டாலர் ஏன் உலக கரன்சியாக உள்ளது?
சில வளைகுடா நாடுகளில் பணமதிப்பு அமெரிக்காவின் டாலரை விட அதிகமாக இருந்தும் டாலரைத் தான் அனைத்துக்கும் பொதுவானதாகக் காட்டுகிறார்கள். இது ஏன்?
– லியாகத் அலி, மேலக்கோட்டை.
பண மதிப்பின் அடிப்படையில் டாலருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பயங்கரவாத அமெரிக்காவுக்குப் பயந்து உலக நாடுகள் அனைத்தும் டாலர் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றன.
இதற்கு எதிராக வாய் திறந்தால் அந்த நாடு பயங்கர உயிர்க்கொல்லி ஆயுதங்கள் வைத்துள்ளதாகக் கூறி அமெரிக்கா குண்டு மழை பொழியும். அயோக்கிய நாடுகள் சபையும் அதற்கு உடந்தையாக இருக்கும். அமெரிக்கா வறுமையின் பிடியில் சிக்கி வல்லரசு என்ற நிலையில் இருந்து கீழே இறங்கினால் தான் இந்த நிலை மாறும்.
உணர்வு 16:11
16.12.2011. 9:22 AM