தமிழகத்தில் ஏறக்குறைய எல்லா முஸ்லிம் அமைப்புகளும் திமுகவை ஆதரித்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே? முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளதே? தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறதே?
ஆதில் சா, மதுரை
பதில்
முஸ்லிம் இயக்கங்களின் கோரிக்கையை இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் அப்படியே ஏற்கவில்லை என்பது உண்மை தான்.
பாஜக பற்றி ஜெயலலிதா வாய் திறக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகத் தான் நாம் ஆதரவை வாபஸ் பெற்றோம்.
மற்றபடி அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பெரிய மனக்குறை இல்லை. கலவரங்களின் போதும், குண்டு வெடிப்புகளின் போதும் அவரது நடவடிக்கை பாரபட்சமாக இருக்கவில்லை. கருனாநிதியைப் போல் அவர் அடக்குமுறை செய்யவில்லை. அத்துடன் இட ஒதுக்கீட்டுக்கான ஆணையத்தையும் அமைத்து இருந்தார். இதனால் அவரை ஆதரிக்கும் மனநிலையில் தான் அதிகமான முஸ்லிம்கள் இருந்தனர்.
பாஜகவை எதிர்க்கவில்லை என்ற காரணத்தால் நாம் ஆதரவை வாபஸ் பெற்றவுடன் அவர் பாஜகவை விமர்சிக்க ஆரம்பித்தது முஸ்லிம்களிடம் எடுபட்டது. இதைத் தானே குற்றச்சாட்டாக வைத்தீர்கள். ஜெயலலிதா பாஜகவையும் விமர்சித்து விட்டாரே என்ற அதிமுகவின் பிரச்சாரத்தை முஸ்லிம் மக்கள் நம்பினார்கள். எனவே தான் முஸ்லிம் இயக்கங்களின் கோரிக்கை எடுபடவில்லை. ஆதரவு வாபஸ் என்ற பிறகு அவர் பாஜக பற்றி வாய் திறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் பாதி இடங்களில் தோற்று இருப்பார்.
முஸ்லிம்கள் பெருவாரியாக அவருக்கு வாக்களித்துள்ளதால் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை அவர் சொன்ன படி நிறைவேற்றுவார் என்று வாக்களித்த முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.