தினமணியின் திமிர் வாதம்

தினமணி நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் விதமாக கடந்த மாதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது.

அந்தத் தலையங்கத்தில்,

முஸ்லிம்கள் பெருகிக்கொண்டே போகின்றார்கள்.

பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்கள் மிரட்டப்பட்டு மதமாற்றம்செய்யப்படுகின்றார்கள்.

இந்துக்கள் அங்கு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றார்கள்.

அதே நேரத்தில் முஸ்லிம்கள் இந்தியாவில் சுகபோகமாக இருக்கின்றார்கள்.

இந்துக்களை விட முஸ்லிம் களுக்கு கூடுதலான சலுகைகள் இங்கு வழங்கப்படுகின்றன.

என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யையும், புரட்டையும் அவிழ்த்துவிட்டிருந்தது.

தினமணியின் அந்த கேடுகெட்ட தலையங்கத்திற்கு, தினத்தந்தியின் காவி வழியில் கால்பதிக்கும் தினமணி என்ற தலைப்பில் உணர்வு 17:01 இதழில் பதிலடி கொடுக்கப்பட்டது.

முஸ்லிம்கள் மீது கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாகத்தான் அந்த தலையங்கம் எழுதப்பட்டது என்பதனை ஆதரங்களுடன் நாம் விளக்கியிருந்தோம்.

மேற்கண்டவாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யையும், புரட்டையும் தினமணி அவிழ்த்துவிட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை; அதற்குள் மறுபடியும் முஸ்லிம்களை வம்புக்கிழுத்து தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளது தினமணி.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, தவறு… தவறு… தவறு என்ற தலைப்பில் தினமணி ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளது.

முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுத்தவர்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தனது தலையங்கத்தை எழுதி தான் ஒரு சங்பரிவார ஏஜெண்டு என்பதையும், அமெரிக்காவின் அடிவருடி என்பதையும் நிரூபித்துள்ளது தினமணி நாளிதழ்.

நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த அயோக்கிய யூதனுக்கும், அடாவடி பாதிரியாருக்கும், அதற்குத் துணை போகும் அயோக்கிய அமெரிக்காவுக்கும் எதிராக உலக முஸ்லிம்கள் கொந்தளித்துப் போய் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் தொலைந்து போகட்டும்; குறைந்தபட்சம் எதிர்ப்பு தெரிவிக்காமலாவது இருக்கலாமல்லவா?

ஆனால், சங்பரிவார ஏஜெண்டான தினமணிக்கு அவ்வாறு வாய்மூடி மௌனமாக இருக்க இயலவில்லை. உலக நாடுகளே பற்றியெரியும் இவ்வேளையில் இந்தியா மட்டும் ஏன் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்று இந்த அயோக்கிய தினமணி நினைக்கிறதா? என்று நமக்கு விளங்கவில்லை. அதனால் தான் இது தொடர்ந்து முஸ்லிம்களை புண்படுத்தும் விதமாகவும், இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.

இனி இந்த அயோக்கிய தினமணி எழுதியவை சரியானது தானா? என்பதை இப்போது அலசுவோம்.

கடந்த 5 நாள்களாக சென்னை அண்ணா சாலையில், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தங்களது மத உணர்வைப் புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால்,அமெரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை

என்று முதல் கேள்வியை எழுப்பியுள்ளது இந்த அயோக்கிய தினமணி.

அமெரிக்காவுக்கு எதிராகச் சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை என்று கேள்வி கேட்கும் அயோக்கிய தினமணியே! இதற்கு முன்பு தமிழகத்தில் பல பிரச்சனைகளில் பலர் இது போன்று பல நாடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்களே! அப்போதெல்லாம் இந்தக் கேள்வியைக் கேட்டாயா?

இலங்கையைக் கண்டித்து இங்கு போராட்டம் நடத்துபவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்பாயா? இதுவரை கேட்டாயா?

என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்று கேட்கிறாயே? கூறுகெட்ட முண்டமே! கூடங்குளத்தில் எல்லா பணிகளும் முடிந்து மின் உற்பத்தி துவங்க உள்ள நிலையில் மூளை வெந்து போய் அதை நிறுத்தச் சொல்லி அமெரிக்காவின் ஏஜெண்டுகள் இங்கு போராட்டம் நடத்துகின்றார்களே! இந்த போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்? என்று கேட்டாயா?

முஸ்லிம்கள் என்றால் மட்டுமென்ன உனக்கு கிள்ளுக்கீரையா?

இந்தப் போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரானதா? அந்தப் படத்தை தயாரித்த சாம் பாஸில் என்ற நபருக்கு எதிரானதா? இதுவரை எங்குமே வெளியாகாத திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட யு ட்யூப்-க்கு எதிரானதா? யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்? என்று ஒன்றுமே அறியாத பச்சைப் பாலகனைப் போல கேள்வியெழுப்பியுள்ளது இந்த தினமணி.

உலகமறிந்த ஒரு விஷயத்தை ஒன்றும் அறியாதது போல கேள்வியெழுப்பியதிலிருந்தே வெட்ட வெளிச்சமாகின்றது தினமணியின் அயோக்கியத்தனம்.

படம் எடுத்தவன் ஒரு யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கன். அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பொறுப்பை ஏற்றவன் டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறித்தவ பாதிரியாரான ஒரு அயோக்கியன். அந்தப் படம் அமெரிக்காவின் ஆசியோடும், ஆதரவோடும்தான் யூடியூபில் இன்று வரை உள்ளது.

ஒபாமாவும், ஹிலாரி கிளிண்டனும் இது அமெரிக்காவின் கருத்து சுதந்திரம். இதற்கு எதிராக நாங்கள் ஒன்றும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி இந்த அயோக்கியத்தனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதுவெல்லாம் தெரியாதது போல நடித்துக் கொண்டு, யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்? என்று கேள்வியெழுப்பி தனது சங்பரிவார புத்தியை வெளிக்காட்டியுள்ளது தினமணி.

யூடியூப்புக்கு எதிரானதா? இந்தப் போராட்டம் என்றும் இவன் கேள்வி எழுப்புகின்றான். உலக மகா அயோக்கியத்தனத்தைச் செய்துவரும் யூடியூப்புக்கு எதிராக யுத்தம் தொடுக்கவும் முஸ்லிம்கள் களம் காணத் தயாராகி விட்டார்கள் என்பதை அயோக்கிய தினமணிக்கு சொல்லிக் கொள்கின்றோம்.