கேள்வி

யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் கூறுகின்றார்கள். 12 ரக்அத்கள் யாவை என்பதை நபிகள் தெளிவுபடுத்தவில்லை எனவும் கூறுகிறார்கள். இது சரியா?

இந்தக் கருத்தில் வரும் அதிகமான ஹதீஸ்கள் பலவீனமானவையாக உள்ளன. சில ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளன.

உதாரணத்திற்கு ஹாகிமில் இடம்பெற்ற ஹதீஸை எடுத்துக் காட்டுகிறோம்

المستدرك على الصحيحين للحاكم

1173 – 1188 حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ثنا اللَّيْثُ، وَأَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَ عُبَيْدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، ثنا يَحْيَى بْنُ بُكَيْرٍ، ثنا اللَّيْثُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُخْتِهِ أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَاثْنَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ

 كِلَا الْإِسْنَادَيْنِ صَحِيحَانِ عَلَى شَرْطِ مُسْلِمٍ، وَلَمْ يُخَرِّجَاهُ

யார் தினமும் 12 ரக் அத்கள் தொழுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டப்படும். அவை: லுஹருக்கு முன் 4, லுஅஹ்ருக்குப் பின் 2, அஸருக்கு முன் 2, மக்ரிபுக்கு பின் 2, சுஹுக்குப் பின் 2 ஆகும்.

ஹாகிமில் இடம்பெறும் மேற்கண்ட ஹதீஸுக்கு இரு அறிவிப்பாளர் தொடரை ஹாகிம் குறிப்பிடுகிறார்கள்.

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ثنا اللَّيْثُ،  عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُخْتِهِ أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

முதல் அறிவிப்பின் அறிவிப்பாளர் தொடர் பற்றிய விபரம்

  1. நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபா (ரலி)

  2. அவரது சகோதரர் அன்பஸா – இவர் நம்பகமானவர். இவர் முஸ்லிம் நூலின் அறிவிப்பாளர் ஆவார்.

  3. அம்ரு பின் அவ்ஸ் ஸகபி – இவர் நம்பகமானவர், இவரது ஹதீஸ்கள் புகாரி முஸ்லிமில் உள்ளன

  4. அபூ இஸ்ஹாக் அல்ஹமதானி – இவர் நம்பகமானவர். இவரது அறிவிப்புகள் புகாரி முஸ்லிமில் உள்ளன.

  5. முஹம்மத் பின் அஜ்லான் – இவர் நம்பகமானவர். இவரது அறிவிப்புகள் புகாரி முஸ்லிமில் உள்ளன

  6. லைஸ் பின் ஸஅத் இவர் நம்பகமானவர். இவரது ஹதீஸ்கள் புகாரி முஸ்லிமில் உள்ளன

  7. ஷுஐப் பின் லைஸ் – இவர் நம்பகமானவர். இவரது ஹதீஸ்கள் முஸ்லிமில் உள்ளன.

  8. அபுல் அப்பாஸ் முஹம்மத் பின் யாகூப். இவர் நம்பகமானவர்

முதல் அறிவிப்பில் உள்ள மேற்கண்ட எட்டு அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் ஆவர். எனவே இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும்.

وَأَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَ عُبَيْدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، ثنا يَحْيَى بْنُ بُكَيْرٍ، ثنا اللَّيْثُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُخْتِهِ أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

  1. நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபா (ரலி)

  2. அவரது சகோதரர் அன்பஸா – இவர் நம்பகமானவர். இவர் முஸ்லிம் நூலின் அறிவிப்பாளர் ஆவார்.

  3. அம்ரு பின் அவ்ஸ் ஸகபி – இவர் நம்பகமானவர், இவரது ஹதீஸ்கள் புகாரி முஸ்லிமில் உள்ளன

  4. அபூ இஸ்ஹாக் அல்ஹமதானி – இவர் நம்பகமானவர். இவரது அறிவிப்புகள் புகாரி முஸ்லிமில் உள்ளன.

  5. முஹம்மத் பின் அஜ்லான் – இவர் நம்பகமானவர். இவரது அறிவிப்புகள் புகாரி முஸ்லிமில் உள்ளன

  6. லைஸ் பின் ஸஅத் இவர் நம்பகமானவர். இவரது ஹதீஸ்கள் புகாரி முஸ்லிமில் உள்ளன

  7. யஹ்யா பின் புகைர் – இவர் நம்பகமானவர். இவரது ஹதீஸ்கள் புகாரி முஸ்லிமில் உள்ளன.

  8. உபைத் பின் அப்துல் வாஹித் -. இவர் நம்பகமானவர்

  9. அபூ பக்ர் பின் இஸ்ஹாக் – இவர் நம்பகமானவர். இவரது ஹதீஸ்கள் முஸ்லிமில் உள்ளது

இரண்டாம் அறிவிப்பில் உள்ள இந்த ஒன்பது அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் ஆவர்.

இந்த இரு அறிவிப்புகளையும் பதிவு செய்த ஹாகிம் அவர்கள் இவ்விரு அறிவிப்பாளர் தொடரும் முஸ்லிம் இமாம் உடைய விதிப்படி சரியான அறிவிப்புகளாகும் என்று கூறுகிறார். இவர் கூறுவது சரிதான் என்று தஹபி அவர்களும் வழிமொழிகிறார்கள்.

எனவே அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவை என்பது தவறான கருத்தாகும்.

இது அல்லாமல் இன்னும் பல நூல்களிலும் சரியான அறிவிப்பாளர் தொடருடன் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது