வங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா?

மார்க்கம் தடை செய்த மதுபான விற்பனை நிலையம் போன்றவைகளிலும், வங்கிகளிலும் தூய்மைப் பணிகள், வாட்ச்மேன் பணி, வெளி வேலைகள் செய்து கொடுத்தல் ஆகிய பணிகளில் ஈடுபடலாமா?

பதில்:

வங்கியின் ஆவணங்களைப் பாதுகாக்கலாமா என்ற கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

ஆவணங்களைப் பாதுகாத்தல் வட்டிக்குத் துணை செய்ததாக ஆகுமா?

வங்கியின் ஊழியராக இருந்து கொண்டு ஆவணங்களைப் பாதுகாக்கலாமா?

வங்கியின் ஊழியராக இல்லாமல் ஆவணங்களைப் பாதுகாக்கலாமா?

ஆகிய மூன்று விஷயங்கள் உள்ளன.

பின்வரும் ஹதீஸ்கள் தான் இப்பிரச்சனைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

صحيح مسلم

4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.

سنن الترمذي

1206 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُوكِلَهُ، وَشَاهِدَيْهِ، وَكَاتِبَهُ». وَفِي البَاب عَنْ عُمَرَ، وَعَلِيٍّ، وَجَابِرٍ، وَأَبِي جُحَيْفَةَ.: «حَدِيثُ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ”இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்

(முஸ்லிம் நூலில் அபுஸ்ஸுபைர் என்ற அறிவிப்பாளர் குறித்து விமர்சனம் இருந்தாலும் திர்மிதியில் உள்ள ஹதீஸில் குறைபாடு இல்லை.)

இதில் வட்டியை எழுதுபவர், சாட்சியாக இருப்பவர் பற்றியே கூறப்படுகிறது.

ஆவணங்களைப் பாதுகாப்பவர் வட்டியை எழுதுபவராக ஆவாரா? சாட்சியாக ஆவாரா? ஆக மாட்டார் என்பதே சரியான கருத்தாகும்.

இன்னாருக்கு இவ்வளவு வட்டி என்று இரு தரப்பும் எழுதும் போது இவர் சாட்சியாக இருக்கவில்லை. அந்த ஒப்பந்தத்தை இவர் எழுதவும் இல்லை. ஏற்கனவே எழுதப்பட்ட முடிவுகளைத் தான் இவர் பாதுகாக்கிறார்.

இதை நாமே ஏற்றுக் கொண்ட சில உதாரணங்களை வைத்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

ஒருவர் பொருள் பாதுகாப்பு மையம் வைத்துள்ளார். அதில் கட்டணம் வாங்கிக் கொண்டு மக்களின் பொருட்களைப் பாதுகாத்து வருகிறார். அதில் வங்கிகள் தமது ஆவணங்களைப் பாதுகாக்க ஒப்படைத்தால் இதர பொருட்களைப் பாதுகாப்பதைப் போல் அதையும் அவர் பாதுகாக்கலாம். ஏனெனில் இவர் வட்டியை எழுதிய குற்றத்தைச் செய்யவில்லை. மாறாக முன்னரே எழுதிக் கொண்ட விபரத்தை – தகவலைத் தான் பாதுகாக்கிறார்.

பெரிய வர்த்தக நிறுவனங்களில்  நுகர்வோர் கொண்டு வரும் பொருட்களைப் பாதுகாக்கும் பிரிவு இருக்கும். நுகர்வோர் கொடுக்கும் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு டோக்கன் தருவார்கள். அந்த டோக்கனைக் கொடுத்து நுகர்வோர் தமது பொருளைப் பெற்றுக் கொள்வார்கள்.

இப்படி ஒப்படைக்கப்படும் பொருட்கள் ஆவணங்களாக இருந்தால் அதில் என்ன உள்ளது என்று பார்க்கும் அவசியம் இல்லை. அதில் தவறான ஆவணங்கள் இருந்தாலும் அதைப் பாதுகாத்து ஒப்படைப்பதில் தவறு இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அப்படி ஒப்படைக்கப்படும் பொருட்கள் ஹராமான முறையில் சம்பாதித்தவையாக இருந்தாலும் அவற்றைப் பாதுகாத்து திரும்ப ஒப்படைக்கலாம்.

இருவருக்கு மத்தியில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஜமாஅத்தில் விசாரிக்கும் போது அவர்களுக்கிடையே எழுதப்பட்ட வட்டி சம்மந்தமான ஆவணங்களை நம்மிடம் தருவார்கள். அதை பஞ்சாயத்து முடியும் வரை நாம் பாதுகாப்போம்.

அது போல் நமது வங்கிக் கணக்கின் வருடாந்திர ஸ்டேட்மெண்டை வாங்கி நாம் பாதுகாத்து வைப்போம். அது கரண்ட் அக்கவுண்டாக இல்லாமல் சேமிப்பு அக்கவுண்டாக இருந்தால் அந்த ஸ்ட்டேட்மெண்டில் நமது வட்டிக் கணக்கும் எழுதப்பட்டு இருக்கும். நாம் வட்டியை வாங்காவிட்டாலும் அந்த ஸ்டேட் மெண்டில் வட்டியைக் குறிப்பிட்டு இருப்பார்கள்.

இவற்றைப் பாதுகாப்பதால் நாம் வட்டியை எழுதியவர்களாக ஆக மாட்டோம். மாறாக ஏற்கனவே எழுதப்பட்ட தகவலைத் தான் நாம் பாதுகாக்கிறோம்.

நான் இன்னாரிடம் கடன் வாங்கினேன்; இவ்வளவு தொகைக்கு இவ்வளவு வட்டி போட்டார் என்று நமக்குக் கடிதம் வந்து அந்தக் கடிதத்தை நாம் பாதுகாத்தால் அது வட்டியை எழுதியதாக ஆகாது. மாறாக முன்னர் எழுதப்பட்ட தகவலை நாம் பாதுகாக்கிறோம் என்பதாகவே ஆகும்.

அறியாமைக் காலத்தில் வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கியவர் இப்போது திருந்தி விட்டார் என்று வைத்துக் கொள்வோம்; அவர் திருந்தி விட்டாலும் வங்கிகள் அவரது கடனை வசூலித்தே தீரும் என்பதால் அது தொடர்பான கணக்கை அவர் எழுதிப் பாதுகாக்கும் அவசியம் அவருக்கு ஏற்படுகிறது. இதனால் இவர் வட்டியை எழுதிய குற்றத்தில் சேரமாட்டார்.

இது போல் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அவை வட்டியை எழுதுதல் என்பதில் சேராது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். இந்த வகையில் ஆவணப் பாதுகாப்பு என்பது வட்டியை எழுதியதில் சேராது.

கணக்கர் வேலை பார்ப்பதும், ஆடிட்டர் வேலை பார்ப்பதும் இவ்வாறுதான்.

ஒருவர் கணக்கராக, அல்லது ஆடிட்டராக தொழில் செய்கிறார். அவரிடம் பல கணக்குகள் கொடுக்கப்படும். அதில் வட்டி தொடர்பான விபரங்களும் இடம்பெற்று இருக்கும். இவர் அந்தக் கணக்குகளை எப்படி அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பது என்று வழிகாட்டினால் அவர் வட்டிக்குத் துணை செய்தவர் என்றோ வட்டிக்கு சாட்சி என்றோ ஆக மாட்டார்.

அது போல் தான் ஆவணங்களைப் பாதுகாப்பதும் வட்டியை எழுதிய குற்றத்தில் சேராது.

இது முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.

ஆனால் மேற்கண்ட பணிகளை வங்கியின் ஊழியராக இருந்து கொண்டு செய்தால் அப்போது அவர் வட்டிக்குத் துணை செய்த குற்றத்தைச் செய்தவராவார்.

பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் ஊழியராகப் பணியாற்றுவது கூடாது. அந்த ஊழியர் செய்யும் பணி, பாவமில்லாத காரியமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது தீமையைச் செய்வதாகவே கருதப்படும்.

உதாரணமாக ஒருவர் மதுபானக் கடையில் ஊழியராகப் பணியாற்றுகிறார். ஆனால் அவர் மது குடிப்பவர்களுக்கு ஊறுகாய், மீன் வறுவல் மட்டுமே பரிமாறுகிறார். மதுவை ஊற்றிக் கொடுக்கவில்லை என்றாலும் இவர் மதுபான விற்பனைக்குத் துணை செய்தவாராகக் கருதப்படுவார்.

ஊறுகாய், மீன் வறுவல் விற்பனை செய்வது ஹலாலாக இருந்தாலும் அதனை மதுபானக் கடை ஊழியராக இருந்து கொண்டு மதுபானக் கடையில் விற்பனை செய்தால் மதுபானம் விற்பது எப்படிக் குற்றமோ அதே குற்றம் தான் அந்த நிறுவனத்தில் ஊழியராக இருந்து கொண்டு ஹலாலான பொருளை விற்பனை செய்வதும் என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا 4:140

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும், வைபவங்களிலும் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையைச் செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வங்கியின் ஆவணங்களைப் பாதுகாக்கின்ற ஆவணப் பிரிவில் பணியாற்றினாலும் அவர் வங்கியின் ஊழியரேயாவார். எனவே தீமையான காரியத்தைச் செய்கின்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவரும் அந்தத் தீமையின் பங்குதாரராகவே கருதப்படுவார். எனவே வங்கியில் டாக்குமெண்டேசன் பிரிவில் பணியாற்றுவதும் தீமைக்கு துணை புரிவதாகும்.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ 5:2

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 5:2

நன்மையான காரியத்திலும், இறையச்சமான காரியத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளலாம் என்றும், பாவமான காரியத்திலும் வரம்பு மீறும் காரியத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்வது கூடாது என்றும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றுவது அந்த நிறுவனத்தின் பாவமான காரியத்திற்கு துணை செய்வதாகத்தான் ஆகும்.

எனவே வட்டித் தொழிலாக அமைந்துள்ள வங்கியில் ஊழியராக இருந்து கொண்டு ஆவணங்களைப் பாதுகாத்தாலும் அது மார்க்க அடிப்படையில் தவறாகும்.

வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ள போதும் மற்றவர்கள் குற்றமாகக் கருதாததால் வங்கியில் பணியாற்றினால் என்ன தவறு எண்ணம் சிலருக்கு மேலோங்குகிறது.

ஆனால் பொதுமக்கள் அனைவரும் குற்றமாகக் கருதும் காரியங்களாக இருந்தால் அப்போது மட்டும் வித்தியாசத்தை சரியாகப் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு விபச்சார விடுதி இருக்கிறது. அந்த விடுதிக்குத் தேவையான மின்விசிறி, மின்விளக்கு ஆகியவைகளைப் பராமரிக்கும் வேலையில் சேரலாமா என்றால் அது கூடாது என்று நமது மனசாட்சி கூறுகிறது. மின் விசிறியோ, ஏசியோ மார்க்கத்தில் தடை செய்யப்பட்டாவிட்டாலும் விபச்சார விடுதியில் வேலை பார்க்கலாமா என்று மக்கள் கேட்பார்கள் என்பதால் இதைச் சரியாகப் புரிந்து கொள்கிறார்கள்.

அதுபோல் டாஸ்மாக் கடையில் வேலைக்குச் சேர்ந்து மதுபானம் சப்ளை செய்யாமல் தண்ணீர், ஊறுகாய், மிக்சர் சப்ளை செய்யும் வேலை பார்க்கலாமா என்றால் அதைக் கூடாது என்று அனைவரின் மனசாட்சியும் கூறுகிறது. ஆனால் வட்டி அதைவிடக் கடுமையான குற்றமாக இருந்தும் அதை வேறு விதமாகப் பார்ப்பது சரியா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வங்கியில் வட்டி சாராத பணிகள் செய்யலாம் என்பதே இதற்கு முன்னர் நமது நிலைப்பாடாக இருந்தது. உதாரணமாக வங்கியில் வாட்ச்மேனாக வேலை பார்ப்பது, டீ வாங்கிக் கொடுப்பது இது போன்ற வேலைகளைச் செய்வது தவறில்லை என்று முன்னர் கூறி வந்தோம்.

ஆனால் இது போன்ற வேலைகளுக்காக வங்கியில் ஒருவர் ஊழியராகப் பணியாற்றினாலும் அது கூடாது என்பதே மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் சரியானதாகும் என்பதை நாம் இங்கே தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

ஒரு கட்டடப் பொறியாளர் வங்கியின் ஊழியராக ஆக்கப்பட்டு அந்த வங்கியின் கட்டடத்தைப் பராமரிக்கும் வேலையைச் செய்தால் அது குற்றமாகும். ஆனால் அதன் ஊழியராக இல்லாமல் மற்றவர்களுக்குச் செய்து கொடுப்பது போல் வங்கிக்கும் கட்டட பராமரிப்பு செய்தால் அது குற்றமில்லை.

தீமை நடக்கும் நிறுவனத்தில் ஒருவர் ஊழியராக இருக்கும் போது எல்லா நேரமும் அந்த நிறுவனத்தின் அங்கமாக இவர் இருக்கிறார். இது மேற்கண்ட வசனம் மூலம் தடுக்கப்படுகிறது.

தீமை நடக்கும் நிறுவனத்தின் ஊழியராக இல்லாமல் மார்க்கம் அனுமதித்த காரியத்தை அந்த நிறுவனத்துக்குச் செய்து கொடுத்தால் அக்காரியத்தை முடித்தவுடன் அந்த நிறுவனத்துடன் அவருக்குள்ள உறவு முடிந்து விடுகிறது.

வங்கிகளுக்கும், மார்க்கம் தடை செய்துள்ளவற்றை விற்கும் நிறுவனங்களுக்கும் பீரோக்கள், ஸ்டேஸனரி பொருட்கள், டேபிள்கள், சேர்கள் விற்பனை செய்வதும் குற்றமாகாது. ஏனெனில் அதன் ஊழியராக இல்லாத நிலையில் ஹலாலான பொருளைத் தான் அவர் விற்பனை செய்கிறார்.

நாம் விற்பனை செய்யும் ஹலாலான பொருட்கள் ஹராமான காரியங்களுக்குப் பயன்படும் என்றால் அத்தகைய நிறுவனங்களுக்கு  விற்பனை செய்யலாமா என்ற கேள்விக்கு வருவோம்.

நாம் விற்பனை செய்யும் பொருட்கள் ஹலாலாக இருக்கும் போது நம்மிடம் இருந்து அதனை விலைக்கும் வாங்குபவர் அதனைத் தடுக்கப்பட்ட காரியத்திற்குப் பயன்படுத்தினால் நாம் தீமைக்குத் துணை செய்தவராக ஆக மாட்டோம்.

எந்தத் தீய காரியத்திற்காகவும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ 5:2

‘நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது

திருக்குர்ஆன் 5:2

தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் பள்ளிவாசல் ஒன்றைக் கட்ட எண்ணுகிறார். அதற்கான வேலையிலும் ஈடுபடுகிறார். பள்ளிவாசல் கட்டுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கட்டடத்திற்குத் தேவையான பொருட்களை ஒரு வணிகரிடம் அவர் வாங்குகிறார். பள்ளிவாசல் கட்டும் நல்ல பணிக்காக அந்த வணிகர் தமது சரக்குகளை விற்றதால் அவர் நன்மைக்குத் துணை செய்தவராக முடியாது. ‘இவர் தான் பள்ளிவாசல் கட்ட உதவியவர் என்று அவரைப் பற்றி நாம் குறிப்பிடுவதில்லை. அந்த வணிகர் இலவசமாக அவற்றை வழங்கினால் அல்லது பள்ளிவாசல் கட்டும் பணி என்பதற்காக மற்ற எவருக்கும் விற்பதை விட சலுகை விலைகளில் வழங்கினால் மட்டுமே அவர் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு உதவினார் என்போம்.

ஒரு சிலை நிறுவுவதற்காக அதே வணிகரிடம் கட்டுமானப் பொருட்களை வாங்குகின்றனர். அந்த வணிகர் இலவசமாக அப்பொருளைக் கொடுத்தாலோ, அது சிறந்த பணி என்று கருதி விலையில் சலுகை அளித்தாலோ அப்போது அவர் தீமைக்குத் துணை செய்தவராவார்.

அவ்வாறு இல்லாமல் மற்ற பணிகளுக்கு விற்பது போல் அவர் விற்பனை செய்தால் அவர் தீமைக்குத் துணை போனவராக மாட்டார்.

‘நன்மையான காரியத்துக்கு உதவுதல் என்பதில் உதவுதல் என்பதை எந்தப் பொருளில் நாம் விளங்குகிறோமோ அதே பொருளில் தான் தீமையான காரியங்களுக்கு உதவுதல் என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் தீமைக்கு உதவக் கூடாது என்று சொல்வதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படும் 5:2 வசனம் தான் நன்மைக்கு உதவ வேண்டும் எனவும் கூறுகின்றது. இரண்டிலும் ஒரே வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் முக்கியமான நிபந்தனையை நாம் கவனத்தில் கொள்ள வைக்க வேண்டும். விற்பனை செய்யப்படும் பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

பூவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை. எனவே பூவை நாம் எவருக்கும் விற்கலாம். வாங்குபவர் அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம்.

இலவசமாகவோ, மற்ற காரியங்களை விட சலுகை விலையிலோ வழங்கும் போது தான் எந்தக் காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரு ஜவுளிக் கடையில் துணி விற்பனை செய்யும் போது வாங்கும் மனிதன் அதனைக் கற்சிலைக்கு அணிவிப்பதற்காக பயன்படுத்துவானோ? வேறு எதற்கும் பயன்படுத்துவானோ என்று நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

தேங்காய் வியாபாரி, தன்னிடம் வாங்கப்படும் தேங்காய்கள் சிலைகள் முன்னே உடைக்கப்படுமோ என்று புலன் விசாரணை செய்ய வேண்டியதில்லை.

ஒருவரின் வண்டியில் வாடகை கொடுத்து பயணிப்பவர் எந்த நோக்கத்திற்காகப் பயணிக்கிறார் என்பதை வண்டி ஓட்டுபவர் கவனிக்க வேண்டியதில்லை.

حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَمِ فَقَالَ حَدَّثَنِي الْأَسْوَدُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ

போர்க்களத்தில் அணிந்து கொள்ளும் தமது கவசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் அடகு வைத்துள்ளார்கள்.

நூல் : புகாரி : 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

அந்தக் கவசம் அந்த யூதரால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.

உண்ணவும், பருகவும், பயன்படுத்தவும், வைத்திருக்கவும் எப்பொருட்களுக்கு இஸ்லாம் தடை விதித்து விட்டதோ அவற்றை மட்டுமே விற்கலாகாது.

நன்மை தீமை ஆகிய இரண்டு வழிகளிலும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள பொருட்களை நாம் விற்க எந்தத் தடையும் இல்லை. வாங்குபவன் தீமைக்குப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக முடியாது.

எந்த நிலையிலும் தாயத்து விற்கலாகாது. அதில் நன்மைக்குப் பயன்படுதல் என்ற அம்சம் கிடையாது. அது முழுக்க முழுக்க பித்தலாட்டமாகும்.

எந்தப் பொருளை உண்ணவோ, பருகவோ, பயன்படுத்தவோ இறைவன் தடை விதித்து விட்டானோ அவற்றை விற்பதும் கூடாத ஒன்றாகும்.

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ أَخْبَرَنِي طَاوُسٌ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ بَلَغَ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَنَّ فُلَانًا بَاعَ خَمْرًا فَقَالَ قَاتَلَ اللَّهُ فُلَانًا أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمْ الشُّحُومُ فَجَمَلُوهَا فَبَاعُوهَا

யூதர்கள் மீது கொழுப்பை இறைவன் ஹராமாக்கியிருந்தான். அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்ணலானார்கள். அவர்களை அல்லாஹ் அழிப்பானாக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி)

நூல்: புகாரி 2223, 2234, 2236, 3460, 4633

حَدَّثَنَا مُسَدَّدٌ أَنَّ بِشْرَ بْنَ الْمُفَضَّلِ وَخَالِدَ بْنَ عَبْدِ اللَّهِ حَدَّثَاهُمْ الْمَعْنَى عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ بَرَكَةَ قَالَ مُسَدَّدٌ فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ بَرَكَةَ أَبِي الْوَلِيدِ ثُمَّ اتَّفَقَا عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عِنْدَ الرُّكْنِ قَالَ فَرَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ فَضَحِكَ فَقَالَ لَعَنَ اللَّهُ الْيَهُودَ ثَلَاثًا إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمْ الشُّحُومَ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا وَإِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ أَكْلَ شَيْءٍ حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ وَلَمْ يَقُلْ فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ الطَّحَّانِ رَأَيْتُ وَقَالَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ

ஒரு சமுதாயத்தின் மீது ஒரு பொருளை உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டால் அதை வியாபாரம் செய்வதையும் தடுத்து விடுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 3026 அஹ்மத் 2111

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ

நாய் விற்ற கிரயத்தையும், விபச்சாரத்தின் கூலியையும், சோதிடன் பெருகின்ற பொருளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர் : உக்பா இப்னு அம்ரு (ரலி)

நூல் : புகாரி 2237, 2282, 5346, 5761

முற்றிலும் தடுக்கப்பட்ட காரியத்துக்காக நமது கட்டடத்தை வாடகைக்கு விடக் கூடாது. நமக்குச் சொந்தமான இடத்தை விபச்சார விடுதி நடத்த நாம் வாடகைக்கு விடுவது கூடாது. அது போன்று பேங்க் நடத்துவதற்கும் நம்முடைய கட்டிடத்தை வாடகைக்கு விடுவது கூடாது.

ஒரு முஸ்லிம் அல்லாதவர் குடியிருப்பதற்காக நம்முடைய வீட்டை வாடகைக்குக் கேட்கிறார். குடியிருப்பதற்கு வாடகைக்கு விடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். ஆனால் வாடகைக்கு வாங்கியவர் அந்த வீட்டில் ஷிர்க்கான காரியங்களைச் செய்தால் நாம் குற்றவாளி ஆகமாட்டோம். ஒருவருக்கு ஒரு வீட்டை நாம் விற்பனை செய்த பிறகு அதில் அவர் பாவமான காரியங்களைச் செய்தால் எப்படி அக்குற்றம் நம்மைச் சாராதோ அது போன்று பாவமில்லாத காரியத்திற்காக வாடகைக்கு பெற்றவர் அந்த வாடகைக் காலத்தில் பாவமான காரியங்களைச் செய்தால் நம் மீது குற்றம் ஏற்படாது. இது தீமைக்குத் துணை செய்தலாக ஆகாது.

ஒரு வியாபாரி விற்பனை செய்யும் பொருட்களில் நன்மைக்கும், தீமைக்கும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக மஞ்சள் தூள், சாம்பிராணி, ஊதுபத்தி, பேரீச்சை, நல்லெண்ணை, நெய், தீப்பெட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம். (உதாரணத்திற்குத் தான் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளோம்)

இவற்றை நல்ல காரியத்திற்கும், தீய காரியத்திற்கும் பயன்படுத்தலாம். இது போன்றவைகளை விற்பனை செய்வதில் எந்தக் குற்றமுமில்லை. உங்களிடம் இந்தப் பொருட்களை வாங்கிய ஒருவன் பூஜை போன்ற பாவமான காரியங்களுக்குப் பயன்படுத்தினால் விற்பவன் மீது எந்தக் குற்றமும் ஏற்படாது.

அது போல் தீமைக்கு மட்டுமே பயன்படக் கூடிய பொருட்களும் உள்ளன. அவற்றை விற்பனை செய்வது கூடாது. அப்படி விற்பனை செய்தால் அது தீமைக்குத் துணை செய்வதாகும். உதாரணமாக விபூதி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தப் பொருட்களை இஸ்லாமிய அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட எந்த காரியத்திற்கும் யாரும் பயன்படுத்துவதில்லை. இவை முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்று தீமைக்கு மட்டுமே பயன்படும் பொருட்களை விற்பனை செய்வது ஹராம் ஆகும்.

நம்மிடம் உள்ள ஹலாலான ஒரு பொருளை பாவமான காரியங்கள் நடக்கும் ஒரு இடத்திற்கு தேடிச் சென்று விற்பனை செய்யலாமா என்ற கேள்விக்கு வருவோம்.

மார்க்கம் அனுமதித்த பொருட்களை வாங்கிச் செல்பவன் அதைத் தவறான வியாபாரத்துக்குப் பயன்படுத்தினால் அதனால் நமக்கு குற்றம் வராது.

உதாரணமாக ஒரு மதுபானக் கடையில் மதுவுடன் ஊறுகாய், மீன் வறுவல், ஈரல் வறுவல் எனப் பல பொருட்களை வழங்குவார்கள். இவர்களுக்காக நாம் ஊறுகாய், மீன், இறைச்சி போன்றவற்றை விற்பது குற்றமாகாது.

ஆனால் ஹராமான வியாபாரம் நடக்கும் இடத்தை தேடிச் என்று சப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

صحيح البخاري

52 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே.

அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல் : புகாரி 52

மேற்கண்ட ஹதீஸில் வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதால் சாராயக் கடையைத் தேடிச் சென்று சப்ளை செய்தால் நாமே அதனுள் விழுந்து விட வாய்ப்பு உண்டு என்ற நபியின் எச்சரிக்கைப்படி தேடிச் என்று கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

விபச்சார விடுதிக்கு ஹலாலான பொருட்களை நாம் சப்ளை செய்தாலும் அதில் நாம் விழுந்து விடும் அபாயம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்ததால் அதைத் தவிர்க்க வேண்டும். ஹலாலான பொருட்களை விபச்சார விடுதிக்காக நம்மைத் தேடி வந்து வாங்கினால் அதில் குற்றம் ஏதும் இல்லை.

இக்கேள்வியுடன் தொடர்பான மேலும் சில கேள்விகளும் உள்ளன. அவற்றுக்கான விடையையும் அறிந்து கொண்டால் தெளிவான விளக்கம் கிடைக்கும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...