தேதி:  30-06-2023 வெள்ளி

பெயர் : ஜ.செய்யது அன்வர்தீன்

ஊர் : தொண்டி

கேள்வி:  தொழுகை, திக்ர்,குரான் ஓதுதல் இவற்றை நாம் செய்தால் நன்மைகள் நமக்கு கிடைக்கும் இதுபோல் பயான்கள் செய்வதற்கு குறிப்பு எடுத்தல் மக்களுக்கு மார்க்கம் தொடர்பான செய்திகள் அனுப்புவதற்கு செய்திகளை சேகரித்தல் மேலும் மார்க்கம் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள பயான் கேட்கும் நேரங்கள் இவற்றிற்கும் நன்மைகள் கிடைக்குமா?

பதில்

மார்க்கத்தில் எவை எல்லாம் நல்ல காரியங்கள் எனச் சொல்லப்பட்டுள்ளதோ அவை அனைத்துக்கும் அல்லாஹ்விடம் கூலி உண்டு.

صحيح البخاري

56 – حَدَّثَنَا الحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ»

உன் மனைவியின் வாயில் ஊட்டி விடுவது உள்ளிட்ட எந்த செலவினத்துக்காகவும் உனக்கு கூலி உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்

நூல் : புகாரி 56, 1295, 2472, 3936, 4409, 5354, 5668, 6373, 6733

صحيح مسلم

1832 حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللهِ، ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ، قَالَ: ” أَوَلَيْسَ قَدْ جَعَلَ اللهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ؟ إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً، وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً، وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً، وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ، وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟ قَالَ: «أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ؟ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ»

1832 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளைக் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்;  (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)” என்று கூறினர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு “ஓரிறை உறுதிமொழி’யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்” என்று விடையளித்தார்கள்.

நூல்: முஸ்லிம்

அணு அளவு யார் நன்மை செய்கிறாரோ அதை அவர் காண்பார்.

திருக்குர்ஆன் 99:7

எனவே நன்மையான காரியங்கள் எதுவாயிலும் அதற்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு.