ஆலோசனைக் கூட்டங்களுக்கு தனி துஆ உண்டா?

ரியால் தீன், இலங்கை. பதில் :

நம்முடைய காரியங்களில் ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று இறைவன் திருக்குர்ஆனில் கட்டளையிடுகிறான்.

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

திருக்குர்ஆன் 3:159

ஆலோசனை செய்யும் முன் ஏதும் துஆ ஓதவேண்டும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ நாம் தேடிப்பார்த்த வரை எங்கும் கூறப்படவில்லை.

தோழர்களுடனும், குடும்பத்தார்களுடனும் நபியவர்கள் பல விஷயங்களில் ஆலோசனை செய்திருக்கிறார்கள். அவர்களும் நபியவர்களுடன் ஆலோசனை செய்திருக்கிறார்கள். அந்தச் சமயங்களில் ஆலோசனைக்கு முன் எந்த ஒரு துஆவையும் நபிகளார் ஓதியதாகத் தெரியவில்லை.

1779 ( 83 ) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا عَفَّانُ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْثَابِتٍ ، عَنْ أَنَسٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاوَرَ حِينَ بَلَغَهُ إِقْبَالُ أَبِي سُفْيَانَ، قَالَ : فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ تَكَلَّمَ عُمَرُ، فَأَعْرَضَ عَنْهُ، فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ، فَقَالَ : إِيَّانَا تُرِيدُ يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ أَمَرْتَنَا أَنْ نُخِيضَهَا الْبَحْرَ لَأَخَضْنَاهَا، وَلَوْ أَمَرْتَنَا أَنْ نَضْرِبَ أَكْبَادَهَا إِلَى بَرْكِ الْغِمَادِ لَفَعَلْنَا. قَالَ : فَنَدَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ، فَانْطَلَقُوا حَتَّى نَزَلُوا بَدْرًا وَوَرَدَتْ عَلَيْهِمْرَوَايَا قُرَيْشٍ وَفِيهِمْ غُلَامٌ أَسْوَدُ لِبَنِي الْحَجَّاجِ فَأَخَذُوهُ، فَكَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُونَهُ عَنْ أَبِي سُفْيَانَ وَأَصْحَابِهِ، فَيَقُولُ : مَا لِي عِلْمٌ بِأَبِي سُفْيَانَ، وَلَكِنْ هَذَا أَبُو جَهْلٍ، وَعُتْبَةُ، وَشَيْبَةُ، وَأُمَيَّةُ بْنُ خَلَفٍ. فَإِذَا قَالَ ذَلِكَ ضَرَبُوهُ، فَقَالَ : نَعَمْ، أَنَا أُخْبِرُكُمْ هَذَا أَبُو سُفْيَانَ. فَإِذَا تَرَكُوهُ، فَسَأَلُوهُ، فَقَالَ : مَا لِي بِأَبِي سُفْيَانَ عِلْمٌ، وَلَكِنْ هَذَا أَبُو جَهْلٍ، وَعُتْبَةُ، وَشَيْبَةُ، وَأُمَيَّةُ بْنُ خَلَفٍ فِي النَّاسِ. فَإِذَا قَالَ هَذَا أَيْضًا ضَرَبُوهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يُصَلِّي، فَلَمَّا رَأَى ذَلِكَ انْصَرَفَ، قَالَ : ” وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتَضْرِبُوهُ إِذَا صَدَقَكُمْ، وَتَتْرُكُوهُ إِذَا كَذَبَكُمْ “. قَالَ : فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” هَذَا مَصْرَعُ فُلَانٍ “. قَالَ : وَيَضَعُ يَدَهُ عَلَى الْأَرْضِ هَاهُنَا هَاهُنَا، قَالَ : فَمَا مَاطَ أَحَدُهُمْ عَنْ مَوْضِعِ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

அபூசுஃப்யான் (தலைமையில் வணிகக் குழு) வரும் தகவல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தம் தோழர்களிடம்) ஆலோசனை கேட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்னபோது,  அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது கருத்தைச்) சொன்ன போதும் கண்டுகொள்ளவில்லை.

அப்போது (அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தாரின்) தலைவர் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து, எங்(கள் அன்சாரிகளின் கருத்து)களையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! எங்கள் குதிரைகளைக் கடலுக்குள் செலுத்துமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் செலுத்துவோம். எங்கள் குதிரைகளின் பிடரிகளில் அடித்து (தொலைவில் உள்ள) பர்குல் ஃகிமாத்  நோக்கி (விரட்டிச்) செல்லுமாறு நீங்கள் உத்தரவிட்டாலும் நாங்கள் அவ்வாறே செய்வோம்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம்

ஆலோசனைக்கு தனியாக துஆ இருந்தால் இந்த நேரத்தில் நபியவர்கள் அதை ஓதி இருப்பார்கள். அது நமக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும்.

இது போல் அவர்கல் ஆலோசனை நடத்திய எந்த நிகழ்வின் போதும் பிரத்தியேகமான துஆக்கள் எதையும் ஓதவில்லை. கற்றுத்தரவில்லை.

பொதுவாக சபை கலையும் போது பின்வரும் துஆவை ஓத வேண்டும் என்று நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். நமது ஆலோசனைக் கூட்டத்தை முடித்து சபை கலையும் போது இந்த துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.

ஸுப்ஹானகல்லாஹும்ம வ பிஹம்தி(க்)க அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்ஃபிரு(க்)க வஅதூபு இலைக்.

பொருள் : அல்லாஹ்வே…! நீ மிகத்தூய்மையானவன்.  உன்னைப் புகழ்கிறேன்.  உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என நான் உறுதியாக நம்புகிறேன். உன்னிடத்தில் மன்னிப்பைக் கோருகிறேன்.  உன்னிடத்தில் பிழை பொறுக்கத் தேடுகிறேன்.

நூல் : அபூதாவூத் (4217) 06.04.2013. 3:31 AM