செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா?
செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்க்க இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. சில பிராணிகளை வீட்டில் வளர்க்கலாகாது என்பது பிற மதத்தவர்களிடமிருந்து நம்மவர்கள் படித்துக் கொண்ட மூடக் கொள்கைகள்.
ஆயினும், உயிரினங்களை வளர்ப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகள் உள்ளன. அவற்றை அவசியம் பேண வேண்டும்.
صحيح مسلم 5171 – وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَدِىٍّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا ».
உயிருள்ள எதனையும் (அம்பு எய்து பழகுவதற்கான) இலக்காக ஆக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் 3617
صحيح البخاري 5513 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، قَالَ: دَخَلْتُ مَعَ أَنَسٍ، عَلَى الحَكَمِ بْنِ أَيُّوبَ، فَرَأَى غِلْمَانًا، أَوْ فِتْيَانًا، نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا، فَقَالَ أَنَسٌ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُصْبَرَ البَهَائِمُ»
உயிர்ப் பிராணிகள் வதைக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 5513
صحيح مسلم 5674 – وَحَدَّثَنِى سَلَمَةُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ حَدَّثَنَا مَعْقِلٌ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَرَّ عَلَيْهِ حِمَارٌ قَدْ وُسِمَ فِى وَجْهِهِ فَقَالَ « لَعَنَ اللَّهُ الَّذِى وَسَمَهُ ».
ஒரு கழுதையின் முகத்தில் சூடு போட்டு இருப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு சூடு போட்டவனை அல்லாஹ் சபிப்பானாக என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம்
صحيح مسلم ـ 5672 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَلِىُّ بْنُ مُسْهِرٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنِ الضَّرْبِ فِى الْوَجْهِ وَعَنِ الْوَسْمِ فِى الْوَجْهِ.
உயிரினங்களின் முகத்தில் தீயால் சுட்டு வடு ஏற்படுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் 2953
صحيح البخاري 2365 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا، فَدَخَلَتْ فِيهَا النَّارَ» قَالَ: فَقَالَ: وَاللَّهُ أَعْلَمُ: «لاَ أَنْتِ أَطْعَمْتِهَا وَلاَ سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا، وَلاَ أَنْتِ أَرْسَلْتِهَا، فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الأَرْضِ»
முந்தைய சமுதாயத்தில் ஒரு பெண்மணி பூனையைக் கட்டி வைத்து தீனி போடாததால் நரகம் சென்றதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 2365, 3318, 3842
பூனயை வளர்த்தற்காக அப்பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக உணவு கொடுக்காமல் கட்டிப் போட்டதைத் தான் கண்டித்துள்ளனர்.
صحيح البخاري 6129 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُخَالِطُنَا، حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ»
உனது புல்புல் பறவை என்னவாயிற்று என்று என் தம்பியிடம் விசாரிக்கும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுடன் சகஜமாகப் பழகுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 6129
அனஸ் (ரலி) அவர்களின் தம்பி ஒரு குருவியை வளர்த்து வந்துள்ளார். அந்தக் குருவியைக் காணாத போது உனது வளர்ப்புக் குருவி என்னவாயிற்று என்று கேட்டுள்ளனர். பறவகளை வளர்ப்பது தவறல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.
மேலும் வளர்ப்புப் பிராணிகளின் திறமையைக் கண்டறிய ஊக்குவிக்க பந்தயமும் நடத்தலாம்.
صحيح البخاري 2868 – حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «أَجْرَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضُمِّرَ مِنَ الخَيْلِ مِنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ»، قَالَ ابْنُ عُمَرَ: وَكُنْتُ فِيمَنْ أَجْرَى، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، قَالَ سُفْيَانُ: بَيْنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ خَمْسَةُ أَمْيَالٍ أَوْ سِتَّةٌ، وَبَيْنَ ثَنِيَّةَ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ مِيلٌ
2868 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து சனிய்யத்துல் வதா’ எனும் மலைக் குன்று வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளை சனிய்யத் துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக்’ பள்ளிவாசல் வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்து கொண்டேன்.
அறிவிப்பாளர் சுஃப்யான் சவ்ரீ அவர்கள், ஹஃப்யாவுக்கும் சனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும். சனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 2868
குதிரைகளின் தரத்தைப் பொறுத்து அவற்றுக்கிடையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓட்டப்பந்தயம் வைத்துள்ளதால் பிராணிகளுக்கிடையே திறனைக் கண்டறியும் பந்தயம் வைக்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
صحيح البخاري 2872 – حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاقَةٌ تُسَمَّى العَضْبَاءَ، لاَ تُسْبَقُ – قَالَ حُمَيْدٌ: أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ – فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا، فَشَقَّ ذَلِكَ عَلَى المُسْلِمِينَ حَتَّى عَرَفَهُ، فَقَالَ: «حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَيْءٌ مِنَ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ»
2872 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாததாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்திக் கொண்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உலகில் உயர்ந்து விடுகின்ற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து சாபித் அவர்களும், அவர்களிடமிருந்து ஹம்மாத் அவர்களும், அவர்களிடமிருந்து மூஸா அவர்களும் நீண்டதாக அறிவித்துள்ளார்கள்.
இது போன்ற ஒழுங்குகளைக் கவனித்து பிராணிகளை வளர்க்க வேண்டும்.