2 – كِتَابُ الإِيمَانِ

அத்தியாயம்: 2 நம்பிக்கை (ஈமான்)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ»

பாடம் : 1

இஸ்லாம் ஐந்து அடிப்படைகள் மீது நிறுவப்பட்டுள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

وَهُوَ قَوْلٌ وَفِعْلٌ، وَيَزِيدُ وَيَنْقُصُ، قَالَ اللَّهُ تَعَالَى {لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ} [الفتح: 4]

وَزِدْنَاهُمْ هُدًى} [الكهف: 13]

 {وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى} [مريم: 76]

 {وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْوَاهُمْ} [محمد: 17]

 وَقَوْلُهُ: {وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا} [المدثر: 31]

 وَقَوْلُهُ: {أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا} [التوبة: 124]

 وَقَوْلُهُ جَلَّ ذِكْرُهُ: {فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا} [آل عمران: 173]

 وَقَوْلُهُ تَعَالَى: {وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا} [الأحزاب: 22]

وَالحُبُّ فِي اللَّهِ وَالبُغْضُ فِي اللَّهِ مِنَ الإِيمَانِ “

 وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ إِلَى عَدِيِّ بْنِ عَدِيٍّ: «إِنَّ لِلْإِيمَانِ فَرَائِضَ، وَشَرَائِعَ، وَحُدُودًا، وَسُنَنًا، فَمَنِ اسْتَكْمَلَهَا اسْتَكْمَلَ الإِيمَانَ، وَمَنْ لَمْ يَسْتَكْمِلْهَا لَمْ يَسْتَكْمِلِ الإِيمَانَ، فَإِنْ أَعِشْ فَسَأُبَيِّنُهَا لَكُمْ حَتَّى تَعْمَلُوا بِهَا، وَإِنْ أَمُتْ فَمَا أَنَا عَلَى صُحْبَتِكُمْ بِحَرِيصٍ»

 وَقَالَ إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي»

 وَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: «اجْلِسْ بِنَا نُؤْمِنْ سَاعَةً»

وَقَالَ ابْنُ مَسْعُودٍ: «اليَقِينُ الإِيمَانُ كُلُّهُ»

وَقَالَ ابْنُ عُمَرَ: «لاَ يَبْلُغُ العَبْدُ حَقِيقَةَ التَّقْوَى حَتَّى يَدَعَ مَا حَاكَ فِي الصَّدْرِ»

وَقَالَ مُجَاهِدٌ: «شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ أَوْصَيْنَاكَ يَا مُحَمَّدُ وَإِيَّاهُ دِينًا وَاحِدًا»

وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «شِرْعَةً وَمِنْهَاجًا» سَبِيلًا وَسُنَّةً باب دُعَاؤُكُمْ إِيمَانُكُمْ لِقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {قُلْ مَا يَعْبَأُ بِكُمْ رَبِّي لَوْلاَ دُعَاؤُكُمْ} [الفرقان: 77]

 وَمَعْنَى الدُّعَاءِ فِي اللُّغَةِ الإِيمَانُ

சொல்லும் செயலும் இணைந்ததே ஈமான் (விசுவாசித்தல்) ஆகும். அது அதிகரிக்கலாம்; குறையலாம்.

(இதற்கான ஆதாரம் வருமாறு:)

தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான் என்று அல்லாஹ் கூறுகிறான். –

திருக்குர்ஆன்48:4

அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகமாக்கினோம்.

– திருக்குர்ஆன் 18:13

நேர்வழி பெற்றோருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகமாக்குகிறான்.

திருக்குர்ஆன் 19:76

நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிகமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான்.

திருக்குர்ஆன் 47:17

நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும்…

திருக்குர்ஆன் 74:31

ஓர் அத்தியாயம் அருளப்படும்போது “இது உங்களில் யாருக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்போரும் அவர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோருக்கு இது நம்பிக்கையை அதிகமாக்கியது. அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

திருக்குர்ஆன் 9:124

“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது.

திருக்குர்ஆன் 3:173

நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை.

திருக்குர்ஆன் 33:22

அல்லாஹ்வுக்காக நேசிப்பதும், அல்லாஹ்வுக்காக வெறுப்பதும் நம்பிக்கையில் அடங்கும்.

ஈமானுக்குக் கடமைகளும், சட்டதிட்டங்களும், வரம்புகளும், வழிமுறைகளும் உள்ளன. எனவே, எவர் அவற்றை முழுமைப்படுத்தினாரோ அவர் (தமது) ஈமானை முழுமைப்படுத்தினார். எவர் அவற்றை முழுமைப்படுத்தவில்லையோ அவர் (தமது) ஈமானை முழுமைப்படுத்திடவில்லை. நான் வாழ்ந்தால் நீங்கள் செயல்படுவதற்காக அவற்றை உங்களுக்கு விளக்குவேன். நான் இறந்துவிட்டால் நான் உங்களுடனேயே இருக்க வேண்டுமென்ற பேராசை பிடித்தவனல்லன் என்று உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள், அதீ பின் அதீ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.

என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டியபோது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் “அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே” என்றார்.

திருக்குர்ஆன் 2:260

எம்முடன் நீங்களும் அமருங்கள்; நாம் சிறிது நேரம் நம்பிக்கை கொள்வோம் என்று முஆத் பின் ஜபல் (ரலி) சொன்னார்கள்.

உறுதிதான் முழுநம்பிக்கை ஆகும் என்று இப்னு மஸ்வூத் (ரலி) கூறினார்கள்.

ஓர் அடியார் உள்ளத்தின் உறுத்தலைக் கைவிடாத வரை உண்மையான இறையச்சத்தை அடைய முடியாது என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான் எனும் (42:13ஆவது) வசனம் குறித்து பேசும் போது முஹம்மதே! உமக்கும், அவருக்கும் நாம் ஒரே மார்க்கத்தையே வலியுறுத்தியுள்ளோம் என்பது தான் இதன் விளக்கம் என்று முஜாஹித் கூறுகிறார்.

உங்களில் ஒவ்வொருவருக்கும் நாம் ஒரு ஷிர்அத்தையும், மின்ஹாஜையும் ஏற்படுத்தியிருக்கிறோம் எனும் (5:48ஆவது) வசனத்திற்கு வழியையும், நடைமுறையையும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

உங்களது துஆ இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை விட்டு வைத்திருக்க மாட்டான் என்ற (25:77ஆவது) வசனத்தில் கூறப்படும் துஆ என்பதற்குப் பொருள் ஈமான் எனும் நம்பிக்கையாகும். துஆ என்பதன் அகராதிப் பொருள் நம்பிக்கையாகும்.

8 – حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ “

8 அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஜகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து அடிப்படைகள் மீது இஸ்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

بَابُ أُمُورِ الإِيمَانِ

பாடம் : 2

நம்பிக்கைக்குரிய செயல்கள்.

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {لَيْسَ البِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ المَشْرِقِ وَالمَغْرِبِ، وَلَكِنَّ البِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ وَالمَلاَئِكَةِ وَالكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى المَالَ عَلَى حُبِّهِ ذَوِي القُرْبَى وَاليَتَامَى وَالمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ، وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ، وَأَقَامَ الصَّلاَةَ، وَآتَى الزَّكَاةَ، وَالمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا، وَالصَّابِرِينَ فِي البَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ البَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ المُتَّقُونَ} [البقرة: 177

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஜகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

திருக்குர்ஆன் 2:177

] وَقَوْلِهِ: {قَدْ أَفْلَحَ المُؤْمِنُونَ} [المؤمنون: 1] الآيَةَ

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 23:1-11

9 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الجُعْفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ»

9 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் நம்பிக்கையின் ஒரு கிளையாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

بَابٌ: المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

பாடம் : 3

எவரது நாவிலிருந்தும், கையிலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவர்தான் முஸ்லிம்.

10 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، وَإِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا دَاوُدُ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَعْنِي ابْنَ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عَبْدُ الأَعْلَى، عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

10 எவரது நாவிலிருந்தும், கையிலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவர்தான் முஸ்லிம். எவர் அல்லாஹ் தடுத்தவைகளை விட்டு விலகிக் கொண்டாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவர் (துறந்தவர்) ஆவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

بَابٌ: أَيُّ الإِسْلاَمِ أَفْضَلُ؟

பாடம் : 4 இஸ்லாமில் சிறந்தது எது?

11 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ القُرَشِيُّ ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الإِسْلاَمِ أَفْضَلُ؟ قَالَ: «مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ، وَيَدِهِ»

11 அல்லாஹ்வின் தூதரே இஸ்லாமில் சிறந்தது எது என்று சிலர் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)

بَابٌ: إِطْعَامُ الطَّعَامِ مِنَ الإِسْلاَمِ

பாடம் : 5 உணவளிப்பது இஸ்லாமின் ஒரு பகுதியாகும்.

12 – حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ»

12. இஸ்லாமில் சிறந்தது எது என ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணவளிப்பதும், உமக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

بَابٌ: مِنَ الإِيمَانِ أَنْ يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

பாடம் : 6

ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது ஈமானின் (நம்பிக்கையின்) ஒரு பகுதியாகும்.

13 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ حُسَيْنٍ المُعَلِّمِ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ»

13. தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை உங்களில் யாரும் நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

بَابٌ: حُبُّ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الإِيمَانِ

பாடம் : 7

நபிகள் நாயகத்தை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதியாகும்.

14 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ»

14 என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! தனது தந்தையையும், தனது பிள்ளையையும் விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை உங்களில் ஒருவர் ஈமான் உள்ளவராக மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

15 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ»

15. உங்களில் ஒருவருக்கு தனது தந்தை, தனது பிள்ளை, மற்றும் மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் ஈமான் கொண்டவராக மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

بَابُ حَلاَوَةِ الإِيمَانِ

பாடம் : 8

ஈமானின் சுவை

16 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ “

16. மூன்று தன்மைகள் யாரிடம் உள்ளனவோ அவர் அவர் தான் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். அவைகளாவன:

(1) அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது,

(2) ஒருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது

(3) இறைமறுப்பில் இருந்து அல்லாஹ் விடுவித்த பின் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

بَابٌ: عَلاَمَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ

பாடம் : 9

அன்சாரிகளை நேசிப்பது நம்பிக்கையின் அடையாளமாகும்.

17 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ»

17. அன்சாரிகளை நேசிப்பது ஈமானின் அடையாளமாகும். அன்சாரிகளை வெறுப்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

பாடம் : 10

18 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ العَقَبَةِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ، وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ: «بَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ» فَبَايَعْنَاهُ عَلَى ذَلِكَ

18. பத்ருப் போரில் கலந்து கொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்கும் போது, அல்லாஹ்வுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; திருடக்கூடாது; விபச்சாரம் செய்யக்கூடாது; உங்கள் குழந்தைகளைக் கொல்லக் கூடாது; அவதூறு புனையக் கூடாது; எந்த நல்ல காரியத்திலும் மாறுசெய்யக் கூடாது என்பதற்கு என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் இதை நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் உள்ளது. இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலேயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்ற சொன்னார்கள்.

உடனே நாங்கள் அவற்றுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

بَابٌ: مِنَ الدِّينِ الفِرَارُ مِنَ الفِتَنِ

பாடம் : 11

குழப்பங்களிலிருந்து வெருண்டோடுவது மார்க்கத்தின் ஒரு பகுதியாகும்.

19 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ المُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ وَمَوَاقِعَ القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ»

19. முஸ்லிமின் செல்வத்தில் ஆடுகள் மிகச் சிறந்தவையாக (ஒரு காலத்தில்) ஆகக் கூடும். சோதனைகளிலிருந்து தனது மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மலைகளின் உச்சிக்கும், மழைபொழியும் இடங்களுக்கும் தனது ஆடுகளை முஸ்லிம் ஓட்டிச்செல்வார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَعْلَمُكُمْ بِاللَّهِ». وَأَنَّ المَعْرِفَةَ فِعْلُ القَلْبِ لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ} [البقرة: 225]

பாடம் : 12

அல்லாஹ்வைப் பற்றி உங்களை விட நான் மிக அறிந்தவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

(அல்லாஹ்வை) அறிவது உள்ளத்தின் செயலாகும். ஏனெனில் உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 2:225

20 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمَرَهُمْ، أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ بِمَا يُطِيقُونَ، قَالُوا: إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، فَيَغْضَبُ حَتَّى يُعْرَفَ الغَضَبُ فِي وَجْهِهِ، ثُمَّ يَقُولُ: «إِنَّ أَتْقَاكُمْ وَأَعْلَمَكُمْ بِاللَّهِ أَنَا»

20. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களால் இயன்ற செயல்களையே கட்டளையிடுவார்கள். அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். எங்கள் நிலை உங்கள் நிலையைப் போன்றதல்லவே என்று மக்கள் கூறினார்கள். அப்போது கோபத்தின் அறிகுறி முகத்தில் காணப்படும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு உங்கள் அனைவரையும் விட அல்லாஹ்வை நான் நன்கு அஞ்சிநடப்பவன்; நன்கு அறிந்தவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

بَابٌ: مَنْ كَرِهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ مِنَ الإِيمَانِ

பாடம் : 13

இறைமறுப்புக்கு திரும்பிச் செல்வதை, தன்னை நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பது போல் ஒருவர் வெறுப்பது ஈமானின் ஒரு பகுதியாகும்.

21 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَمَنْ أَحَبَّ عَبْدًا لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ عَزَّ وَجَلَّ، وَمَنْ يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الكُفْرِ، بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، مِنْهُ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ “

21. மூன்று தன்மைகள் எவரிடம் உள்ளனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார் அவைகளாவன:

(1) அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது

(2) ஒருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது

(3) இறைமறுப்பில் இருந்து அல்லாஹ் விடுவித்த பின் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

بَابٌ: تَفَاضُلِ أَهْلِ الإِيمَانِ فِي الأَعْمَالِ

பாடம் : 14

நம்பிக்கையாளர்களின் செயல்களில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.

22 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى المَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَدْخُلُ أَهْلُ الجَنَّةِ الجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ»، ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى: «أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ. فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا، فَيُلْقَوْنَ فِي نَهَرِ الحَيَا، أَوِ الحَيَاةِ – شَكَّ مَالِكٌ – فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الحِبَّةُ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً» قَالَ وُهَيْبٌ: حَدَّثَنَا عَمْرٌو: الحَيَاةِ، وَقَالَ: خَرْدَلٍ مِنْ خَيْرٍ

22. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும், நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பிறகு உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருந்தோரை (நரகத்திலிருந்து) வெறியேற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்னர் மழைநதியில் அல்லது ஜீவநதியில் அவர்கள் போடப்படுவார்கள். இதனால் ஓடைக்கரையில் விதை முளைப்பது போல மாறிவிடுவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறத்தில் இருப்பதை நீர் கண்டதில்லையா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) மழைநதி என்று சொன்னார்களா? ஜீவநதி என்று சொன்னார்களா? என்று சந்தேகமாக அறிவிப்பவர் மாலிக் ஆவார்.

இதே ஹதீஸை உஹைப் பின் காலித், ஜீவநதி என்று (உறுதியுடன்) அறவிக்கிறார். ஆயினும் (கடுகளவு ஈமான் என்பதற்குப் பதிலாக) கடுகளவு நன்மை என்று இவர் குறிப்பிடுகிறார்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

23 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَا أَنَا نَائِمٌ، رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَيَّ وَعَلَيْهِمْ قُمُصٌ، مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ، وَمِنْهَا مَا دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَيَّ عُمَرُ بْنُ الخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ». قَالُوا: فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الدِّينَ»

23. நான் உறங்கிக் கொண்டிருக்கும் போது மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவற்றில் மார்பளவு இறக்கம் கொண்டவையும், அதற்குக் கீழ் இறக்கம் கொண்டவையும் இருந்தன. இழுபடும் அளவுக்கு சட்டை அணிந்தவராக உமர் (ரலி) எனக்குக் காட்டப்பட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதற்கு நீங்கள் என்ன விளக்கம் சொல்கிறீர்கள்? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (சட்டை என்பது) மார்க்கத்தைக் குறிக்கும் என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

بَابٌ: الحَيَاءُ مِنَ الإِيمَانِ

பாடம் : 15

வெட்கம் நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்

24 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ، وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الحَيَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُ فَإِنَّ الحَيَاءَ مِنَ الإِيمَانِ»

24. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார். (இதைக் கண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள்; ஏனெனில் வெட்கமும் நம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

بَابٌ: {فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلاَةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ} [التوبة: 5]

பாடம் : 16

அவர்கள் திருந்திக்கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டு விடுங்கள் என்ற 9:5 வசனம் பற்றிய பாடம்.

25 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ المُسْنَدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو رَوْحٍ الحَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ»

25. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என உறுதிகூறி, தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தையும் கொடுக்கும் வரை இந்த மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்துவிட்டால் இஸ்லாமில் குற்றமாக்கப்பட்டவை தவிர மற்ற விஷயங்களில் தம் உயிரையும், உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். (இதில் அவர்கள் உண்மயாளர்களாக இல்லாவிட்டால்) அவர்களை விசாரிப்பது அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

بَابُ مَنْ قَالَ إِنَّ الإِيمَانَ هُوَ العَمَلُ

لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَتِلْكَ الجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ} [الزخرف: 72] وَقَالَ عِدَّةٌ مِنْ أَهْلِ العِلْمِ فِي قَوْلِهِ تَعَالَى: {فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ} [الحجر: 93] عَنْ قَوْلِ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَقَالَ: {لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلِ العَامِلُونَ} [الصافات: 61]

பாடம் : 17

ஈமான் என்பது செயல்பாடுகள் தான் என்று சிலர் கூறியுள்ளனர். ஏனெனில்

இதுவே நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட சொர்க்கம் (43:72) என்று அல்லாஹ் கூறுகிறான்.

உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம் (15:92) என்ற வசனத்திற்கு பல அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது ஈமானைப் பற்றி விசாரிப்போம் (செயல்களைப் பற்றி அல்ல) என்று கூறியுள்ளனர்.

செயல்படுவோர் இது போன்றதற்காகவே செயல்படட்டும் (37:61) என்று அல்லாஹ் கூறுவதை செயல்பாடுகள் தான் ஈமான் என்ற கருத்துடையவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

26 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: أَيُّ العَمَلِ أَفْضَلُ؟ فَقَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ». قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مَبْرُورٌ»

26. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிறந்த செயல் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று கேட்கப்பட்ட போது, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது என்றனர். பிறகு எது? என்று கேட்கப்பட்ட போது, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

بَابُ إِذَا لَمْ يَكُنِ الإِسْلاَمُ عَلَى الحَقِيقَةِ، وَكَانَ عَلَى الِاسْتِسْلاَمِ أَوِ الخَوْفِ مِنَ القَتْلِ

لِقَوْلِهِ تَعَالَى: {قَالَتِ الأَعْرَابُ آمَنَّا قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا} [الحجرات: 14] فَإِذَا كَانَ عَلَى الحَقِيقَةِ، فَهُوَ عَلَى قَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الإِسْلاَمُ} [آل عمران: 19] [وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ]

பாடம் : 18

மனப்பூர்வமாக அன்றி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, உயிருக்குப் பயந்தோ இஸ்லாமை ஏற்றால் (அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாது).

ஏனெனில் (நபியே!) நாங்களும் ஈமான் கொண்டு விட்டோம் என்று கிராமவாசிகளில் சிலர் (உம்மிடம்) கூறினார்கள். நீர் கூறும்: நீங்கள் உண்மையில் ஈமான் கொள்ளவில்லை; ஆயினும் நாங்கள் (இஸ்லாமை ஏற்காவிட்டால் ஏற்படும் இழிவிலிருந்து) தப்பித்துக் கொண்டோம்’ என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்! என்று அல்லாஹ், (49:14) கூறுகின்றான்.

மனப்பூர்வமாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படும். ஏனெனில் அல்லாஹ், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட ஒரே) மார்க்கம் இஸ்லாம் தான் (3:19) என்று கூறுகின்றான்.

27 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى رَهْطًا وَسَعْدٌ جَالِسٌ، فَتَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا هُوَ أَعْجَبُهُمْ إِلَيَّ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلاَنٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا، فَقَالَ: «أَوْ مُسْلِمًا» فَسَكَتُّ قَلِيلًا، ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ، فَعُدْتُ لِمَقَالَتِي، فَقُلْتُ: مَا لَكَ عَنْ فُلاَنٍ؟ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا، فَقَالَ: «أَوْ مُسْلِمًا». ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَعُدْتُ لِمَقَالَتِي، وَعَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «يَا سَعْدُ إِنِّي لَأُعْطِي الرَّجُلَ، وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يَكُبَّهُ اللَّهُ فِي النَّارِ» وَرَوَاهُ يُونُسُ، وَصَالِحٌ، وَمَعْمَرٌ، وَابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنِ الزُّهْرِيِّ

27. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை விட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன் என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரை முஸ்லிம் என்று சொல் என்றனர். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்த போது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகிறேன் என்றேன். அதற்கு அலலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை முஸ்லிம் என்று சொல் என்றனர். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, சஅத்! ஒருவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சத்தினால் நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். என்றனர்.

அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

بَابٌ: إِفْشَاءُ السَّلاَمِ مِنَ الإِسْلاَمِ

وقَالَ عَمَّارٌ: “ثَلاَثٌ مَنْ جَمَعَهُنَّ فَقَدْ جَمَعَ الإِيمَانَ: الإِنْصَافُ مِنْ نَفْسِكَ، وَبَذْلُ السَّلاَمِ لِلْعَالَمِ، وَالإِنْفَاقُ مِنَ الإِقْتَارِ”

பாடம் : 19

ஸலாமைப் பரப்புவதும் இஸ்லாமின் ஓரு பகுதியாகும்.

அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நேர்மையுடன் நடப்பது; உலகெங்கிலும் ஸலாமைப் பரப்புவது; வறுமையிலும் செலவளிப்பது ஆகிய மூன்று பண்புகளை எவர் (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டாரோ அவர் நிச்சயமாக ஈமானை ஒருங்கே அமைத்துக் கொண்டவராவார்.

28 – حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ»

28. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் சொல்வதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

அற்விப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

بَابُ كُفْرَانِ العَشِيرِ، وَكُفْرٍ دُونَ كُفْرٍ

فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

பாடம் : 20

கணவனின் உதவிகளுக்கு நன்றி செய்யாமையும்; (இறை) நிராகரிப்பு என்பது ஏற்றத் தாழ்வுடையது என்பதும்.

இது குறித்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

29 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ، يَكْفُرْنَ» قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: ” يَكْفُرْنَ العَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ “

29 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம் பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர் என்று கூறினார்கள். அப்போது இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கணவனை நிராகரிக்கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டு விட்டாளானால் உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை என்று பேசிவிடுவாள் என்றனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

بَابٌ: المَعَاصِي مِنْ أَمْرِ الجَاهِلِيَّةِ، وَلاَ يُكَفَّرُ صَاحِبُهَا بِارْتِكَابِهَا إِلَّا بِالشِّرْكِ

لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ» وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّ اللَّهَ لاَ يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ} [النساء: 48]

பாடம் : 21

பாவங்கள், அறியாமைச் செயலகளாகும்.

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதைத் தவிர, மற்ற பாவங்களைச் செய்தால் ஒருவரை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று சொல்லி விடமுடியாது

ஏனெனில், அபூதர் (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்து மூடப்பழக்கங்கள் குடிகொண்டிருக்கும் ஒரு மனிதர் நீங்கள் என்று சொன்னார்கள்.

மேலும் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனையவற்றை அவன் நாடியவர்களுக்கு மன்னித்துவிடுகின்றான் (4:48) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

30 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، عَنِ المَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ: لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: إِنِّي سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ»

30 மஉரூர் பின் சுவைத் அவர்கள் கூறியதாவது:

நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எசமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள் என்று கூறினார்கள்.

بَابُ {وَإِنْ طَائِفَتَانِ مِنَ المُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا} [الحجرات: 9] فَسَمَّاهُمُ المُؤْمِنِينَ

பாடம் : 22

மூமின்களில் இரு சாரார் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமரசம் செய்து வையுங்கள் எனும் (49:9ஆவது) இறைவசனம்.

அப்படிச் சண்டையிட்டுக்கொள்ளக் கூடியவர்களையும் அல்லாஹ் (இந்த வசனத்தில்) மூமின்கள் (விசுவாசிகள்) என்றே குறிப்பிட்டிருக்கின்றான்.

31 – حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ المُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ: ذَهَبْتُ لِأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ؟ قُلْتُ: أَنْصُرُ هَذَا الرَّجُلَ، قَالَ: ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا التَقَى المُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالقَاتِلُ وَالمَقْتُولُ فِي النَّارِ»، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا القَاتِلُ فَمَا بَالُ المَقْتُولِ قَالَ: «إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ»

31. (ஜமல் போரின் போது) அந்த மனிதருக்கு (அலீ அவர்களுக்கு) உதவி செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து எங்கே செல்கிறீர்?’ எனக் கேட்டார். அந்த மனிதருக்கு உதவிசெய்யச் செல்கிறேன் என்றேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் தம் சகாவைக் கொல்ல வேண்மென்று பேராசை கொண்டிருந்தார்’ என்று சொன்னார்கள் என்றனர்.

அறிவிப்பவர் : அஹ்னஃப் பின் கைஸ்

بَابٌ: ظُلْمٌ دُونَ ظُلْمٍ

பாடம் : 23

அநீதிகளில் ஏற்றத்தாழ்வு உண்டு.

32 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، ح قَالَ: وحَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ أَبُو مُحَمَّدٍ العَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: لَمَّا نَزَلَتْ: {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا} [الأنعام: 82] إِيمَانَهُمْ بِظُلْمٍ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّنَا لَمْ يَظْلِمْ؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الشِّرْكَ} [لقمان: 13] لَظُلْمٌ عَظِيمٌ

32. எவர் நம்பிக்கை (ஈமான்) கொண்டு பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்து விடவில்லையே அவர்களுக்கு மட்டுமே அபயம் உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர் எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது எங்களில் (தமக்குத் தாமே) அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர் தாம் இருக்கிறார்? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அப்போது அல்லாஹ், இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும் எனும் (31:13ஆவது) வசனத்தை அருளினான்.

அற்விப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

بَابُ عَلاَمَةِ المُنَافِقِ

பாடம் : 24

நயவஞ்சகனின் அடையாளங்கள்.

33 – حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ “

33 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். பேசும் போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

34 – حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: إِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ” تَابَعَهُ شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ

34 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். அவைகளாவன:

(1). நம்பி ஒப்படைக்கப்பட்டால் மோசடி செய்தல்

(2). பேசும் போது பொய் சொல்லுதல்

(3). ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்தல்

(4). உண்மைக்கு மாறாக வழக்காடுதல்

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

بَابٌ: قِيَامُ لَيْلَةِ القَدْرِ مِنَ الإِيمَانِ

பாடம் : 25

லைலத்துல் கத்ர் – கண்ணியமிக்க இரவில் நின்று வணங்குவது ஈமானின் ஒரு பகுதியாகும்.

35 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَقُمْ لَيْلَةَ القَدْرِ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

35. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

بَابٌ: الجِهَادُ مِنَ الإِيمَانِ

பாடம் : 26

அறப்போர் புரிவதும் ஈமானின் ஒரு பகுதியாகும்.

36 – حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «انْتَدَبَ اللَّهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ إِلَّا إِيمَانٌ بِي وَتَصْدِيقٌ بِرُسُلِي، أَنْ أُرْجِعَهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ، أَوْ أُدْخِلَهُ الجَنَّةَ، وَلَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي مَا قَعَدْتُ خَلْفَ سَرِيَّةٍ، وَلَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ»

36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னையும், என் தூதர்களையும் நம்பிக்கை கொண்டதால் எவர் இறைவழியில் புறப்பட்டுச் செல்கின்றாரோ அவரை நன்மையைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்க – அல்லது அவரைச் சொர்க்கத்தில் நுழைவிக்க – அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான்.

என் சமுதாயத்திற்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் எனும் அச்சம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் எந்தப் படைப்பிரிவிலும் கலந்துகொள்ளாமல் நான் அமர்ந்திருக்க மாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

بَابٌ: تَطَوُّعُ قِيَامِ رَمَضَانَ مِنَ الإِيمَانِ

பாடம் : 27

ரமளான் மாதத்தில் கூடுதல் தொழுகைகளை வணங்குவது ஈமானின் ஒரு பகுதியாகும்.

37 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

37 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

بَابٌ: صَوْمُ رَمَضَانَ احْتِسَابًا مِنَ الإِيمَانِ

பாடம் : 28

நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது ஈமானின் ஒரு பகுதியாகும்.

38 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

38. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

بَابٌ: الدِّينُ يُسْرٌ

وَقَوْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَبُّ الدِّينِ إِلَى اللَّهِ الحَنِيفِيَّةُ السَّمْحَةُ»

பாடம் : 29

இந்த மார்க்கம் எளிதானது.

அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான (இஸ்லாமிய) மார்க்கமே அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான மார்க்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

39 – حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ الغِفَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ»

39 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையையும், மாலையையும், இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

بَابٌ: الصَّلاَةُ مِنَ الإِيمَانِ

وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ} [البقرة: 143] يَعْنِي صَلاَتَكُمْ عِنْدَ البَيْتِ

பாடம் : 30

தொழுகை ஈமானின் ஓரு பகுதியாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்குபவன் அல்லன் (திருக்குர்ஆன் 2:143).

பொருள்: இறையில்லம் (கஅபாவின்) அருகில் இருந்தபடி (பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலை நோக்கி) நீங்கள் தொழுத தொழுகையை அல்லாஹ் வீணாக்கி விட மாட்டான்.

40 – حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَوَّلَ مَا قَدِمَ المَدِينَةَ نَزَلَ عَلَى أَجْدَادِهِ، أَوْ قَالَ أَخْوَالِهِ مِنَ الأَنْصَارِ، وَأَنَّهُ «صَلَّى قِبَلَ بَيْتِ المَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ البَيْتِ، وَأَنَّهُ صَلَّى أَوَّلَ صَلاَةٍ صَلَّاهَا صَلاَةَ العَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ» فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ صَلَّى مَعَهُ، فَمَرَّ عَلَى أَهْلِ مَسْجِدٍ وَهُمْ رَاكِعُونَ، فَقَالَ: أَشْهَدُ بِاللَّهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ مَكَّةَ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ البَيْتِ، وَكَانَتِ اليَهُودُ قَدْ أَعْجَبَهُمْ إِذْ كَانَ يُصَلِّي قِبَلَ بَيْتِ المَقْدِسِ، وَأَهْلُ الكِتَابِ، فَلَمَّا وَلَّى وَجْهَهُ قِبَلَ البَيْتِ، أَنْكَرُوا ذَلِكَ. قَالَ زُهَيْرٌ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ البَرَاءِ فِي حَدِيثِهِ هَذَا: أَنَّهُ مَاتَ عَلَى القِبْلَةِ قَبْلَ أَنْ تُحَوَّلَ رِجَالٌ وَقُتِلُوا، فَلَمْ نَدْرِ مَا نَقُولُ فِيهِمْ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ} [البقرة: 143]

40 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் தம் பாட்டனார்களிடமோ, அன்சாரிகளிலுள்ள தம் மாமன்மார்களிடமோ தங்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸ் நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். இறையில்லம் (கஅபா) தமது தொழும் திசையாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது. (கஅபாவை முன்னோக்கி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸ்ர் தொழுகையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மற்ற சிலரும் தொழுதனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுது கொண்டு) இருந்தவர்களைக் கடந்துசென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்தனர். உடனே அவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்காவை நோக்கித் தொழுதேன் என்று சொல்ல, அவர்கள் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுதுவந்தது யூதர்களுக்கும், மற்ற வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. தமது முகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் திருப்பிக் கொண்ட போது அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

மற்றோர் அறிவிப்பில், கிப்லா மாற்றப்படுவதற்கு முன் (பழைய) கிப்லாவை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்து விட்டிருந்தனர்; சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறினர். அப்போது அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை (அதாவது தொழுகையை) வீணாக்குபவன் அல்லன் எனும் (2:143ஆவது) வசனத்தை அல்லாஹ், அருளினான் என்று இடம்பெற்றுள்ளது.

بَابُ حُسْنِ إِسْلاَمِ المَرْءِ

பாடம் : 31

ஒரு மனிதரின் இஸ்லாம் அழகு பெறுவது.

41 – قَالَ مَالِكٌ: أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِذَا أَسْلَمَ العَبْدُ فَحَسُنَ إِسْلاَمُهُ، يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا، وَكَانَ بَعْدَ ذَلِكَ القِصَاصُ: الحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ، وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلَّا أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا “

41 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் இஸ்லாமைத் தழுவி, அவரது இஸ்லாம் அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன்செய்த அனைத்துத் தீமைகளுக்கும் அல்லாஹ் பரிகாரமாக்கி விடுகிறான். கிஸாஸ் (மனிதர்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரம்) மட்டும் இருக்கும். ஒவ்வொரு நல்லறத்திற்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகள் பதியப்படும். ஒவ்வொரு தீமைக்கும் அதைப் போன்று ஒன்று தான் உண்டு. அதையும் அல்லாஹ் மன்னித்து விட்டால் (எந்தத் தண்டனையும்) கிடையாது.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

42 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا أَحْسَنَ أَحَدُكُمْ إِسْلاَمَهُ: فَكُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ، وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ لَهُ بِمِثْلِهَا “

42 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை அழகாக்கிக் கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை பதிவுசெய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே (ஒரு தீமையே) பதிவு செய்யப்படுகிறது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

بَابٌ: أَحَبُّ الدِّينِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَدْوَمُهُ

பாடம் : 32

நிரந்தரமாகச் செய்யப்படும் நல்லறங்களே அல்லாஹ்விற்கு விருப்பமானவை.

43 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ، قَالَ: «مَنْ هَذِهِ؟» قَالَتْ: فُلاَنَةُ، تَذْكُرُ مِنْ صَلاَتِهَا، قَالَ: «مَهْ، عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ، فَوَاللَّهِ لاَ يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا» وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَامَ عَلَيْهِ صَاحِبُهُ

43. என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். யார் இவர்? என்று கேட்டார்கள். இவர் இன்னவர்’ என்று கூறிவிட்டு அவரது தொழுகை பற்றி (புகழ்ந்து) கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான். மேலும் மார்க்கத்தில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்பவை தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

بَابُ زِيَادَةِ الإِيمَانِ وَنُقْصَانِهِ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَزِدْنَاهُمْ هُدًى} [الكهف: 13] {وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا} [المدثر: 31] وَقَالَ: «اليَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ» فَإِذَا تَرَكَ شَيْئًا مِنَ الكَمَالِ فَهُوَ نَاقِصٌ

 

பாடம் : 33

ஈமான் கூடுவதும், குறைவதும்.

அல்லாஹ் கூறுகிறான்:

அவர்களுக்கு நாம் நேர்வழியை அதிகமாக்கினோம் (திருக்குர்ஆன் 18:13).

நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக… (திருக்குர்ஆன் 74:31)

அல்லாஹ் கூறுகிறான்:

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவுபடுத்திவிட்டேன் (திருக்குர்ஆன் 5:3).

அதாவது இந்த நிறைவானதில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவர் குறைவுடையவராவார்.

44 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ إِيمَانٍ» مَكَانَ «مِنْ خَيْرٍ»

44 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மை’ என்று கூறியதாக மேற்கண்ட நபிமொழியில் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் ஈமான் என்று குறிப்பிட்டதாக அனஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

45 – حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ، سَمِعَ جَعْفَرَ بْنَ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو العُمَيْسِ، أَخْبَرَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، أَنَّ رَجُلًا، مِنَ اليَهُودِ قَالَ لَهُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا، لَوْ عَلَيْنَا مَعْشَرَ اليَهُودِ نَزَلَتْ، لاَتَّخَذْنَا ذَلِكَ اليَوْمَ عِيدًا. قَالَ: أَيُّ آيَةٍ؟ قَالَ: {اليَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا} [المائدة: 3] قَالَ عُمَرُ: «قَدْ عَرَفْنَا ذَلِكَ اليَوْمَ، وَالمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ»

45. யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் முஸ்லிம்களின் தலைவரே! நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம் என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அது எந்த வசனம்? எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்தி விட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாமை உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி கொண்டேன் (திருக்குர்ஆன் 5:3) (என்பதே அந்த வசனமாகும்) என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் இந்த வசனம் எந்த நாளில், எந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அரஃபா பெருவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போது தான் என்றனர்.

அறிவிப்பபவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

بَابٌ: الزَّكَاةُ مِنَ الإِسْلاَمِ

وَقَوْلُهُ: {وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلاَةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ القَيِّمَةِ} [البينة: 5]

பாடம் : 34

ஜகாத் இஸ்லாமின் ஒரு பகுதியாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

அசத்திய வழிகளிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தில் சாய்ந்தவர்களாகவும் தமது எண்ணத்தை இறைவனுக்காகத் தூய்மையாக்கியவர்களாகவும் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தி வர வேண்டும்; ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்று மட்டும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. மேலும் அதுவே நேரான மார்க்கமுமாகும்.

(திருக்குர்ஆன் 98:5)

46 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلاَ يُفْقَهُ مَا يَقُولُ، حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي اليَوْمِ وَاللَّيْلَةِ». فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَطَوَّعَ». قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَصِيَامُ رَمَضَانَ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَطَوَّعَ». قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَطَوَّعَ». قَالَ: فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ»

46. நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் என்றனர். இதைத் தவிர வேறு ஏதாவது என் மீது உள்ளதா? என்று அவர் கேட்க, இல்லை, நீயாக விரும்பிச் செய்வதைத் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதைத் தவிர வேறு ஏதேனும் என்மீது உள்ளதா? எனக் கேட்க, இல்லை, நீயாக விரும்பி நோற்பதைத் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், இதைத் தவிர வேறு ஏதும் என் மீது உள்ளதா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை, நீயாக விரும்பிச் செய்வதைத் தவிர என்றனர். அந்த மனிதர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)

بَابٌ: اتِّبَاعُ الجَنَائِزِ مِنَ الإِيمَانِ

பாடம் : 35

இறந்தவர்களின் உடல்களைப் பின்தொடர்ந்து செல்வது ஈமானின் ஒரு பகுதியாகும்.

47 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ المَنْجُوفِيُّ، قَالَ: حَدَّثَنَا رَوْحٌ، قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الحَسَنِ، وَمُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ، إِيمَانًا وَاحْتِسَابًا، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيَفْرُغَ مِنْ دَفْنِهَا، فَإِنَّهُ يَرْجِعُ مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ، كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ، فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ» تَابَعَهُ عُثْمَانُ المُؤَذِّنُ، قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ

47. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமுடைய சடலத்தைப் பின்தொடர்ந்து சென்று அதற்காக தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தாரோ நிச்சயமாக அவர் இரண்டு கீராத் நன்மையுடன் திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹுத் மலை போன்றதாகும். எவர் தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

بَابُ خَوْفِ المُؤْمِنِ مِنْ أَنْ يَحْبَطَ عَمَلُهُ وَهُوَ لاَ يَشْعُرُ

وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ: «مَا عَرَضْتُ قَوْلِي عَلَى عَمَلِي إِلَّا خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذِّبًا» وَقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: ” أَدْرَكْتُ ثَلاَثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَى نَفْسِهِ، مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ: إِنَّهُ عَلَى إِيمَانِ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَيُذْكَرُ عَنِ الحَسَنِ: ” مَا خَافَهُ إِلَّا مُؤْمِنٌ وَلاَ أَمِنَهُ إِلَّا مُنَافِقٌ. وَمَا يُحْذَرُ مِنَ الإِصْرَارِ عَلَى النِّفَاقِ وَالعِصْيَانِ مِنْ غَيْرِ تَوْبَةٍ، لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ} [آل عمران: 135]

பாடம் : 36

தாம் அறியாத விதத்தில் தமது நல்லறங்கள் அழிந்துவிடுமோ என இறைநம்பிக்கையாளர் அஞ்சுவது.

எனது சொல்லை எனது செயலோடு ஒப்பிட்டபோதெல்லாம், நான் ஒரு பொய்யனாக இருப்பேனோ என்று நான் அஞ்சாமல் இருந்ததில்லை என்று இப்ராஹீம் அத்தய்மீ கூறினார்கள்.

இப்னு அபீமுலைக்கா அவர்கள் கூறியதாவது:

நபித் தோழர்களில் முப்பது பேரை நான் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் நயவஞ்சகத்தனம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர்களாகவே இருந்தனர். அவர்களில் எவரும் தமக்கு ஜிப்ரீல்
(அலை) மீக்காயீல் (அலை) ஆகியோரின் ஈமான் தமக்கு இருப்பதாகக் கூறியதில்லை.

ஹஸன் அல்பஸரி அவர்கள், விசுவாசிகளைத் தவிர வேறெவரும் நயவஞ்சகத்தன்மையை அஞ்சுவதில்லை. நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அது விஷயத்தில் அச்சமற்று இருப்பதில்லை என்று கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

பாவ மன்னிப்புக் கோராமல், நயவஞ்சகத்தனத்திலும், பாவத்திலும் நிலைத்து இருப்பதற்குக் கடும் எச்சரிக்கை.

அல்லாஹ் கூறுகிறான்:

தெரிந்து கொண்டே தாங்கள் செய்த (தீமையான)வற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(திருக்குர்ஆன் 3:135)

48 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، قَالَ: سَأَلْتُ أَبَا وَائِلٍ عَنْ المُرْجِئَةِ، فَقَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سِبَابُ المُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ»

48. நான் அபூவாயில் அவர்களிடம் முர்ஜிஆக்கள் பற்றிக் கேட்டேன். அப்போது அபூவாயில் அவர்கள் கூறினார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக்கொள்வது இறை நிராகரிப்பாகும் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸுபைத் பின் ஹாரிஸ்

குறிப்பு : ஈமான் எனும் நம்பிக்கை கொண்டவர் செய்யும் எந்தப் பாவத்துக்கும் தண்டனை இல்லை என்ற கொள்கையுடையவர்கள் முர்ஜியாக்கள் ஆவர்.

49 – أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يُخْبِرُ بِلَيْلَةِ القَدْرِ، فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ المُسْلِمِينَ فَقَالَ: «إِنِّي خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ القَدْرِ، وَإِنَّهُ تَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ، فَرُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، التَمِسُوهَا فِي السَّبْعِ وَالتِّسْعِ وَالخَمْسِ»

49. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் பற்றி அறிவிப்பதற்காக வெளியே வந்தார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், லைலத்துல் கத்ர் இரவு பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் வந்தேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (என் நினைவிலிருந்து) நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமளான் மாதத்தின் இருபத்து) ஏழு, (இருபத்து) ஒன்பது, (இருபத்து) ஐந்து ஆகிய (ஒற்றை எண்ணிக்கையிலான) இரவுகளில் அதனைத் தேடுங்கள் என்றனர்.

அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

بَابُ سُؤَالِ جِبْرِيلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الإِيمَانِ، وَالإِسْلاَمِ، وَالإِحْسَانِ، وَعِلْمِ السَّاعَةِ

وَبَيَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُ، ثُمَّ قَالَ: «جَاءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ يُعَلِّمُكُمْ دِينَكُمْ» فَجَعَلَ ذَلِكَ كُلَّهُ دِينًا، وَمَا بَيَّنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِوَفْدِ عَبْدِ القَيْسِ مِنَ الإِيمَانِ، وَقَوْلِهِ تَعَالَى: {وَمَنْ يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ} [آل عمران: 85]

பாடம் : 37

ஈமான், இஸ்லாம், இஹ்ஸான், மறுமை நாளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைக் குறித்து ஜிப்ரீல் (அலை) கேட்டதும், அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும்,

உங்களின் மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுத் தருவதற்காக ஜிப்ரீல் வந்திருந்தார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதும்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அளித்த பதில் அனைத்தையும் மார்க்கமாகவே கருதியிருக்கிறார்கள் என்பதும்,

அப்துல்கைஸ் தூதுக்குழுவினருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியவை (யாவும்) ஈமானின் பகுதிகளே என்பதும்,

எவர் இஸ்லாம் அல்லாத வேறொரு வழியைத் தமது மார்க்கமாகத் தேடிக் கொண்டாரோ அவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்பட மாட்டாது எனும் (திருக்குர்ஆன் 3:85ஆவது) இறைவசனமும்.

50 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ: «الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ». قَالَ: مَا الإِسْلاَمُ؟ قَالَ: ” الإِسْلاَمُ: أَنْ تَعْبُدَ اللَّهَ، وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤَدِّيَ الزَّكَاةَ المَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ “. قَالَ: مَا الإِحْسَانُ؟ قَالَ: «أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ»، قَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: ” مَا المَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا: إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا، وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الإِبِلِ البُهْمُ فِي البُنْيَانِ، فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ ” ثُمَّ تَلاَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ} [لقمان: 34] الآيَةَ، ثُمَّ أَدْبَرَ فَقَالَ: «رُدُّوهُ» فَلَمْ يَرَوْا شَيْئًا، فَقَالَ: «هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: جَعَلَ ذَلِكَ كُلَّهُ مِنَ الإِيمَانِ

50. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈமான் என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

அடுத்து அவர், இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தைக் கொடுத்து வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும் என்றனர்.

அடுத்து இஹ்ஸான் (அழகுறச் செய்தல்) என்றால் என்ன? என்று அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றனர்.

அடுத்து அவர் மறுமை நாள் எப்போது? என்று கேட்க, அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்), (அதைப் பற்றிக்) கேட்பவரை (உம்மை) விட மிக அறிந்தவரல்லர். அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல் என்றார்கள். பின்னர், அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும் என்று கூறிவிட்டு, உலக இறுதி பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது… எனும் (திருக்குர்ஆன் 31:34 ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை திரும்ப அழைத்து வாருங்கள் என்றனர். அவரை எங்கேயும் காணவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர்தாம் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தர வந்திருந்தார் என்றனர்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு தாம் அளித்த பதில்கள் அனைத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈமானின் பகுதிகளாகவே கருதினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

51 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ قَالَ: أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ، ” أَنَّ هِرَقْلَ، قَالَ لَهُ: سَأَلْتُكَ هَلْ يَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ؟ فَزَعَمْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ الإِيمَانُ حَتَّى يَتِمَّ، وَسَأَلْتُكَ هَلْ يَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ؟ فَزَعَمْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الإِيمَانُ، حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ القُلُوبَ لاَ يَسْخَطُهُ أَحَدٌ “

பாடம் : 38

51. (ரோமப் பேரரசர்) ஹெர்குலிஸ் தம்மிடம் கேட்டதாக அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவ(ரைப் பின்பற்றுப)வர்கள் அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து கொண்டே போகின்றார்களா?’ என்று கேட்டேன். அதற்கு நீர் அவர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள்’ என்று கூறினீர். இறை நம்பிக்கை அத்தகையதே. அது நிறைவடையும் வரை (வளர்ந்து கொண்டே தான்) இருக்கும்.

அவரது மார்க்கத்தில் இணைந்தோரில் எவரேனும் தமது புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் சென்றதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீர், இல்லை’ என்று பதிலளித்தீர். விசுவாசம் இத்தகையதே. அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும் போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

بَابُ فَضْلِ مَنِ اسْتَبْرَأَ لِدِينِهِ

பாடம் : 39

தமது மார்க்கத்தைக் காப்பவரின் சிறப்பு

52 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ “

52. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனுமதிக்கப்பட்டவையும் தெளிவானவை. அனுதிக்கப்படாதவையும் தெளிவானவை. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும். மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கு இடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், வேலியோரங்களில் மேய்ப்பவர் போலாவார். வேலிக்குள்ளேயே மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் மண்ணில் அவனது எல்லை அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிந்து கொள்க: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.

அறிவிப்பபவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

بَابٌ: أَدَاءُ الخُمُسِ مِنَ الإِيمَانِ

பாடம் : 40

(போரில் கிடைத்த செல்வங்களில்) ஐந்தில் ஒரு பங்கை வழங்குதல் ஈமானின் ஒரு பகுதியாகும்.

53 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ الجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ: كُنْتُ أَقْعُدُ مَعَ ابْنِ عَبَّاسٍ يُجْلِسُنِي عَلَى سَرِيرِهِ فَقَالَ: أَقِمْ عِنْدِي حَتَّى أَجْعَلَ لَكَ سَهْمًا مِنْ مَالِي فَأَقَمْتُ مَعَهُ شَهْرَيْنِ، ثُمَّ قَالَ: إِنَّ وَفْدَ عَبْدِ القَيْسِ لَمَّا أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ القَوْمُ؟ – أَوْ مَنِ الوَفْدُ؟ -» قَالُوا: رَبِيعَةُ. قَالَ: «مَرْحَبًا بِالقَوْمِ، أَوْ بِالوَفْدِ، غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَ نَسْتَطِيعُ أَنْ نَأْتِيكَ إِلَّا فِي الشَّهْرِ الحَرَامِ، وَبَيْنَنَا وَبَيْنَكَ هَذَا الحَيُّ مِنْ كُفَّارِ مُضَرَ، فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ، نُخْبِرْ بِهِ مَنْ وَرَاءَنَا، وَنَدْخُلْ بِهِ الجَنَّةَ، وَسَأَلُوهُ عَنِ الأَشْرِبَةِ: فَأَمَرَهُمْ بِأَرْبَعٍ، وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ، أَمَرَهُمْ: بِالإِيمَانِ بِاللَّهِ وَحْدَهُ، قَالَ: «أَتَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ وَحْدَهُ» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصِيَامُ رَمَضَانَ، وَأَنْ تُعْطُوا مِنَ المَغْنَمِ الخُمُسَ» وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ: عَنِ الحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالمُزَفَّتِ “، وَرُبَّمَا قَالَ: «المُقَيَّرِ» وَقَالَ: «احْفَظُوهُنَّ وَأَخْبِرُوا بِهِنَّ مَنْ وَرَاءَكُمْ»

53. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது கட்டிலில் அமருமாறு கூற, அவ்வாறே நான் அமர்ந்தேன். அப்போது அவர்கள், என்னிடம் நீங்கள் தங்கிவிடுங்கள். (அதற்காக) நான் எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உங்களுக்குத் தருகிறேன் என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அவர்களுடன் நான் இரண்டு மாதங்கள் தங்கி விட்டேன். பின்னர் அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த போது, இம்மக்கள் யார்?’ அல்லது இத்தூதுக் குழுவினர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ரபீஆ என்று பதிலளித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இழிநிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே அல்லது தூதுக் குழாமே வருக! உங்கள் வரவு நல்வரவாகுக! என்று வரவேற்றார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! புனித மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வரமுடியவில்லை. (காரணம்) எங்களுக்கும் உங்களுக்குமிடையே முளர் குலத்து இறைமறுப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். ஆகவே, தெளிவான ஆணை பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம். அதன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம் என அத்தூதுக் குழுவினர் கூறினர். அதையொட்டி அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சில வகை குடிபானங்களைப் பற்றியும் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு நான்கை கட்டளையிட்டார்கள்; நான்கை அவர்களுக்குத் தடை செய்தார்கள்.

அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை நிலைநிறுத்துவது; ஜகாத் கொடுப்பது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது; போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை நீங்கள் வழங்குவது.

நான்கு பாத்திரங்களை நான் உங்களுக்குத் தடை விதிக்கிறேன். (அவை:) மண்சாடி, சுரைக்காய் குடுக்கை, மரப்பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரம். (பின்னர் இத்தடை அகற்றப்பட்டது.) இவற்றை மனதில் பதியவைத்துக் கொண்டு உங்கள் பின்னால் இருப்பவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்!

அறிவிப்பவர் : அபூஜம்ரா அவர்கள்

بَابٌ: مَا جَاءَ إِنَّ الأَعْمَالَ بِالنِّيَّةِ وَالحِسْبَةِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى

فَدَخَلَ فِيهِ الإِيمَانُ، وَالوُضُوءُ، وَالصَّلاَةُ، وَالزَّكَاةُ، وَالحَجُّ، وَالصَّوْمُ، وَالأَحْكَامُ، وَقَالَ اللَّهُ تَعَالَى: {قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَى شَاكِلَتِهِ} [الإسراء: 84] عَلَى نِيَّتِهِ. «نَفَقَةُ الرَّجُلِ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا صَدَقَةٌ» وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ»

பாடம் : 41

செயல்கள் அனைத்தும் எண்ணத்தையும் நோக்கத்தையும் பொறுத்ததாகும்.

மேலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும்.

எனவே, இதற்குள் ஈமான், உளூ, தொழுகை, ஜகாத், ஹஜ், நோன்பு மற்றும் சட்டங்களும் அடங்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) கூறுக: ஒவ்வொருவரும் தத்தமது எண்ணங்களின் படியே செயல்படுகின்றனர். (திருக்குர்ஆன் 17:84)

நன்மையை எதிர்பார்த்து ஒருவர் தம் குடும்பத்தினருக்குச் செலவு செய்வதும் தர்மமாகும்.

(மக்கா வெற்றிக்குப் பின்னர் நாடுதுறத்தல் ஹிஜ்ரத் கிடையாது) ஆயினும், அறப்போர் புரிவதும், நாட்டம் கொள்வதும் உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

54 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»

54. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எனவே எவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நோக்கியதாக இருக்குமோ அவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், அவனுடைய தூதருக்காகவுமே அமையும். ஒருவருடைய ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதை அவர் அடைவார். அல்லது ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால் அவளை மணப்பார். எனவே அவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்..

இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

55 – حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ»

55. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்.

அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்சாரி (ரலி)

56 – حَدَّثَنَا الحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ»

56. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் அதற்காக உமக்குப் பலன் வழங்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” الدِّينُ النَّصِيحَةُ: لِلَّهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ المُسْلِمِينَ وَعَامَّتِهِمْ “

وَقَوْلِهِ تَعَالَى: {إِذَا نَصَحُوا لِلَّهِ وَرَسُولِهِ} [التوبة: 91]

பாடம் : 42

அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் நலம் நாடுவது தான் மார்க்கம் ஆகும் எனும் நபிமொழி.

அல்லாஹ் கூறுகின்றான்:

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நலம் நாடுபவர்களாயிருந்தால் ….

(திருக்குர்ஆன் 9:91)

57 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»

57. தொழுகையை நிலைநாட்டுவதாகவும், ஜகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

58 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ: سَمِعْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ يَوْمَ مَاتَ المُغِيرَةُ بْنُ شُعْبَةَ، قَامَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: عَلَيْكُمْ بِاتِّقَاءِ اللَّهِ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَالوَقَارِ، وَالسَّكِينَةِ، حَتَّى يَأْتِيَكُمْ أَمِيرٌ، فَإِنَّمَا يَأْتِيكُمُ الآنَ. ثُمَّ قَالَ: اسْتَعْفُوا لِأَمِيرِكُمْ، فَإِنَّهُ كَانَ يُحِبُّ العَفْوَ، ثُمَّ قَالَ: أَمَّا بَعْدُ، فَإِنِّي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: أُبَايِعُكَ عَلَى الإِسْلاَمِ فَشَرَطَ عَلَيَّ: «وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ» فَبَايَعْتُهُ عَلَى هَذَا، وَرَبِّ هَذَا المَسْجِدِ إِنِّي لَنَاصِحٌ لَكُمْ، ثُمَّ اسْتَغْفَرَ وَنَزَلَ

58. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் இறந்த நாளில் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (எழுந்து மேடையில்) நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறலானார்கள்:

(அடுத்த) தலைவர் வரும் வரையில் இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். கூடிய சீக்கிரத்தில் உங்கள் தலைவர் வந்துவிடுவார்.

பின்னர் தொடர்ந்து கூறினார்கள்: (இறந்துவிட்ட) உங்கள் தலைவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்! ஏனெனில் அவர் தமது பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார். இறைவாழ்த்துக்குப் பின்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்று இஸ்லாமை ஏற்று நடப்பதாகத் தங்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வந்திருக்கிறேன் என்றேன். அப்போது நபியவர்கள், முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்’ என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதிமொழி கொடுத்தேன். இந்த இறையில்லத்தின் அதிபதி மீது ஆணையாக! நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்.

பிறகு பாவமன்னிப்புக் கோரிவிட்டு (மேடையிலிருந்து) இறங்கினார்கள்.

அறிவிப்பவர் : ஸியாத் பின் இலாக்கா