கேள்வி
ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் போது தவாப் செய்வதை நாம் அறிந்திருக்கிறோம்.. ஹஜ் உம்ரா இல்லாமல், இஹ்ராம் உடை அணியாமல் மக்காவில் இருக்கும் போது தவாப் மட்டும் செய்யலாமா?
என்.ஹஸ்ஸான், தொண்டி

பதில்
ஹஜ் உம்ராவில் மட்டுமின்றி சாதாரண நேரத்திலும் சாதாரண நிலையிலும் வெறும் தவாப் மட்டும் செய்யலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது ஹஜ் உம்ரா செய்யவில்லை. இஹ்ராம் இல்லாமல் தான் மக்காவில் பிரவேசித்தார்கள்.

1846 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்! எனக் கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவனைக் கொன்றுவிடுங்கள்! என்று உத்தரவிட்டார்கள்.
நூல் : புகாரி 1846

صحيح البخاري
1846 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَامَ الفَتْحِ، وَعَلَى رَأْسِهِ المِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ: إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الكَعْبَةِ فَقَالَ «اقْتُلُوهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையை மறைக்காமல் மக்காவுக்குள் நுழைந்துள்ளதால் அவர்கள் இஹ்ராம் அணியவில்லை என்பது உறுதி. இஹ்ராம் அணிந்திருந்தால் தலையை தொப்பி மூலம் மறைத்திருக்க மாட்டார்கள்.

மக்காவை வெற்றி கொண்டு காபாவுக்குள் வந்த போது அவர்கள் தவாப் செய்துள்ளார்கள்.

صحيح مسلم
وَأَقْبَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ إِلَى الْحَجَرِ، فَاسْتَلَمَهُ ثُمَّ طَافَ بِالْبَيْتِ، قَالَ: فَأَتَى عَلَى صَنَمٍ إِلَى جَنْبِ الْبَيْتِ كَانُوا يَعْبُدُونَهُ، قَالَ: وَفِي يَدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْسٌ وَهُوَ آخِذٌ بِسِيَةِ الْقَوْسِ، فَلَمَّا أَتَى عَلَى الصَّنَمِ جَعَلَ يَطْعُنُهُ فِي عَيْنِهِ، وَيَقُولُ: {جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ} [الإسراء: 81]، فَلَمَّا فَرَغَ مِنْ طَوَافِهِ أَتَى الصَّفَا، فَعَلَا عَلَيْهِ حَتَّى نَظَرَ إِلَى الْبَيْتِ، وَرَفَعَ يَدَيْهِ فَجَعَلَ يَحْمَدُ اللهَ وَيَدْعُو بِمَا شَاءَ أَنْ يَدْعُوَ،

பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதை நோக்கி அதை முத்தமிட்டார்கள். பின்னர் காபாவை தவாப் செய்தார்கள். பின்னர் காஃபிர்கள் வணங்கிக் கொண்டு இருந்த காபாவில் ஒரு பக்கம் வந்தார்கள் அதை தம்மிடம் இருந்த வில் மூலம் குத்தினார்கள். உண்மை வந்தது என்ற 17:81 வசனத்தையும் ஓதினார்கள். தவாப் செய்து முடித்த பின் சபா குறில் ஏறினார்கள்
நூல் : முஸ்லிம்

சாதாரணமாக தவாப் மட்டும் செய்யலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

தவாப் செய்வோருக்காக எனது இல்லத்தை இருவரும் தூய்மையாக்குங்கள் என்று அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கும் இஸ்மாயீல் நபிக்கும் கட்டளையிட்டான். இதை 2:125, 22:26 ஆகிய வசனங்களில் காணலாம்.

காபாவை கட்டும் போதே தவாப் செய்பவர்களுக்காக என்று அல்லாஹ் கூறுகிறான். அப்போது ஹஜ்ஜோ உம்ராவோ இருக்கவில்லை. காபா கட்டி முடித்த பின்னர் தான் இப்ராஹீம் நபியை ஹஜ்ஜுக்கு அழைக்க சொல்கிறான்.

இதிலிருந்தும் சாதாரணமாக தவாப் செய்யலாம் என்பதை அறியலாம்;

مسند أحمد
4462 – حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ عَبْدِ اللهِ (1) بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ يَقُولُ لِابْنِ عُمَرَ مَا لِي لَا أَرَاكَ تَسْتَلِمُ إِلَّا هَذَيْنِ الرُّكْنَيْنِ الْحَجَرَ الْأَسْوَدَ، وَالرُّكْنَ الْيَمَانِيَ، فَقَالَ ابْنُ عُمَرَ: إِنْ أَفْعَلْ فَقَدْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ اسْتِلَامَهُمَا يَحُطُّ الْخَطَايَا “قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: ” مَنْ طَافَ أُسْبُوعًا  يُحْصِيهِ، وَصَلَّى رَكْعَتَيْنِ كَانَ لَهُ كَعِدْلِ رَقَبَةٍ ” قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: ” مَا رَفَعَ رَجُلٌ قَدَمًا، وَلَا وَضَعَهَا إِلَّاكُتِبَتْ لَهُ عَشْرُ حَسَنَاتٍ، وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ ” 

ஏழு முறை தவாப் செய்து இரு ரக் அத் ஒருவர் தொழுதால் ஒரு அடிமையை விடுதலை செய்த நன்மையை அடைவார் என் அநபிகள் நாயகம் (ஸ;ல்) அவர்கள் ஊறியுள்ளன
நூல் : அஹ்மத்