பெட்ரோல் விலை உயரக் காரணம் என்ன?

கச்சா எண்ணெயின் விலையேற்றம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நஷ்டம் எனக் கூறி பெட்ரோல் விலையை ஏற்றிக் கொண்டே போகிறார்களே, அதற்கான உண்மையான காரணம் என்ன?

பதில் :

அரசாங்கத்தின் கொள்ளை அடிக்கும் மனப்பான்மை தான் இதற்குக் காரணம்.

ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் பெட்ரோலின் விலை 20 ரூபாய் தான். 20 ரூபாய் பெட்ரோலுக்கு மத்திய மாநில அரசுகள் சுமார் 50 ரூபாய் வரி போட்டு விட்டு அடக்க விலை 70 ரூபாய் என்று மக்களை ஏமாற்றுகின்றன.

70 ரூபாய் அடக்கமாவதால் 75 ரூபாய்க்கு விற்கிறோம் என்று நாட்டுமக்கள் காதில் பூ சுற்றுகின்றனர்.

மிகவும் அவசியமான பெட்ரோலுக்கு மத்திய மாநில அரசுகள் விதி விலக்கு அளித்தால் பெட்ரோல் 25 ரூபாய்க்கு விற்க முடியும். அதன் மூலம் விற்பனையாளருக்கு 20 சதம் லாபமும் கிடைக்கும்.

அத்துடன் விலைவாசி உயர்வும் உடனடியாக பல மடங்கு குறைந்து விடும். இன்றைய விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணம் பெட்ரோல் விலை உயர்வு தான். சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்பது இதற்குத் தான் கச்சிதமாக பொருந்தும்.

உண்ரவு 19:9

21.11.2011. 5:56 AM