நோன்பு துறக்க ஏற்ற உணவு
நம்மிடம் எந்த உணவு உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும் போது முதலில் பேரீச்சம் பழங்களை உட்கொள்ளுமாறு ஆர்வமூட்டிய செய்தி பலவீனமாகும்
658 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ الرَّبَابِ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ يَبْلُغُ [ص:38] بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ، فَإِنَّهُ بَرَكَةٌ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَالمَاءُ فَإِنَّهُ طَهُورٌ»
யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ
மேற்கண்ட ஹதீஸ் திர்மிதி மட்டுமில்லாமல் அஹ்மத், இப்னுமாஜா, தாரிமி, பைஹகீ, இப்னுஹிப்பான், தப்ரானி கபீர், நஸாயீ, முசன்னஃப் இப்னு அபீ ஷைபா ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரப்பாப் என்ற பெண் அறிவிப்பாளர் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ரப்பாப் என்ற அறிவிப்பாளர் யார் என அறியப்படாதவர் ஆவார். எனவே இந்த ஹதீஸ் பலவீனமாகும். பேரீச்சம் பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது சுன்னத் அல்ல. எந்தப் பொருளைக் கொண்டும் நோன்பு துறக்கலாம்.