எழுத்துப் பிழைகள்
திருக்குர்ஆனைப் பற்றி இன்னொரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உஸ்மான் (ரலி) அவர்களால் திருக்குர்ஆனுக்குப் பல பிரதிகள் எடுக்கப்பட்டபோது எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்.
இவ்வாறு பிழையாக எழுதப்பட்டாலும் மனனம் செய்தவர்களின் உள்ளங்களில் அது பாதுகாக்கப்பட்டு இருப்பதால் அதை அளவுகோலாகக் கொண்டு எழுத்தில் ஏற்பட்ட பிழைகளை உலக முஸ்லிம் சமுதாயம் அப்படியே தக்கவைத்து வருகின்றது.
ஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து, சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொருவரிடம் இருந்தால் திருக்குர்ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்திவிடும்.
இது போன்ற சில எழுத்துப் பிழைகளை இங்கே நாம் எடுத்துக் காட்டுகிறோம்.
எ “லில்லதீன’ என்பது திருக்குர்ஆன் முழுவதும் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 70:36 வசனத்தில் மட்டும் பிழையாக அலிப் அதிகமாக எழுதப்பட்டுள்ளது.
எ 21:88 வசனத்தில் “நுன்ஜி’ எனும் சொல் “நுஜி’ என்று எழுதப்பட்டுள்ளது. இதை மக்கள் அப்படியே வாசித்து விடக் கூடாது என்பதற்காக மேலே சிறிய “நூன்’ என்ற எழுத்து பிற்காலத்தில் எழுதப்பட்டது.
எ “அஃபஇன்’ என்ற சொல் 3:144, 21:34 ஆகிய வசனங்களில் “அஃபா இன்’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “அஃபஇன்’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.
எ 3:158 வசனத்தில் “லா இலல்லாஹி என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் “ல இலல்லாஹி’ என்று குறிலாகத் தான் இதை வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.
எ 37:68 வசனத்தில் “லா இலல் ஜஹீம்’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “ல இலல் ஜஹீம்’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.
எ 5:29 வசனத்தில் “தபூஆ’ என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது பிழையாகும். இதை “தபூஅ’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.
எ 7:103, 10:75, 11:97, 23:46, 28:32, 43:46 ஆகிய வசனங்களில் “மலாயிஹி’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “மலயிஹி’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.
எ 9:47 வசனத்தில் “வலா அவ்லவூ’ என்று பிழையாக எழுதியுள்ளனர். ஆனால் “வல அவ்லவூ’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.
எ “ஸமூத’ என்ற சொல் 7:73, 11:61, 17:59, 27:45, 51:43 ஆகிய வசனங்களில் ஸமூத என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:68 வசனத்தில் இச்சொல் இரு இடங்களில் உள்ளது. இதில் ஒரு இடத்தில் மட்டும் “ஸமூதா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் “ஸமூத’ என்று தான் இதை எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.
எ “ஷைஇன்’ என்ற சொல் எல்லா இடங்களிலும் சரியாக எழுதப்பட்டுள்ள போதும் 18:23 வசனத்தில் மட்டும் “ஷா இன்’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “ஷைஇன்’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.
எ 18:14 வசனத்தில் “நத்வுவ’ என்று எழுதுவதற்குப் பதிலாக “நத்வுவா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “நத்வுவ’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.
எ “லாகின்ன’ என்ற சொல்லை 18:38 வசனத்தில் “லாகின்னா’ என்று பிழையாக எழுதியுள்ளனர். இதை “லாகின்ன’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.
எ 13:30 வசனத்தில் “லி தத்லுவா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “லி தத்லுவ’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.
எ 27:21 வசனத்தில் “லா அத் பஹன்னஹு’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “ல அத்பஹன்னஹு’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.
எ 47:4 வசனத்தில் “லியப்லுவா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “லி யப்லுவ’ என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும்.
எ 59:13 வசனத்தில் “லா அன்தும்’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “ல அன்தும்’ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.
எ “கவாரீர’ என்ற சொல் 76:16, 27:44 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 76:15 வசனத்தில் “கவாரீரா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “கவாரீர’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.
எ “ஸலாஸில’ என்ற சொல் 76:4 வசனத்தில் “ஸலாஸிலா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை “ஸலாஸில’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.
எ 47:31 வசனத்தில் “நப்லுவா’ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை “நப்லுவ’ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.
எ “அல்ஐகத்’ என்ற சொல் 15:78, 50:14 ஆகிய வசனங்களில் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் 26:176, 38:13 வசனங்களில் அலிபை விட்டு விட்டு பிழையாக எழுதியுள்ளனர்.
எ “ஷுரகாவு’ என்ற சொல் 4:12, 7:190, 39:29 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. இந்தச் சொல் 6:94, 42:21 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் “வாவ்’ என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
எ “லுஅஃபாவு’ என்ற சொல் 2:266 வசனத்தில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 14:21, 40:47 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் “வாவ்’ என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
எ “நபயி’ என்ற சொல் 6:67, 28:3, 76:2 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 6:34 வசனத்தில் இறுதியில் “யா’ எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
எ “வராயி’ என்ற சொல் 2:101, 11:71, 33:53 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 42:51 வசனத்தில் இறுதியில் “யா’ எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
எ “நஷாவு’ என்ற சொல் 8:31, 6:83 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:87 வசனத்தில் இறுதியில் “அலிப்’ எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
எ என்ற சொல் 13:26, 17:30, 28:82, 29:62, 30:37, 34:36, 34:39, 39:52, 42:12, ஆகிய வசனங்களில் என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 2:245வது வசனத்தில் மட்டும் இச்சொல் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஸீன்’ என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக ‘ஸாத்’ என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.
எ என்ற சொல்லை 2:247 வசனத்தில் சரியாக எழுதியுள்ளனர். ஆனால் 7:69 வசனத்தில் என்று பிழையாக எழுதியுள்ளனர். என்று ‘ஸீன்’ எழுதுவதற்குப் பதிலாக என்று ‘ஸாத்’ எழுதியுள்ளனர். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம்.
இது போல் இன்னும் சில சிறிய அளவிலான எழுத்துப் பிழைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூலப் பிரதியில் சரியாகவே எழுதப்பட்டுள்ளன. இந்தப் பிழைகளும் கூட பாரதூரமான பிழைகள் இல்லை; சாதாரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் பிழைகள் தான்.
எழுத்தர்கள் பிழை விட்டிருப்பது திருக்குர்ஆனின் பாதுகாப்புத் தன்மையைச் சிறிதும் பாதிக்காது. ஏனெனில் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. ஒலி வடிவமாக அருளப்பட்டதை எழுத்து வடிவமாக ஆக்கியது மனிதர்கள் தான். எனவே எழுத்துக்களில் ஒன்றிரண்டு பிழைகள் இருப்பதற்கு, மனிதர்களின் செயல் என்பது தான் காரணம். இறைவனே எழுதித் தந்திருந்தால் எழுத்திலும் பிழை ஏற்பட்டிருக்காது.
எழுத்தர்கள் இவ்வாறு பிழையாக எழுதியுள்ளனர் என்ற கருத்தை 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மொழியியல் வல்லுனரும், மார்க்க மேதையுமான இப்னு குதைபா, இப்னு கல்தூன், பாகில்லானி, உஸ்புஹானி உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் எழுத்தர்கள் பிழையாக எழுதியுள்ளதால் திருக்குர்ஆனுடைய பாதுகாப்புத் தன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் திருக்குர்ஆன் ஒலி வடிவமாகத் தான் அருளப்பட்டது. எழுத்து வடிவில் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே மனிதர்களால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை நாம் சுட்டிக் காட்டுவதால், திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகிவிடாது. திருக்குர்ஆன் அதன் ஒலி வடிவத்தில் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இதனால் தான் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசும் போது “கல்வியாளரின் உள்ளங்களில் இது பாதுகாக்கப்படுகிறது” என்று 29:49 வசனம் குறிப்பிடுகிறது.
தவறாக எழுதப்பட்ட இந்த வசனங்களை மனனம் செய்தவர்கள் சரியாகத் தான் மனனம் செய்தார்கள். மனனம் செய்வதிலே எந்தக் குழப்பமும் வரவில்லை. தவறாக எழுதப்பட்ட பிறகும் கூட உலக முஸ்லிம்கள் அனைவரும் வாசிக்கும்போது சரியாகவே வாசிக்கிறார்கள்.
இந்தச் சிறிய எழுத்துப் பிழைகளை அப்படியே தக்க வைத்திருப்பது திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாக்கிறான் என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.
எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படி வாசிப்பதும், அப்படி மனப்பாடம் செய்வதும் தான் மனிதர்களின் இயல்பாகும். திருக்குர்ஆனை எழுதியவர்கள் சில வார்த்தைகளைப் பிழையாக எழுதியுள்ளதால் எழுதியபடி தான் வாசித்துக் கொண்டு இருக்க வேன்டும். பிழையாக எழுதியதை அலட்சியம் செய்து விட்டு எந்த ஒலி வடிவில் அருளப்பட்டதோ அந்த ஒலி வடிவில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும், திருக்குர்ஆனை வாசித்து வருவது மிகப்பெரும் அற்புதம் என்றே கூறலாம்.
இதனால் தான் ஊருக்கு ஒரு திருக்குர்ஆன், காலத்திற்கு ஏற்ப ஒரு திருக்குர்ஆன் என்று திருக்குர்ஆனில் எந்த வேறுபாடும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரே குர்ஆனாக, எந்தவித மாறுதலும் இல்லாமல் 14 நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு ஓதப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.