தர்மம் செய்வதில் அபூபக்ரிடம் உமர் தோற்றது சரியான செய்தியா?
பதில்
سنن الترمذي
3675 – حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ البَزَّازُ البَغْدَادِيُّ، قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ، يَقُولُ: أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالاً، فَقُلْتُ: اليَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا، قَالَ: فَجِئْتُ بِنِصْفِ مَالِي، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ: وَسَلَّمَ: مَا أَبْقَيْتَ لأَهْلِكَ؟ قُلْتُ: مِثْلَهُ، وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ، فَقَالَ: يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لأَهْلِكَ؟ قَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ، قُلْتُ: لاَ أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا.
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அப்போது என்னிடம் பொருளாதாரம் இருந்தது. இன்று அபூபக்ரை மிகைத்து விடவேண்டும் என்று எண்ணி எனது செல்வத்தில் பாதியைக் கொண்டு வந்தேன். உமது குடும்பத்துக்கு எவ்வளவு விட்டு வைத்துள்ளீர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இது போன்ற அளவு வைத்துள்ளேன் என்று நான் கூறினேன். அபூபக்ர் அவர்கள் தம்மிடம் உள்ள அனைத்தையும் கொண்டு வந்தார்கள். உமது குடும்பத்துக்கு என்ன வைத்துள்ளீர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வைத்துள்ளேன் என்று அபூபக்ர் கூறினார்கள். இவரை என்னால் ஒரு போதும் வெல்ல இயலாது என்று தெரிந்து கொண்டேன் என்று உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள் : திர்மிதி அபூதாவூத், தாரிமி, பைஹகி, ஹாகிம்
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதில் அறிஞர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இதன் எல்லா அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் என்றாலும் ஹிஷாம் பின் சஃது என்ற அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட விமர்சனங்கள் உள்ளது தான் இதற்குக் காரணம்.
قال المزي في تهذيب الكمال :
قال أبو حاتم : سمعت أحمد بن حنبل يقول : لم يكن هشام بن سعد بالحافظ . و قال عبد الله بن أحمد بن حنبل ، عن أبيه : هشام بن سعد كذا و كذا ، كان يحيى ابن سعيد لا يروى عنه . و قال أبو طالب ، عن أحمد بن حنبل : ليس هو محكم الحديث . و قال حرب بن إسماعيل : سمعت أحمد بن حنبل و ذكر له هشام بن سعد ، فلم يرضه ، و قال : ليس بمحكم للحديث . و قال عباس الدورى عن يحيى بن معين : هشام بن سعد ضعيف ، و داود بن قيس أحب إلى منه . و قال أبو بكر بن أبى خيثمة : سمعت يحيى بن معين يقول : هشام بن سعد صالح ، ليس بمتروك الحديث . و قال معاوية بن صالح ، عن يحيى بن معين : ليس بذاك القوى . و قال أحمد بن سعد بن أبى مريم عن يحيى بن معين : ليس بشىء ، كان يحيى بن سعيد لا يحدث عنه . و قال العجلى : جائز الحديث ، حسن الحديث . و قال أبو زرعة : شيخ محله الصدق . و كذلك محمد بن إسحاق هكذا هو عندى ، و هشام أحب إلى من محمد بن إسحاق . و قال أبو حاتم : يكتب حديثه ، و لا يحتج به ، و محمد بن إسحاق عندى واحد . و قال أبو عبيد الآجرى عن أبى داود : هشام بن سعد أثبت الناس فى زيد بن أسلم . و قال النسائى : ضعيف الحديث . و قال فى موضع آخر : ليس بالقوى
استشهد به البخارى فى ” الصحيح ” ، و روى له فى ” الأدب ” ، و روى له الباقون . اهـ .
قال الحافظ في تهذيب التهذيب
و قال ابن سعد : كان كثير الحديث يستضعف ، و كان متشيعا . و قال ابن أبى شيبة عن على ابن المدينى : صالح ، و ليس بالقوى . و قال الساجى : صدوق . و ذكره ابن عبد البر ( كذا ، و لعل صوابه : ابن البرقى ) فى باب من نسب إلى الضعف ممن يكتب حديثه ، قال : و قال لى ابن معين : ضعيف ، حديثه مختلط .
و قال الخليلى : أنكر الحفاظ حديثه فى المواقع فى رمضان من حديث الزهرى عن أبى سلمة ، قالوا : و إنما رواه الزهرى عن حميد .
قال : و رواه وكيع عن هشام بن سعد عن الزهرى عن أبى هريرة منقطعا . قال أبو زرعة الرازى : أراد وكيع الستر على هشام بإسقاط أبى سلمة . و ذكره يعقوب بن سفيان فى ” الضعفاء ” . و قال الحاكم : أخرج له مسلم فى الشواهد . اهـ .
இவரைப் பற்றி யஹ்யா பின் முயீன் கூறும் போது ஒரு தடவை இவர் நல்லவர் இவரது ஹதீஸ்களை விட முடியாது என்று கூறுகிறார். மற்றொரு தடவை இவர் அவ்வளவு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார். இவரது விமர்சனம் முரண்பட்டதாக உள்ளதால் இரண்டையும் விட்டுவிடலாம்.
இவரது ஹதீஸ்களை பதிவு செய்யலாம். ஆனால் ஆதாரமாக எடுக்க முடியாது என்று அபூ ஹாதம் கூறுகிறார்.
நஸாயீ பலவீனமானவர் என்கிறார்.
யஹ்யா பின் ஸயீத் இவர் வழியாக அறிவிக்க மாட்டார்.
இவர் ஹாபிள் எனும் உயர் தரத்தில் உள்ளவர் அல்ல. இவர் ஹதீஸ்களை உறுதிபட அறிவிப்பவர் அல்ல என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார்.
இவரது ஹதீஸ்கள் செல்லத்தக்கது அழகானது என்று இஜ்லீ கூறுகிறார்.
இவர் உண்மை சொல்லும் பெரியவர் என்று அபூ சுர்ஆ கூறுகிறார்.
ஸைத் பின் அஸ்லம் வழியாக அறிவிப்பவர்களில் இவர் தான் மனிதர்களிலேயே உறுதியானவர் என்று அபூதாவூத் கூறுகிறார். (இந்த ஹதீஸ் ஸைத் பின் அஸ்லம் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.)
அலீ பின் மதீனீ அவர்கள் நல்லவர் பலமானவர் அல்ல என்கிறார்.
ஸாஜீ அவர்கள் உண்மையாளர் என்கிறார்.
இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் அறிவிக்கும் எட்டு ஹதீஸ்களை தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
அபூதாவூத் அவர்கள் இவர் அறிவிக்கும் 24 ஹதீஸ்களை பதிவு செய்துள்ளார்கள். பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றால் அதைக் குறிப்பிடும் வழக்கம் உள்ள அபூதாவூத் அவர்கள் இந்த ஹதீஸ்களில் எந்த விமர்சனமும் செய்யவில்லை.
இந்த விமர்சனங்களைப் பார்க்கும் போது நஸாயீ, அஹ்மத், யஹ்யா பின் ஸயீத் ஆகியோர் குறை கூறினாலும் முஸ்லிம், அபூதாவூத், இஜ்லீ, அபூ சுர்ஆ உள்ளிட்டோர் மாற்றமாக கூறியுள்ளனர்.
குறை சொன்னவர்கள் போதிய உறுதியான நினைவாற்றல் இல்லாதவர் என்பதத் தான் காரணமாக கூறுகிறார்கள்.
ஆனால் இவர் ஸைத் பின் அஸ்லம் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் மற்ற எவரையும் விட உறுதியானவர் என்று அபூதாவூத் கூறுவதால் இவர் பொதுவாக நினவாற்றல் இல்லாதவர் என்று கருத முடியாது.
ஸைத் பின் அஸ்லம் வழியாக அறிவிப்பதில் மற்ற எவரையும் விட சரியாக அறிவிப்பவர். இந்த ஹதீஸும் ஸைத் பின் அஸ்லம் வழியாக அறிவித்துள்ளதால் இது ஹஸன் எனும் ஏற்கத்தக்க ஹதீஸாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.