ஆதம் (அலை) சமாதி எங்கே உள்ளது?
இப்னு ஹாஷிம்
பதில்
நம்மில் பலர் தேவையான கேள்விகளை விடுத்து தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டு பொன்னான நேரத்தை வீணாக்கி வருகின்றனர். அத்தகைய கேள்விகளில் இதுவும் அடங்கும்.
ஆதம் (அலை) அவர்களின் கப்ரு எங்கே இருக்கிறது என்பது குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. இதை அறிந்து கொள்வதில் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் இல்லை. இதில் நன்மை இருந்தால் அதை அல்லாஹ் சொல்லி இருப்பான்.
இந்த நபி இந்த தேதியில் பிறந்தார்? அவரது மனைவி பெயர் என்ன? எத்தனை பிள்ளைகள்? எப்போது திருமணம் முடித்தார் என்பன போன்றவைகளை அல்லாஹ்வோ, அவன் தூதரோ சொல்லாமல் அறிந்து கொள்ள முடியாது.
மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்கள், வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் சட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதில் நமக்கு நன்மை உள்ளது. சமாதிகளை அறிந்து கொண்டு நமக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை. நீ ஏன் ஆதம் அவர்களின் கப்ரைக் கண்டு பிடிக்கவில்லை என்று அல்லாஹ் கேட்க மாட்டான்.
12.08.2011. 17:48 PM