எந்த ஜமாஅத்திலும் சேர விருப்பமில்லாவிட்டால் தனியாக வீட்டில் தொழலாமா?

கேள்வி:

எந்தவொரு ஜமாஅத்துடனும் சேர்ந்திருக்க விருப்பமில்லாத பட்சத்தில் தனியாக வீட்டில் தொழுகை அமைத்துக் கொள்ளலாமா?

முஹம்மது (இலங்கை)

பதில்

எல்லா ஜமாஅத்துகளும் சரி இல்லை என்ற விரக்தி நிலை ஏற்படும் போது இது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

கீழ்க்காணும் ஹதீஸும் இக்கருத்தில் அமைந்துள்ள ஹதீஸ்களும் இப்படி ஒரு முடிவை எடுக்க ஆதாரமாக நமக்குத் தோன்றும்.

صحيح البخاري

3606 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا الوَلِيدُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، قَالَ: حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ الحَضْرَمِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الخَوْلاَنِيُّ، أَنَّهُ سَمِعَ حُذَيْفَةَ بْنَ اليَمَانِ يَقُولُ: كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ، فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الخَيْرِ مِنْ شَرٍّ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ؟ قَالَ: «نَعَمْ، وَفِيهِ دَخَنٌ» قُلْتُ: وَمَا دَخَنُهُ؟ قَالَ: «قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي، تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ» قُلْتُ: فَهَلْ بَعْدَ ذَلِكَ الخَيْرِ مِنْ شَرٍّ؟ قَالَ: «نَعَمْ، دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ، مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، صِفْهُمْ لَنَا؟ فَقَالَ: «هُمْ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا» قُلْتُ: فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ؟ قَالَ: تَلْزَمُ جَمَاعَةَ المُسْلِمِينَ وَإِمَامَهُمْ، قُلْتُ: فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلاَ إِمَامٌ؟ قَالَ «فَاعْتَزِلْ تِلْكَ الفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ، حَتَّى يُدْرِكَكَ المَوْتُ وَأَنْتَ عَلَى – ذَلِكَ»

3606 ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கின்றதா? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம் (இருக்கின்றது) என்று பதிலளித்தார்கள். நான், இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கின்றதா? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை இருக்கும். என்று பதிலளிக்க நான், அந்தக் கலங்கலான நிலை என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஒரு சமுதாயத்தார் எனது நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய் என்று பதிலளித்தார்கள். நான், அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களுடைய அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள் என்று பதிலளித்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று கேட்க, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள் என்று பதிலளித்தார்கள். நான், நான் இந்த நிலையை அடைந்தால் என்ன எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப் பை)யும் அவர்களுடைய தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள் என்று பதில் சொன்னார்கள். அதற்கு நான், அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை என்றால்….. (என்ன செய்வது)? என்று கேட்க, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக் கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு) என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 3606

இந்த நிலை வந்து விட்டதாக ஒவ்வொரு காலத்திலும் சிலர் நினைத்தார்கள். அந்த நிலை வந்து விட்டது என்று யாராவது கருதினால் அவர்கள் ஜமாஅத்துகளை விட்டு விலகுவதற்கு மட்டும் தான் இதை ஆதாரமாகக் காட்டுவார்கள். ஒட்டு மொத்தமாக சமுதாயத்தை விட்டு விலகி காடுகளுக்குப் போக மாட்டார்கள். மக்களுடன் வாழ்வார்கள். நல்லது கெட்டதுகளில் பங்கெடுப்பார்கள். திருமணம், கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் மக்களோடு இருப்பார்கள்.

ஜமாஅட்க்ஹ் தொழுகைக்கு வராமல் இருப்பதற்கு இதை ஆதாரமாக கருதுவோர் அனைத்தையும் துறந்து விட்டு காடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். இதிலுருந்து தெரிவது என்ன? அந்த நிலை இன்னும் வரவில்லை என்று இவர்களே விலங்கி வத்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த சில ஆண்டுகளில் அவர்களுக்கு மத்தியில் பல யுத்தங்கள் நடந்தன. நந்த நேரத்தில் கூட யாரும் காட்டுக்குப் போகவில்லை.

இந்த உலகில் மக்களோடு வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டால் ஜமாஅத் தொழுகை மட்டுமின்றி அனைத்தையும் உதறிவிட்டு காட்டுக்குப் போக வேண்டும்.

ஜமாஅத் தொழுகையை விட்டு விலகிட எந்தக் காரணமும் ஏற்படவில்லை என்பதை கீழ்க்காணும் ஹதீஸை பார்த்து அறிந்து கொள்ளவும்

صحيح مسلم

26 – (534) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، وَعَلْقَمَةَ، قَالَا: أَتَيْنَا عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ فِي دَارِهِ، فَقَالَ: أَصَلَّى هَؤُلَاءِ خَلْفَكُمْ؟ فَقُلْنَا: لَا، قَالَ: فَقُومُوا فَصَلُّوا، فَلَمْ يَأْمُرْنَا بِأَذَانٍ وَلَا إِقَامَةٍ، قَالَ وَذَهَبْنَا لِنَقُومَ خَلْفَهُ، فَأَخَذَ بِأَيْدِينَا فَجَعَلَ أَحَدَنَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ، قَالَ: فَلَمَّا رَكَعَ وَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا، قَالَ: فَضَرَبَ أَيْدِيَنَا وَطَبَّقَ بَيْنَ كَفَّيْهِ، ثُمَّ أَدْخَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ، قَالَ: فَلَمَّا صَلَّى، قَالَ: «إِنَّهُ سَتَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مِيقَاتِهَا، وَيَخْنُقُونَهَا إِلَى شَرَقِ الْمَوْتَى، فَإِذَا رَأَيْتُمُوهُمْ قَدْ فَعَلُوا ذَلِكَ، فَصَلُّوا الصَّلَاةَ لِمِيقَاتِهَا، وَاجْعَلُوا صَلَاتَكُمْ مَعَهُمْ سُبْحَةً، وَإِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَصَلُّوا جَمِيعًا، وَإِذَا كُنْتُمْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، فَلْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ، وَإِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيُفْرِشْ ذِرَاعَيْهِ عَلَى فَخِذَيْهِ، وَلْيَجْنَأْ، وَلْيُطَبِّقْ بَيْنَ كَفَّيْهِ، فَلَكَأَنِّي أَنْظُرُ إِلَى اخْتِلَافِ أَصَابِعِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرَاهُمْ»

928 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) மற்றும் அல்கமா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்க அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். அப்போது அவர்கள், “(இமாம்களான) உங்க்ளுக்குப் பின்னால் (ஆட்சியாளர்களான) இவர்கள் (உரிய நேரத்தில்) தொழுகின்றனரா?” என்று கேட்டார்கள். நாங்கள் “இல்லை’ என்று சொன்னோம். (அப்போது தொழுகை நேரம் வந்தும் அவர்களிருவரும் தொழாமலிருந்த காரணத்தால்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நீங்கள் (இருவரும்) எழுந்து (என்னைப் பின்பற்றித்) தொழுங்கள்!” என்று கூறினார்கள்- அப்போது (பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட்டு விட்டதால்) அவர்கள் பாங்கு சொல்லும்படியோ இகாமத் சொல்லும்படியோ எங்களிடம் கூறவில்லை – நாங்கள் (இருவரும்) அவர்களுக்குப் பின்னால் நிற்கப்போனோம். உடனே அவர்கள் எங்கள் கைகளைப் பிடித்து எங்களில் ஒருவரை தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கத்திலும் நிறுத்தினார்கள். அவர்கள் ருகூஉச் செய்த போது நாங்கள் எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைத்(துக்கொண்டு ருகூஉச் செய்)தோம். உடனே அவர்கள் எங்கள் கைகள் மீது அடித்துவிட்டு, தம்மிரு உள்ளங்கைகளையும் இணைத்துத் தம் தொடைகளின் நடுவே இடுக்கிக் கொண்டார்கள். அவர்கள் தொழுது முடித்ததும், “விரைவில் உங்களுக்குத் தலைவர்களாக சிலர் வருவார்கள். அவர்கள் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தி, நெருக்கடியில் நிறைவேற்றுவார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதை நீங்கள் கண்டால் உரிய நேரத்தில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிடுங்கள். கூடுதலான (நஃபில்) தொழுகை என்ற முறையில் அவர்களுடனும் சேர்ந்து (மீண்டும்) தொழுது கொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேர் இருந்தால் (ஒரே அணியில்) இணைந்து தொழுங்கள். அதைவிட அதிகம் பேர் இருந்தால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். உங்களில் ஒருவர் ருகூஉச் செய்யும் போது தம் முன்கைகளை தொடை மீது சாத்திக் கொண்டு குனிந்து நிற்கட்டும். அவர் தம் உள்ளங்கைகளை இணைத்து இரு தொடைகளுக்கு இடையே வைத்துக்  கொள்ளட்டும். ஏனெனில், (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது ருகூஉவில்) தம் விரல்களைக் கோத்துக்கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது” என்று கூறிவிட்டு, அவ்வாறு தம் கைகளைக் கோத்துக் காட்டினார்கள்.