அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் ஜாக்

“ஜாக்” இப்போது ஒரு தெளிவான முடிவில் இருக்கின்றது. எந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மாணம் செய்ய அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மூலமாக்காமல் விடுவதில்லை என்பது தான் அந்த முடிவு! அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கும் அக்கிரமத்தில் ஒரு கரை காணாமல் இருக்கப் போவதில்லை என்று கலகக் கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான களத்தில் குதித்திருக்கின்றது.

தவ்ஹீதுக்கு எதிரான காரியங்கள் நடக்கும் போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் .அப்படித் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் எதையும் செய்யாமல் ஒதுங்கியாவது இருக்க வேண்டும். ஆனால் ஜாக் பரிவாரமோ, தானும் செய்யாமல், செய்பவர்களையும் செய்யவிடாமல் தடுத்து வருகின்றது. அதாவது அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்து, அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கின்றது. இதற்கு அண்மையில் மேலப்பாளையத்தில் நடந்த ஒரு நிகழ்வை உதாரணமாகக் கூறலாம்.

வண்ண நிறங்களில் வாண வேடிக்கைகள்

மேலப்பாளையத்தில் உள்ள தர்ஹாக்களில் வழக்கமாக கந்தூரிகள் நடக்கும். ஆனால் இந்த முறை நடந்த கந்தூரிகள், வருடாந்திர உரூஸ் விழாக்கள் வேண்டுமென்றே நமக்கு எதிராகத் திட்டமிட்டு படு விமர்சையாகவும், படோடபமாகவும் அமைந்திருந்தன.

உண்மையில் அவை கோயில் திருவிழாக்களைத் தோற்கடிக்கும் விதமாக இருந்தன. அதிகமான பணச் செலவில் டிஜிடல் மியூசிக் பேண்ட் வாத்தியங்கள், அதிர வைக்கும் வாண வேடிக்கைகள் என அமர்க்களமாக, ஆர்ப்பாட்டமாக அதிகாலை வரை நடத்தப்பட்டன. சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்வோர் கூட இந்த அக்கிரமங்களைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் வெறுத்து, வெதும்பிக் கொண்டிருந்தனர்; வேதனைப்பட்டுக் கொண்டிருந்தனர். உடனே நாம் முதல் கட்ட நடவடிக்கையாக இந்தக் கந்தூரிகளில் நடந்த அட்டூழியங்களையும் அனாச்சாரங்களையும் கண்டித்து, துண்டுப் பிரசுரம் வெளியிட்டோம். இது மக்களிடத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, கந்தூரி நடந்த தெருக்களில் ஒன்றான மேலப்பாளையம் பஸீரப்பா தெருவில், தர்ஹா வழிபாடு எதிர்ப்புப் பொதுக் கூட்டம் என்ற தலைப்பில் 19.08.2006அன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். இதற்காக மேலப்பாளையம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இதைக் கண்ட ஜாக் கலகக் கும்பல், கூட்டத்தைத் தடுத்து நிறுத்தும் விதமாகக் காவல்துறையில் புகார் செய்தனர். இவர்கள் தங்களது புகாரில், “பஸீரப்பா தெருவில் நடைபெற விருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே சம்பந்தப்பட்ட தர்ஹா கூட்டத்தினர் இந்தப் பொதுக் கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று தவமிருக்கின்றனர். தகுந்த முகாந்திரங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்றவாறு இவர்களும் காவல் துறையில் புகார் கொடுத்து, கூட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு சூட்சுமத்தையும் சூழ்ச்சி வலையையும் பின்னினர்.

அது மட்டுமின்றி நமது சகோதரர்களிடம், “கூட்டம் நடக்குமா? பார்த்து விடுவோம்” என்ற ரீதியில் சவாலும் விட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த இந்தப் புகாரின் காரணமாகவும் இவர்கள் பரப்பி விட்ட வதந்திகள் காரணமாகவும் அன்று பொதுக்கூட்டம் நடக்குமா? என்பது கேள்விக் குறியாகி நகரமே பரபரப்பில் ஆழ்ந்தது. இதனால் கூட்டம் நடக்கும் தெருவில் காவல்துறை ஏராளமான காவலர்களை நிறுத்தி வைத்தது.

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! சூழ்ந்த ஞானம் படைத்த அவன், இவர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்தான். இறைவனின் மகத்தான கிருபையால் அன்று இரவு கூட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆயிரக்கணக் கானவர்கள் என்று சொல்லும் அளவுக்கு அலை அலையாய் மக்கள் திரண்டு வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் தவ்ஹீதுவாதிகள் அல்ல! சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த அளவுக்கு இந்தக் கந்தூரி வெறியாட்டங்கள் பாதிப்புக்கும் கொதிப்புக்கும் உள்ளாக்கியிருந்ததை நாம் உணர முடிந்தது. சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கு ஏற்பட்ட இந்த சூடு, கொதிப்பு எல்லாம் அழைப்புப் பணியைச் சொல்லி அரபு நாட்டில் சம்பளம் வாங்கும் ஜாக் கும்பலுக்கு ஏற்படவில்லை.

ஜாக் கலகக் கும்பலின் இந்தப் புகார் மற்றும் வதந்திகளால் ஏற்பட்ட மற்றொரு விளைவு, தொடர்ந்து ஏகத்துவப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதற்குக் காவல்துறையினர் கடும் கெடிபிடிகளைச் செய்ய ஆரம்பித்தனர். வழக்கம் போல் அடுத்த வாரம் 26.08.06 அன்று மேலப்பாளையத்தில் ஏகத்துவப் பிரச்சாரக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையில் அனுமதி வாங்கச் சென்ற போது, “நீங்கள் கூட்டம் நடத்துவதால் எங்களுக்கு அதிகமான சிரமம் ஏற்படுகின்றது. பாதுகாப்பு அதிகம் தர வேண்டியுள்ளது. எனவே அனுமதி தர முடியாது” என்று மறுத்து விட்டனர்.

பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய பின், கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆக, ஜாக் கலகக் கும்பல் செய்த இந்தக் காரியங்களால் ஒட்டு மொத்த ஏகத்துவப் பிரச்சாரமும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டு விட்டது. இதிலிருந்து இவர்கள் செய்வது அழைப்புப் பணியல்ல! அழைப்புப் பணிக்கு எதிராக ஆப்புவைக்கும் பணி என்பது நிரூபணமாகின்றது. இனியும் இவர்களை ஏகத்துவவாதிகள் என்றுநம்பி நம் ஈமானை இழந்து விடாமலிருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோம்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...