்க்க: புகாரீ 5139, 6945, 6969)
அதே நேரத்தில், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையினால் பெண்கள் ஏமாற்றப்படவோ, பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காக தந்தை, சகோதரன், ஜமாஅத் தலைவர் போன்ற பொறுப்பாளர்களிடம் பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்து, அவர்கள் மூலமாகவே திருமணம் செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.
அது போல், இஸ்லாமின் நெறிமுறைகளை மீறாத வகையில் பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால், அந்தப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்காமல் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது பெற்றோர் அல்லது அவளது பொறுப்பாளர்களின் கடமை ஆகும்.
ஆண்களுக்கு எப்படி மனைவியைத் தேர்வு செய்யும் உரிமை உள்ளதோ அது போல் பெண்களுக்கும் உரிமை உள்ளது.
இந்த ஆணை விரும்புகிறேன் என்று பொறுப்பாளரிடம் ஒரு பெண் சொன்னால் அவர் முஸ்லிமாகவும் இருந்தால் அவருக்கு திருமணம் செய்து வைப்பது பொறுப்பாளரின் கடமையாகும்.
பெண் விரும்பாத ஆணுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுக்கும் உரிமை பொறுப்பாளர்களுக்கு இல்லை.
கன்னிப் பெண்களுக்கும், ஏற்கனவே வாழ்ந்த பெண்களுக்கும் மண வாழ்வைத் தேர்வு செய்யும் உரிமை இருந்தாலும் கன்னிப் பெண்கள் தாமாகத் திருமணம் செய்யக் கூடாது.
பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் போன்ற பொறுப்பாளர்கள் முன் நின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப் படி சொர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:221
இதில் இணை கற்பிக்கும் பெண்களை மணக்காதீர்கள் என்று ஆண்களுக்கு சொல்கிறான். பெண்களைப் பற்றி பேசும்போது உங்கள் பெண்களை இணை கற்பித்தோருக்கு மணமுடித்துக் கொடுக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
பெண்களுக்கு ஆண்கள் தான் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.
மூஸா நபியின் மாமனார் எனது இரு புதல்விகளில் ஒருவரை உமக்கு மணமுடித்து தருகிறேன் என்று கூறியதாக 28:27 வசனம் கூறுகிறது.
ஆனால் விதவைகளாகவோ விவாகரத்து செய்யப்பட்டவர்களாகவோ இருந்தால் அவர்கள் தாமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். பொறுப்பாளர் அவசியம் இல்லை.
பொறுப்பாளர் மறுத்தால் சமுதாயத் தலைவர்கள் நடத்தி வைக்கலாம்.
صحيح البخاري – 5029 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ، فَقَالَتْ: إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا لِي فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا، قَالَ: أَعْطِهَا ثَوْبًا، قَالَ: لاَ أَجِدُ، قَالَ: أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ، فَاعْتَلَّ لَهُ، فَقَالَ: مَا مَعَكَ مِنَ القُرْآنِ؟ قَالَ: كَذَا وَكَذَا، قَالَ: فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ
5029 ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்! என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஏதேனும் ஆடையை அவளுக்கு (மஹ்ராக)க் கொடு! என்று சொன்னார்கள். அவர், என்னிடம் இல்லை என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன இருக்கிறது? என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5029
ஒரு பெண் தன்னை நபிகளிடம் அர்ப்பணித்துள்ளார். அதாவது என் விஷயமாக நீங்கள் என்ன முடிவும் எடுக்கலாம் என்பது இதன் கருத்து. உன் பொறுப்பாளர்களை அழைத்து வா என்று கூறாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொறுப்பாளராக முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்கள்.
ஒரு பெண் தனது மன வாழ்வு சம்மந்தமான முடிவை சமுதாயத் தலைவரிடம் ஒப்படைக்கலாம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப் படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்த மானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:232
அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள் என்ற வாசகத்தில் இருந்து அவர்களுக்கு பொறுப்பாளர் திருமணம் செய்து வைக்க வேண்டியதில்லை என்று அறியலாம்.
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:230
அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள் என்ற வாசகம் விவாகரத்து செய்யப்பட்டவளுக்கு பொறுப்பாளர் தேவை இல்லை என்ற கருத்தைத் தருகிறது.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:234
அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை இந்த வாசகத்தின் மூலம் கணவனை இழந்த பெண்கள் தம் விஷய மாக தாமே முடிவு எடுக்கலாம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
صحيح مسلم – أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا،
ஏற்கனவே வாழ்ந்தவள் தனது பொறுப்பாளரை விட தன் விஷயமாக அதிக உரிமை படைத்தவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல் : முஸ்லிம்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதல்
பெற்றோர்கள் முடிவு செய்யும் திருமணங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது நபிவழியாகும்.
سنن النسائي – 3235 – عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: خَطَبْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَظَرْتَ إِلَيْهَا؟ قُلْتُ: لَا، قَالَ: فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا
முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மனம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.
நூல்: நஸாயீ
ஆண் பெண்ணைப் பார்க்கும் போது பெண்ணும் ஆணைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
மஹரும் ஜீவனாம்சமும்
திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது. இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை. மாறாக திருமணத்திற்கு முன்பே பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
இன்றைய நடைமுறையில் உள்ள ஜீவனாம்சத்தை விட இஸ்லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது.
பெண்களுக்கு அவர்களின் மஹர் தொகையை மனமுவந்து வழங்கி விடுங்கள்!
திருக்குர்ஆன் 4:4
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.
ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது!
திருக்குர்ஆன் 4:20
மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்; அல்லது தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
(பார்க்க.. திருக்குர்ஆன் 2:237)
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.
கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.
வரதட்சணை கொடுக்கக் கூடாது
ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது.
இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும்.
இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான்.
ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.
திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காகச் சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின் றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண் தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.
பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.
அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.
பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.
வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.
வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.
மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரை தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். இந்தப் பாவத்திலும் வரதட்சணை கேட்போர் பங்காளிகளாகின்றனர்.
மணவாழ்வு கிடைக்காது என்பதால் கண்டவனுடன் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.
வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.
மானத்துடன் வாழ்ந்த ஒருவனை பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.
பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சனையை வாங்குவோர் இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காக தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.
பெண் வீட்டு திருமண விருந்து
திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.
பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.
மனைவியின் இல்லறக் கடமைகள்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மகனும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) ,
நூல் : புகாரி 5200
கணவனின் வீட்டுக்கும் பிள்ளைகளுக்கும் தானே பொறுப்பாளி என்பதையும் பொறுப்பில் குறை வைத்தால் அது குறித்து அல்லாஹ் விசாரிப்பான் என்பதையும் மனைவியர் கவனத்தில் வைக்க வேண்டும்.
கனவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் மனைவி அனுமதிக்கலாகாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 5195
வீட்டின் உரிமையாளன் கணவன் என்பதால் கணவனுக்குப் பிடிக்காதவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது.
பெண்ணின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர் இதில் விலக்கு பெறுகிறார்கள்.
தாய் தந்தையருடன் நல்லுறவைப் பேணுமாறு 2:83, 2:215, 4:36, 6:151, 17:23, 29:8, 31:14, 46:15 ஆகிய வசனங்களில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது ஆண் பெண் இரு பாலருக்குமான கடமை.
மனைவியின் பெற்றோர் என் வீட்டுக்கு வரக் கூடாது என்று சொல்ல கணவனுக்கு அதிகாரம் இல்லை. அப்படிச் சொன்னால் அதற்கு மனைவி கட்டுப்படும் அவசியம் இல்லை.
கணவனுக்காக அலங்கரித்தல்
سنن أبي داود – أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ؟ الْمَرْأَةُ الصَّالِحَةُ، إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ
ஒரு ஆண் சேமித்து வைக்கும் சொத்தில் சிறந்தது நல்ல பெண்ணாகும். கணவன் அவளைக் காணும் போது அவனுக்கு அவள் சந்தோஷத்தை ஏற்படுத்துவாள். கட்டளையிடும் போது அவனுக்குக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத போது பாதுகாப்பாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் 1417
கணவன் அழைக்கும் போது மறுக்கக்கூடாது
இல்லற சுகத்துக்காகத் தான் மனிதர்கள் தருமணம் செய்கிறார்கள். ஆணுக்கு அந்தத் தேவை ஏற்படும் போது மனைவிக்கு அப்போது விருப்பமில்லாவிட்டாலும் கணவனுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
ஒத்துழைக்க மறுத்தால் கணவன் வழி தவறிச் செல்லவும், கள்ளத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அது காரணமாகி விடும்.
صحيح البخاري – 5193 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ، فَأَبَتْ أَنْ تَجِيءَ، لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ
ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ,
நூல் : புகாரி 5193
صحيح البخاري – 5192 – عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَصُومُ المَرْأَةُ وَبَعْلُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ
கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் உபரியான நோன்பு நோற்கக் கூடாது.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 5192
அந்தரங்கத்தை வெளிப்படுத்தக்கூடாது
صحيح مسلم
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ، الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ، وَتُفْضِي إِلَيْهِ، ثُمَّ يَنْشُرُ سِرَّهَا
ஒரு மனிதன் தன் மனைவியுடன் இணைகிறான். அவளும் அவனுடன் இணைகிறாள். பிறகு அவளுடைய இரகசியத்தை பரப்பி விடுகிறான். இவன் தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மோசமான தகுதி உள்ளவன் என்று நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கூறினார்ள்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : முஸ்லிம் 2597
மற்றப் பெண்களின் அந்தரங்கத்தைப் பற்றி தன் கணவனிடத்தில் கூறுவதும் தவறு.
صحيح البخاري – 5240 – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تُبَاشِرُ المَرْأَةُ المَرْأَةَ، فَتَنْعَتَهَا لِزَوْجِهَا كَأَنَّهُ يَنْظُرُ إِلَيْهَا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் – அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 5240
கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
கணவன் மார்க்கத்திற்கு மாற்றம் இல்லாத ஒரு காரியத்தைக் கூறினால் மனைவி கேட்டு நடக்க வேண்டும்.
صحيح البخاري – 29 – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ، يَكْفُرْنَ قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: ” يَكْفُرْنَ العَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ ”
எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம் பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர்” என்று கூறினார்கள். அப்போது “இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள்?” என்று கேட்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “கணவனை நிராகரிக்கிறார்கள்; உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டு விட்டாளானால் “உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) ,
நூல் : புகாரி 29
صحيح بن حبان – 4162 – أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم دَخَلَ حَائِطًا مِنْ حَوَائِطِ الأَنْصَارِ فَإِذَا فِيهِ جَمَلانِ يَضْرِبَانِ وَيَرْعَدَانِ فَاقْتَرَبَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْهُمَا فَوَضَعَا جِرَانَهُمَا بِالأَرْضِ فَقَالَ مَنْ مَعَهُ سَجَدَ لَهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَسْجُدَ لأَحَدٍ وَلَوْ كَانَ أَحَدٌ يَنْبَغِي أَنْ يَسْجُدَ لأَحَدٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا لِمَا عَظَّمَ اللَّهُ عَلَيْهَا مِنْ حَقِّهِ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தார்கள். அங்கே இரு ஒட்டகங்கள் நடுங்கிக் கொண்டு மூட்டுக்களை தரையில் வைத்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தவர்கள் ஒட்டகங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று பேசிக் கொண்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவரும் எவருக்கும் ஸஜ்தாச் செய்வது கூடாது. ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்யலாம் என்று இருந்தால் பெண்கள் தமது கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். ஏனெனில் மனைவியின் மீது கணவனுக்குள்ள உரிமையை அல்லாஹ் முக்கியத்துவப்படுத்தியுள்ளான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
நூல் : இப்னுஹிப்பான்
மார்க்கத்துக்கு மாற்றமான விஷயங்களில் கட்டுப்படுதல் இல்லை
صحيح البخاري – 5205 – عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً مِنَ الأَنْصَارِ زَوَّجَتِ ابْنَتَهَا، فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا، فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَتْ: إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا، فَقَالَ: لاَ، إِنَّهُ قَدْ لُعِنَ المُوصِلاَتُ
அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, “என் கணவர், எனது தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்” என்று கூறினாள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள், “வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ,
நூல் : புகாரி 5205
صحيح البخاري – 7257 – لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ، إِنَّمَا الطَّاعَةُ فِي المَعْرُوفِ
அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பது நன்மையில் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : புகாரி 7257
கணவனின் உறவினர்களுக்கு பணிவிடை செய்தல்
கணவனுக்கும் அவனது உறவினர்களுக்கும் பணிவிடை செய்வது பெண்கள் மீது கடமையில்லை என்று சில பெண்கள் நினைக்கிறார்கள். இதனால் கணவனின் உறவினர்களை இவர்கள் சரியாகக் கவனிப்பது கிடையாது. இது தவறாகும்.
صحيح البخاري – 2967 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا… قَالَ لِي حِينَ اسْتَأْذَنْتُهُ: هَلْ تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا؟ ، فَقُلْتُ: تَزَوَّجْتُ ثَيِّبًا، فَقَالَ: هَلَّا تَزَوَّجْتَ بِكْرًا تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، تُوُفِّيَ وَالِدِي أَوِ اسْتُشْهِدَ وَلِي أَخَوَاتٌ صِغَارٌ فَكَرِهْتُ أَنْ أَتَزَوَّجَ مِثْلَهُنَّ، فَلاَ تُؤَدِّبُهُنَّ، وَلاَ تَقُومُ عَلَيْهِنَّ، فَتَزَوَّجْتُ ثَيِّبًا لِتَقُومَ عَلَيْهِنَّ وَتُؤَدِّبَهُنَّ،
2967 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புனிதப் போருக்குச் சென்றேன். நான் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் புது மாப்பிள்ளை என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? விதவையை மணமுடித்துக் கொண்டாயா? என்று கேட்டார்கள். அதற்கு நான், விதவையை தான் மணமுடித்துக் கொண்டேன் என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள்…அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன் என்று பதிலளித்தேன்.
நூல் : புகாரி 2967
வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும்
வீட்டு வேலைகள் செய்வது மனைவிக்கு கடமை இல்லை என்று சில பெண்கள் நினைக்கிறார்கள். இவர்களின் தவறான புரிதலால் குடும்பவாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் தான் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள்.
صحيح البخاري – 1950 سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، تَقُولُ: كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانَ، قَالَ يَحْيَى: الشُّغْلُ مِنَ النَّبِيِّ أَوْ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
1950 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா பின் சயீத் அவர்கள் கூறுகிறார்கள்.
நூல் : புகாரி 1950
நபிகள் நாயகத்தைக் கவனித்துக் கொள்ளுதல் என்பதில் வீட்டு வேலைகளும் அடங்கும். விட்ட நோன்பைக் கூட நோற்க முடியாத அளவுக்கு அவர்களின் வேலைப்பளு இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
صحيح البخاري – 3113 حَدَّثَنَا بَدَلُ بْنُ المُحَبَّرِ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي الحَكَمُ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، حَدَّثَنَا عَلِيٌّ، أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ اشْتَكَتْ مَا تَلْقَى مِنَ الرَّحَى مِمَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِسَبْيٍ، فَأَتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا، فَلَمْ تُوَافِقْهُ، فَذَكَرَتْ لِعَائِشَةَ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ عَائِشَةُ لَهُ، فَأَتَانَا، وَقَدْ دَخَلْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا لِنَقُومَ، فَقَالَ: عَلَى مَكَانِكُمَا. حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي، فَقَالَ: أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا مِمَّا سَأَلْتُمَاهُ
3113 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் மனைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிருக்கின்றார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்து கொண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள் என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்). பின்னர், நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், அல்ஹம்து லில்லாஹ்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், சுப்ஹானல் லாஹ்- அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த தாகும் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 3113
திருகையில் மாவறைக்கும் வீட்டு வேலையை ஃபாத்திமா (ரலி) செய்துள்ளதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ ஏன் வீட்டு வேலைகள் செய்கிறாய் என்று கேட்கவில்லை. வீட்டு வேலைகளும் பெண்களின் கடமை என்பதை இதிலிருந்து அறியலாம்.
صحيح البخاري- 5224 حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ: تَزَوَّجَنِي الزُّبَيْرُ، وَمَا لَهُ فِي الأَرْضِ مِنْ مَالٍ وَلاَ مَمْلُوكٍ، وَلاَ شَيْءٍ غَيْرَ نَاضِحٍ وَغَيْرَ فَرَسِهِ، فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَسْتَقِي المَاءَ، وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ، وَلَمْ أَكُنْ أُحْسِنُ أَخْبِزُ، وَكَانَ يَخْبِزُ جَارَاتٌ لِي مِنَ الأَنْصَارِ، وَكُنَّ نِسْوَةَ صِدْقٍ، وَكُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِي، وَهِيَ مِنِّي عَلَى ثُلُثَيْ فَرْسَخٍ، فَجِئْتُ يَوْمًا وَالنَّوَى عَلَى رَأْسِي، فَلَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ نَفَرٌ مِنَ الأَنْصَارِ، فَدَعَانِي ثُمَّ قَالَ: إِخْ إِخْ لِيَحْمِلَنِي خَلْفَهُ، فَاسْتَحْيَيْتُ أَنْ أَسِيرَ مَعَ الرِّجَالِ، وَذَكَرْتُ ص:36 الزُّبَيْرَ وَغَيْرَتَهُ وَكَانَ أَغْيَرَ النَّاسِ، فَعَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي قَدِ اسْتَحْيَيْتُ فَمَضَى، فَجِئْتُ الزُّبَيْرَ فَقُلْتُ: لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى رَأْسِي النَّوَى، وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ، فَأَنَاخَ لِأَرْكَبَ، فَاسْتَحْيَيْتُ مِنْهُ وَعَرَفْتُ غَيْرَتَكَ، فَقَالَ: وَاللَّهِ لَحَمْلُكِ النَّوَى كَانَ أَشَدَّ عَلَيَّ مِنْ رُكُوبِكِ مَعَهُ، قَالَتْ: حَتَّى أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ بَعْدَ ذَلِكَ بِخَادِمٍ تَكْفِينِي سِيَاسَةَ الفَرَسِ، فَكَأَنَّمَا أَعْتَقَنِي ”
5224 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும்போதே) மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்ட கத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால் எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டிசுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து – நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. (ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங் கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந் தேன். (வழியில்) நான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை, (அவர்தம் தோழர்களான) அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக இஃக், இஃக் என்று சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும் நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும், அவரது ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து (வழியில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தமது ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன் என்று கூறினேன். அதற்கு என் கணவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதை விட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது என்று கூறினார்.
அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பிவைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.
நூல் : புகாரி 5224
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகளும், ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரியுமான அஸ்மா (ரலி) அவர்கள் கணவர் வீட்டு வேலைகள் தோட்ட வேலைகள் அனைத்தையும் செய்துள்ளார்கள். நீ ஏன் இப்படி வேலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை. அதை அங்கீகரிக்கிறார்கள்.
கணவனுக்குத் தெரியாமல் அவனது பொருளை எடுக்கலாமா?
கணவர் குடும்பத் தேவைகளுக்குப் போதுமான தொகையைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால் அவருக்குத் தெரியாமல் தேவையான அளவு அவனது பணத்தில் மனைவி எடுத்துக்கொள்வது குற்றமில்லை. அப்படி எடுக்கும் தொகை முக்கியமான குடும்பத் தேவைகளுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்.
صحيح البخاري – 2211 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: قَالَتْ هِنْدٌ أُمُّ مُعَاوِيَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ سِرًّا؟ قَالَ: خُذِي أَنْتِ وَبَنُوكِ مَا يَكْفِيكِ بِالْمَعْرُوفِ
முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், (என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா? எனக் கேட்டார்கள். அதற்கு, உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்,
நூல் : புகாரி 2211
கணவனைப் பாதிக்காத வகையில் கணவனின் பொருட் களில் இருந்து நல்லறங்களுக்காக மனைவி செலவிடலாம்.
صحيح البخاري – 1425 – قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَنْفَقَتِ المَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ، كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ، وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை – வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும்;
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 1425
குடும்பக் கட்டுப்பாடு
உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன.
குடும்பக் கட்டுப்பாடு என அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்த அளவு ஒத்துழைக்கலாம்? இதனைக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், குழந்தைகள் உருவாவதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவும் இன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததில்லை.
அன்றைய மக்கள் குழந்தைகள் உருவாகாமலிருக்கவும், குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஒரு முறையைக் கையாண்டு வந்தனர்.
அதாவது இல்லறத்தில் உச்ச நிலைக்கு வரும் போது ஆண்கள் தங்கள் விந்துவை வெளியே விட்டு விடுவார்கள். இது தான் அன்றைய மக்களிடம் அறிமுகமான முறை. அரபு மொழியில் இந்தச் செயல் அஸ்ல் எனக் கூறப்படுகிறது. இந்த அஸ்ல் என்ற காரியத்திற்கு மார்க்கம் எந்த அளவு அனுமதி வழங்குகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.
صحيح البخاري- 5209 – وَعَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ: كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالقُرْآنُ يَنْزِلُ
குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்து வந்தோம்
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ,
நூல் : புகாரி 5209
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித் தோழர்கள் அஸ்ல் செய்துள்ளனர். அதை அல்லாஹ்வும், அவனது திருத் தூதரும் தடை செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது நடந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கவனத்திற்கு வராமல் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று எண்ணுவதற்கு இடமில்லை. ஏனெனில்
صحيح مسلم – عَنْ جَابِرٍ، قَالَ: كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَلَغَ ذَلِكَ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَنْهَنَا
நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்படியிருந்தும் எங்களை அவர்கள் தடுக்கவில்லை. என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 2847
صحيح مسلم – عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ عِنْدِي جَارِيَةً لِي، وَأَنَا أَعْزِلُ عَنْهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ ذَلِكَ لَنْ يَمْنَعَ شَيْئًا أَرَادَهُ اللهُ قَالَ: فَجَاءَ الرَّجُلُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ الْجَارِيَةَ الَّتِي كُنْتُ ذَكَرْتُهَا لَكَ حَمَلَتْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَا عَبْدُ اللهِ وَرَسُولُهُ،
எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவள் கர்ப்பமடைந்து விடுவாளோ என நான் அஞ்சுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்து கொள். (ஆனால்) அவளுக்கென்று விதிக்கப் பட்டது அவளை அடைந்தே தீரும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : முஸ்லிம் 2844
இந்த ஹதீஸில் அந்த மனிதர் அஸ்ல் செய்ய அனுமதி கேட்கவில்லை. குழந்தை பெறாமலிருக்க தான் என்ன செய்ய வேண்டும் என்றே கேட்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாங்களே முன் வந்து அஸ்ல் செய்து கொள் என்று அவருக்குச் சொல்லித் தருகிறார்கள். அதே நேரத்தில் இறைவனின் விதி ஒன்று உண்டு. அதை மாற்ற இயலாது என்ற அடிப்படை உண்மையையும் போதிக்கிறார்கள்.
விதியை மாற்ற இயலாது என்பதால் அஸ்ல் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் விதியை நம்புவது என்பது அஸ்ல் என்ற பிரச்சினைக்கு மட்டும் உரியதன்று. விதியை நம்புதல் எல்லாப் பிரச்சினைக்கும் பொதுவாக அவசியம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நோய் நீங்க வேண்டும் என்பதற்காக மருந்து உட்கொள்கிறோம். இறைவனின் விதி வேறு விதமாக இருந்தால் அதையும் இந்த மருந்து மாற்றி விடும் என்று நம்பக் கூடாது. விதியை நம்புகிறோம் என்பதால் மருந்து உட்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு நாம் வருவதில்லை. இது போல் தான் இந்தப் பிரச்சினையும்.
صحيح مسلم
، عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ، أُخْتِ عُكَّاشَةَ، قَالَتْ: حَضَرْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي أُنَاسٍ وَهُوَ يَقُولُ: لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيلَةِ، فَنَظَرْتُ فِي الرُّومِ وَفَارِسَ، فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلَادَهُمْ، فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ذَلِكَ شَيْئًا، ثُمَّ سَأَلُوهُ عَنِ الْعَزْلِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ذَلِكَ الْوَأْدُ الْخَفِيُّ
பால் கொடுக்கும் பெண்களைக் கர்ப்பிணியாக்குவதைத் தடுக்கலாம் என்று நான் கருதினேன். பின்னர் ரூம், பாரசீக மக்களைக் கண்டேன். இதனால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டதாக இல்லை. எனவே தடை செய்யவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மக்கள் அஸ்ல் பற்றிக் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸ்ல் என்பது குழந்தைகளை மறைமுகமாக உயிருடன் புதைப்பது போன்றதாகும் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 2850
இந்த ஒரு ஹதீஸ் மட்டும் அஸ்ல் செய்வதைக் கண்டிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனைய ஹதீஸ்கள் அனைத்தும் அஸ்ல் செய்வதை அனுமதிக்கும் விதமாக அமைந்துள்ளன.
முரண்பாடு போல் தோன்றக் கூடிய இரண்டு செய்திகளும் ஆதாரப்பூர்வமாக உள்ளதால் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கக் கூடாது. இரண்டையும் ஏற்பதற்குத் தக்கவாறு பொதுவான கருத்துக்கு நாம் வர வேண்டும்.
அனுமதிக்கும் வகையிலமைந்த ஹதீஸ்களின் அடிப்படையில் அஸ்ல் செய்ய அனுமதி உண்டு என்ற முடிவை நாம் பெறலாம். கண்டனம் செய்து வருகின்ற ஹதீஸ் அஸ்ல் அவ்வளவு நல்லதல்ல என்ற பொருளிலேயே கூறியிருக்க வேண்டும். அறவே கூடாது என்றிருந்தால் பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.
அஸ்ல் போன்ற குடும்பக் கட்டுப்பாடுகள் கூடும் என்றே மேற்கூறிய ஆதாரங்கள் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும்.
இப்போதைய குடும்பக் கட்டுப்பாட்டில் இரண்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒன்று தற்காலிகமாக குழந்தை பெறுவதை நிறுத்திக் கொண்டு தேவைப்படும் போது அதற்காக முயற்சித்தல்.
மற்றொன்று குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்வது.
இந்த இரண்டில் முதல் வகையான கட்டுப்பாடு முறை மட்டுமே அனுமதிக்கப்படும். அஸ்ல் என்பது இந்த வகையில் தான் அமைந்துள்ளது. மற்றொரு வகை, அஸ்ல் என்ற முறையோடு ஒட்டி வராததால் அதை அனுமதிக்க எவ்வித அடிப்படையுமில்லை.
இறைவன் வழங்கிய அருட்கொடையை நிரந்தரமாக அழித்துக் கொள்ள மனிதனுக்கு உரிமையில்லை.
صحيح البخاري – 5073 سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ: رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ، وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا
ஒரு நபித் தோழர் ஆண்மை நீக்கம் செய்து கொள்ள அனுமதி கோரிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர்.
நூல் : புகாரி 5073
ஆணுறை, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திட தடை ஏதும் இல்லை. தடுப்பதற்கான அடிப்படைகளும் இல்லை.
குடும்பக் கட்டுப்பாடு எனும் பெயரில் கரு உருவான பின் அதைக் கலைத்து விடும் கொடுமை நாட்டிலே நிலவுகின்றது இந்தக் கொடுமைக்கு தக்க கரணம் இருந்தால் தவிர இதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது
திருக்குர்ஆன் 81:8,9
வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.
திருக்குர்ஆன் 6:151
உருவான குழந்தைகளை அழிப்பதற்கு இது போன்ற வசனங்கள் தடையாக உள்ளன. இது அல்லாத விதமாக தற்காலிகமான முறையில் குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை.
உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
நிரந்தரமாக கருத்தடை செய்து கொள்ளக் கூடாது. நிர்பந்தம் ஏற்படும் போது தடுக்கப்பட்ட விஷயங்கள் ஆகுமானதாகி விடும்.
இனி கரு உருவானால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற இது நிர்பந்தம் ஏற்படும் போது கர்ப்பத்தைக் கலைக்கலாம்.
நிர்ப்பந்தமான நிலையில் இறை நிராகரிப்புச் சொற்களை மொழிவது கூட மன்னிக்கப்பட்டு விடுகின்றது.
அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப் பட்டவர் தவிர.
திருக்குர்ஆன் 16:106
இறை நிராகரிப்பு தான் அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும். நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இறை நிராகரிப்பு சொற்களைக் கூற அல்லாஹ் இந்த வசனத்தில் விதி விலக்கு வழங்குகின்றான்.
பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதையும் நெருக்கடி, நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:173
கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா?
கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.
மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதையும் மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!
திருக்குர்ஆன் 2:222
سنن أبي داود – عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: யிمَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَتَهُ فِي دُبُرِهَاஞீ
மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொண்டவன் சபிக்கப்பட்டவனாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : அபூ தாவூத்
எனவே தடை செய்யப்பட்ட இந்த இரண்டைத் தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களும் அனுமதிக்கப்பட்டவையே.
பின்வரும் வசனம் இந்த அனுமதியைத் தருகின்றது.
உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!
திருக்குர்ஆன் 2:223
கணவன் மனைவிக்கிடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விவரிப்பது நாகரீகமான செயல் அல்ல. எனவே தான் அல்லாஹ் மனைவியர் விளை நிலங்கள் என்ற அழகான உவமையோடு நிறுத்திக் கொண்டான்.
பெண்கள் பிற பெண்களின் மர்ம உறுப்பைப் பார்க்கக் கூடாது
صحيح مسلم – أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ
ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம். ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: முஸ்லிம் 512
ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் படுப்பது தவறு என்றும் மேலுள்ள ஹதீஸ் உணர்த்துகிறது.
பெண்கள் சொத்துரிமை
இஸ்லாம் பெண்களுக்கு வாரிசுரிமையை வழங்கியுள்ளது.
உலகில் மனைவிக்கு மட்டுமே சொத்துரிமை அளிக்கப்படுகிறது. இதர பெண் உறவினர்களுக்கு வாரிசுரிமை வழங்கப்படுவதில்லை. இஸ்லாமில் மனைவி அல்லாத பெண் உறவினர்களுக்கும் வாரிசு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
கணவனுக்கு குழந்தை இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவனது சொத்தில் எட்டில் ஒரு பாகம் மனைவுக்கு உரியது.
கணவனுக்கு குழந்தை இல்லாத நிலையில் மரணித்தால் கணவன் சொத்தில் நான்கில் ஒரு பங்கு மனைவிக்கு உண்டு.
ஒருவனுக்கு குழந்தைகள் உள்ள நிலையில் மரணித்தால் அவனது தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு.
ஒருவனுக்கு குழந்தை இல்லாத நிலையில் மரணித்தால் அவனது சொத்தில் தாய்க்கு மூன்றில் ஒன்று உள்ளது.
ஒருவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் இருந்தால் அவனது சொத்தில் வாரிசுகளுக்கு கொடுத்தது போக மீதியை ஆண்களுக்கு இரண்டு பெண்களுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஒருவனுக்கு ஆண் பிள்ளை இல்லாமல் ஒரு பெண் பிள்ளை மட்டும் இருந்தால் அவனது சொத்தில் பாதி அவளுக்கு உண்டு.
ஒருவனுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமல் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் சேர்த்து மூன்றில் இரு பங்கு உண்டு. அதை அவர்கள் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்
இப்படி பெண்களுக்கு இஸ்லாம் வாரிசுரிமையை வழங்கியுள்ளது
பெண்களுக்கு இத்தா ஏன்?
கணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் 2:228, 2:231, 2:232, 2:234, 2:235, 33:49, 65:1 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது இத்தா காலம் என்று சொல்லப்படுகிறது.
2:234, 2:235 வசனங்களில் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரை மறுமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகின்றது.
கர்ப்பிணிகள் பிரசவிக்கும் வரை இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மாதவிடாய் அற்றுப் போன வயதானவர்கள் மூன்று மாதங்கள் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் 65:4 வசனம் கூறுகின்றது.
இந்தச் சட்டம் பெண்களுக்கு கேடு செய்வதற்கான சட்டம் அல்ல. அவர்களுக்கு மிகப்பெரும் நன்மைகளைப் பெற்றுத் தரும் சட்டமாகும்.
கணவன் மரணிக்கும் போது அவனது கருவை மனைவி சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.
முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடக்கூடும். தந்தை யார் என்பது தெரியாததால் மனரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.
“இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள்” என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக் குறியாகி விடும்.
“கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதும்: அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே? நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா?” என்று சிலர் நினைக்கலாம்.
இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.
ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை முதல் மாதமே அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். தான் கருவுறவில்லை என்று அவள் கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்த பின் இவ்வாறு கூற முடியாது. கர்ப்பமாக இருப்பது வெளிப்படையாகவே மற்றவர்களுக்கும் தெரிந்து விடும்.
இரண்டாம் திருமணம் முடித்து ஆறேழு மாதங்களில் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு இரண்டாம் திருமணம் நடந்திருந்தால் அவன் இப்படிக் கூற முடியாது. வயிற்றில் குழந்தை இருந்தால் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.
இத்தகைய காரணங்களால், பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவர்களது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.
இத்தா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விதிமுறை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
சில முஸ்லிம்கள் கணவனை இழந்த பெண்களை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம், பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகின்றனர். இது குற்றமாகும். மறுமணம் செய்யாமல் இருப்பதும், திருமணத்தைத் தூண்டும் அலங்காரங்களைத் தவிர்ப்பதும் தான் இத்தா என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இத்தா என்ற பெயரில் இருட்டறையில் பெண்களை அடைத்து வைக்கின்றனர். எந்தத் தேவைக்காகவும் வெளியே செல்லத் தடை விதிக்கின்றனர்.
மார்க்கம் கட்டளையிட்டவாறு ஹிஜாப் அணிந்திருந்த போதும் எந்த ஆணும் அவளைப் பார்க்கக் கூடாது என்கின்றனர்.
ஆண் குழந்தைகளைக் கூட பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கின்றனர்.
இவை அனைத்தும் மூடநம்பிக்கைகள் ஆகும்.
இது தவிர இன்னொரு வகை இத்தாவும் உண்டு. மனைவியை கணவன் விவாகரத்துச் செய்தால் அவர்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலமும் இத்தா எனப்படும். அதாவது விவாகரத்து முடிந்த உடன் பெண்கள் மறுமணம் செய்யாமல் மூன்று மாதவிடாய்க் காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் கணவன் அவளுடன் சேர்ந்து கொள்ளலாம். இந்த இத்தாவை 2:228, 2:231, 2:232, 33:49, 65:1 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இத்தாவுக்கு தனியாக எந்தக் கட்டுப்பாடும் மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. அந்தக் காலம் முடிவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது என்பது மட்டுமே இந்த இத்தாவின் ஒரே விதியாகும்.
இத்துடன் இன்னும் சில விதிகளும் உள்ளன. அவற்றை மட்டும் கடைப்பிடித்தால் போதுமானது.
صحيح البخاري – 313 عَنْ أُمِّ عَطِيَّةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَلاَ نَكْتَحِلَ وَلاَ نَتَطَيَّبَ وَلاَ نَلْبَسَ ثَوْبًا مَصْبُوغًا، إِلَّا ثَوْبَ عَصْبٍ، وَقَدْ رُخِّصَ لَنَا عِنْدَ الطُّهْرِ إِذَا اغْتَسَلَتْ إِحْدَانَا مِنْ مَحِيضِهَا فِي نُبْذَةٍ مِنْ كُسْتِ أَظْفَارٍ، وَكُنَّا نُنْهَى عَنِ اتِّبَاعِ الجَنَائِزِ
மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் நறுமணம் பூசக்கூடாது. கண்மை இடக்கூடாது. அஸப் எனப்படும் வண்ண உடை தவிர வேறு வண்ண உடைகளை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) ,
நூல்: புகாரி 313, 5341, 5343
துணிகளை நெய்வதற்கான நூல்களை முறுக்கிய நிலையில் சாயத்தில் முக்கி எடுத்துப் பின்னர் பிரித்து நெய்யப்படுவதே அஸப் எனப்படும். இவ்வாறு செய்வதால் முறுக்கப்பட்ட நூல் தொகுப்பின் உட்பகுதி சாயமில்லாமலும், வெளிப்பகுதி சாயமாகவும் இருக்கும். அதாவது வெள்ளையும், நிறமும் கலந்ததாக அது இருக்கும்.
முற்றிலும் வண்ணமாக உள்ள ஆடைகளைத் தவிர்த்து வெள்ளையும், வண்ணமும் கலந்த நிலையில் உள்ள ஆடைகளையோ, முற்றிலும் வெண்மையான ஆடைகளையோ அணியலாம்.
سنن أبي داود –
عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لَا تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ، وَلَا الْمُمَشَّقَةَ، وَلَا الْحُلِيَّ، وَلَا تَخْتَضِبُ، وَلَا تَكْتَحِلُ
இத்தா காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),
நூல்: அபூ தாவூத்
இவற்றைக் கடைப்பிடித்தால் ஒருத்தி இத்தாவைக் கடைப்பிடித்து விட்டாள் என்பது பொருள்.
இந்தக் காலகட்டத்தில் திருமணத்தை நிச்சயம் செய்யவும் கூடாது.
(காத்திருக்கும் கால கட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:235
மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள காலகட்டத்தில் அந்தப் பெண்ணிடம் ஆண்கள் பேசலாம் என்பதையும், அவ்வாறு பேசும் போது உண்னை நான் மணந்து கொள்கிறேன் என்று நேரடியாகப் பேசக் கூடாது என்பதையும், சாடைமாடையாக இவ்வாறு பேசிக் கொள்ளலாம் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இத்தா காலத்தில் ஆண்களைப் பார்க்கவோ, பேசவோ கூடாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கும் இவ்வசனம் போதிய சான்றாக உள்ளது.
இது பற்றி மக்களிடம் அதிகமான அறியாமை நிலவுவதால் மேலும் சில சான்றுகளை முன் வைக்கிறோம்.
صحيح مسلم – عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ أَوِ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ. قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ أَتَيْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سَلَمَةَ قَدْ مَاتَ قَالَ قُولِى اللَّهُمَّ اغْفِرْ لِى وَلَهُ وَأَعْقِبْنِى مِنْهُ عُقْبَى حَسَنَةً. قَالَتْ فَقُلْتُ فَأَعْقَبَنِى اللَّهُ مَنْ هُوَ خَيْرٌ لِى مِنْهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم.
(என் கணவர்) அபூ ஸலமா மரணித்த போது நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸலமா மரணித்து விட்டார் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹும்மக்ஃபிர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்பா ஹஸனதன் (இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவருக்குப் பகரமாக அவரை விடச் சிறந்ததைத் தருவாயாக!) எனக் கூறு என்றார்கள். நான் அவ்வாறு கூறினேன். அவரை விடச் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குப் பகரமாகத் தந்தான் என்று உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள்.
நூல்: முஸ்லிம்
கணவரை இழந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேடிச் சென்றுள்ளனர். இது தவறு என்றால் கணவனை இழந்த நீ எப்படி வெளியே வரலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள். வெளியே வந்த உம்மு ஸலமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். இத்தா காலகட்டத்தில் எப்படி ஒரு ஆணிடம் பேசலாம்? என்று அவர்கள் கேட்கவில்லை.
இத்தா இல்லாத காலங்களில் அன்னிய ஆடவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதைத் தான் இத்தாவின் போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் மற்ற நேரங்களில் வெளியே செல்வது போல் சென்று வருவது தவறல்ல என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
காலமெல்லாம் வெள்ளை ஆடை தேவையில்லை
அவரவருக்கு உரிய இத்தா காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யாவிட்டால் அவர்கள் மரணிக்கும் வரை வெள்ளைச் சட்டை தான் அணிய வேண்டும்: வெள்ளைச் சேலை தான் அணிய வேண்டும் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவுகிறது. இதுவும் மூட நம்பிக்கையாகும்.
இத்தா காலம் முடிந்து விட்டால் ஒரு கன்னிப் பெண்ணைப் போல் எல்லா விதமான ஆடைகளையும் கணவனை இழந்த பெண்களும் அணியலாம். விதவைகள் காலமெல்லாம் வெள்ளை உடை அணிய வேண்டும் என்பது பிற மதத்திலிருந்து நுழைந்து விட்ட தவறான நம்பிக்கையாகும்.
மறுமணத்தைத் தடுக்கக் கூடாது
கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்கள் மறுமணம் செய்வதை சமுதாயம் இழிவாகக் கருதுகிறது.
தனக்கு மறுமணம் அவசியம் என்று எண்ணுகிற பெண்கள் கூட வெட்கப்பட்டு அதைத் தவிர்க்கும் அளவுக்கு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது.
தவறான நடத்தையில் ஈடுபடுவதற்குத் தான் வெட்கப்பட வேண்டும். திருமணம் செய்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை. அல்லாஹ் அனுமதித்ததைத் கேலி செய்பவர்கள் மறுமையில் குற்றவாளிகளாக நிற்க வேண்டும் என்பது பற்றி அஞ்ச வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.
திருக்குர்ஆன் 4.19
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:232
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 2:234
கணவன் காணாமல் போய் விட்டால்?
கணவன் காணாமல் போய் விடாக் மார்க்க அறிஞர்கள் பலவாறான பத்வாக்களை வழங்கியுள்ளனர்.
ولا يفرّق بينه وبينها وحكم بموته بعد تسعين سنةً وتعتدّ امرأته وورث منه حينئذٍ لا قبله كنز الدقائق
இருவரது திருமண உறவைப் பிரிக்கக் கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழிந்த பின் அவன் இறந்து விட்டதாக முடிவு செய்யப்படும். அவனது மனைவி அப்போது இத்தா இருப்பாள். அப்போது தான் கணவனின் சொத்துக்கும் வாரிசாக ஆவாள்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய கன்ஸுத்தகாயிக்
قَالَ رَحِمَهُ اللَّهُ (وَحُكِمَ بِمَوْتِهِ بَعْدَ تِسْعِينَ سَنَةً) لِأَنَّ الْغَالِبَ لَا يَعِيشُ أَكْثَرَ مِنْ ذَلِكَ وَهُوَ مَرْوِيٌّ عَنْ أَبِي بَكْرٍ الْفَضْلِيِّ وَعَنْ أَبِي بَكْرٍ مُحَمَّدِ بْنِ حَامِدٍ وَأَبُو يُوسُفَ قَدَّرَهُ بِمِائَةِ سَنَةٍ وَرَوَى الْحَسَنُ عَنْ أَبِي حَنِيفَةَ أَنَّهُ قَدَّرَهُ بِمِائَةٍ وَعِشْرِينَ سَنَةً- تبيين الحقائق شرح كنز الدقائق
தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் பெரும்பாலும் ஒருவன் வாழ முடியாது. இது அபூபக்ர் அல்ஃப்ழ்லீ, முஹம்மத் பின் ஹாமித் ஆகியோரின் கருத்தாகும். அபூயூசுஃப் அவர்கள் நூறு ஆண்டுகள் என்று கணித்துள்ளார்கள். அபூஹனீஃபா அவர்கள் நூற்றி இருபது ஆண்டுகள் என்று கணித்துள்ளார்.
நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய தப்யீனுல் ஹகாயிக்
30 வயதிலுள்ள ஒருவனுக்கு 20 வயது மனைவி இருக்கின்றாள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது கணவன் காணாமல் போய் விட்டால் அந்தப் பெண் 60 வருடங்கள், அல்லது 90 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவள் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது நடைமுறைக்குச் சாத்தியமா? பெண் என்பவள் எந்த உணர்ச்சியும் அற்ற மரக் கட்டையா? அவளுக்கென்று எந்த ஆசையும் கிடையாதா? என்ன அர்த்தத்தில் இவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்?
சொத்துக்களைப் பிரிப்பதற்கு அவன் மரணிப்பது உறுதியாவதற்காக இப்படி காலக்கெடு நிர்ணயித்தால் அதில் ஓரளவு நியாயம் உள்ளது. ஆனால் பெண் என்பவள் உணர்வு இல்லாத மரக்கட்டையாக இருந்தால் 90 ஆண்டுகள் காத்திருக்கலாம். உணர்வுள்ள பெண்கள் வழிதவறி விடாமல் இருப்பதற்காக வாழ்க்கைத் துணை தேவை இல்லையா?
அவன் சாகவில்லை; உயிருடன் இருக்கிறான் என்றே முடிவு செய்து தொலைக்கட்டும். அவனது மனைவிக்கு இல்லற சுகம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு திருமணத்தை முறிப்பதற்கான காரணமாக இதை அறிவிப்பதற்கும் மூளை வரண்டு விட்டதா?
காணாமல் போனவனின் மனைவி 90 வருடம் வரை திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.
மனைவியை விட்டு விட்டுக் கணவன் காணாமல் போய்விட்டால் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் என்ன தான் தீர்வு?
மனைவியை விட்டு கணவன் காணாமல் போய் விட்டால் அந்த மனைவி எவ்வளவு நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.
இது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதற்காக இடிந்து போகத் தேவையில்லை. ஏனெனில் கணவன் காணாமல் போகாது இருக்கும் போதே திருமண பந்தத்தில் இருந்து மனைவி விடுபட முடியும். அதே உரிமையைப் பயன்படுத்தி கணவன் காணாமல் போகும் போதும் திருமண பந்தத்தில் இருந்து விடுபடலாம்.
صحيح البخاري – 5273 أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி)யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி “சரி” என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு, கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை அவள் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண் என்பவள் உணர்ச்சிகள் இல்லாத கட்டை அல்ல. கணவன் இருக்கும் போதே அவளது உணர்வுகள் கணவனின் உணர்வுகளுடன் ஒத்துப் போகாவிட்டால் திருமணத்தை ரத்து செய்ய சமுதாயத் தலைவருக்கு அனுமதி உண்டு எனும் போது கணவன் காணாமல் போய் விடும் போது தாராளமாக ரத்து செய்யலாம்.
ஒரு பெண் தவறான வழியில் செல்வதற்கான வாசலை இஸ்லாம் அடைக்காமல் இருக்குமா? என்று சிந்தித்துப் பார்த்தால் கணவனுக்காக காலமெல்லாம் காத்திருக்க வேண்டும் என்று கூற மாட்டார்கள்.
இவ்வாறு கூறுவோர் தங்கள் மகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால் நபிவழியைப் பின்பற்ற முன்வருகின்றனர்.
கருக்கலைப்பு கூடுமா?
6:140, 6:151, 17:31, 60:12, 81:8,9 ஆகிய வசனங்களில் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
வறுமைக்குப் பயந்தும், பெண் குழந்தை பிறப்பது இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்றைய காட்டுமிராண்டி அரபுகளிடம் இருந்தது. இது கடுமையான குற்றம் என்று இவ்வசனங்கள் மூலம் எச்சரிக்கப்பட்டு இக்கொடிய வழக்கத்தை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது.
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதன் நேரடிப் பொருள் இது தான்.
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்ற வசனம் அருளப்பட்ட காலத்தில் கருவை அழிக்கும் தொழில் நுட்பம் இருக்கவில்லை. குழந்தையைப் பெற்ற பின்னர் கொல்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த வசனங்கள் இதைத் தான் நேரடியாகக் குறிக்கின்றன.
இப்போது நவீன காலத்தில் கருவில் வைத்தே குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
கருவில் வைத்து அழிப்பது குழந்தைக் கொலையில் அடங்குமா? இது பற்றி இஸ்லாமின் நிலை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமின் பார்வையில் உயிர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலை இயக்குவதற்கான உயிர் ஒரு வகை. உணர்வுகளை இயக்குவதற்கான உயிர் இன்னொரு வகை.
எப்போது கரு உருவாகிவிடுகிறதோ அப்போது முதல் அது வளர்ச்சி அடைந்து கொண்டே உள்ளது. முதல் நாள் கருவுக்கும் உயிர் உள்ளது. ஒன்பது மாதம் வளர்ச்சி அடைந்த கருவுக்கும் உயிர் உண்டு. கருவில் உருவாகும் குழந்தைக்கு உயிர் இருப்பதால் தான் அது வளர்கிறது; பல்வேறு நிலைகளை அடைகிறது.
இந்த வகையில் பார்த்தால் ஒரு நாள் கருவாக இருக்கும் போது அழிப்பதும் கொலையில் சேரும் என்று தெரிகிறது.
ஆனால் 120 வது நாளில் தான் உயிர் ஊதப்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 3208, 3332, 6594, 7454)
120 நாட்களுக்கு முன்னர் கருவுக்கு உயிர் இருந்திருக்கும் போது 120 வது நாளில் உயிர் ஊதப்படுகிறது என்று நபியவர்கள் கூறுகிறார்கள். இது மற்றொரு வகையான உயிர் என்று தெரிகிறது.
120 நாட்களுக்கு முன்னர் வரை, வளர்ச்சி அடைவதற்கான உயிர் தான் அக்கருவுக்கு இருந்துள்ளது என்றும், 120 வது நாளில் தான் மனிதன் என்பதற்கான உயிர் ஊதப்படுகிறது என்றும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
120 வது நாளில் தான் உயிர் ஊதப்படுகிறது என்றால் அதற்கு முன் அது மனிதக் கருவாக இருக்கவில்லை என்று தெரிகிறது. 120 நாட்களுக்கு முன்னர் உள்ள கருவைக் கலைத்தால் அது குழந்தையைக் கொன்ற குற்றமாக ஆகாது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்கிறோம்.
120 நாள் வளர்ச்சி அடைந்த கருவை அழித்தால் அது குழந்தையைக் கொன்ற குற்றத்தில் சேரும். அதற்கு முன் உள்ள நிலையில் கருவை அழித்தால் அது குழந்தையைக் கொன்ற குற்றத்தில் சேராது.
ஆனாலும் கருவைச் சுமந்துள்ள பெண்ணுக்கு அது கேடு தரும் என்பதால் அந்தக் குற்றத்தில் சேரும்.
தமக்குக் கேடு விளைவிப்பவற்றைச் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. உருவான குழந்தையைக் கலைப்பது பெண்ணுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். அந்த வகையில் 120 நாட்களுக்கு முன்னுள்ள கருவை அழிப்பதும் தடுக்கப்பட்டதாகும். குழந்தையைக் கொல்வது என்ற அடிப்படையில் அல்ல. தாயின் உடல் நலனுக்குக் கேடு என்பதால் அது கூடாது.உயிருக்கு ஆபத்து, அல்லது தாயின் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.
சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?
சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
1-கணவனின் உயிரணுவை எடுத்து, மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும்.
2-கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதை மனைவியின் கரு முட்டையைச் சேர்த்து குழாயில் வளர்த்து மனைவியின் கருவறையில் செலுத்தி குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும்.
3- கணவன் அல்லாத இன்னொரு ஆணின் உயிரணுவை இன்னொரு பெண்ணின் சினை முட்டையுடன் சேர்த்து குழாயில் வளர்த்து ஒரு பெண்ணின் கருவறையில் செலுத்துவது
இவற்றில் முதலாவது வழிமுறைக்கு மட்டுமே மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!
திருக்குர்ஆன் 2:223
‘உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள்’ என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரணுவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம் என்றும், கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரணுவை எடுத்து இவ்வாறு செய்வது கூடாது என்றும் விளங்கலாம்.
திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்
இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது.
தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே இது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.
கணவன் மனைவியர் சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரியும் போது பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். சில வேளை ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தக் காரணம் அனைவருக்குமானதே தவிர முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம் ஆண்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்தால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவது போல், இந்து ஆண்கள் விவாகரத்து செய்தால் இந்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். கிறித்தவ ஆண்கள் விவாகரத்துச் செய்தால் கிறித்தவப் பென்கள் பாதிக்கப்படுவார்கள். எந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் விவாகரத்து செய்தாலும் அந்தந்த மதத்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மதத்தை நம்பாதவர்கள் விவாகரத்துச் செய்தாலும் அவர்களின் மனைவியர் பாதிக்கப்படுவார்கள்.
பொதுவான இந்தப் பிரச்சனையில் கருத்து சொல்பவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் யாரும் விவாகரத்து செய்யக் கூடாது என்று கூற வேண்டும்.
அப்படி ஒருவரும் கூறுவதில்லை. கூற முடியாது. ஏனெனில் திருமண உறவு என்பது தாய், தந்தை, அண்ணன் தம்பி போன்ற பிரிக்க முடியாத உறவு அல்ல.
ஆண்களும் பெண்களும் தங்களின் தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும்.
திருமணம் செய்த பின்னர் பெரும்பாலும் தம்பதிகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள். சிலர் குறைகளைச் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். மிகச் சிலர் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை இல்லாவிட்டால் அவர்களை எந்தச் சட்டத்தின் மூலமும் சேர்த்து வைக்க முடியாது.
விவாகரத்து செய்ய முடியாது என்று வலியுறுத்தினால் அந்த ஆண் பெயருக்குத் தான் அவளுக்குக் கணவனாக இருப்பான். அவளுடன் இல்லறம் நடத்த மாட்டான். வேண்டாத மனைவி என்பதால் சித்திரவதை செய்வான். மனைவியைக் கவனிக்காமல் கள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு மனைவியை மனம் நோகச் செய்வான்.
கள்ள உறவு வேண்டாம்; முறையாக இன்னொருத்தியை திருமணம் செய்து வாழலாம் என்று அவன் நினைத்தால் முதல் மனைவி அதற்குத் தடையாக நிற்கிறாள் என்பதால் மனைவியை தந்திரமான வழிகளில் கொலை செய்து விடுகிறான். இப்படி ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் கணவனால் கொல்லப்படுகிறார்கள். அல்லது கணவன் இருந்தும் வாழாவெட்டியாக நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்.
இதற்கான ஒரே தீர்வு எளிதான விவாகரத்து தான்.
இது ஆணுக்கு மட்டுமல்ல; மனைவிக்கு கணவனைப் பிடிக்காமல் போனால் அவள் கணவனையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு இன்னொருவனுடன் ஓடிப் போகிறாள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக் காட்டுகிறாள்.
இது போன்ற சம்பவங்களும் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கில் நடக்கின்றன.
மிகப் பெரிய தீமைகள் பெண்களுக்கோ ஆண்களுக்கோ ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் விவாகரத்து சட்டம் உள்ளது. இதனால் சிறிய அளவில் பாதிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க சிறிய பாதிப்புகளைச் சகித்துக் கொள்வது தான் அறிவுடமை.
இந்தியாவில் மட்டும் அல்ல. உலகின் எல்லா நாடுகளிலும் விவாகரத்துச் சட்டங்கள் உள்ளன. விவாகரத்துச் சட்டம் இல்லாத ஒரு நாடு கூட உலகில் இல்லை.
தலாக் கூறுவதால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணம் கூறி முஸ்லிம் கணவனைச் சிறையில் தள்ளும் சட்டம் இயற்றுவோர், அதை ஆதரிப்போர் தமது மதத்துப் பெண்கள் விவாகரத்தினால் பாதிக்கப்படுவது பற்றி கவலைப்படவில்லை. இந்துப் பெண்கள் இந்துக் கணவர்களால் விவாகரத்து செய்யப்பட்டும், விவாகரத்து செய்யாமல் கைவிடப்பட்டும் அல்லல் படுகின்றனர். அவர்களின் கணவன்மார்களைச் சிறையில் தள்ளும் சட்டம் ஏன் இல்லை?
இது நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டியதாகும்.
தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்துக்கும், முஸ்லிமல்லாத மக்களின் விவாகரத்துக்கும் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
முஸ்லிமல்லாதவர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்றங்கள் பல அமர்வுகள் விசாரணை செய்து விவாகரத்து வழங்கும்.
இப்படி விவாகரத்து நடந்து விட்டால் தம்பதியர் நிரந்தரமாக பிரிந்து விடுவார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் தலாக் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஜமாஅத்தார் முன்னிலையில் விசாரித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
விவாகரத்து வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சட்ட வாசகங்களை மட்டும் தான் கவனிப்பார்கள். வழக்கு தொடுத்த தம்பதிகளின் குடும்பம் பற்றியோ இன்ன பிற சூழல் பற்றியோ அவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால் உள்ளூர் ஜமாஅத்தார்கள் அந்த தம்பதிகளுக்கு உறவினராக இருப்பார்கள். அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் நீதிமன்றங்களை விட உள்ளூர் ஜமாஅத்தார்களுக்குத் தான் அதிக அக்கறையும், இந்த விஷயத்தில் அதிக ஞானமும் இருக்கும்.
இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தலாக்கின் விதிமுறைகள்
ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும்.
பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும். விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும்.
இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும்.
இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது அவனுக்கு மனைவியின் குறைகள் மட்டுமின்றி அவளது அருமையும் தெரிய வரும். அதுபோல் கணவனைப் பிரிந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பது மனைவிக்கும் தெரிய வரும்.
இதனால் தன்னிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள். அவனிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள்.
தலாக் கூறும் முடிவு இதனால் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.
தலாக் என்ற நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மனைவியிடம் பெரிய குறைகள் இருந்தால் அடித்து திருத்தியாவது தலாக் கூறும் முடிவுக்குச் செல்லாமல் இஸ்லாம் தடுக்கப் பார்க்கிறது.
இதன் பின்னரும் இணக்கம் ஏற்படாவிட்டால் உடனே தலாக் கூற முடியாது. ஜமாஅத்துக்கு அவன் பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் அவனது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும், அவளது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும் ஜமாஅத்தார் நியமித்து அவர்கள் வழியாக சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இது முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனில் தெளிவான வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனங்களைப் பாருங்கள்!
சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 2:34
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 2:35
நடுவர்களை ஏற்படுத்துங்கள் என்று கூறப்படுவதால் ஆண்கள் சுயமாக தலாக் கூற முடியாது. மூன்றாம் தரப்பான ஜமாஅத் தலையீடு இதில் இருப்பது அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.
இந்த நான்கு நடவடிக்கைகளாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.
தலாக் மூன்று வாய்ப்புகள்:
தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டமாகும்.
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்)
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது மனைவி மாதவிடாய் நின்று போன பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.
இதற்கு எந்தச் சடங்கும் கிடையாது.
இது குறித்து திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனங்களைக் கீழே காண்க!
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 2:228
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன் 2:229
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:230
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! “அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:231
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:232
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:233
முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினாலும் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வது தான் அந்த வழி.
இவ்வாறு சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம்.
தலாக் கூறும் இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது.
முதல் வாய்ப்பைப் பயன்படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டு விடலாம். இதையும் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களில் இருந்து அறியலாம்.
இப்படி தலாக் கூறிய பின் உடனே மனைவியை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பக் கூடாது. மாறாக மூன்று மாத காலம் கணவன் வீட்டில் தான் அவள் இருக்க வேண்டும். இருவரும் எப்படியாவது சேர்ந்து கொள்ளமாட்டார்களா என்று கருணை கொண்டு அல்லாஹ் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறான்
இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.
திருக்குர்ஆன் 65:1
இருவரும் எப்படியாவது சேர்ந்து வாழ வேண்டும் என்ற அல்லாஹ்வின் கருணை இதில் வெளிப்படுகிறது.
முஸ்லிமல்லாத மக்கள் செய்து கொள்ளும் விவாகரத்தினால் அவர்கள் முழுமையாகப் பிரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஆனால் திருக்குர் ஆன் கூறும் தலாக் சட்டம் தற்காலிக விவாகரத்தாக இரு வாய்ப்புகளை வழங்கி அவர்கள் எப்படியாவது சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை செலுத்துகிறது.
உலகில் உள்ள எந்த நாட்டின் விவாகரத்து சட்டங்களையும் விட இஸ்லாத்தின் விவாக ரத்துச் சட்டம் பன்மடங்கு சிறந்து விளங்குகிறது.
எஸ் எம் எஸ் மூலம் தபால் மூலம், போன் மூலம் வாட்சப் மூலம் தலாக் சொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இது இஸ்லாத்தை அறியாத மூடர்களின் செயலாகும். ஏனெனில் விவாகரத்து செய்வதாக இருந்தாலும், பின்னர் சேர்ந்து கொள்வதாக இருந்தாலும் இரு சாட்சிகள் முன்னிலையில் தான் சொல்ல வேண்டும்.
இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
திருக்குர்ஆன் 65:2
சாட்சிகள் என்றால் தலாக் கூறுவதற்கும், சேர்வதற்கும் மட்டும் சாட்சிகள் என்று கருதக் கூடாது. மாறாக முன்னர் நாம் எடுத்துக் காட்டிய எல்லா வழிமுறைகளையும் அந்த ஆண் கடைபிடித்துள்ளானா என்பதையெல்லாம் அறிந்தவன் தான் சாட்சி சொல்ல வேண்டும். அநீதியாக சாட்சி கூற இஸ்லாத்தில் தடை உள்ளது.
எல்லா முயற்சிகளையும் கடைப்பிடித்து விட்டு இறுதியாகத் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளான் என்பதை அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.
இரண்டு முறை தலாக் கூறி சேர்ந்து வாழும்போது மீண்டும் தலாக் கூறும் முடிவுக்கு ஒருவன் வந்தால் அதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்.
அவளை அவன் விவாகரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:230
விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் சேர்வதற்கான வாசலை உலகில் எந்தச் சட்டமும் இந்த அளவுக்கு விசாலமாகத் திறந்து வைக்கவில்லை.
எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினரும் விவாக ரத்து செய்கின்றனர். அந்தச் சட்டங்களை விட பெண்களுக்கு அதிக நன்மை இஸ்லாம் கூறும் தலாக் சட்டத்தில் தான் உள்ளது.
இந்த நேரத்தில் முத்தலாக் என்பதற்கும் மூன்று தலாக் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முத்தலாக் – ஒரு விளக்கம்:
தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர். மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர்.
இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும்.
தலாக் என்றால் விடுவித்தல் என்பது பொருள். மூன்று தடவை விடுவித்தல் என்றால் மூன்று தடவை அது நிகழ வேண்டும். மூன்று என்ற வார்த்தையால் மூன்று தடவை நிகழ்ந்ததாக ஆகாது.
ஒரு மனிதன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலையை விட்டு நீக்குகிறார். அப்படி நீக்கும் போது உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன் என்று மூன்று தடவை கூறுகிறார். இப்படிக் கூறியதால் மூன்று தடவை நீக்கியதாக ஆகுமா? லட்சம் தடவை இச்சொல்லை அவன் சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் அர்த்தம். அல்லது மூன்று தடவை உன்னை நீக்கி விட்டேன் என்று சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் பொருள்.
நீக்கி விட்டு பின்னர் சேர்த்து பின்னர் நீக்கி பின்னர் சேர்த்து பின்னர் நீக்கினால் தான் மூன்று தடவை நீக்கியதாக ஆகும்.
ஒரு தலாக் சொன்னவுடன் அவள் மனைவியாக இருக்க மாட்டாள். அதன்பின் சொன்ன தலாக் மனைவியல்லாதவளுக்குச் சொன்னதாகத்தான் ஆகும். மீண்டும் சேர்த்துக் கொள்ளாமல் அடுத்த தலாக் கூறுதல் அறிவீனமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி சிலர் சொன்ன போது அது ஒரு தலாக் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.
صحيح مسلم –
أَنَّ أَبَا الصَّهْبَاءِ، قَالَ لِابْنِ عَبَّاسٍ: هَاتِ مِنْ هَنَاتِكَ، أَلَمْ يَكُنِ الطَّلَاقُ الثَّلَاثُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ وَاحِدَةً؟ فَقَالَ: قَدْ كَانَ ذَلِكَ، فَلَمَّا كَانَ فِي عَهْدِ عُمَرَ تَتَايَعَ النَّاسُ فِي الطَّلَاقِ، فَأَجَازَهُ عَلَيْهِمْ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) காலத்திலும், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது. உமர் (ரலி) ஆட்சியின் போது மக்கள் அதிகமாக தலாக் சொல்ல ஆரம்பித்த போது மூன்று தலாக் என்று சொன்னால் மூன்று தலாக் தான் என சட்டமாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: முஸ்லிம்
உமர் (ரலி) அவர்களுக்கோ மற்ற யாருக்குமோ நபிகள் காலத்தில் இருந்த சட்டத்தில் மாற்றம் செய்ய உரிமை இல்லை. அதை சட்டமாக ஏற்கும் அவசியம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்களின் சட்டம் இருக்கிறது என்று தெரிந்த பின்னர் நபியின் சட்டத்துக்கு எதிராக இயற்றபடும் சட்டத்துக்கு கட்டுப்படுவது பாவமாகும்.
மூன்று தலாக் என்று ஒருவன் கூறினால் அவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான்.
குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.
மூன்று தலாக் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் இனி மேல் மனைவியுடன் சேரவே முடியாது என்று சிலர் கருதுவது தான் மற்றவர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.
மூன்று தலாக் இஸ்லாத்தில் உள்ளது. முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விவாகரத்து செய்தால் கொடுத்த அன்பளிப்புகளை திரும்பக் கேட்கக் கூடாது
ஒருவன் மனைவியுடன் சேர்ந்து வாழும்போது கொடுத்த அன்பளிப்புகளை விவாகரத்தின் போதோ, அதன் பின்போ திரும்பப் பெறக்கூடாது.
அன்பளிப்பாக கொடுத்த பொருட்களை திரும்பப் பெறுவது அநாகரீகமான செயல் எனவும் அது கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُعْطِيَ عَطِيَّةً أَوْ يَهَبَ هِبَةً فَيَرْجِعَ فِيهَا إِلَّا الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ ثُمَّ يَرْجِعُ فِيهَا كَمَثَلِ الْكَلْبِ يَأْكُلُ فَإِذَا شَبِعَ قَاءَ ثُمَّ عَادَ فِي قَيْئِه رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர. கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் நாயைப் போன்றவராவார். நாய் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுக்கின்றது. பிறகு அந்த வாந்தியை மறுபடியும் உண்ணுகிறது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத்
2589 قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 2589
எனவே கணவன் மனைவிக்கு கொடுத்த அன்பளிப்பு களை விவாகரத்தின் போது திரும்பக் கேட்கக்கூடாது.
மனைவிக்குக் கொடுக்கும் பொருட்கள் நமக்குரியது தான் என்ற எண்ணத்தில் இன்றைக்குப் பல கணவன்மார்கள் மனைவிக்கு நகைகளைச் செய்து கொடுக்கின்றனர். அவர்கள் பெயரில் சொத்துக்களையும் வாங்கிப் போடுகின்றனர். ஆனால் திருமண உறவு இரத்த சம்மந்தம் போன்ற உறவு அல்ல. ஒரு நாள் அந்த உறவு முறிந்து போக வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனைவிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தவை விவாகரத்து ஏற்பட்டால் நமக்குக் கிடைக்காது என்பதை விளங்கித் தான் அன்பளிப்புகளைக் கொடுக்க வேண்டும்.
தனது சேமிப்புக்கும், தனது எதிர்காலத்துக்கும் உதவும் என்பதற்காக நகைகளை வாங்கினால் அதை மனைவியிடம் கொடுக்கும் போது தெளிவாகச் சொல்லி விட வேண்டும். இது எனக்குரியது தான். நீ பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர உனக்குரியதாகக் கருதக் கூடாது என்று தெளிவாகச் சொல்லி விட வேண்டும். இதற்கு இரண்டு சாட்சிகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது எழுதிக் கொள்ள வேண்டும்.
விவாகரத்து நடந்தாலும் இது மனைவிக்கு உரியது தான் என்று நீங்கள் நினைப்பதை மட்டும் அன்பளிப்பாகக் கொடுங்கள்.
அப்படிக் கொடுத்த பின்னர் அதை எக்காரணத்தினாலும் உரிமை அடிப்படையில் திரும்பக் கேட்க முடியாது. சில நெருக்கடிகள் வரும் போது மனைவியிடம் கேட்டு அவரும் மனப்பூர்வமாக திருப்பித் தந்தால் அது குற்றமாகாது. உரிமை கொண்டாடும் வகையில் கேட்டால் அது குற்றமாகும்.
பெண்களின் விவாகரத்து உரிமை
ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது ஏனெனில்
صحيح البخاري – 5273 عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்’ என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?’என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ‘சரி’ என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ‘தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு’ என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 5273, 5277
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
உலகில் உள்ள எந்த விவாகரத்து சட்டங்களையும் விட பெண்களுக்கு அதிக நன்மை பயக்கும் இஸ்லாமிய தலாக் சட்டத்தை உலக நாடுகள் தமது விவாகரத்து சட்டமாக ஆக்கலாம் என்ற அளவுக்கு சிறந்து விளங்குகிறது.
பெண்கள் விவாகரத்து கோரும் போது கணவனிடம் அவர்கள் இழப்பீடு கோர முடியாது.
குலா மூலம் திருமண உறவு ரத்துச் செய்யப்பட்ட பின்னர் பெண்கள் ஒரு மாத விடாய் காலம் திருமணம் செய்யக் கூடாது.
ஒரு மாதவிடாய் காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யலாம்.
سنن الترمذي – عَنْ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ، أَنَّهَا اخْتَلَعَتْ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ أُمِرَتْ أَنْ تَعْتَدَّ بِحَيْضَةٍ
ருபையிஃ பின்த் முஅவ்வித் என்ற பெண்மணி குலா மூலம் கணவனைப் பிரிந்த போது ஒரு மாதவிடாய்க் காலம் இத்தா இருக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடளையிட்டார்கள்
நுல் : திர்மிதி
குலா மூலம் பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்களுக்குள் திருமணம் செய்து கொண்டு வாழலாம்.
எவ்வளவு காலம் கழித்தும் திருமணம் செய்து கொள்ளலாம்.
தலாக்குக்கு மூன்று தடவை என்ற எண்ணிக்கை வரம்பு உள்ளது போல் குலாவுக்கு வரம்பு சொல்லப்படவில்லை.
எத்தனை தடவை குலா செய்தாலும் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து வாழ எந்த தடையும் இல்லை.
விவாகரத்துக்குப் பின் பெண்ணுக்கு இழப்பீடு
2:236, 2:241, 33:49, 65:6,7 ஆகிய விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு அழகிய முறையில் வாழ்க்கை வசதிகள் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இவ்வசனத்திற்கு அதிகமான அறிஞர்கள் தவறான விளக்கம் கொடுத்துள்ளதை நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதங்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும். இது இத்தா எனப்படுகிறது. இந்த மூன்று மாத காலத்திற்கு உரிய செலவுத் தொகையைக் கொடுப்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்று அந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் இவ்வாறு விளக்கம் கொடுப்பதற்கு திருக்குர்ஆன் 65:6 வசனத்தை சான்றாகக் கொள்கின்றனர். இவ்வசனத்தில் விவாகரத்து செய்யப்படும் போது கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. எனவே இத்தா காலத்துக்கு மட்டும் தான் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இவர்களின் இந்த வாதம் முற்றிலும் தவறாகும். கணவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அவளுக்கு மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் 65:6 வசனம் கூறுகிறது.
65:6 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனித்திருந்தால் இவ்வாறு விளக்கம் சொல்லியிருக்க மாட்டார்கள்.
இத்தா காலத்திற்கான செலவுத் தொகையைத் தான் இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான் என்றால் இத்தா காலத்தில் என்று சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் அழகிய முறையில் வழங்க வேண்டும் எனவும், நியாயமான முறையில் வழங்க வேண்டும் எனவும் கூறுகிறான்.
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதங்கள் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.
தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப்படுகிறதோ அது தான் நியாயமானது.
திருக்குர்ஆன் 2:236 வசனத்தில் வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் பாதுகாப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவனாக இருந்தால் அவனது வசதிக்கேற்ப அவனிடமிருந்து கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் விவாகரத்துக்குப் பின் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். விவாகரத்து செய்யாமல் அவர்கள் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் வரதட்சணையைக் திருப்பிக் கொடுப்பது அவசியமாகும்.
எனவே வரதட்சணையைத் திரும்பப் பெற்றுக் கொடுப்பதற்கும், விவாகரத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. விவாகரத்துச் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு போதுமான ஜீவனாம்சம் பெற்றுக் கொடுப்பது ஜமாஅத்துகள் மீது கடமையாகும்.
முஸ்லிம் சமுதாயம் இந்த இறைக்கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் பலவிதமான விமர்சனங்களைச் சந்திக்கின்றது. இஸ்லாமுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு இது பயன்படுத்தப்படுகிறது. மாதந்தோறும் வழங்கும் போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.
எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
நமது நாட்டில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு மாதந் தோறும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தை முஸ்லிம்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுப்பப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு உள்ள தனி ஷரீஅத் சட்டத்தை நீக்கிவிட்டு பொதுச் சட்டத்தின் கீழ் அவர்களையும் கொண்டுவர வேண்டும் என்ற பிரச்சாரமும் இதை ஒட்டி செய்யப்படுகின்றது.
விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. பெண்களுக்கு அநீதி இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்யவும், இதை விடச் சிறந்த ஏற்பாட்டைச் செய்யவுமே இதை நிராகரிக்கின்றது.
மாதாமாதம் ஜீவனாம்சம் பெறுவதற்காக அதில் பாதியளவு வழக்கிற்குச் செலவிடப்படுகிறது. இச்சுமையைப் பெண் சுமக்கிறாள்.
கள்ளக் கணக்குக் காட்டி ஜீவனாம்சம் கொடுப்பதிலிருந்து பெரும்பாலான கணவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். அல்லது அற்பமான தொகையைக் கொடுத்து ஏமாற்றுகின்றனர்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நாடுகளில் அப்பெண் மறுமணம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஜீவனாம்சம் கொடுக்கப்படுகின்றது. மறுமணம் செய்து விட்டால் முந்தைய கணவன் ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை என்று இந்த நாடுகளிலுள்ள சட்டம் கூறுகின்றது.
எனவே, மாதாந்தோறும் முறையாக ஜீவனாம்சம் கிடைத்து வந்தால் அந்தப் பெண் மறுமணம் செய்ய மாட்டாள். ஏனெனில் மறுமணம் செய்தால் ஜீவனாம்சம் பெறமுடியாது. ஜீவனாம்சத்தின் மூலம் பொருளாதாரப் பிரச்சினை ஓரளவு தீர்ந்து விட்டாலும், அவளது உணர்வுகளுக்கு இதில் தீர்வு ஏதுமில்லை. சிலர் தவறான நடத்தையில் ஈடுபட இது தூண்டும்.
இந்தக் காரணத்துக்காகத் தான் போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.
விவாகரத்து செய்யப்பட்டால் அந்த நேரத்தில் கணவனின் வசதிக்குத் தக்கவாறு ஒரே நேரத்தில் போதுமான இழப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பதுதான் உண்மையான ஜீவனாம்சமாகும்.
மனைவியின் மீது கணவன் விபச்சாரக் குற்றம் சுமத்தி திருமணத்தை முறித்தல்
ஒருவர் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துபவர் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டம். ஆனால் மனைவியின் மீது கணவன் இவ்வாறு குற்றம் சுமத்தும் போது தனது குற்றச்சாட்டை நிரூபிக்க நான்கு சாட்சிகள் இல்லாவிட்டால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை 24:6-9 வசனங்கள் கூறுகின்றன.
மனைவி நடத்தை கெட்டவள் எனக் குற்றம் சாட்டும் கணவனுக்கு தன்னைத் தவிர வேறு சாட்சி இல்லாவிட்டால் தான் சொல்வது உண்மையே என நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவையாக நான் கூறுவது பொய்யாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது ஏற்படட்டும் என்று அவன் கூற வேண்டும்.
இதைத் தொடர்ந்து அவனது மனைவி நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதை மறுக்க வேண்டும். ஐந்தாவது தடவை நான் சொல்வது பொய்யாக இருந்தால் என் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் எனக் கூற வேண்டும். இந்த விபரங்கள் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளன.
இவ்வாறு இருவரும் கூறிய உடன் இருவருக்கும் இடையே இருந்த திருமண உறவு தானாக முறிந்து விடும். இதன் பின்னர் மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ அனுமதி இல்லை. மேலும் அவள் பெற்ற குழந்தை தன்னுடையது அல்ல என்று அவன் மறுத்தால் அந்தக் குழந்தை தாயுடன் சேர்க்கப்படும். அவனது குழந்தையாகக் கருதப்படாது. தாயின் சொத்துக்கு அக்குழந்தை வாரிசாகும். தந்தையின் சொத்துக்கு வாரிசாகாது.
இதற்கான சான்றுகள் வருமாறு:
صحيح البخاري – 4746 – حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ: أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلًا رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ، فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ؟ فَأَنْزَلَ اللَّهُ فِيهِمَا مَا ذُكِرَ فِي القُرْآنِ مِنَ التَّلاَعُنِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ قُضِيَ فِيكَ وَفِي امْرَأَتِكَ، قَالَ: فَتَلاَعَنَا وَأَنَا شَاهِدٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَارَقَهَا فَكَانَتْ سُنَّةً أَنْ يُفَرَّقَ بَيْنَ المُتَلاَعِنَيْنِ، وَكَانَتْ حَامِلًا فَأَنْكَرَ حَمْلَهَا، وَكَانَ ابْنُهَا يُدْعَى إِلَيْهَا، ثُمَّ جَرَتِ السُّنَّةُ فِي المِيرَاثِ أَنْ يَرِثَهَا وَتَرِثَ مِنْهُ مَا فَرَضَ اللَّهُ لَهَا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அப்போது அல்லாஹ் அந்தக் கணவன் மனைவி தொடர்பாக ‘லிஆன்’ எனும் சட்டத்தை அருளினான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது என்று சொன்னார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் ‘லிஆன்’ செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (அன்றிலிருந்து) அந்த நிகழ்ச்சியே ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதற்கு முன்மாதிரியாகி விட்டது. அப்பெண் கருவுற்றிருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை (தனக்குரியது என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டு வந்தான். பிறகு அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
நூல் : புகாரீ 4746, 4748
صحيح البخاري – 5311 – حَدَّثَنِي عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عُمَرَ: رَجُلٌ قَذَفَ امْرَأَتَهُ، فَقَالَ: فَرَّقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَخَوَيْ بَنِي العَجْلاَنِ، وَقَالَ: اللَّهُ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ فَأَبَيَا، وَقَالَ: اللَّهُ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ فَأَبَيَا، فَقَالَ: اللَّهُ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ فَأَبَيَا، فَفَرَّقَ بَيْنَهُمَا قَالَ أَيُّوبُ: فَقَالَ لِي عَمْرُو بْنُ دِينَارٍ، إِنَّ فِي الحَدِيثِ شَيْئًا لاَ أَرَاكَ تُحَدِّثُهُ؟ قَالَ: قَالَ الرَّجُلُ مَالِي؟ قَالَ: قِيلَ: لاَ مَالَ لَكَ، إِنْ كُنْتَ صَادِقًا فَقَدْ دَخَلْتَ بِهَا، وَإِنْ كُنْتَ كَاذِبًا فَهُوَ أَبْعَدُ مِنْكَ
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் மனைவி மீது விபச்சாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன)? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (இதைப் போன்ற நிலையில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள். பிறகு உங்களிருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்றார்கள். உடனே அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மூன்றாம் முறையாக அதைப் போன்றே) உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரித் திரும்புகிறவர் உண்டா? என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தார்கள். ஆகவே, அவர்கள் இருவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸில் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைத் தாங்கள் கூறவில்லை என்றே கருதுகிறேன் என்று என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அந்த மனிதர், (மஹ்ராக நான் அளித்த) எனது பொருள் (என்ன ஆவது)? என்று கேட்டார். அதற்கு அவரிடம், (உம்முடைய மனைவி மீது நீர் சுமத்திய குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர்! (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்லியிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அந்தச் செல்வம் உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது என்று கூறப்பட்டது.
நூல் : புகாரீ 5311
கணவன் அவளை அம்பலப்படுத்தாமல் அவளிடமிருந்து விலகி விட விரும்பினால் தலாக் கூறிப் பிரிந்து கொள்ளலாம்.
அல்லது அவன் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் முடிவு எடுத்தால் அதற்கான உரிமை அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தம்பதிகளுக்கிடையே மணமுறிவு ஏற்பட்டால் குழந்தைகள் யாருக்கு
தலாக் மூலமோ குலா மூலமோ கணவன் மனைவியர் பிரிந்து விட்டால் அவர்களின் குழந்தைகள் விஷயமாக என்ன முடிவு எடுப்பது?
தாயிடம் ஒப்படைக்கப்பட்டாலும், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டாலும் பிள்ளைகளின் பொருளாதாரச் செலவு தந்தையைத் தான் சேரும்.
பால் குடிக்கும் பருவத்தில் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக தாய்க்கு கட்டணம் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
தாய்ப்பால் என்பது இயற்கையாக சுரக்கக் கூடியது. கணவன் மனைவி சேர்ந்து வாழும் போது குழந்தைக்குப் பாலூட்ட கட்டணம் எதுவும் தாய்க்குக் கொடுக்க வேண்டியதில்லை.
திருமணம் ரத்தாகி விட்டால் பாலூட்டும் பொறுப்பு கணவனைச் சேரும். அதாவது தாய்க்கு கட்டணம் கொடுத்து பாலூட்டச் செய்யலாம். அல்லது செவிலித்தாய் மூலம் பாலுட்டச் செய்யலாம். இதற்கான ஆதாரம் வருமாறு:
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:233
பாலூட்டும் செலவே தந்தையைச் சேர்ந்தது என்றால் உணவு, உடை உள்ளிட்ட செலவுகள் நிச்சயம் தந்தையைச் சேர்ந்தது தான் என்பதில் ஐயமில்லை.
குழந்தை யாரிடம் வளர வேண்டும் என்பது குறித்து இருவரும் கலந்து ஆலோசித்து குழந்தை விஷயமாக என்ன முடிவு எடுத்தாலும் அவர்களுக்கு அந்த உரிமை உள்ளது. அது தான் சிறந்தது.
நாம் பிரிந்து விட்டாலும் குழந்தை எங்கே வளர்வது குழந்தைக்கு நல்லது என்று பொறுப்புடன் தாங்களாக பேசி முடிவு செய்ய முயல வேண்டும். அல்லது ஜமாஅத்தார் முன்னிலையில் பேசி இணக்கமான முடிவு காண வேண்டும். வரட்டுப் பிடிவாதம் பிடித்து குழந்தையின் எதிர்காலத்தை வீணாக்கி விடக் கூடாது.
பேச்சு வார்த்தை மூலம் அவர்கள் மத்தியில் இணக்கம் ஏற்படாவிட்டால் விபரமறியாத பருவத்துக் குழந்தையாக இருந்தால் அந்தக் குழந்தை தாயிடம் தான் வளர வேண்டும். ஆனால் அந்தத் தாய் வேறு திருமணம் செய்யாத வரை தான் இந்த உரிமை உண்டு. அவள் வேறு திருமணம் செய்து கொண்டால் அந்த உரிமை இல்லை.
سنن أبي داود – 2276 – حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ السُّلَمِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ أَبِي عَمْرٍو يَعْنِي الْأَوْزَاعِيَّ، حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنِي هَذَا كَانَ بَطْنِي لَهُ وِعَاءً، وَثَدْيِي لَهُ سِقَاءً، وَحِجْرِي لَهُ حِوَاءً، وَإِنَّ أَبَاهُ طَلَّقَنِي، وَأَرَادَ أَنْ يَنْتَزِعَهُ مِنِّي، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْتِ أَحَقُّ بِهِ مَا لَمْ تَنْكِحِي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மகனுக்கு என்னுடைய வயிறு பாத்திரமாகவும், என்னுடைய மார்பு தண்ணீர் பையாகவும், என்னுடைய மடி வசிப்பிடமாகவும் இருந்தது. அவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டார். இப்பொழுது என்னிடமிருந்து என் மகனைப் பறித்துக்கொள்ள முயல்கிறார் என்று சொன்னார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ மறுமணம் செய்து கொள்ளாத வரை நீயே உன்னுடைய மகனுக்கு மிகவும் உரிமையுள்ளவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
நூல் : அபூதாவூத்
குழந்தை விபரமறியும் பருவத்தில் இருந்தால் அந்தக் குழந்தை யாரைத் தேர்வு செய்கிறதோ அதன் படி உடிவு செய்ய வேண்டும்.
سنن النسائي – عَنْ أَبِي مَيْمُونَةَ، قَالَ: بَيْنَا أَنَا عِنْدَ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: إِنَّ امْرَأَةً جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: فِدَاكَ أَبِي وَأُمِّي، إِنَّ زَوْجِي يُرِيدُ أَنْ يَذْهَبَ بِابْنِي وَقَدْ نَفَعَنِي وَسَقَانِي مِنْ بِئْرِ أَبِي عِنَبَةَ، فَجَاءَ زَوْجُهَا وَقَالَ: مَنْ يُخَاصِمُنِي فِي ابْنِي؟ فَقَالَ: يَا غُلَامُ، هَذَا أَبُوكَ وَهَذِهِ أُمُّكَ فَخُذْ بِيَدِ أَيِّهِمَا شِئْتَ، فَأَخَذَ بِيَدِ أُمِّهِ، فَانْطَلَقَتْ بِهِ
ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் மகனை என (முன்னால்) கணவர் எடுத்துக் கொள்ள விரும்புகிறார் என்று முறையிட்டார். அதைத் தொடர்ந்து கணவரும் வந்து முறையிட்டார். என் பிள்ளை விசயத்தில் யார் உரிமை கொண்டாட முடியும் என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவனை நோக்கி சிறுவனே இதோ உன் தந்தை! இதோ உன் தாய்! இருவரில் யார் விருப்பமோ அவரது கையைப் பிடி என்றார்கள். அந்த சிறுவன் தாயின் கையைப் பிடித்தான். அந்தப் பெண் சிறுவனை எடுத்துக் கொண்டார்
நூல் : நஸாயி
سنن النسائي – – عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ سَلَمَةَ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ: أَنَّهُ أَسْلَمَ وَأَبَتْ امْرَأَتُهُ أَنْ تُسْلِمَ، فَجَاءَ ابْنٌ لَهُمَا صَغِيرٌ لَمْ يَبْلُغِ الْحُلُمَ، فَأَجْلَسَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَبَ هَاهُنَا وَالْأُمَّ هَاهُنَا ثُمَّ خَيَّرَهُ، فَقَالَ: اللَّهُمَّ اهْدِهِ فَذَهَبَ إِلَى أَبِيهِ
அப்துல் ஹமீத் என்பார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரது மனைவி இஸ்லாத்தை ஏற்க மறுத்து விட்டார். (இதனால் மணமுறிவு ஏற்பட்டது) பருவமடையாத அவர்களின் மகனும் வந்தார். நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் தாயை ஒரு பக்கம் அமர வைத்தார்கள். தந்தையை இன்னொரு பக்கம் அமரச் செய்தார்கள். பிறகு அந்தச் சிறுவனின் விருப்பத்தில் விட்டார்கள். இறைவா இந்தச் சிறுவனுக்கு நல்வழி காட்டு என்று துஆ செய்தார்கள். அந்தச் சிறுவன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டார்.
நூல் : நஸாயீ
யாரிடம் குழந்தை வளர்ந்தாலும் அந்த இருவருமே பெற்றோர்கள் என்ற உறவு மாறாது.
இவர் தான் உன் தந்தை! இவர் தான் உனது தாய் என்று சொல்லி வளர்க்க வேண்டும். தாய் தந்தை இருவருக்குமான கடமையைச் செய்து மறுமையில் தங்கள் பிள்ளைகள் வெற்றி பெற வேண்டும் என நினைக்க வேண்டும்
பகையை ஊட்டி உறவைப் பிரிக்கக் கூடாது.
பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன்: 4:32
மேற்கண்ட வசனத்தில் பெண்கள் சம்பாதித்ததில் அவர்களுக்கு பங்கு உண்டு என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பெண்கள் சம்பாதிக்கலாம் என்ற அனுமதி நேரடியாக வழங்கப்படுகின்றது. பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் விவசாயப் பணியை செய்திருக்கிறார்கள். அதை நபி(ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.
2727 أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ طُلِّقَتْ خَالَتِي فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ فَأَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَلَى فَجُدِّي نَخْلَكِ فَإِنَّكِ عَسَى أَنْ تَصَدَّقِي أَوْ تَفْعَلِي مَعْرُوفًا رواه مسلم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (இத்தாவில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபிகள் நாயகம் (ஸல்) (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள், “ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள்.
நூல்: முஸ்லிம்
938حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ رواه البخاري
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்.
நூல்: புகாரி (938)
பெண்கள் வேலைக்குச் செல்லலாம் என்றாலும் தற்காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது அவ்வளவு சிறந்ததல்ல. ஏனென்றால் தற்காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏராளமான மார்க்க நெறிமுறைகளை மீறக்கூடிய நிலை ஏற்படுகிறது. இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணி பெண்கள் தற்காலத்தில் வேலைக்கு செல்வதென்பது கடினமான விஷயமாக உள்ளது.
குடும்பத்துக்காக பொருளீட்டும் பொறுப்பு ஆண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ (34)4
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
திருக்குர்ஆன் 4:34
2554حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلَا فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
நூல்: புகாரி 2554
பெண் தன் கணவனையும் கணவனின் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும். இது பெண்ணுடைய பொறுப்பாகும். இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதில்லை.
ஆண்கள் மீது சுமத்தப்பட்ட பொருளீட்டும் பொறுப்பை இவர்கள் தங்கள் கையில் எடுத்ததன் விளைவு தாங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகளை இவர்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. மேலும் வேலைக்குச் செல்லும் இடத்தில் அந்நிய ஆண்களுடன் தனித்திருத்தல் அந்நிய ஆண்களுடன் குலைந்து பேசுதல் ஹிஜாபைப் பேணாமல் இருத்தல் போன்ற ஒழுக்கக் கேடுகளும் ஏற்படுகின்றன.
மார்க்கக் கடமைகளை மீறுவதற்கு ஒரு செயல் காரணமாக இருந்தால் அந்தச் செயலும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதாகும்.
எனவே பெண்கள் வேலைக்குச் சென்றால் மார்க்க நெறிமுறைகள் மீறப்படுமேயானால் அப்போது அவர்கள் வேலைக்குச் செல்வது கூடாது. மார்க்க ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு தனது பொறுப்புகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் வேலை செய்தால் அது மார்க்கத்தில் தவறல்ல.
ஆண்களும் பெண்களும் சேர்ந்து படித்தல்
கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது.
ஆயினும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பயிலும் முறையை மட்டும் தான் இஸ்லாம் எதிர்க்கிறது.
புகழ்ச்சியில் மயங்கி தம்மை இழப்பவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர்.
கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும், சக மாணவர்களால் ஏமாற்றப்படும் செய்திகளும் அன்றாடச் செய்திகளாகி விட்டன.
இவ்வாறு சேர்ந்து படிப்பதால் தான் ஆண்களின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது.
பெண்கள் தனியாகப் படித்தால் படிப்பு ஏறாது என்று கூற முடியாது.
எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவது தான் அவர்களுக்குப் பாதுகாப்பானது என இஸ்லாம் கூறுகிறது.
பேருந்துகளில் கூட ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பேருந்துகளில் விடப்படுகின்றன.
ஒரே பேருந்து விடப்படும் இடங்களில் இருவருக்கும் தனித்தனி வழியும் இடமும் ஒதுக்கப்படுகிறது.
சிறிது நேரப் பயணத்தின் போதே இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கை என்றால் காலமெல்லாம் ஆண்களுடனே பெண்களை விட்டால் என்னவாகும்?
ஏமாற்றப்படும் அபலைகள் எண்ணிக்கை பெருகி வருவதைக் கண்கூடாகக் கண்ட பின் இதை யாரும் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாத பெண்களும் கூட பெண்களுக்கே உள்ள கல்லூரிகளில் படிப்பதே பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.
ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பதால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன? இதனால் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதைத் தனி நூலாகவே எழுதலாம்.
ஏமாற்றப்படும் அபலைகள் பற்றிய செய்தி செய்தித் தாள்களில் அன்றாடம் இடம் பிடித்து வருவதே இதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.
சிறுமிகளுக்கு திருமணம் கூடுமா
சிறுமிகளுக்கு திருமணம் செய்யலாம் என்ற கருத்து சில முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமியாக இருக்கும் போது திருமணம் செய்துள்ளதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரங்கள் உள்ளன.
இதை ஆதாரமாகக் கொண்டு ஆறு வயது சிறுமியை நாம் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது.
இதைப் புரிந்து கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் சில அடிப்படை உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் இறைவனால் நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் முஸ்லிம்களின் இந்த நம்பிக்கை குறித்து அறிந்து வைத்துள்ளனர்.
இறைவனால் கடமையாக்கப்பட்ட இந்தச் சட்டங்கள் யாவும் ஒரே நேரத்தில் முழுமையாக நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டதா? என்றால் அவ்வாறு வழங்கப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாற்பதாவது வயதில் இறைவனிடத்தில் செய்திகள் வரத் துவங்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை 23 வருடங்களாக சிறிது, சிறிதாக இச்சட்டங்கள் அருளப்பட்டன.
இச்சட்டங்கள் அருளப்படுவதற்கு முன்னால் அந்தச் சமுதாயத்தில் நிலவிய வழக்கப்படியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்டார்கள்.
அக்காவையும், தங்கையையும் ஒரே நேரத்தில் மணந்து கொள்ளும் வழக்கம் அன்றைய சமுதாயத்தில் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் முஸ்லிம்களில் சிலர் இவ்வழக்கத்தின்படியே மணந்து கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடாது என்று இறைவனிடமிருந்து தடை வரும் வரை இந்த நிலை நீடித்தது.
ஆரம்ப காலத்தில் போதைப் பொருட்கள் தடுக்கப்படாமல் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் ஏற்கனவே போதை பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைத் தொடர்ந்தார்கள். போதைப் பொருள் தடை செய்யப்படும் வரை இதே நிலை நிலவியது.
இதுபோல திருமணத்தின் ஒழுங்குகளும், விதிமுறைகளும் இறைவனால் வழங்கப்படுவதற்கு முன் அன்றைய அரபுச் சமுதாயம் சிறுமிகளைத் திருமணம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்று சட்டம் வருவதற்கு முன்னர் பலரும் இவ்வாறு செய்து வந்தனர்.
இதன் பின்னர் சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் வந்தது. இவ்வாறு சட்டம் வந்த பின் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வது அறவே தடுக்கப்பட்டு விட்டது.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.
திருக்குர்ஆன் 2:228
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.
திருக்குகுர்ஆன் 4:19
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.
திருக்குர்ஆன் 4:21
صحيح البخاري – 5136 أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: أَنْ تَسْكُتَ
விதவையாக இருந்தால் அவளது உத்தரவு பெறாமல் திருமணம் செய்விக்கக் கூடாது. கண்ணிப் பெண்ணாக இருந்தால் அவளது அனுமதியில்லாமல் திருமணம் செய்விக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! கன்னிப்பெண்ணின் அனுமதி எப்படி? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவள் மவுனமாக இருப்பதே (சம்மதம்) என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 5136
திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தம் என்றும், பெண்களின் சம்மதம் அவசியம் என்றும் மேற்கண்ட வசனங்களும், நபிமொழியும் அறிவிக்கின்றன.
ஒரு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதில் பங்கெடுப்பவர்கள் அது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். சாதக பாதகங்களை உணர்ந்து ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது ஒப்பந்தமாகக் கருதப்படும். ஐந்து வயதுச் சிறுவன் தன் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்தால் எவ்விடத்திலும் அது செல்லாது. உலகில் எந்தச் சட்டத்தின் படியும் அது செல்லாது.
திருமண வாழ்வு என்பது சொத்தை விட முக்கியமானது. திருமணம் என்றால் என்ன? அதன் கடமைகள் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத சிறுமி அது குறித்து எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்?
எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வதும், சிறுவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாம் எனக் கூறுவது தவறாகும்.
சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்?
இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமம் என்று 2:282 வசனம் கூறுகிறது.
அதிகமான மக்களுக்கு இதில் நெருடல் உள்ளது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத்திறனுக்கும் சான்றாக உள்ளது. சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத்திறனும், நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ள போது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருதுவது ஏன் என்று சிலர் நினைக்கலாம்.
பெண்களுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவுத்திறனும் உள்ளதை இஸ்லாம் மறுக்கவில்லை. சில விஷயங்களில் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாக அந்தத் தகுதிகள் உள்ளதையும் இஸ்லாம் மறுக்கவில்லை.
“கூரிய மதி உடைய ஆணின் அறிவையே செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பெண்களுக்குத் திறமை உண்டு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரீ 304, 1462
அன்னை ஆயிஷா (ரலி), அன்னை உம்மு ஸலமா (ரலி) போன்ற பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கே பாடம் சொல்லித் தருமளவிற்கு நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். ஆண்களை மிஞ்சுமளவுக்கு அவர்களின் அறிவுத் திறமை மேலோங்கியிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகள் இதற்குச் சான்றுகளாக உள்ளன.
சாட்சியம் கூறுவதற்கு நினைவாற்றல் என்ற தகுதி மட்டும் போதுமா? என்றால் நிச்சயமாகப் போதாது! சாட்சியத்துக்கு முக்கியமான தகுதி என்னவென்றால் கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல், திரிக்காமல் உள்ளதை உள்ளபடி கூற வேண்டும். இந்தத் தகுதி தான் சாட்சியம் கூறுவதற்கு மிக முக்கியம்.
சாட்சியம் என்பது உண்மையைக் கண்டுபிடிக்க உதவுவதும், இன்னொருவரின் எதிர்காலத்தை முடிவு செய்வதுமாகும்.
சாட்சியம் சொல்லும் போது கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும். கூட்டி, குறைத்து சாட்சியம் சொன்னால் நிரபாராதி குற்றவாளியாக்கப்படுவான். குற்றவாளி நிரபராதியாக்கப்படுவான்.
இந்த விஷயத்தில் ஆண்களும், பெண்களும் சமமாக இல்லை என்று இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிந்திப்பது, மனனம் செய்வது உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது. ஆண்களின் மூளைக்கும், பெண்களின் மூளைக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை 100 கிராம் அதிக அளவு கொண்டதாகப் படைக்கப்பட்டுள்ளது. சிந்தித்தல், மனனம் செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், கற்பனை செய்தல், ஆசைப்படுதல், கோபப்படுதல் என ஒவ்வொன்றுக்கும் மூளையில் குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிந்தித்து, ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்தல் ஆண் பெண் இருபாலருக்கும் உள்ளது என்றாலும் ஆண்களின் மூளையில் பெண்களின் மூளையை விட 13 சதவிகிதம் நியூட்ரான்கள் அதிகமாக உள்ளன. இதனால் பெண்களை விட ஆண்கள் சிந்தித்து முடிவு செய்வதில் சிறந்து விளங்குகிறார்கள்.
மூளையின் நினைவாற்றல் பகுதி ஆண்களை விட பெண்களுக்கு 11 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.
இதனால் தான் மனனம் செய்கிற துறையில் பெண்கள் பிரகாசிக்கிறார்கள். பள்ளிக்கூடப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதில் அதிகமானவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். பிள்ளை பிறந்த தேதி, திருமண தேதி, முக்கிய நாட்களின் தேதி போன்றவற்றை மிகச் சரியாகச் சொல்பவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். ஆண்கள் இதில் பின் தங்கியே இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் சிந்திக்கும் சக்தி பெண்களுக்கு ஆண்களை விட குறைவாகத் தான் இருக்கும். உலகில் அதிகமான சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆண்களில் தான் அதிகம் இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ஆண்களாகத் தான் இருக்கிறார்கள்.
மேலும் கற்பனை செய்யும் தன்மை பெண்களின் மூளையில் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.
தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ்சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.
பதற்றமின்றிப் பொய் சொல்வதில் ஆண்களை விடப் பெண்களே வல்லவர்களாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளிடம் உண்மை கண்டறிவதற்காகக் கருவிகளின் மூலம் சோதனை நடத்தப்படுகின்றது. பொய் சொல்லும் போது ஏற்படும் பதற்றத்தால் மூளையில் உண்டாகும் அதிர்வுகளைக் கருவிகள் பதிவு செய்கின்றன. சொல்வது உண்மையா, பொய்யா என்பதை இதைக் கொண்டு தீர்மானிக்கின்றனர்.
இந்தச் சோதனைகளின் போது பெண்கள் பொய் சொன்னால் பெரும்பாலும் கருவிகளில் அது துல்லியமாகத் தெரிவதில்லை. ஆண்கள் பொய் சொல்வதைத் தான் இக்கருவிகள் கண்டுபிடிக்கின்றன. பதற்றமோ, உறுத்தலோ இல்லாமல் பெண்கள் சகஜமாகப் பொய் சொல்வதால் அதைக் கருவிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
இதே போன்று நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணையின் போதும் பெண்கள், பதற்றமோ, தடுமாற்றமோ இன்றிப் பொய் சொல்வதால் அதைப் பொய்யென்று கண்டறிவது சிரமம்.
எனவே இரண்டு பெண்களின் சாட்சியம், ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் சரியானது தான் என்பதில் சந்தேகம் இல்லை.
வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு
வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று 4:11, 4:176 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
சொத்துரிமையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பாகுபாடு காட்டுவது நியாயமில்லை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் சொத்துரிமையில் வேற்றுமை காட்டுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களிலும் கூட பெரும்பாலும் இதே நிலை தான்.
2, பெற்றோர்கள் தள்ளாத வயதில் ஆண் மக்களால் தான் பராமரிக்கப்படுகின்றனர். பெண்கள் தமது கணவனின் பெற்றோர்களைத் தான் பராமரிக்க முடியும். பெற்றோர் பொருள் திரட்ட முடியாத நிலையை அடையும் போது அவர்களைக் கவனிப்பதும் ஆண் பிள்ளைகள் தான். எனவே அவர்களுக்கு இரு மடங்கு அளிப்பது நியாயமே!
3, ஒரு பெண் தனது புகுந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டால் தனது சகோதரனின் தயவில் வாழும் நிலை ஏற்படும். “எனக்குக் கிடைத்த அளவு சொத்து உனக்கும் தானே கிடைத்தது; எனவே உன்னை நான் ஏன் பராமரிக்க வேண்டும்” என்று சகோதரன் நினைக்காமல் அன்புடன் அவளை அரவணைக்க இந்த வேற்றுமை அவசியமாகிறது.
4, ஆண்களுக்குக் கிடைக்கும் அளவு சொத்துக்கள் பெண்களுக்கும் வழங்கப்பட்டால் அதைப் புகுந்த வீட்டில் தந்திரமாகவும், மிரட்டியும், ஏமாற்றியும் பறித்துக் கொள்வர். அனைத்தையும் புகுந்த வீட்டில் பறிகொடுத்து விட்டு, பிறந்த வீட்டுக்கு வந்தால் அவளுக்கு மரியாதை இருக்காது.
5, ஆணுக்குக் கிடைப்பதில் பாதி அளவு அவளுக்குக் கிடைத்தாலும் சகோதரன் வழியாக வேறு விதத்தில் அவளுக்கே திரும்பக் கிடைக்கின்றது.
6, ஒவ்வொருவரும் தமது சொத்துக்கள் தமது குடும்பத்துக்குள்ளேயே சுற்றி வர வேண்டும் என ஆசைப்படுவர். பெண்களுக்குச் சம அளவில் சொத்துக் கிடைக்கும் போது அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடும்.
7, தந்தையின் சொத்துக்களைப் பெருக்குவதில் பெண்களை விட ஆண்களே பெரிதும் பங்காற்றி வருகின்றனர். தந்தை விட்டுச் சென்ற சொத்துக்களில் அவர் சம்பாதித்ததை விட அவரது ஆண் பிள்ளைகளின் உழைப்பால் அதிகம் பெருகியிருக்கும். பெண் பிள்ளைகள் பெரும்பாலும் சொத்தை வளர்ப்பதில் பங்கெடுக்க மாட்டார்கள். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
8, இவை தவிர பெண்களுக்காக தந்தை நகைகளையும், ஆபரணங்களையும் செய்து போடுகிறார். இவை அலங்காரப் பொருட்களாக மட்டுமின்றி பெரிய சொத்தாகவும் உள்ளது. இது போன்ற பொருட்களை ஆண் மக்களுக்காக தந்தை வழங்குவதில்லை. இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
9, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கினால், பெற்றோரை முதிய வயதில் நாம் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆண் மக்களுக்குத் தோன்றும். புகுந்த வீட்டில் வாழும் பெண்களால் பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போகும்.
இதனால் முதியோர் இல்லங்கள் பெருகும். பெற்றோர் நாதியற்று விடப்படுவார்கள். இவற்றைக் கவனத்தில் கொண்டே இஸ்லாம் இதில் வேற்றுமை காட்டியுள்ளது.
பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது; பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!