இஸ்ரேல் தயாரிக்கும் பொருட்களை நாம் வாங்காமல் இருப்பது, இஸ்ரேலைப் பாதிக்குமா?

ஆம் என்றால் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை?

இதை மும்பையில் ஒர் போராட்ட யுக்தியாக கையிலெடுத்திருபபதாக 29.07.14 அன்று The Hindu நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டது. Facebook இலும் இது பரவலாகப் பேசப்படுகிறது!

அஷ்ஃபாக் அஹமது

பதில்
நாம் அமெரிக்காவுக்கு எதிராக இது போன்ற நிலைபாட்டை பல முறை எடுத்துள்ளோம்.

இது போல் எடுத்த நிலைபாடுகளை அனைத்து முஸ்லிம்களும் அனைத்து இயக்கங்களும் கையில் எடுக்கவில்லை.

இந்த நிலைபாட்டை ஏற்றுக் கொண்டவர்கள் கூட ஓரிரு மாதங்களில் மாறிவிடுகிறார்கள்.

குளிர் பானங்களில் மட்டும் சிலர் அமெரிக்கத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கிறாரகள். பிரிட்டன் தயாரிப்புகளைப் புறக்கணிக்கிறாரக்கள்.

ஆனால் சோப்பு, பேஸ்ட் உள்ளிட்ட தொன்னுறு சதவிதம் அமெரிக்க பிரிட்டன் பொருட்களைத் தான் முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றனர்.

99 விழுக்காடு கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் தான் பயன்பாட்டில் உள்ளது. அது அமெரிக்க தயாரிப்பு தான்.

புறக்கணிப்பதாகச் சொல்லும் அறிவிப்பு எதிரிகளுக்கு கோடியில் ஒரு பாதிப்பைக் கூட ஏற்படுத்தவில்லை என்பது தெரியும் போது இன்னும் அதிகமாக முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

அமெரிக்க பொருட்களைப் புறக்கணிக்கும் கொள்கை வீரியமாக இருந்த நேரத்தில் அமெரிக்க அதிகாரிகளை அழைத்து பீஸ் எனும் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் தமுமுக தொண்டர்களை வாலண்டியர்களாக அனுப்பியதை நாம் கண்டித்தது அந்த இயக்கத்தில் நாம் வெளியேறும் நிலைக்குத் தூண்டிய ஆரம்ப நிகழ்ச்சியாக இருந்தது.

முஸ்லிம் லீக் தலைவரின் மகள் பாத்திமா முசப்பர் அமெரிக்க அதிகாரிகளை வைத்து இப்தார் நிகழ்ச்சி நடத்தினார்.

அதுவும் ஆப்கனில் முஸ்லிம்கள் மீது கொத்துக் கண்டுகளைப் போட்டு பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்த போது இந்த இரு நிகழ்ச்சிகளும் நடந்தன.

முஸ்லிம்கள் நடத்தும் மார்க்க மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அக்வாபீனா குடிபானமாக வைக்கப்பட்டது. கொஞ்சம் உணர்வு உள்ளவர்கள் லேபிளைக் கிழித்து விட்டு அதே தண்ணீரை வாங்கி வைத்தனர்.

இன்னும் இதுபோல் பல கசப்பான நிகழ்வுகள் உள்ளன.

எனவே தான்

சில நாட்கள் மட்டும்

சில பொருட்களை மட்டும்

சிலர் மட்டும் புறக்கணிக்கும்

இந்தப் போராட்டம்

வெற்றியடையவில்ல என்பதை அறிந்து கொண்டோம்.

எனவே இது போன்ற அறிவிப்புகள் செய்வதில் நமக்கு தயக்கம் உள்ளது.

ஆனால் இவ்வாறு புறக்கணிப்பவர்களையும் புறக்கணிக்க பிரச்சாரம் செய்வோரையும் நாம் குறை கூற மாட்டோம்.