சமுதாய இயக்கங்களுக்கும் அரசியல் ஆசை ஏன்
சமுதாய இயக்கமாக தங்களின் பணியைத் துவக்குபவர்கள் இறுதியில் அரசியலில் போட்டியிடுவது என்ற இறுதிக் கட்டத்தை அடைவதற்கு என்ன காரணம்? உதாரணமாக பாமக, விடுதலை சிறுத்தைகள், யாதவ மஹா சபை, நாம் தமிழர், தமுமுக போன்றவை. அரசியலை நோக்கி அவர்களைத் தூண்டுவது எது?
– ஷி. அப்துல்சமது, பட்டுக்கோட்டை, தஞ்சை
தங்களின் நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு இயக்கம் நடத்துபவர்கள் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லா விட்டால் அவர்களால் தொடர்ந்து இயக்கம் நடத்த இயலாது என்பது இயற்கையானதுதான். ஆர்வத்துடன் நல்ல நோக்கத்தில் களம் இறங்கிய இவர்கள் தங்களுக்குப் பின்னால் மக்கள் திரண்டதைக் கண்டபின் நாம் ஏன் எவ்விதப் பலனும் இல்லாமல் உழைக்க வேண்டும். இந்த மக்களை வைத்து நமது இயக்கத்துக்கும் நமக்கும் ஆதாயம் அடைந்தால் என்ன என்ற சிந்தனை ஏற்படுகிறது.
கூட்டத்தைக் காட்டி ஆதாயம் அடையும் ஒரே வழி அரசியல்தான் என்று இவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.
ஆனால் நாம் செய்யும் உழைப்புக்கான கூலி மறுமையில் கிடைத்தால் போதும்; இவ்வுலகில் ஒன்றும் கிடைக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியவர்கள் மட்டும்தான் எவ்வளவு கூட்டத்தைக் கண்டாலும். எத்தகைய வாய்ப்புகளைப் பெற்றாலும் அதை தமது ஆதாயத்துக்காகப் பயன்படுத்த மாட்டார்கள்.
உணர்வு 16:12