சீனாவில் குட்டைப் பாவாடைக்குத் தடை

பெண்களைப் பாலியல் தொந்தரவுகளிலிருந்து தடுக்க குட்டைப் பாவாடை மற்றும் உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய லெகின்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்று சீனப் பெண்களுக்கு பெய்ஜிங்கில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் சமீபகாலமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு அதிக அளவில் ஆளாவதாக காவல்துறைக்கு புகார்கள் குவியத் தொடங்கின. அந்தப் புகார்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், புகார்கள் குறைந்தபாடில்லை. அந்தப் புகார்களைப் பெற்றுக்கொண்ட காவல்துறை பெண்கள் அதிக அளவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்ச்சிகரமான உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்பதே சீனப் பெண்களுக்கு சீனப் போலீசார் விடுத்த எச்சரிக்கை.

பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் இருக்க குட்டைப்பாவாடை, மார்பு தெரியும் பனியன்கள், உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் லெக்கின்ஸ் பேன்ட் போன்றவற்றை அணியக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப் பேருந்துகள் பாதியளவுக்கு உயரமாகவும் இன்னொரு பாதி தாழ்வாகவும் அமைந்துள்ளன. உயரமான பகுதியில் பெண்கள் அமரும் போது தாழ்வான பகுதியில் உள்ள ஆண்கள் பெண்களின் தொடைகளையும் அதைத் தாண்டியும் செல்போனில் படம் எடுக்கின்றனர். பார்த்து ரசிக்கின்றனர். இதைத் தவிர்ப்பதற்காக அரசுப் பேருந்துகளில் உயரமாக உள்ள பேருந்தின் பின்புறத்தில் பெண்கள் அமரக் கூடாது; தாழ்வாக உள்ள முன்புறத்தில் தான் அமர வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதே போல மாடிப் பேருந்துகளில் உள்படியில் நிற்கும் பெண்களை கீழ்தளப்பேருந்தில் இருந்து ஆபாசமாக செல்போனில் படம் பிடிப்பபதைத் தவிர்க்க உள்படியில் பெண்கள் நிற்கக் கூடாது எனவும் சீன காவல்துறை எச்சரித்துள்ளது.

இதைப் பிரசுரமாக அச்சிட்டு பேருந்துகளிலும், பொது இடங்களிலும் ஒட்டி உள்ளனர்.

அரைகுறை ஆடை அணிந்து செல்லும் பெண்களை தவறான முறையில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க தங்கள் உடல்களை பெண்கள் அவரவர் கொண்டு செல்லும் பத்திரிகைகள் மற்றும் கைப்பைகளை வைத்து மறைத்துக் கொள்ளுமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுபோல ஆஸ்திரேலியாவில் குட்டைப்பாவாடை அணிந்து சென்ற மாணவிகள் பேருந்தில் ஏறுவதை பேருந்துப் படிகளில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் படம் பிடித்த பேருந்து ஓட்டுநரை ஆஸ்திரேலியப் போலீசார் கைது செய்து வழக்குத் தொடர்ந்து அவருக்கு 7மாத சிறைத்தண்டனை கொடுத்த சம்பவமும் சிலமாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

அது போல அரியானாவில், மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியர், குட்டைப் பாவாடை அணியத் தடை விதிக்க வேண்டும் என, மாநிலக் கல்விக் குழு அதிகாரியை, அம்மாநிலத்தின் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டது.

திருமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தவும் ஜீன்ஸ் அணியவும் தடைவிதிக்கக் கோரி பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்திய சம்பவமும் சென்ற வாரம் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத்திற்கு முன் மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அனுமதிக்கக் கூடாது என மத்தியப் பிரதேச பா.ஜ.க. துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா கடந்த வாரம் மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார்.

மாணவர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாலேயே பெரும்பாலான அச்சுறுத்தல்களும்,, குற்றங்களும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

அவருக்கு கண்டனக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் பறந்தன.

பெண்கள் கவர்ச்சி ஆடை அணிவது கூடாது; அதனால் ஆண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து மோலோங்கியதோடு மட்டுமல்லாமல் ஜவுளிக்கடையில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகளுக்குக் கூட கவர்ச்சி ஆடை அணிவித்து ஆடவர்கள் கண்களில் படுமாறு வைக்க எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

மும்பை மாநகராட்சியின், 121வது வார்டு உறுப்பினர், ரிது தாவ்டே (39). பாரதிய, ஜனதாவைச் சேர்ந்த இவர், செல்லும் பாதையில், பெண் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்.

துணிக் கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளில், பெண் பொம்மைகளை வைத்திருப்பதைப் பார்ப்பதால், ஆண்களிடம் பாலியல் வக்கிரம் வெளிப்படுகிறது. எனவே, உள்ளாடை விற்பனை கடைகளில் வைக்கப்பட்டிருக்கும், பெண் பொம்மைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, மும்பை மாநகராட்சியில் இவர் மற்றும் 227 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

இது குறித்து, ரிது தாவ்டே கூறியதாவது: பெண்களின் உள்ளாடை விற்பனைக்காக, கடைக்காரர்கள், இத்தகைய பொம்மைகளை, தங்கள் கடைகளின் வெளிப்புறமாக வைக்கின்றனர். அதில், பிரா, ஜட்டியுடன் காட்சியளிக்கும் பொம்மைகளைப் பார்க்கும் ஆண்கள், அவற்றை பொம்மைகளாகப் பார்ப்பதில்லை; பெண்களாகவே பார்க்கின்றனர்.

இதனால், நல்ல எண்ணம் கொண்ட ஆண்களுக்கும், வக்கிர புத்தி ஏற்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த, ஆண், பெண் என, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில், இத்தகைய கவர்ச்சி பொம்மைகள் வைத்திருப்பது,  நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்திற்கு எதிரானது. எனவே, அவற்றை அகற்றுவது என்ற முடிவை எடுத்தேன்.

தீர்மானம் :

நாடு முழுவதும், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய பொம்மைகள், பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும் என்பது என் எண்ணம். எனவே, நாடு முழுவதும், பெண்கள் கவர்ச்சி பொம்மைக்கு தடை விதிக்க வேண்டும் அவர் கூறினார்.

மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன?

பெண்களுக்கு எதிரான தொல்லைகள் அதிகமாவதற்கு அவர்களது ஆடைக் கலாச்சாரம் தான் காரணம். அவர்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்தால் அதுவே அவர்களுக்கு சரியான பாதுகாப்பு என்று இஸ்லாம் சொல்லக்கூடிய கட்டளைகளைக் கடைப்பிடிக்காததே அதற்கு முழுமுதற்காரணம்.

இந்தக் கருத்தை இஸ்லாம் சொன்னபோது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது; அவர்களைச் சித்ரவதை செய்கின்றது; பெண்களை பர்தா அணியச் சொல்லும் இவர்கள் பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள்; காட்டுமிராண்டிகள் என்று கதையளந்தனர் இஸ்லாமிய எதிரிகள்.

ஆனால் தற்போது நிலை என்ன?

யார் தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டார்களோ அந்த முற்போக்கு(?) வாதிகளது வாயிலிருந்தே இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை அல்லாஹ் வழிமொழிய வைத்துள்ளான்.

சீனக் காவல்துறை இந்தச் சட்டத்தைக் கொண்டுவரும் என்று யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

இஸ்லாத்தை இழிவுபடுத்துவதையே முழுமுதற் குறிக்கோளாகக் கொண்டுள்ள பா.ஜ.க.வினரது வாயிலிருந்தே பர்தாவின் அவசியத்தை இறைவன் விளங்க வைத்துள்ளான்.

இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு தான் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதற்கு அவர்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் என்பதை மிகவும் காலம் தாழ்ந்து ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளனர்.

இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளதைப் பாருங்கள் :

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர் ஆன் 33:59

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...