அதிகமாக சிரிக்கலாமா?

அதிகமாக சிரிக்கக் கூடாது சில ஹதீஸ்கள் உள்ளன.

அவற்றில் ஒரு ஹதீஸ் தவிர அனைத்தும் பலவீனமாக உள்ளன.

அந்த ஒரு ஹதீஸ் இது தான்.

سنن ابن ماجه

4193 – حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: “لَا تُكْثِرُوا الضَّحِكَ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ”

அதிகம் சிரிக்காதீர்கள்! அதிகம் சிரிப்பது உள்ளத்தைச் சாகடித்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : இப்னு மாஜா

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாவர். ஆனாலும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கு முரணாக அமைந்துள்ளது.

கருத்தும் குழப்பமாக உள்ளது.

சிரித்தல் என்பது மனிதன் திட்டமிட்டு செய்யும் காரியம் அல்ல.

மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்கும் போது, பாக்கியங்களைப் பெறும் போது, வியப்பானதைப் பார்க்கும் போது, கேட்கும் போது, வெட்கப்படும் போது இயல்பாகவே சிரிப்பு வந்து விடும்.

நம்மையறியாமல் நிகழும் காரியங்கள் விஷயமாக கட்டளை இட்டால் அது செயல்படுத்த முடியாமல் போகும்.

மேலும் அதிகம் சிரிக்க கூடாது என்பதற்கு என்ன அளவுகோல் என்பதும் தெளிவாக இல்லை.

அதிகம் சிரித்தல் என்றால் அதன் அளவுகோல் என்ன? அதை எப்படி வரையறுப்பது? என்பதையும் நாம் அறிய வேண்டும். ஒருவருக்கு அதிகமாக தெரியும் அளவு இன்னொருவருக்கு குறைவாகத் தெரியும்.

எவ்வளவு நேரம் சிரிக்கிறான்? எத்தனை தடவை சிரிக்கிறான்? எந்த அளவு சப்தத்தில் சிரிக்கிறான்? என்பதை வைத்து அதிகம் என்பதை முடிவு செய்ய முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சிரித்துள்ளார்கள். அதிகமாகவும் சிரித்துள்ளார்கள். கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்கும் சிரித்துள்ளார்கள்.

சிரிப்பு என்பது திட்டமிட்டு செய்யும் செயல் அல்ல. மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் போது சிரிப்பு தானாக வரும். ஒரு நாளைக்கு நூறு மகிழ்ச்சியான செய்திகள் கிடைத்தால் நூறு தடவை சிரிப்பார்கள்.

அதிகம் சிரிக்காதீர்கள் என்பது சரியான செய்தியாக இருந்தால் அதை நபிகளே மீறினார்கள் என்று சொல்ல வேண்டி வரும்.

நோன்பு வைத்த நிலையில் இல்லறத்தில் ஈடுபட்ட நபித்தோழர் அது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கிறார். அதற்கான பரிகாரத்தை நபிகள் சொல்கிறார்கள். பரிகாரம் செய்ய தன்னிடம் ஏதும் இல்லை என்று அவர் கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் உணவுப் பொருட்களைத் திரட்டி இதை தர்ம்ம் செய்வீராக என்றனர். அப்போது அந்த மனிதர் என்னை விட ஏழை யார் என்று கூறுகிறார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாய்விட்டு சிரித்தார்கள்.

فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ،

நூல் : புகாரி 6087

இந்த மனிதரின் சமயோசிதமான குதர்க்கமான கேள்வியால் நபிகளுக்குச் சிரிப்பு வந்துள்ளது. இது போன்ற சந்தர்ப்பங்கள் நூறு ஏற்பட்டு நூறு தடவை சிரித்தால்  அது அதிகம் சிரிக்கிறார் என்று சொல்ல முடியுமா?

மகிழ்ச்சியான செய்திகளை கேட்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) மீது களங்கம் சுமத்தப்பட்டது. அது அவதூறு தான் என்ற வசனம் இறங்கிய போது ஆயிஷாவை நோக்கி அந்தச் செய்தியைச் சொல்லும் போது நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

فَلَمَّا سُرِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَضْحَكُ، فَكَانَ أَوَّلَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا،

நூல் : புகாரி 2661

மனைவியின் மீது சொல்லப்படும் களங்கம் துடைக்கப்படுவதை அறியும் போது மனிதர்களுக்கு மகிழ்ச்சியின் கரணமாக சிரிப்பு வரும்.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் நூறு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தால் இயல்பாகவே அனைத்துக்கும் அவனுக்கு சிரிப்பு வரும். இதை அதிகம் என்று கூற முடியாது. எத்தனை மகிழ்ச்சியான செய்திகள் கிடைத்தாலும் நபிகளைப் பின்பற்றி அவன் சிரிக்கலாம்.

விஷ கடிக்கு ஆளான ஒரு மனிதருக்கு அபூசயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் ஓதிப்பார்த்து அதனால் விஷம் இறங்கிவிட்டது. இதற்காக தேள்கடிக்கு ஆளானவர் முப்பது ஆடுகளைக் கொடுத்தார். இது பற்றி நபிகளிடம் வந்து அபூ சயீத் தெரித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கும் ஒரு பங்கு தாருங்கள் என்று கூறிவிட்டு சிரித்தார்கள்.

«قَدْ أَصَبْتُمْ، اقْسِمُوا، وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا» فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

நூல் : புகாரி 2276

தனக்கும் ஒரு பங்கு கேட்கும் போது ஏற்படும் வெட்கம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிரிப்பு வந்துள்ளது.

நாம் செய்யும் சில காரியங்கள், பேசும் சில சொற்கள் நமக்கே வெட்கத்தை ஏற்படுத்தும். அப்போது நாம் சிரிப்போம். நூறு காரியங்களில் வெட்கம் வந்தாலும் நூறுக்கும் சிரிப்போம். இதை அதிகம் என்று சொல்ல முடியாது.

ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை பட்ட கடனைக் கேட்டு கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களின் தோட்டத்துக்கு வந்து பேரீச்சம் பழங்களை வகைவகையாகப் பிரித்து வைக்கச் சொன்னார்கள். அவருக்காக துஆ செய்தார்கள். அல்லாஹ்வின் அருளால் கடன்காரர்களுக்கு கொடுத்த பிறகும் பேரீச்சம் பழம் மீதம் இருந்தது. இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஜாபிர் (ரலி) சொன்ன போது அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَغْرِبَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَضَحِكَ

நூல் : புகாரி 2709

நம்முடைய கடன் அடையும் போது நாம் சிரிப்பது இயல்பாகவே நடக்கும். எத்தனை தடவை சிரித்தாலும் அதிகம் சிரிப்பதாக ஆகாது.

குறைஷி குலப்பெண்கள் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னால் சப்தத்தை உயர்த்தி பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்தார்கள். உமர் அவர்களைக் கண்டதும் அந்தப் பெண்கள் வாய் மூடிக் கொண்டார்கள். இதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

اسْتَأْذَنَ عُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ نِسَاءٌ مِنْ قُرَيْشٍ يُكَلِّمْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ، عَالِيَةً أَصْوَاتُهُنَّ، فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ قُمْنَ يَبْتَدِرْنَ الحِجَابَ، فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْحَكُ

நூல் : புகாரி 3294

நபியாகிய தனக்கு மரியாதை கொடுக்காத பெண்கள் உமர் (ரலி) அவர்களுக்கு மரியாதை கொடுத்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்காகவே சிரித்தார்கள். ஆச்சரியமான செயல்களைக் காணும் போது சிரிப்பது எத்தனை முறை சிரித்தாலும் அதிகம் சிரிப்பதில் சேராது.

மிம்பரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் போது மழைக்காக துஆ செய்யுமாறு ஒருவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துஆ செய்த உடன் மழை பெய்தது. மறுவாரம் வந்து மழையை நிறுத்த துஆ செய்யுமாறு அதே மனிதர் கேட்டார். அதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்

فَقَالَ: غَرِقْنَا، فَادْعُ رَبَّكَ يَحْبِسْهَا عَنَّا، فَضَحِكَ

புகாரி 6093

எந்த மனிதர் மழை வேண்டி துஆ செய்யச் சொன்னாரோ அதே மனிதர் மழையை நிறுத்த துஆ செய்ய சொன்னது வியப்பை ஏற்படுத்தியதால் நபிகள் சிரித்தார்கள்

ஒரு மனிதருக்கு அவரே முரண்படுவதைக் காணும் போது இயல்பாகவே சிரிப்பு வரும். எத்தனை மனிதர்களை இப்படி காண்கிறோமோ அதற்கேற்ப சிரிப்பு வரும். இதை அதிகம் என்று கூற முடியாது.

உமக்கு கவ்ஸர் எனும் தடாகத்தை அருளினோம் என்ற அத்தியாயம் இறங்கிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை சிரித்துக் கொண்டே மக்களுக்குச் சொன்னார்கள்

بَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ بَيْنَ أَظْهُرِنَا إِذْ أَغْفَى إِغْفَاءَةً ثُمَّ رَفَعَ رَأْسَهُ مُتَبَسِّمًا، فَقُلْنَا: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللهِ قَالَ: «أُنْزِلَتْ عَلَيَّ آنِفًا سُورَةٌ»

நூல் : முஸ்லிம்

மறுமையில் தனக்கு மகத்தான பாக்கியம் கிடைக்கும் செய்தி நபிகளுக்கு மகிழ்ச்சி அளித்த காரணத்தால் சிரித்தார்கள். நமக்கு மகிழ்ச்சியான செய்திகள் ஆயிரம் கிடைத்தாலும் அனைத்துமே நமக்கு சிரிப்பை வரவழைக்கும். இதை அதிகம் என்று கூற முடியாது.

ஒரு கிராமவாசி நபிகள் நாயகத்தின் மேலாடையை இழுத்து உதவி கேட்ட போது அவரை நோக்கி சிரித்து விட்டு அவருக்கு உதவுகள் வழங்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ثُمَّ قَالَ: مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ، فَالْتَفَتَ إِلَيْهِ فَضَحِكَ، ثُمَّ «أَمَرَ لَهُ بِعَطَاءٍ

புகாரி 3149

ஆத்திரமூட்டும் செயலை ஒருவர் செய்து நாம் அதற்காக அவர் மீது கோபம் கொள்ளவில்லை என்று காட்ட நினைத்தால் சிரிப்பின் மூலம் அதை உணர்த்துவோம். இது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) நடந்துள்ளார்கள்.

அனஸ் ரலி அவர்களை ஒரு வேலைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அவர் அந்த வேலைக்குச் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிச் சிரித்தார்கள். நீ செய்த செயலுக்காக உன் மீது கோபம் இல்லை என்று காட்டுவதற்காக சிரித்தார்கள்

فَإِذَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي، قَالَ: فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ، فَقَالَ: «يَا أُنَيْسُ أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ؟»

நூல் முஸ்லிம்

என் தலை துண்டிக்கப்படுவது போல் கனவு கண்டேன் என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொன்ன போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்

فَقَالَ: يَا رَسُولَ اللهِ رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ رَأْسِي قُطِعَ، قَالَ: فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நூல் :முஸ்லிம்

தன் தலை துண்டிக்கப்படுவதை ஒருவர் பார்க்க முடியாது. அப்படி ஒரு அதிசயக் கனவைக் கேள்விப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அபூபக்ர் அவர்கள் தொழுகை நடத்தி வந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த நாளில் தமது வீட்டின் திரையை விலக்கி தொழுது கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து புன்னகையுடன் சிரித்தார்கள். அன்று தான் மரணித்தார்கள்.

، فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتْرَ الحُجْرَةِ يَنْظُرُ إِلَيْنَا وَهُوَ قَائِمٌ كَأَنَّ وَجْهَهُ وَرَقَةُ مُصْحَفٍ، ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ

நூல் : புகாரி 680

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி செய்த கடைசி செயல் சிரிப்பு தான் என்று இதிலிருந்து அறியலாம்.

தான் உருவாக்கிய சமுதாயம் தான் இல்லாத நேரத்திலும் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதால்ல் அந்த மகிழ்ச்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

சொர்க்கத்தில் ஒரு மனிதன் விவசாயம் செய்ய அல்லாஹ்விடம் அனுமதி கேட்பான் என்று நபிகள் கூறிய போது அந்த மனிதன் எங்கள் குலமாக இருக்க மாட்டான் குறைசிக் குலமாகத் தான் இருப்பான் என்று ஒருவர் சொன்னார். அதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ، وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நூல் : புகாரி 2348

ஒரு பாதிரியார் வந்து அல்லாஹ் ஒரு விரலில் வானத்தையும், ஒரு விரலில் பூமியையும், ஒரு விரலில் தண்ணீரையும், மரங்களை ஒரு விரலிலும், அனைத்து படைப்புகளை ஒரு விரலிலும் அடக்குவான் என்று கூறினார் அவரது அறியாமையைக் கண்டுச்வியப்படைந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

يَا مُحَمَّدُ إِنَّا نَجِدُ: أَنَّ اللَّهَ يَجْعَلُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ، وَالمَاءَ وَالثَّرَى عَلَى إِصْبَعٍ، وَسَائِرَ الخَلاَئِقِ عَلَى إِصْبَعٍ، فَيَقُولُ أَنَا المَلِكُ، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ

நூல் : புகாரி 4811

கடைசியாக சொர்க்கம் செல்லும் மனிதனைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது சிரித்தார்கள். ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்ட போது அந்த மனிதனின் கூற்றைக் கேட்டு அல்லாஹ் சிரித்தான். அதனால் நானும் சிரித்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்

فَيَقُولُ: تَسْخَرُ مِنِّي – أَوْ: تَضْحَكُ مِنِّي – وَأَنْتَ المَلِكُ ” فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ،

நூல் : புகாரி 6571

சுப்ஹு தொழுதவுடன் அதே இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்து இருப்பார்கள். அப்போது நபித்தோழர்கள் பழங்கதைகளைப் பேசிச் சிரிப்பார்கள். அதைப் பார்த்து நபிகள் புன்னகை செய்வார்கள்

فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ، وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ

நூல் முஸ்லிம்

பழங்கதைகளைப் பேசும் போது இயல்பாக சிரிப்பு வரும். அப்படி நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் பேசி சிரித்த போது புன்னகை செய்தார்களே தவிர கண்டிக்கவில்லை.

முஸ்லிம்களைத் தீ வைத்துக்  கொளுத்திய ஒருவனை போர்க்களத்தில் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஅது (ரலி) அவர்களை அவனை நோக்கி அம்பெய்யச் சொன்னார்கள். அவன் மீது அம்பு தாக்கி அவனது ஆடை விலகி நிர்வானமானான். அதைக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

فَنَزَعْتُ لَهُ بِسَهْمٍ لَيْسَ فِيهِ نَصْلٌ، فَأَصَبْتُ جَنْبَهُ فَسَقَطَ، فَانْكَشَفَتْ عَوْرَتُهُ فَضَحِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى نَظَرْتُ إِلَى نَوَاجِذِهِ

நூல் : முஸ்லிம்

நீ பெரியவளாக மாட்டாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனாதைச் சிறுமியிடம் சொன்னார்கள். இதனால் அந்தச் சிறுமி அழுது கொண்டு உம்மு சுலைமிடம் சென்றார். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களிடம் வந்து நீ பெரியவளாக மாட்டய் என்று சொன்னீர்களா என கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

قَالَتْ: زَعَمَتْ أَنَّكَ دَعَوْتَ أَنْ لَا يَكْبَرَ سِنُّهَا، وَلَا يَكْبَرَ قَرْنُهَا، قَالَ فَضَحِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

நூல் : முஸ்லிம்

தான் விளையாட்டாகச் சொன்னதை சீரியசாக எடுத்துக் கொண்ட உம்மு சுலைம் அவர்களின் செயலைக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். நாம் ஒரு அர்த்தத்தில் சொன்னதை வேறு அர்த்தத்தில் யாரவது புரிந்து கொண்டால் அதற்காகச் சிரிப்போம். அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிரித்துள்ளார்கள்.

ஹுனைன் போரில் ஒரு வாளை வைத்துக் கொண்டு எதிரிகள் யாரேனும் வந்தால் இந்த வாளால் வெட்டுவேன் என்று உம்மு சுலைம் கூறியதைக் கேட்ட நபிகள் சிரித்தார்கள்.

فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا هَذَا الْخِنْجَرُ؟» قَالَتْ: اتَّخَذْتُهُ إِنْ: دَنَا مِنِّي أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ، بَقَرْتُ بِهِ بَطْنَهُ، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْحَكُ

நூல் : முஸ்லிம்

மிக்தாத் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருந்துவதற்காக வைத்த பாலை அருந்தி விட்டார். நபிகள் நாயகம் வந்து பார்த்து கோப்படுவார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) கோபப்படாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டர்க்ள். இதைக் கண்ட போது மிக்தாத் விழுந்து விழுந்து சிரித்தார். அவர் பின் பாகம் ஒரு பகுதி வெளிப்படும் அளவுக்கு விழுந்து சிரித்தார். மிக்தாதே உமது பின்பாகம் தெரிகிறது என்று நபிகள் கூறினார்கள்

صحيح مسلم

فَلَمَّا عَرَفْتُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ رَوِيَ وَأَصَبْتُ دَعْوَتَهُ، ضَحِكْتُ حَتَّى أُلْقِيتُ إِلَى الْأَرْضِ، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِحْدَى سَوْآتِكَ يَا مِقْدَادُ»

நூல் : முஸ்லிம்

நபியின் முன்னாள் ஆடை விலகும் அளவுக்கு ஒருவர் விழுந்து விழுந்து சிரித்த போதும் அதை நபிகள் கண்டிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எப்போது நான் பார்த்தாலும் அவர்கள் சிரித்த நிலையில் தான் இருப்பார்கள்.

مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلَّا ضَحِكَ»

நுல் : புகாரி 3822

எப்போது பார்த்தாலும் சிரிப்பார்கள் என்றால் நபிகளின் உள்ளம் செத்து விட்டது என்று சொல்வார்களா?

ஹிமார் என்ற பெஅருடய ஒருவர் இருந்தார் அவர் நபிகளைச் சிரிக்க வைப்பவராக இருந்தார்.

وَكَانَ يُلَقَّبُ حِمَارًا، وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நூல் புகாரி 6780

இவற்றை எல்லாம் பார்க்கும் போது நபிகள் அதிகமாக சிரித்துள்ளார்கள். அவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கவே ஒருவர் இருந்துள்ளார் என்று அறிய முடிகிறது.

எனவே அதிகம் சிர்ப்பது உள்ளத்தைச் சாகடிக்கும் என்ற கருத்து இந்த ஹதீஸ்களுக்கு மாற்றமாக உள்ளது. சிரிக்க வைப்பதற்காகவே ஒருவர் இருந்துள்ளார் என்றால் அதிமாக சிரித்துள்ளார்கள் என்று தெரிகிறது.

மனிதனின் கண்ட்ரோலில் இல்லாத ஒரு உணர்வு சம்மந்தமாக நபிகள் கட்டளை போட மாட்டார்கள் என்பதாலும் நபிகளே அதிகம் சிரித்துள்ளதாலும் இந்த ஹதீஸ் பொருளற்றதாக ஆகிறது.

திட்டமிட்டு ஒருவரை கேவலப்படுத்தும் நோக்கில் வலிந்து சிரிப்பதைத் தான் தடுக்க முடியும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...